பருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சுற்றுசூழலை சீர்குலைக்காத வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாரிஸ் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாரிஸ் பருவநிலை மாநாட்டில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும், நேரில் சந்தித்து பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய அதிபர் ஒபாமா, வறுமை மற்றும் புகை மாசு வெளியேற்றத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடும் என நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதே இந்தியாவின் முதன்மைக் குறிக்கோள் என்றும் பருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரான்சுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை உறுதிபடுத்தும் நிகழ்வாக ஒபாமாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கருதப்படுகிறது. அவர் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாதம் உள்ளிட்ட இருநாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire