vendredi 18 décembre 2015

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில்,









IMG_2431IMG_2420IMG_2461IMAG2246Screen-ShottIMG_8945IMAG2241IMG_8908IMG_8919IMG_8958Screen-ShoScreen-Shot-20
 போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப் படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் - அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் - குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பி டப்பட்டிரு க்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19.826 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

19.826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்.

"கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்தி ற்குள்ளா னர்வர்கள்" என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார்.

போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்தபோதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன்.

இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.

முன்னாள் போராளியான ஒருவர் - இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் - புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் 'மாற்றம்' அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு 'மாற்றம்' தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது.

பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம ...

சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

"இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம் "என்று கூறுகிறார் தயாகினி.

"ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ "என்கிறார் தயாகினி.

தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

"தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல "என்று உருக்கமாக கூறுகிறார்.

"நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது "என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர்.

"எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும் "- என்கிறார் தயாகினி.

நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல ...

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் - கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.

"13,000 கட்டனும் மாதம். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி ... அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம் "- என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6 ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்.

"கோழியும் வளர்த்து பார்த்தனான் .... அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம் "என்கிறார் அவர்.

4 ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.

கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன்.

2000 ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

"தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது "என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி.

கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

"அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு 'கார்ட்' கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம் ".

கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

"2014.6.3 ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம் ".

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, "முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்".

காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

"நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன்.

"நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? இருக்குதா கிணறு? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான் ".

"நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன் ".

தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.

"நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும்,                             by Selvaraja Rajasegar

இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள்.
புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
விபச்சார தொழில் குறிப்பாக சிறுவர் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது.
ஆனால் இலங்கை அரசோ யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது.
இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் தமது தேவைக்காகப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
விவசாயிகள் ஊர்வலமாக வந்து பிரதமருக்கு மனுக்கொடுக்க முனைந்தள்ளனர். ஆனால் பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
விவசாயிகள் தமது வறுமை நிலையை உணர்த்தும் வண்ணம் கோமணத்துடன் தலைநகரை முற்றுகை இட்டுள்ளனர். ஆனால் அது குறித்து பிரதமர் எந்த வெட்கமும் அடையவில்லை.
மீண்டும் அனைத்து விவசாயிகளுடன் வந்து பாராளுமன்றத்தை அல்லது பிரதமர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் எந்தவொரு அரசும் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. எனவே இதை உணர்ந்த அரசு மீண்டும் புலிகளை உருவாக்க முனையும்.
ஆனால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் போராட்டத்தை இனி யாராலும் தடுக்க முடியாது.

வெங்கலச் செட்டிகுளம் 20/12/2015 விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறது கட்டடக்காடு எழுத்தாளர் பசுந்திரா சசி

கட்டடக்காடு எழுத்தாளர் பசுந்திரா சசி தீபம் ரிவியின் நிகழ்காலம் நிகழ்ச்சியில் உடன் யோகா தினேஷ்                                                                                          வெங்கலச் செட்டிகுளம் விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கிறது.



எந்த சின்ன மீனும் அதனிலும் சின்ன மீனை தின்னவே செய்கிறது "என்ற பிரபலமான கூற்றுக்கு சொந்தக்காரர் .
உலகளாவிய தமிழ் எழுத்துப் பரப்பில் நன்கறியப்பட்ட மூத்த எழுத்தாளர் .
இவ்வாண்டு சிறுகதைத்தொகுதிக்காக அரச விருது பெற்றவர் .
2013 இல் தமிழ்நாட்டு உயர் விருதுகளில் ஒன்றான - விஷ்ணுபுரம் - விருதை பெற்ற முதல் இலங்கைப் படைப்பாளி என்ற பெருமையும் இவருக்குண்டு
அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் இவர் தனது எண்பதாவது வயதில் கடந்த வருடம் இலங்கையின் உயர் விருதான சாகித்தியரத்னா விருதை பெற்றவர்.
மேற்படி பெருமைக்கு உரிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் அழைப்பை ஏற்று
பிரதம விருந்தினராக மேல்மாகாணம் வத்தளையில் இருந்து தமிழின் பால் எழுத்தின் பால் கொண்ட பற்றினால் எம் செட்டிகுளம் மண்ணை மதித்து எம் மண்ணுக்கு வருகிறார் . மேலும் இவருடன் கொழும்பில் இருந்து கலாபூஷணம் கே . பொன்னுத்துரை அவர்களும் கவிஞர் மேமன்கவி அவர்களும் வருகிறார்கள்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் அடித்தட்டு ஏழை மக்களின் நண்பன் என்பது அவரது மேற்படி - மீன் - சிறுகதைக் கூற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . எமது நாட்டின் இந்த மூத்த எழுத்து மேதை உட்பட ஏனைய அதிதிகளையைம் உரிய மரியாதையுடன் வரவேற்க செட்டிகுளம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. செட்டிகுளத்தில் நடைபெறும் முதல் சிறுகதை நூல் வெளியீட்டு விழா இது. செட்டிகுளத்திற்கு இது ஒரு இன்னொரு சிறப்பு . இழக்க ஏதுமின்றி உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு வந்த ஒட்டு மொத்த வன்னி மக்களை ஏந்திய பூமி எங்கள் வெங்கலச் செட்டிகுளம் இன்று சான்றோரை வரவேற்று மகிழ்கிறது.
" நூல் வெளியீடுகள் பூப்புனித நீராட்டுவிழாக்கள் அல்ல " நூல் விழாக்கள் மண்ணை , மக்கள் வாழ்வை நீராட்டி சீராட்டும் விழாக்கள் . எனவே வேறுபாடுகளை மறந்து செட்டியூர் நல் உள்ளங்களை கலந்து கொள்ளுமாறு ஊரை பேரில் சுமப்பவனாய் கேட்டுக் கொள்கின்றேன் . நன்றி.
அன்புடன்
செட்டியூர் பசுந்திரா சசி.

ஐ.எஸ் பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

ரஷ்ய Su24 போர் விமானம், துருக்கி F16 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISIS உடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISIS போராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISIS தொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISIS அழிப்பு போர் நடத்துவதாக" பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISIS எண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.
இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

mardi 8 décembre 2015

ராஜபக்ஸ – எல்.ரீ.ரீ.ஈ இடையேயான ஒப்பந்தம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

                                                 நிர்மலா கன்னங்கார
2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது தொடர்பாக ஒரு விசாரணையை ஆரம்பிப்பது என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு நாட்டின் அனைத்துப் பகுதியினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
rajapaksha ltte
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக கூறுவதின்படி, இந்த விசாரணை முடிவடைந்த பின்னர் தங்களை தேசப்பற்றாளர்கள் என்று பறைசாற்றும் ராஜபக்ஸக்கள் எவ்வாறு பில்லியன் கணக்கான வரியிறுப்பாளர்களின் பணத்தை எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வழங்கி அவர்களைப் பலப்படுத்தினார்கள் என்று கூறப்படுவதை முழநாடுமே அறியவேண்டி நேரும். சமீபத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஐதேக வின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு குழுவினர் ஆகியோர், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகிய ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைவதற்கு வழிவகுத்த இந்த பணப்பரிமாற்றம் சம்பந்தாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் காரணமாக, எவ்வாறு ராஜபக்ஸ ஆட்சியினர் எல்.ரீ.ரீ.ஈ க்கு பணம் வழங்கினார்கள் என்கிற விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்க உள்ளது.
இந்த இரகசிய பணப்பரிமாற்றம் தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு 2005 ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார முகாமையாளராக பணியாற்றிய காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிபதி சூரியாராச்சி. இந்த பல கோடி ரூபா பெறுமதியான பணப்பரிமாற்றம் பற்றிக் கூறப்படுவதை அவர் ஜூலை 26, 2007ல் பாராளுமன்றத்தில் விபரமாக வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் அவர்களும்கூட தான் எவ்வாறு தன்னுடைய வியாபாரப் பங்காளர்களில் ஒருவரான எமில் காந்தன் என்பவரை எவ்வாறு 2005 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதற்காக அழைத்து வந்தார் என்பதை பகிரங்கமாக வெளிப் படுத்தினார். அலஸ் இதை வெளிப்படுத்தியது அவரது வீடு குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய பின்னரே. எனினும் ஸ்ரீ.ல.சு.க வில் இருந்து பிரிந்துபோன சூரியாராச்சி, ராஜபக்ஸ - எல்.ரீ.ரீ.ஈ ஒப்பந்தம் பற்றி வெளிப்படுத்திய சிறிது காலத்திற்குள் பெப்ரவரி 9, 2008ல் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரும் வழியில் அசாதரணமான ஒரு விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.
சூரியாராச்சியின் கூற்றின்படி, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெற்றதின் பின்னர், அவரது போட்டியாளரான ஐதேக வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு வடக்கில் நல்ல ஆதரவு இருப்பதினால், வட மாகாணத்தில் தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈயின் ஆதரவைக் கோரும்படி அவரது விசுவாசிகள் சிலரிடத்தில் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது. அதனால் சூரியாராச்சி மற்றும் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஸ ஆகியோரும் மற்றும் முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க என்பவர்களுடன் ஒன்றிணைந்து ரிரான் அலசுக்கு மிகவும் நெருக்கமானவரான எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி பிரமுகரான எமில் காந்தனை அலசின் றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் வைத்து  ராஜபக்ஸவை 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈ  எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது பற்றி  ஆராய்வதற்காக சந்தித்ததாக கூறப்பட்டது.
இதன் விளைவாக ஐதேக வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கா மகிந்த ராஜபக்ஸவினால் மிகச் சிறிய பெரும்பான்மையாகிய 186,000 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். சூரியாராச்சியினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி, ராஜபக்ஸவின் பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தமிழர்களை வாக்களிப்பில் இருந்து தடுப்பதற்கு எமில் காந்தன் சம்மதம் தெரிவித்த அதேவேளை அதற்குப் பிரதியுபகாரமாக எமில் காந்தன் ஏதாவது உதவிகளை கோரும்படி பசில்; ராஜபக்ஸ விரும்பியதாகச் சொல்லப்படுகிறது, அதற்கு எமில் காந்தன் தனது அமைப்புக்கு படகுகளை வாங்குவதற்கு 180 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு பசில் ராஜபக்ஸ உடனடியாக பணம் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி 180 மில்லியன் ரூபாவின் முதல் தவணைப் பணம் பல சூட்கேஸ்களில் நிரப்பப்பட்டு தேர்தலுக்கு முன்பாக ஒப்படைத்து ராஜபக்ஸவின் வெற்றிக்குப் பின்னர் முழு ஒப்பந்தத்தையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் வழங்கப்பட்டது. மிகுதிப்பணம் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின்(ராடா)  வடக்கிலுள்ள இரண்டு கட்டுமான நிறுவனங்கள் மூலமாக எல்.ரீ.ரீ.ஈக்கு கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, அந்த இரண்டு நிறுவனங்களும் எல்.ரீ.ரீ.ஈயின் விசுவாசிகளுக்குச் சொந்தமானது. இதேவேளை கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்தை சேர்ந்த, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத முன்னாள் கணக்காய்வு அலுவலர் ஒருவர், 2007ல் ராடா நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த தணிக்கை குழுவில் அவரும் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார், சுனாமி மற்றும் யுத்தம் காரணமாக தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு 1,200 வீடுகளைக் கட்டுவதற்காக மேற்குறித்த இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கும் ராடா நிறுவனம் நிதியை விடுவித்ததில் பல நிதி முரண்பாடுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்ததாக அந்த கணக்காய்வு அலுவலர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தது, முன்னாள் கணக்காய்வு நாயகமாக பதில் கடமையாற்றிவர் குற்றவியல் புலனாய்வுத் துறையினரிடம் (சி.ஐ.டி) இந்த வருடம் ஜூலையில் கணக்காய்வு நாயகத் திணைக்களம் ராடா நிறுவனம் சம்பந்தமாக எந்த தணிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அறிவித்தது எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது தெரியுமா என்று.
“இந்த வழக்கு வந்தபோது,2005 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் இடம்பெற்ற ஊழல்களைக் கண்டறிவதற்காக சி.ஐ.டியினர் கணக்காய்வு நாயகத் திணைக்களத்திடம் அரசாங்க தணிக்கை அறிக்கைகளை தங்களிடம் சமர்ப்பிக்கும்படி வேண்டிக்கொண்டனர். எங்களுக்கு முழுதான ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் பதில் கடமையாற்றிய முன்னாள் கணக்காய்வு நாயகம் ராஜபக்ஸவை பாதுகாப்பதற்காக தமது திணைக்களம் எதுவித கணக்காய்வையும் ராடா நிறுவனத்தில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்” என அந்த அலுவலர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தது, அது உண்மையில்லை மற்றும் ஒரு முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டால் ராடா நிறுவனத்தின் தணிக்கை கோப்புகள் அனைத்தையும் சி.ஐ.டியினரால் பெற்றுக்கொள்ள முடியும், அதில் கணக்காய்வு கேள்விகள், அந்த கேள்விகளுக்கு அனுப்பப்பட்ட பதில்கள் மற்றும் இறுதி கணக்காய்வு தணிக்கை அறிக்கைகளையும் கண்டுபிடிக்கலாம். “அரசாங்கத்தினால் ராடா நிறுவனத்தில் கணக்காய்வு தணிக்கைகள் நடத்தப்படவில்லை என்று ஒரு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் விளைவாக பல கேள்விகள் எழலாம். ஒன்றில் பதில் கடமையாற்றிய முன்னாள் கணக்காய்வு நாயகம் அந்த கோப்புகளை அழித்திருக்கலாம், அது சட்ட விரோதம் அல்லது அவைகளை எங்காவது மறைத்து வைத்திருக்கலாம்” என்றும் தகவல் வழங்கிய அந்த வட்டாரம் தெரிவித்தது. அவர் தெரிவிப்பதின்படி, அந்த இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கும் கொடுப்பனவு வழங்கியதற்கான விபரங்கள் இருந்தபோதிலும், எந்த நோக்கத்திற்காக அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது என்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.
“பெரும்பாலான கொடுப்பனவுகளுக்கான விபரங்களைப் பெறுவதற்காக நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், ராடா முகாமைத்துவம் எங்களுடன் ஒத்துழைக்காததால் வீணாயின. ஒரு இறுதி முயற்சியாக அந் திட்டத்துக்கு நாங்கள் நேரடியாக விஜயம் செய்து எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டுமானச் செலவாக எவ்வளவு பணம் செலவழிக்கப் பட்டுள்ளது என்கிற ஒரு மதிப்பீடடு யோசனையை பெற விரும்பினோம். எனவே பௌதீக முன்னேற்றங்களை சரிபார்ப்பதற்காக நாங்கள் வடக்கிற்கு விஜயம் செய்வதற்கான வேண்டுகோளை முன்வைத்தபோது, பாதுகாப்பு அமைச்சு எவரையும் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்காது எனக்கூறி எங்களைத் நிறுத்தியதுடன் எங்கள் கடமையை செய்யவிடாது நாங்கள் தடுக்கவும் பட்டோம்” என தகவலறிந்த அந்த வட்டாரம் தெரிவித்தது. அவர் மேற்கொண்டு தெரிவிக்கையில், அரசாங்க கணக்காய்வு அலுவலர்கள் வடக்கிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டால், ஒரு ஒற்றை வீடு கூடக் கட்டப் படவில்லை, இருந்தபோதும் வரியிறுப்பாளர்களின் பணம் முழுவதும் இனந்தெரியாத ஒரு பகுதியினருக்கு கடத்தப்பட்டுள்ளது என்கிற விபரம் வெளியாகிவிடும் என்பதை ராடா அறிந்திருந்தது. தனது பெயரை வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையில் ராடா நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ராடா நிறுவனம் 2004 டிசம்பர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆழிப் பேரலையினால் தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. “வடக்கில் வீடுகளைக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்டம் - ஜயலங்கா வீட்டுத்திட்டம் என அழைக்கப்பட்டது மற்றும் இரண்டு நிறுவனங்களான வவுனியாவில் உள்ள ‘பி அன்ட் கே ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம்’ மற்றும் வவுனியாவை சேர்ந்த ‘எவரஸ்ட் சிவில் பொறியல் சேவை’ என்பனவற்றுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எல்.ரீ.ரீ.ஈ க்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்த இரண்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டபோது அவை கட்டுமான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுனத்தில் (ஐ.சி.ரி.ஏ.டி) பதிவுகூடச் செய்யப்பட்டிருக்கவில்லை, 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது, அவற்றை பெறும் நிறுவனங்கள் ஐ.சி.ரி.ஏ.டி யில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒரு நிபந்தனை, இதைக்கண்டு ராடா உத்தியோகத்தர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள் எனத் தெரிவித்தார். “இந்த திட்டத்துக்கு அமைச்சரவையின் கொள்முதல் குழுவின் அனுமதியோ அல்லது ஐ.சி.ரி.ஏ.டி யின் பதிவோ இருக்கவில்லை, 2005ல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்த சில வாரங்களின் பின் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏன் இந்த போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்பதற்காக எங்களுக்கு சொல்லப்பட்ட காரணம் அவர்கள் வழங்கிய ஒப்பந்தப் புள்ளிதான் மிகவும் மலிவானது என்று. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு வீட்டுக்கு ஒரே விலையை குறிப்பிட்டிருப்பதாக பேசிக்கொண்டது எனக்கு ஏதோவகையில் நினைவில் உள்ளது. பி அன்ட் கே ஹோல்டிங்ஸ் மற்றும் எவரஸ்ட் சிவில் பொறியியல் சேவை ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 400 வீடுகளை கட்டுவதற்கான பணி ஒப்படைக்கப்பட்ட அதேவேளை வேறு 400 வீடுகள் வட மாகாணத்தில் இனந்தெரியாத ஓரிடத்தில் கட்டப்பட இருந்தன” என அவர் தெரிவித்தார்.
2005ல் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த சதிமுயற்சியின் விளைவாக 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா தோற்கடிக்கப் பட்டது பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் கருத்தை அறிய ‘த சண்டே லீடர்’ மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.            மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

இனப்பிரச்சினைக்கு தீர்வு 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா

அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் 23 வீதமான சிங்களவர்களே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 68 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெண்தாமரை அமைப்பு பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று அதிகாரப் பகிர்வின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் இதனால் சிங்கள மக்கள் அதனைப் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன மிகவும் சவால் மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், மத வழிபாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசியல் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.பெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ம் தேதியை ‘பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளா’கக் கடைபிடிக்க அழைப்புவிடுக்கிறது. முதல் உலக நாடுகள் தொடங்கி மூன்றாம் உலக நாடுகள்வரை பெண்களின் நிலை வருந்தத்தக்கதாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, உலக நிதியம் மற்றும் பல்வேறு நாடுகளின் சட்டங்களும் திட்டங்களும் பெண்களின் நலன், உரிமைகள், முன்னேற்றம், பாதுகாப்பு போன்றவற்றில் தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் பெண்கள் அவற்றை அடைவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறை. வன்முறை அற்ற வாழ்வே, ஆண் - பெண் சமத்துவம், அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுக்க முடியும். எனவேதான், ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இந்த நாளைக் கடைப்பிடிக்க அழைப்புவிடுத்துள்ளது. அது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளில் (Theme) இந்த நாளைக் கொண்டாட அழைக்கிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள், ‘வன்முறையைத் தடுப்போம்’.

உலக அளவில் ஒரு பெண் அவளின் வாழ்நாளில் ஒருமுறையாவது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். தனிமனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகமே பெண்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்துவதையே இது உணர்த்துகிறது. ஒரு சமூகம், வன்முறையை உருவாக்கி, அங்கீகரித்து, செயல்படுத்த முடியும் என்று சொன்னால், அதே சமூகம் அதைத் திட்டமிட்டுத் தடுக்கவும் முடியும் என ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது. ஆனால், அது அவ்வளவு எளிதானதா? ஓர் உயிர்க்கொல்லி நோய்க்கான கிருமி எதுவெனக் கண்டறிந்து தடுப்பதுபோல் நாம் இதனைத் தடுத்துவிட முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் காரணமான கிருமிகள் எண்ணற்றவை, தொன்மையானவை, நம்பிக்கை, பண்பாடு, கருத்தியல் சார்ந்தவை. ஆண் - பெண் பாகுபாட்டால் தொடர்ந்து நிகழ்பவை. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் செயல்பாடுகளும் பன்முகத்தன்மை கொண்டதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு இது தேவையா?

பெண்களை தெய்வமாக, நதியாக, நிலமாகக் கொண்டாடும் இந்தியாவில் இந்த நாள் குறித்த விழிப்புணர்வும், கொண்டாட்டங்களும் அவசியமா என்ற கேள்வி எழலாம். ஆனால், சமூகத்தில் அரங்கேறும் அவலங்கள் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகள் எவை என சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சனை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறை, பண்பாடு, மதம் மற்றம் பாரம்பரியத்தின் பெயரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளங்கள் சரியாகக் கிடைக்காதது, பெண் கடத்தல் என்ற ஆறு பிரச்சினைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும் அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் காங்கோ, பாக்கிஸ்தான் நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உலகமக்கள் நிதியம், மற்றும் வாஷிங்டனில் செயல்படும் சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை, இந்தியாவில் 60% ஆண்கள் மனைவியை அடிப்பதை ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான நிகழ்வுகள் சென்ற ஆண்டைக்காட்டிலும் 19% அதிகரித்தி ருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை நமது தேசிய அவமானம் என்பதைக் காட்டுகின்றன. மேலும் இந்த நாளை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதோடு, திட்டமிட்ட தொடர் செயல்பாட்டுக்கு ஆண் - பெண் இருவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

வன்முறையை எதிர்க்கும் ஆரஞ்சு வண்ணம்

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்களும் பெண்களும் ஆரஞ்சு வண்ணத்தில் உடையணிந்து, வன்முறை ஒழிப்பு தினத்தைக் கொண்டாடு கின்றனர். ஆரஞ்சு வண்ணம், வன்முறையற்ற வண்ணமயமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது என்கின்றனர். அரசும் முக்கியமான கட்டிடங்கள், சுற்றுலாத்தலங்களை ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வன்முறையைத் தடுத்தலும் முடிவுக்குக் கொண்டுவருதலும் அனைவரின் பொறுப்பு. வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கான திட்டமிட்ட செயல்பாடுகளை ஊக்குவிப்பது, வன்முறைக்கு ஆளான பெண்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குவது, அவர்களுக்கு உடல், மன நல உதவிகளைத் தருவது, ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்துவது, தனிநபர் தொடங்கி அரசு வரையிலான அனைத்து மட்டங்களிலும் இதற்கான முயற்சிகள் இன்றியமையாதவை.

தேவை விழிப்புணர்வு

மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பவை தனிமனிதச் செயல்பாடு கள். மேலம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் களாக இருப்பவர்கள் என்ற உண்மை, தனிமனித மாற்றத்தைக் கோருகிறது. வன்முறை, வீட்டுக்குள் நிகழ்ந்தாலும் அது குற்றச்செயலே என்ற உண்மையை உணர்வதும், அது தண்டனைக்குரிய குற்றம் என ஏற்றுக்கொள்வதும் அவசியம்.

வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண்கள், கணவன் அடிப்பதை இயல் பான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளாமல், அதனை எதிர்க்கவும், தடுக்கவும் வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியை நாடத் தயங்கக் கூடாது. ஆண் - பெண் இருவருமே வன்முறையற்ற வாழ்வைத் தேர்வுசெய்ய வேண்டும்.

குடும்பம்

கருவறை முதல் கல்லறை வரை பெண்களின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் குடும்ப அமைப்பே வன்முறையை உற்பத்தி செய்து, ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துச் செயல்படுகிறது. அதோடு ஆண் - பெண் இருவரையும் அதனை ஏற்றுக்கொள்ள பழக்குகிறது. ஆண் - பெண் உறவு, அடக்குதல் - அடங்கிப்போதல் என்பதில் உள்ளதாக நம்புகிறது. பெண்ணை அவள் இருக்க வேண்டிய இடத்தில் வைக்க, ஒழுங்குபடுத்த, அடக்கி ஒடுக்க, தண்டிக்க போன்றவற்றுக்கு வன்முறையையே நமது குடும்ப அமைப்புகள் நம்புகின்றன. இதிலிருந்து நமது குடும்பு அமைப்புகள் விடுபட வேண்டும். பெண்ணுக்குப் பாதுகாப்பை, உரிமைகளை, சுதந்திரத்தை உறுதி செய்யும் ஜனநாயக அமைப்பாக அது மாற வேண்டும்.

சமூகம்

சமூகம், தனிமனித, குடும்ப, குழு வாழ்வுக்கான நெறிகளை வகுத்து, அதைப் பண்பாடாகப் பயிற்றுவிக்கிறது. பெரும்பாலான சமூக அமைப்புகள் தந்தை ஆதிக்க, ஆணாதிக்க அமைப்புகளாகவே விளங்கியவை. அதன் தொடர்ச்சியை இன்றும் நாம் காண முடியும். பெண்களை அதிகம் படிக்கவைக்காமல் இருப்பது. படித்தாலும் வேலைக்கு அனுப்பாத நிலை, இளம் வயதில் திருமணம், ஏராளமான வரதட்சணை, விதவை களுக்கு மறுமணம் மறுப்பு என்பவை யெல்லாம் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தச் சமூக ஒழுங்குகளே பெண்ணின் உரிமைகளை, வாழ்வை தீர்மானிப்பவையாக உள்ளன. ஆனால், சமூக அமைப்புகளில் வகுக்கப்படும் நெறிகளும் பண்பாடும் மாறும் தன்மை கொண்டவை என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. பெண்களுக்கு எதிரான நெறிமுறைகளை அது சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

அரசாங்கம்

மக்களின் வாழ்வைத் தீர்மானிப்பதில் அதிகாரம் கொண்ட அமைப்பு, அரசாங்கம். இதன் நீதித் துறை, நிர்வாகத் துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டின் மூலமே அமைதியான சூழலை உருவாக்க முடியும். அமைதியே முன்னேற்றத்தின் முதல் படி. இது பெண்களுக்கும் பொருந்தும். பெண்களின் முன்னேற்றம் அவர்களின் பாதுகாப்பில், அமைதியில் அடங்கியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. அரசாங்கம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்து, வன்முறையற்ற வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும். தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்குவது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் வழங்குவது போன்றவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.

நன்றி- தி. இந்து

பெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல் நிருத்தனி, நளினிராஜ், மயூரன்

samedi 5 décembre 2015

வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான நகரமயமாக்கலின் விளைவே

பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

Image captionவிளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Image copyrightbbctamil
Image captionசிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Image captionவெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.
இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Image copyrightbbctamil
Image captionவடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Image captionமுன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image captionசென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Image captionநீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

Image copyrightBBCtamil
Image captionபல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Image copyrightbbctamil
Image captionசாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Image captionஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Image captionபுறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.
இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.                                          bbc