mardi 5 juillet 2016

நல்லாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காம்.அம்மணி விஜயகலா கூறுகிறார்.

vijayakalaநல்லாட்சி அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காம். விஜயகலா கூறுகிறார். தான் மக்களின் காணிகளை விடுவித்து வருகிறாராம். மக்களின் காணிகள்  உடனடியாக விடுவிக்க முடியாதாம் படிப்படியாகத்தான்  விடுவிக்கப்படுமாம். இதைத்தான் கடந்த கால அரசாங்கமும் கூறியது.
கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது மாதிரி மைத்திரியால் வலிகாமம் வடக்கில் வளலாய் மக்களுக்கு வழங்கிய காணி  உறுதிகளில்  மகிந்தவின் கையெழுத்தும் படமும்தான் இருந்தன. அதன் அர்த்தம் மகிந்த மக்களின் காணிகளை விடுவிப்பதில் ஈடுபட்டிருந்தார். அம்மணி விஜயகலா ஏதோ தன் முயற்சியால்தான்  மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்ற தொனியில் பேசுகிறார்.
விஜயகலா அம்மையார்  மகிந்தவின் புண்ணியத்தில் வடக்கில் உயிருடன் உலவுகிறார் டக்ளஸ்சையே தூற்றிக்கொண்டிருக்கும் விஜயகலா அரசியலுக்கு வந்ததும் மகிந்தவின் புண்ணியத்தில்தான்.
டக்ளஸ் தேவனந்தா  பேயாவ சோடாப் போத்தலுக்குள் மண்ணெண்ணை  கடத்தி விற்று பணம் சம்பாதிக்கவில்லை. மகேஸ்வரனுக்கு என்ன அரசியல் வரலாறு இருக்கிறது? மகேஸ்வரன் தான் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்ச்செல்வனிடம் அனுமதி கேட்டபோது மகேஸ்வரன் கூட்டமைபில் சேரமுடியாது, எந்தக் காலத்திலும்  தமிழ்ப்பகுதிகளில்  அரசியல் நடத்த முடியாது என்பது  தலைவரின் உத்தரவு என்று தமிழ்ச்செல்வன் கூறினார். மகேஸ்வரன் குடாநாட்டுக்குச் செல்லாது கொழும்பில் நின்றுதான் தேர்தலில் போட்டியிட்டார். மகேஸ்வரனைப் புலிகள் கொன்றபின் விஜயகலாவுக்கு அதிஸ்டம் அடித்தது. இல்லையென்றால் விஜயகலாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
thuva2மகேஸ்வரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த  வியாபாரத் தகராறுதான் மகேஸ்வரனைப் புலிகள் கொல்லக் காரணம். தனது கப்பல்கள் மூலம்  வடக்குக்கும் தெற்குக்கும் இடையே வியாபாரம் நடத்திய மகேஸ்வரன் புலிகளுக்கு  தனது வியாபாரம், அதன் வருமானம்   பற்றிய சரியான கணக்கினைக் காட்டவில்லை. அதே நேரம் கொழும்புத் தொலைக்காட்சி  ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றின்போது  பிரபாகரனுக்கு மேல்தட்டுப் பிழை என்று கூறியிருந்தார்.  மின்னல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஈபிடிபி கட்சிக்கும் மகேஸ்வரனுக்கும் சிண்டு முடிந்து நாரதர் வேலை பார்த்திருந்தார் மின்னர் ரங்கா.  மகேஸ்வரன் கொலையில் ஈபிடிபி கட்சிக்குத் தொடர்பு என்று பேசக் காரணம் அந்த மின்னல் நிகழ்ச்சிதான்.
பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்று விஜயகலா குற்றம் சாட்டுகிறார்.. பிரபாகரனின்  மரணச் சான்றிதழ் கேட்கும் அளவிற்கு  பிரபாகரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு?  விஜயகலா பிரபாகரனின் மனைவியா? அல்லது சகோதரியா? அல்லது குடும்ப உறவினரா? தனது கணவரைக் கொன்றவரின் மரணச் சான்றிதழைப் பற்றி விஜயகலா ஏன் அலட்டிக் கொள்கிறார்.
தனது கணவர்மேல் பாசம் போலக் காட்டிகொள்ளும் விஜயகலா  தனது  கணவரின் தந்தையார் இறந்தபோது  மரண வீட்டிற்குச் செல்லவில்லை. தனது  பிள்ளைகளைக் கூட அனுப்பி வைக்கவில்லை. ஆனால் பிள்ளைகள் கனத்தை மயானத்தில்தான் தங்கள் பேரனின்  உடலைச் சென்று பார்த்தார்கள்.
லண்டனில் வசிக்கும் மகேஸ்வரனின் சகோதரி திருமாளுக்கு மகேஸ்வரனால் சீதனமாகக் கொடுக்கப்பட்ட வீட்டை மகேஸ்வரன் இறப்பிற்குப் பின்னர் விஜயகலா  வழக்காடி அந்த வீட்டைத் தன்வசப்படுத்தியுள்ளார். மகேஸ்வரனின் குடும்பத்தினர் எவருடனும் விஜயகலாவுக்கு உறவுகள் இல்லை.
மகேஸ்வரனின் தந்தையாரின் மரண நிகழ்விற்கு டக்ளஸ் தேவானந்தா  சென்றிருந்தார். மகிந்தாவின் ஆட்சியைக் கொடுங்கோல் ஆட்சி என்று கூறும் விஜயகலா மகிந்தவின் கூட்டங்களில் எப்படியாவது உள்நுழைந்து மகிந்தவிற்கு அருகில் சென்றுவிடுவார்.  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சூரியப் பொங்கல் நிகழ்விற்கு மகிந்தா வந்திருந்தார். விஜயகலாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் மகிந்த அமர்ந்திருந்த மேடைக்கு விஜயகலா செல்ல முற்பட்டபோது காவல் அதிகாரிகள் அனுதிக்கவில்லை. ஆனால் அங்கே நின்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவரை அனுமதிக்கும்படி காவல் அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டபோது காவல் அதிகாரிகள் விஜயகலாவை மகிந்தவிற்கு அருகில் செல்ல அனுமதித்தனர்.
அங்கே மேடையில் மகிந்தவிற்கு அருகில் அமர்ந்திருந்த விஜயகலாவை மகிந்த உன் கணவரைக் கொன்றது புலிகள் என்று உனக்குத் தெரியும், எதற்காக பொய் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது விஜயகலா மௌனமாக இருந்தார்.
MAHESWARAN VIJAYAKALAவிஜயகலா மகிந்தவின் புண்னியத்தில் யாழ் பகுதியெங்கும் சுதந்திரமாக உலா வருகிறார். தனக்கென்று ஒரு குண்டர் படையையும் வைத்துக்கொண்டு  வன்முறைகளில் ஈடுபடுகிறார். மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரனுக்கு அசிட் வீச்சு நடைபெற்றது. அதற்குப் பொறுப்பானவர் விஜயகலா என்று யாழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. விஜயகலாவின் காதலர் “ஜெயக்கொடி” என்ற இராணுவத் தளபதி. அவர் மூலமாகத்தான் துவாரகேஸ்வரனுக்கு   அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் நல்லாட்சி விஜயகலாவைப் பாதுகாக்கும்.
MAHESWARAN VIJAYAKALA
கடந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சியே நடைபெற்றது. எனது கணவன் கொலைக்கு சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை, எனது கணவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது என்பது பொய்யான வதந்தி மக்களுக்காகப் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்ததுக்காக விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் கடந்த கால அரசு ஏன் வழக்கை நேர காலத்தோடு முடித்தது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை.
2008 ம் ஆண்டு  மகேஸ்வரன் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேசர் ஆலயத்துக்கு  வழிபடச் சென்ற வேளையில் மகேஸ்வரன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. சந்தேகநபரை வெளியிலே கைது செய்யவில்லை.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் அங்கு இருந்த பாதுகாவலர்களால் சுடப்பட்டு  சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.ஆலயத்தில் பிரதான பூஜை முடிந்ததும்  ஆலய நுழைவாயிலில் நின்று வழிபடுவது மகேஸ்வரனின் வழக்கம்.
மகேஸ்வரன் கொலையாளி  மகேஸ்வரன் ஆலயத்தில் வழிபாட்டில் இருந்த வேளையில்  மீது பல வேட்டுக்களைத் தீர்த்துள்ளார் என ஐ.ஜி.பி “விக்டர் பெரேரா” ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
maheswaran killer vasanthan_222edited-1துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பி ஓடும்போது மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்  பொலிஸ் கான்ஸ்டபிள்“தர்மசிறி”கொலையாளியைத் துரத்திச் சென்று  துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.மகசினில் குண்டுகள்  தீர்ந்துபோன நிலையில் கொலையாளி தனது “மைக்றோ”  பிஸ்டலின் அடுத்த மகசினை மீண்டும் நிரப்ப முற்பட்ட வேளையில் அவரால் முடியாமல் போய்விட்டது.  கொலையாளியின் கையிலும் தலையிலும் காயம் ஏற்பட்டது. மைக்றோ பிஸ்டலையும், மகசினையும் வீசிவிட்டு கொலையாளி மயக்கமடைந்துவிட்டார்.  கொலையாளியைத் தெரிந்த இருவர் கொலையாளியை கொழும்புத் தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக ஐ.ஜி.பி கூறினார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கொலைச் சந்தேக நபரின் சிறிய தாயார் கொலைச் சந்தேகநபர் 1990 ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும்  அதன் பிறகு அவர் எங்கே என்று தங்களுக்குத் தெரியாதென்று விசாரணையில் தெரிவித்ததாக ஐ.ஜி.பி மேலும்தெரிவித்தார்.
maheswaran killerகொலைச் சந்தேக நபர்மீது விசாரணை நடத்தப்பட்டு 150 பக்கங்களில் வாக்குமூலம் பெறப்பட்டது. கொலைச்சந்தேக நபர் “கொலின் வலன்ரைன்” குருநகரைச் சேர்ந்தவர்.  அவரது தந்தையார்“அந்தோனிப்பிள்ளை ஜோன்சன்” தாயார் “டோனா அஞ்சலா”இவர்கள் 1985ம் ஆண்டு குருநகரிலிருந்து  வெளியேறி கிளிநொச்சியில் குடியேறியுள்ளனர். கொலின் வலன்ரைன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தார். பின்னாளில் இவர் புலிகள் இயக்கத்தில் இணைந்து அரசியல் படுகொலைகள் செய்யும் பிஸ்டல் குழு உறுப்பினராகப் பயிற்சி பெற்றார்.. இவருடைய புலி  இலக்கம் 5127. புலிகளால் வழங்கப்பட்டது. வன்னியில் “வீரபுரம்” என்ற இடத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.  தளபதி “மாதவன் மாஸ்டர்” என்பவரால்  வழங்கப்பட்ட பயிற்சியின் பின்னர் இவரது இலக்கம் 1527 ஆக மாற்றப்பட்டது.
2006ம் ஆண்டு மாதவன் மாஸ்டர் பிஸ்டல் கொலையாளி வசந்தனை  வத்தளைக்கு அனுப்பி தற்காலிக இடத்தில் தங்க வைத்தார்.  அங்கு  வசந்தனுக்கு தற்காலிகமாக வேலைகளும் கிடைத்தன. புலிகளின் நிகழ்ச்சி நிரல்படி வசந்தனுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள வர்த்தக வங்கியில் வங்கிக் கணக்கு ஒன்றும் திறக்கப்பட்டது.
அதன்பிறகு அவருடைய வங்கிக் கணக்குக்கு நோர்வேயிலிருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டது. புலிகளால் வழங்கப்பட்ட தொலைபேசியிலிருந்து கொலைச் சந்தேகநபர்  வன்னியிலுள்ள மாதவன் மாஸ்டருடன் மட்டும்தான் தொடர்புகளைப் பேணியிருந்தார்.
2007ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனைக் கொல்லும்படி கொலையாளிக்கு வன்னியிலிருந்து கட்டளை வந்தது. 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலையாளி வசந்தன் எனப்படும் கொலின் வலன்ரைன் வெள்ளவத்தைக்கு வரவழைக்கப்பட்டு  ஒரு“மைக்றோ பிஸ்டல்” 39 ரவைகள் அடங்கிய இரண்டு மகசின்கள் வழங்கப்பட்டன. கொலையாளி 14 ரவைகளை இரண்டு மகசின்களுக்குள்ளும் நிரப்பிவிட்டு மிகுதி 25 ரவைகளையும் வத்தளையில் தனது வீட்டில் ஒளித்து வைத்துவிட்டார்.
Maheswaran_s_familyமகேஸ்வரன் கொலை நடந்த அன்று  கொலையாளியுடன் வத்தளையில் தங்கியிருந்தவர்கள்  கொலையாளியை  கொச்சிக்கடையிலுள்ள ஆலயத்திற்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.  கோவிலுக்குள் சென்ற கொலையாளி  மகேஸ்வரனைச் சுட்டுக் கொன்றுள்ளார். இரண்டு சாட்சிகளின் தகவலின்படி கொலையாளியை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
அடையாள அணிவகுப்பின்போது   “கொலின் வலன்ரைன்” தன் கொலையாளி என உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வளவு ஆதாரங்களின் பின்னும் விஜயகலா புலிகள் தன் கணவனைக் கொன்றது என்பது விஜயகலாவுக்கும் கொலைக்குமசம்பந்தம் இருக்கிறது என்று சந்தேகப்பட வைக்கிறது.
கொலையாளி வசந்தன்  மகேஸ்வரனுக்கு அறிமுகமானவராக இருக்கிறார்.. கொலையாளி மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது வசந்தன் சுடாதே என மகேஸ்வரன் அலறியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன, கொலையாளி மகேஸ்வரனுக்கு நெருக்கமானவாராக ஆனபின்னரே கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
பிரேமதாசா கொலை, வினோதன் கொலை, ராசிக் கொலை போல புலிகள் ஒரு அரசியல் பிரமுகரைக் கொல்வதானால் அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி தங்கள்மீது  அந்தப் பிரமுகருக்கு சந்தேகம் ஏற்படாதபடி நடந்துவிட்டுத்தான் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
மகேஸ்வரன் பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்குச் செல்கிறார் என்ற தகவலை கொலையாளி வசந்தனுக்குத் தெரிவித்தவர் யார்?
மகேஸ்வரனின் குடும்பத்திலிருந்துதான் அந்தத் தகவல் சென்றிருக்கிறது.  வசந்தனுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தது விஜயகலா என்றே கூறப்படுகிறது. விஜயகலாவுக்கு கொழும்பிலுள்ள புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகரான “விண்ணன்” எனப்படும் வரதராசசிங்கத்துக்கும் தொடர்புகள் உள்ளதாகவும்  அவர்கள் இருவரின் ஒத்துழைப்புடனேயே கொலை இடம்பெற்றதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மகேஸ்வரனைப் புலிகள் கொன்றது  வெறும் வதந்தி என்று  விஜயகலா புலிகளைக் கொலைக்குற்றசாட்டிலிருந்து தப்பவைக்கவேண்டிய அவசியம் என்ன?
2008ம் ஆண்டு மகேஸ்வரன் புலிகளால் கொல்லப்பட்டார். 4 வருடங்கள் நடைபெற்ற விசாரணையின் பின்2012ல்  புலி உறுப்பினரான வசந்தனுக்கு  உயர்நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.  கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி “சுனில் ராஜபக்ச” தீர்ப்பை வழங்கினார்.. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தவறு என்று  விஜயகலா கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாகும். அதுவும் ஒரு அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக இருக்கும் ஒருவர் நீதித்துறையை இப்படி அவமதிக்கலாமா?
Maheswaran_s_familyகொலை நடந்த போதே கொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு  சாட்சிகள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு  கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டபின்  குற்றவாளியைக் கூண்டிலேற்றும்படி கூறும் விஜயகலா குறிப்புடும் அந்தக் குற்றவாளி யார்?முன்னைய ஆட்சி கொடுங்கோலாட்சி. தற்போதைய ஆட்சி நல்லாட்சி  நிலவுகின்றதென்றால்  அந்த நல்லாட்சி மூலம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தான் உண்மையான குற்றவாளி என்று  சந்தேகிப்பவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தலாமே?
மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட கொலின் வலன்ரைன் என்பவரின் பெற்றோர் கூட தங்கள் மகன் அப்பாவி என்று முறையீடு செய்யவில்லை. ஆனால் விஜயகலா அந்தக் குற்றவாளியைத் தப்ப வைக்க முனைவதன் காரணம்தான் என்ன?
புலிகளுக்கும் விஜயகலாவுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
தொடரும். salasalppu 

காதல் முறிவு முன்னாள் போராளி என்பதால் இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் முன்னாள் போராளியென்பதால் காதலில் ஏற்பட்ட இடைமுறிவு காரணமாக இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் அச்சுவேலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த விஜயனாத் (27 வயது) என்பவரே தற்கொலை செய்துகொண்டவராவர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

குறித்த இளைஞன் ஒர் முன்னாள் போராளியாவார். இவர் கடந்த எட்டு வருடங்களாக யுவதியொருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் போரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த இருவருடங்களுக்கு முன்னர் இவர் காதலித்து வந்த பெண்ணின் தந்தை இவரது கண்பார்வை குறைபாட்டையும் முன்னாள் போராளி என்பதையும் காரணம் காட்டி இவர்களது காதலை தடுத்திருந்தார். அத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அவர் தனது மகளுக்கு வேறு திருமணம் ஒன்றையும் செய்துவைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த குறித்த இளைஞன் மதுவுக்கும் அடிமையாகியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீடு வந்த இவர் இரவு 10 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டார் இவரை தேடிச்சென்றுள்ளனர்.

இதன்போது இவர் வீட்டிற்கு அண்மையில் இருந்த காணியொன்றுக்குள் நஞ்சருந்திய நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக இளைஞனை அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதும் குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

மேலும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான மரணவிசாரணையை யாழ். போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார். அத்துடன் குறித்த இளைஞன் பெற்றோரை இழந்திருந்த நிலையில் உறவினர்களுடனேயே வசித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிநுட்பத்தில் ஆபாசப் படங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு (வீடியோ இணைப்பு)

Will adult content be the popularisation of virtual reality? | Daily Mail Online                                                வெர்ச்சுவல் ரியாலிட்டி (virtual reality) என்ற புதிய தொழில்நுட்பத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இவ்வருடத்திற்குள் 10,000 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூகுள் நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
வீட்டில் இருக்கும் தங்களது மடிக்கணனி மற்றும் கையடக்கத்தொலைபேசியில் மட்டும் ஆபாசப் படங்களை பார்த்து வந்தவர்கள். தற்போது விஆர் தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றனர். இது படங்களை பல மடங்கு அதிகரித்து, அதே நேரத்தில் காட்சிகளை அருகில் பார்ப்பது போல் இருக்கும்.
இதனால் தற்போது விஆர் தொழிநுட்பத்தில் ஆபாசப் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி நோர்வே, ஹொங்கொங், சிங்கப்பூர், பின்லாந்து, தென் கொரியா, சுவீடன், மலேசியா ஆகிய நாடுகளில் ஆபாசப் படங்களை பார்த்து வருகின்றனர்.
குறித்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி ஆபாசப் படங்களை அதிகளவில் பார்ப்பவர்களில் அவுஸ்திரேலிய நாட்டினரே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெர்ச்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசப் படங்களை  பார்ப்பவர்பகளின் எண்ணிக்கை 17 மாதங்களில் 9,900 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது.
இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன. அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன.
இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன.அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான். இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது.
மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.எய்ட்ஸ்க்கும் மருந்தாக பயன்படுகிறது இந்த காலான்.குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்கள் இந்த காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள்.
ஜப்பான் மற்றும் சைனாவில் சுமார் 21- 40 வயது வரை உள்ளவர்களை தினமும் காளான் உண்ண சொல்லியிருக்கிறார்கள்.
தொடர்ந்து நான்கு வாரம் அவர்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் செல்களை ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் டி- செல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் சைவமாக இருக்கக் கூடாது. தேநீர் அருந்தக் கூடாது.
ஏனெனில், காய்கறிகளிலும், தேநீரிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், அவைகளுடன் காளான் சக்தியை ஒப்பீடு செய்வது கடினம்.
காளானின் மருத்துவ பயன்கள்
உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது,மாரடைப்பை தடுக்கிறது,உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது.குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பும் வருவது தவிர்க்கப்படுகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.மலட்டுத்தன்மை போக்கும், கருப்பை நோய்கள் தடுக்கும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
எச்சரிக்கை குறிப்பு
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும்.
சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணம் உடையதாகவும் இருக்கும்.
விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம், பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்.

ஒபாமாவும் கிளிண்டனும் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

வட கரோலினா மாநிலத்தின்  சார்லோட் நகரில், ஒபாமாவும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கிளிண்டனும், இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
.
அதிபர் ஒபாமா, கிளிண்டனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த சில வாரங்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் இந்த கூட்டுப் பிரச்சாரம், ஜனநாயகக் கட்சியை ஒன்றுபடுத்தும் என்று ஹிலாரி கிளிட்டனின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த கூட்டு பிரச்சாரத்தினால் ஒபாமாவின் ஆதரவாளர்களும் கிளிட்டனுக்கு தங்களின் ஆதரவை தெரிவிப்பர் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள்னர்

ஹிலாரி கிளிட்டனும் ஒபாமாவும் 2008-ம் ஆண்டு இதேபோன்று ஒரு அதிபர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன்,

ஜனநாயகக் கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தான் வெளியுறவு செயலராக இருந்தபோது தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையகம் ஒன்றை பயன்படுத்தியது தொடர்பாக பெடரல் புலனாய்வு துறை விசாரித்ததை பற்றி பேசியுள்ளார்.
Image copyrightGETTY IMAGES
Image captionஅமெரிக்க பெடரல் புலனாய்வு துறை விசாரணை சுமுகமானதாகவும் அலுவல் ரீதியிலும் இருந்தது - ஹிலாரி
சுமுகமானதாகவும், அலுவல் ரீதியிலும் அந்த சந்திப்பு இருந்தது என்று என்பிசி தொலைக்காட்சியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஓராண்டு காலம் நடைபெற்ற மீளாய்வை முடிவுக்கு கொண்டுவர நீதித் துறைக்கு உதவக் கிடைத்த வாயப்புக்கு தான் பெருமைப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
தான் எந்த தவறையும் இழைக்கவில்லை என்றும், வகைப்படுத்தப்பட்டது என குறிக்கப்பட்ட எவற்றையும் அந்த தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையகம் மூலம் அனுப்பவோ, பெற்றுக்கொள்ளவோ இல்லை என்று ஹிலாரி கூறிவருகிறார்.
ஆனால் எதிராளிகளோ, அவர் பல நூறு வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பொது இணையவெளியில் அவர் போட்டிருக்கலாம் என்கின்றனர்.
ஹிலாரி தண்டனை பெற போவதில்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கு சில வாரங்களே இருக்கின்ற நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ள நேரம் தான் சிக்கலானது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.bbc