samedi 28 février 2015

பிரபாகரன் மடியும்வரை அவர் என்னைப்பற்றி ஏதும் பேசவில்லை;கருனா

பகுதி 01                                                                                            பகுதி 02                                                                            பகுதி 03                                                                                                                                                          பகுதி 04         பகுதி 05        

mardi 24 février 2015

கல்லீரல் பாதிப்பா?பூசணிக்காயின் முத்தான நன்மைகள் ! காளான்”கொழுப்பை கரைக்கும். இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள் !

helth-201uநம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75மூக்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்துஇ அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம்.
தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்....                                                              

பூசணிக்காயின் முத்தான நன்மைகள் !                                             

helth-2015-0காய்கறி வகைகளில் ஒன்றான பூசணிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் போன்ற நோயின் தீவிரம் குறையும்.
உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால்  இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும்.
பூசணிக்காய் சாறுடன் 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும்.
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.                                                                                                                                           

காளான்”கொழுப்பை கரைக்கும்                                                           

helth-201மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான்.
பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக்கூடியது.
இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது.
காளானின் மகத்துவங்கள்
காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோத்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.
காளான் சூப்
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிஇ வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும் அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் சூப் ரெடி.
இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்.
பயன்கள்
பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.
மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.
காளான் குழம்பு
முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து, தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு காளான், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்னர் தேங்காயை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சூப்பரான காளான குழம்பு தயார்.
பயன்கள்
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.
தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.
இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைந்துவிடும்.                                                                                                                                                                உடலில்இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள் !                      
blood_synthesizedfoodblood_synthesizedfood_0blood_synthesizedfood_00blood_synthesizedfood_01blood_synthesizedfood_02உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பேரீச்சம்பழம்
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
அத்திப்பழம்
தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
பீட்ரூட்
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கை கீரை
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
தக்காளி
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.                                                                               நன்றி.... சலசலப்பு

dimanche 22 février 2015

தமிழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு என்று கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும்

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் தமிழ் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு தமிழ் முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தெரிவித்தார்.
வடக்கு தமிழ் முஸ்லிம்கள் தங்களின் அசையும் அசையா சொத்துக்களை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று அமீன் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் தங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பைச் சேர்ந்த எம்.எம். அமீன் தமிழோசையிடம் கூறினார்.
கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் எம்.எம். அமீன் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.                 bbc 

samedi 21 février 2015

கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.பூண்டு தினமும் உண்டால் ஆரோக்கியம் உண்டு!

garlic-newsபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின்,
இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டின் மணத்திற்கு காரணம், அதில் உள்ள சல்பரே.
இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.
பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி
விடும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும். நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன், இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளியே பூசி வர வேண்டும்.
சுளுக்கு: வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து, சுளுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
தேமல்: வெள்ளை பூண்டையும் வெற்றிலையையும் சேர்த்து அரைத்து, தேமலின் மீது தடவினால், கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து, பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
காசநோய்: ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.
ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

ஈழம் உருவாகுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை;புலிகளின் கூட்டுப் பயங்கரவாதி ரணில்

இலங்கையில் மீண்டும் ஈழம் அமைப்பது தொடர்பான குற்றச்சாட்டை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்கு புலிச்சாயம் பூசும் தரப்பினர்களின் கைக்குள்ளே கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றோர் உள்ளனர். எமது ஆட்சியில் மீளவும் ஈழம் உருவாகுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. அதற்குத் துணை போவதாக எம்மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் இரகசிய ஒப்பந்தத்தினூடாகவும் பாரிய தொகை நிதியை வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி என்னை தோற் கடித்தார்கள்.அது மாத்திரமன்றி எமது தரப்பினர்களில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை கொலை செய்ய விடுதலைப் புலிகளே முயற்சித்தனர். எனவே, அவ்வாறானதொரு நிலைமையில் விடுதலைப்புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்ற தேவை எமக்குக் கிடையாது.
அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியது. இது நல்லிணக்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் முன் நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறுதெரிவித்தார். நாட்டில் புதிய அரசியல் முறையை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும். இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் ஆட்சிபீடம் ஏறினோம்.
குறித்த இலக்குகளை பொறுமையுடன் கையாண்டு வெற்றிகொள்ள வேண்டும். அத்தோடு சர்வாதிகார ஊழல் மோசடிகளுடனான ராஜபக்ஷ ஆட்சியை தோல்வியடையச் செய்து நாட்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது முக்கிய குறிக்கோளாகும். அதற்காக வேண்டியே மக்கள் வரம் எமக்கு கிடைக்கப்பெற்றது என்றார்.

jeudi 19 février 2015

ஆயுதப் போராட்டத்தை எப்படி ஒடுக்கமுடியும் என்பதையும் ஏகாதியபத்தியமே கற்றுக் கொடுத்தது

சிந்தியுங்கள்! ஒன்றுபடுங்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்! வெள்ளை நிறத்தைக் கண்டால் –பதறி வெருவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா! (பாரதி)
பாரதியின் பாடலை படிக்கும் பொழுது எப்படி எங்கள் சுதந்திர உணர்வுபற்றி எனக்கு இப்பொழுதுதான் விளங்குகின்றது எங்கள் போராட்டம் சுதந்திரப் போராட்டமில்லை என்பதை காலம் கடந்த ஞானத்தினால்.என் தேசத்தையும் என் சனத்தையும் அழிப்பதர்காகவா நாம் போராடினோம்.அறியாமையை போக்க அறிவைக் கற்றுக் கொள்ளாதவரைக்கும் ஆயுதம் எம்மை அழிக்கும் எண்பதர்க்கு பாரதியன் பாடல் நல்ல உதாரணமாகும்.
அதே போல புதுகவிதையின் பிதாமகன் மேத்தாவும் இப்படி சொல்லுகின்ரார்.அடித்துக் கொள்ளுங்கள் ஆனந்தமாக! ஆயுதம் வேண்டுமா‘?அள்ளித் தருகின்றோம்!
அப்படிப்பட்ட காலங்களில் நான் பங்குகொண்ட சில பாசறைகளில் சீனா கம்யூனிஸ் கட்சியின் கூட்டங்களிலும் பாசறைகளிலும் நான் கலந்து வியட்நாம் போராட்டத்தை ஆதரித்து சர்வதேச ஏகாதிபத்தியங்களை கண்டித்து கண்டன பேரணி நடத்திய ஊர்வலங்களிலும் உளூர் சாதிய போராட்டங்களிலும் பங்கு கொண்ட நாம் அதுமாத்திரமல்ல மேதினம், யாழ்குடாநாட்டு தேர்தல் வெற்றிபெற்றவர்களின் வெற்றிக்கொண்டாட்டங்களிலும் பங்குகொண்ட நாம் எது போராட்டம் எண்பதை கற்றுக் கொள்ளத்தவறியதின் விளைவே தமிழீழப் போராட்டத்தில் சகல இயங்கங்களிலும், பொது மக்களும் அழிக்கப்பட்ட மக்களின் எண்னிக்கை விண்னை தாண்டும் அளவிற்கு கிட்டதட்ட 50,000 பேர்வரும்.
இவற்றுக்கு யார் பொறுப்பு எடுப்பது இவற்ரை கருத்தில் கொள்ளாமல் ஏழுந்த மானமான தீர்மானத்தை கொண்டுவந்தது ஐக்கிய மில்லாத சமாதானத்தை விரும்பாத தமிழ் தேசியம் என்பதர்க்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே போதுமான சான்றாகும்.
ஈழத்தில் (வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கையிலும்) நடந்த போராட்டம் பற்றி என்ன என்று கேட்டால் மக்கள் சொல்லுவது 58 கலவரம், தனிசிங்களச் சட்டம், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் 77 கலவரம் ஜூலை 83 கலவரம் இவற்றைத்தான் சொல்வார்கள் ஆனால்
அது ஏன் நடந்தது என்றால் யாருக்கும் தெரியாது சிங்களவன் கூடாது அது மாத்திரம் நா கூசாது தமிழனால் சொல்லும் வார்த்தை இது மட்டும்தான்.
இப்பொழுது பல அறிவியல் வளர்ச்சி விஞ்ஞான வளர்சியிலுமா தடுமாற்றம்.2ம் உலகப்போருக்குப் பின் ஐ.நா.சபையை உருவாக்கி பின் ஏகாதிபத்தியம் ஒரு வல்லரசுக் கொள்கையுக்குள் கொண்டுவருவதர்க்காக உருவாக்கப்பட்ட போராட்ட முறைதான் பயங்கரவாதம் அழிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவிகள் அப்படிப் பார்த்தால் யாழ்ப்பானத்தில் அழிகப்பட்ட மக்களுக்கு யார் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் தமிழ்தலைமைக்கும் உண்டு.
அதைவிட்டு அடுத்தவனின் குற்றத்தை தண்டிக்க போனால் தான் தண்டனைக்கு உள்ளாகவரும் என்பதைப்புரிந்து கொள்ளாமல் குத்து மதிப்பு அரசியல் பேசினால் பாதிப்பு யாருக்கு வரும் என்று சிந்திக்கவேண்டும்.உலகத்தில் நடக்கின்ற நடந்த ஏகாதிபத்திய போராட்டங்களின் சூத்திரம்(கோட்பாடு,தத்துவம்)ஆப்கானிஸ்தானில் ஜிகாத்தை உருவாக்கி,முஸ்லிம் இளைஞரை போராட்த் தூண்டியபொழுது கொடுக்கப்பட்ட தரவு.:-பின்வருமாறு.
10 சோவியத்துருப்புக்கள் சோதனைச்சாவடியில்,அல்லது சுற்றிவளைப்பில் ஈடுபட்டால்
5,பேர் கொல்லப்படவேண்டும் 1 முஸ்லிம் போராளியால் 15-10=5 இவற்றுக்கு பயன்படுத்தும்
குண்டுகள் (துப்பாக்கி றவை)இதே போன்றுதான் இலங்கையிலும் மொசாட்டினால் இலங்கை
ராணுவத்துக்கும் புலிகளுக்கும் பயிச்சி கொடுக்கும் பொழுது வழங்கப்பட்ட தரவுகளும்
இவைதான் இவற்றுக்கு காரணம் தேடுவதிலும் பார்க்க தமிழ் தலைவர்களும்,இயக்கத் தலைவர்களும் தமது இனத்தை தாமே அழித்தோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு
தண்டனையை ஏற்றுக் கொள்வதே மனிதாபிமானமும்,பண்புமாகும்.50,000 மக்கள் அழிவுக்கு
பொறுப்பு கூறாமல் அடுத்த கட்ட தீர்மானத்துக்கு செல்வது தமிழர்களின் போகிலித்தனமாகும்.
அந்தவகையில் ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக எவர்வந்தாலும் யுத்தக்குற்ற தீர்மானம் நிறைவேற்ற முடியாது எப்படி குற்றவாளிகளினால் தண்டனை கொடுக்கமுடியும் என்பதை சிந்தித்து இனியாவது அரசியலை விட்டு ஏதாவது வேலைசெய்து வாழகற்றுக் கொள்ளுங்கள் .
இவ்வளவு காலமாக மக்களை ஏமாற்றியது போதும். அடுத்தபடியாக 1986ம ஆண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தை எப்படி ஒடுக்கமுடியும் என்பதையும் ஏகாதியபத்தியமே கற்றுக் கொடுத்துவிட்டு இன்று இனாழிப்பு என்று நீல் விடுவதும் உச்சக்கட்ட போகிலித்தனம் ஒரு தேசத்தில் வாழ்ந்த தமிழ் தேசிய இனத்தை அழித்து, நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அந்த மக்களுக்கு உரிமைக்கு கைகொடுப்பதானது குருடனுக்குப் பின்னால் போவதர்க்குச் சமமானதாகும்.
இயன்றவரை உண்மை பேச கற்றுக் கொள்ளுங்கள்.67வருட அரசியல் உரிமைக்கு தீர்வுகா
னது இழுத்துஅடித்துவிட்டு மேலும்,மேலும் காலத்தை வீனாக்குவது வாழபோகும் மக்களுக்கு மேலும் சுமையாக அமைந்துவிடும்.ஆகவே புதியவர்களை அரசியலுக்கு உள்வாங்குவதும் சமூகவிரோதிகள்,கொலையாளிகள்,நிதிமோசடிக்காறர்,விபச்சாரபேர்வழிகள் இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களை அரசியல்வாதிகளாக வைப்பது மிகவும் வரவேற்கத்
தக்கது.
மு.குறிப்பு:-
1)யுத்த காலத்தில் இயற்கைமரணம் எய்திய(இறந்தவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை)
நபர்களும் துப்பாக்கி சூடுபட்டு இறந்தாக இழப்பீட்டு தொகை எடுத்தவர்கள் பற்றியது
பற்றியும் நாம் விவாதிக்கவேண்டும்.
2)தமிழ் மக்களின் பூரண குடிசனதொகையை கணக்கெடுத்து வெளிநடுகளில் வாழ்பவர்கள்
பொலியான பெயர்கழில் வாழ்பவர்களின் பெயர்களை உறுதிப்படுத்துவதினாலும் இனப்படு
கொலையின் இறப்பு விகிதத்தை குறைக்கமுடிம் எப்படிப் பார்த்தாலும் தமிழ் தலமை தமிழ்
மக்களை ஏமாற்றிகின்றார்கள் என்பது உறுதியான விஷயம்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுமில்லை பாதுகாப்பாகவாழ்வதர்க்கான
வாழ்விடமுமில்லை.
தமிழ் தேசியத்தையும்,இயக்கத் தலைவர்களையும் புதிய அரசின் உதவியுடன் தண்டிப்பதும் அரசியலிலிருந்து விலக்கவதுமே சரியானதும் ஆரோக்கியமான தமிழ் மக்களின் தீர்வாகும்.
பின் குறிப்பு;._ஏ.கே 47 துப்பாக்கி வந்தாப்பிறகுதான் ஏகாதிபத்தியப் போராட்டம் வீழ்சிபெற்றது
அதன் பின்பே ஏகாதிபத்தியம் இராசயண ஆயுதம் கொத்துகுண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதமேன பூச்சாண்டி பிரசாரத்தில் இறங்கியது. யானை தனக்குத் தானே மண் அள்ளி
கொட்டுவதுபொல தன் அழிவை நொக்கியே நகர்கின்றது ஏகாதிபத்தியம்.
தொடரும்.
ஜோசப் மகேந்திரன். 

mardi 17 février 2015

பாலியல் வன்புணர்ச்சி என்பது ஒரு தாக்குதல்;சாஹிகா யுக்சேலிடம் பேட்டி

கேள்வி: ஏன் ஒரு ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்? அவருடைய நோக்கங்கள் என்ன?
பதில்: நீங்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஒரு ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறு. தெருவில் இருக்கும் ஒரு மனிதன் ஒரு பெண்ணை திடுமென வன்புணர்ச்சி செய்துவிடுவதில்லை. அப்படி செய்வது தவறு என்ற எண்ணம் இருப்பதால்தான் இத்தகைய செயல்கள் மறைவாக, யார் கண்ணிலும் படாமல் செய்யப்படுகின்றன பாலியல் வன்புணர்ச்சி என்பது ஒரு பாலியல் இச்சை தொடர்பான செயல்பாடு கிடையாது. வன்புணர்ச்சி என்பது ஒரு தாக்குதல். வெற்றி என்பது இதன் நோக்கமாக இருக்கிறது. சக்தியைக் கொண்டு ஒரு பொருளை அபகரிக்க நடக்கும் நடவடிக்கை. இங்கு பெண் பொருளாக கருதப்படுகிறாள். ஒரு சிலர் இந்த செயலில் இன்பமடையலாம்.
வன்புணர்ச்சி என்பது மிக மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது. இருந்தும் ஆண்கள், வேறு பல தாக்குதல்களையும் செய்கின்றனர். மனரீதியான வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள், பொருளாதார வன்முறைகள், பெண்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது போன்ற விடயங்கள் சாதாரணமான விடயங்களாக சமூகத்தால் ஏற்கப்படும்போது பாலியல் வல்லுறவுகள் நடக்கின்றன.கேள்வி: ஒருவர் வளர்க்கப்படும் விதம் அவர் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களைச் செய்ய வழிசெய்கிறதா?
பதில்: இங்கே இருக்கும் கலாச்சாரத்தில் ஆண்களின் ஆளுமை அதிகம் காணப்படுகிறது. அதிகாரத்தை போற்றும் போக்கு இருக்கிறது. ஒருபெண்ணுக்கு, தன்னுடைய கணவனை வேறுமாதிரி நடத்த வேண்டும் அவர் சொன்னதைக் கேட்டுக் கீழ்ப்படியவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
அந்தப் பெண் இந்தப் படிப்பினையை தனது மகனிடமும், மகளிடமும் கொண்டு சேர்க்கிறார். வீட்டில் தம்முடைய தாய்மார்கள் வன்முறையை அனுபவிப்பதைக் கண்ட பெண்கள் பின்நாளில் தம்முடைய திருமண வாழ்க்கையில் வன்முறையை சந்திக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
தன்னுடைய அப்பா, அம்மாவை அடிப்பதை பார்த்து வளர்ந்த ஆண்கள் தம்முடைய வாழக்கையிலும் தமது மனைவியிடம் வன்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். வீட்டில் அம்மா இரண்டாவது குடிமகளாக நடத்தப்படுவதை பார்க்கும் சிறுவர்களும், சிறுமிகளும் சமூகத்தில் அந்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றனர். துருக்கியில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவே கல்விபெறுகின்றனர். அரசியல்வாதிகளும் ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது என்று பேசுகின்றனர். இதுவும் இங்குள்ள பிரச்சனைகளுக்கு ஒரு காரணம்.
சிலர் பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், அவர்களின் விரைப் பைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். மரண தண்டனை என்பது மானுடத்துக்கு எதிரானது. அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் மாநிலங்களுக்கும் அந்த தண்டனை இல்லாத மாநிலங்களுக்கும் இடையே குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் மக்களின் கோபத்தை தணிக்க கடுமையான தண்டனைகள் பற்றி பேசுகின்றனர்.
நாம் இங்கே பழி வாங்குவதைப் பற்றிப் பேசவில்லை. பாலியல் குற்றங்களை சமூகத்தில் எவ்வளவு அதிகம் குறைக்க முடியும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.கேள்வி: பாலியல் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? அவர் நடந்தது குறித்து தைரியமாக பேச வேண்டுமா?
பதில்: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, பாலியல் விஷயத்தை மறைவாகத்தான் பேச வேண்டும் போன்ற கருத்துகள் நிலவும் சமூகங்களில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் குறைந்த அளவில்தான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விடயங்களை பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகின்றனர். அப்பெண்ணை மேலும் மேலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நடந்த விடயத்தை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிடப் போவதாக மிரட்டலாம்.
வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நடந்த சம்பவம் குறித்து நம்பிக்கை மிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசலாம். அமைதியாக இருப்பதன் மூலம் பாலியல் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டுவிட முடியாது.
சில நேரங்களில், பாலியல் தாக்குதல்கள் காரணமாக உடல்ரீதியான உபாதைகள் ஏற்படலாம். உடல் உறவால் பரவும் நோய்களும், கர்ப்பம் தரிப்பதும் ஏற்படலாம். எனவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சீக்கிரம் மருத்துவரைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாலியல் வன்முறைக்கு இலக்கான பெண்ணின் கணவன்மார்களுக்கும் இந்த விடயம் கடுமையான பாதிப்புக்களைக் கொடுக்கும். அவர்களுக்கும் உளவியல்ரீதியான ஆலோசனைகளும் சமூகரீதியான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.         ....  bbc

dimanche 15 février 2015

போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு,முழுக்க முழுக்க கொழும்பு நகரில் படமாக்கப்பட்ட இந்த படம் தெரியாதா?..

சில வருடங்களுக்கு முன்னர்  வெளிவந்த, கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை பலர் பார்த்து இரசித்திருப்பார்கள். கதையின் கரு வழமையான தீவிரவாதிகள் பற்றிய கதை தான். ஆயினும், எதற்காக தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கமல் அந்தப் படத்தில் ஒரு லெக்சர் அடிப்பார். அதைப் பார்த்து இரசித்த தமிழர்கள், குறிப்பாக புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், "அது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே எதிரான படம்" என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்.

கமல்ஹாசன் நடித்து வெளியான சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் படம் வெளியான நேரம், கமல் அதே கதையில் தாலிபானுக்கு பதிலாக புலிகளை வைத்துக் கூட எடுத்திருக்கலாம். விஸ்வரூபம் புலிகளுக்கும் எதிரானது என்று, அந்தத் திரைப்படம் தொடர்பான விமர்சனக் கட்டுரையில் எழுதி இருந்தேன். அன்று விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த, புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு அது உவப்பானதாக இருந்திராது. (பார்க்க:போலித்தமிழ் தேசிய விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம் http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html ) என்ன செய்வது? உலக யதார்த்தம் அவர்கள் நினைப்பதற்கு மாறாகவே இருக்கின்றது.

உன்னைப் போல் ஒருவன் திரைப்படம், வேறொரு இந்தியப் படத்தின் (A Wednesday) ரீமேக் தான். அதை இன்னொரு தடவை ரீமேக் செய்து, ஆங்கிலத்தில் எடுத்திருக்கிறார்கள். "A Common Man"  என்ற பெயரில், இலங்கையில் தயாரிக்கப் பட்டு 2013 ம் ஆண்டு வெளியானது.

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் Ben Kingsley நடித்த அந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க கொழும்பு நகரில் படமாக்கப் பட்டுள்ளது. படத்தை தயாரித்ததும் இலங்கையை சேர்ந்த நிறுவனம் தான். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

உன்னைப்போல் ஒருவன், இந்தியாவில் குண்டு வைத்த முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றிய கதையை சொல்கிறது. அதற்கு மாறாக, A Common Man தமிழ்த் தீவிரவாதிகள் பற்றிய கதையை சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம், படம் முழுவதும் உன்னைப் போல் ஒருவனை நினைவுபடுத்துகின்றது.

A Common Man படத்தின் தொடக்கத்திலேயே, 1996 ம் ஆண்டு, கொழும்பு நகர மத்தியில் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலான, மத்திய வங்கி குண்டு வெடிப்பை காட்டுகிறார்கள். உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி, "காமன் மேன்" ஆக வரும் பென் கிங்ஸ்லி, படத்தின் இறுதிக் கட்டத்தில், தென்னிலங்கையில் புலிகள் நடத்திய முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிடுவார்.

அமெரிக்க நடிகரான Ben Kingsley யும், பிரிட்டிஷ் நடிகரான Ben Cross உம் பிரதானமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனையோர் இலங்கை நடிகர்கள். சிறிலங்கா பொலிஸ், சிறிலங்கா இராணுவம் படத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அமெரிக்க, இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று சொல்லப் பட்டாலும், இந்தியக் கலைஞர்களும் படத் தயாரிப்பில் பங்களித்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசின் புலி எதிர்ப்புக் கருத்துக்களை சர்வதேசியமயப் படுத்தி இருக்கும், A Common Manதிரைப்படத்திற்கு இன்று வரையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்திற்குரியது. சென்னையில் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் பிரசன்ன விதானகேயின் சிங்களத் திரைப்படம் காண்பிக்கப் பட்ட நேரம், அதை "நுணுக்கமான இனப்படுகொலை" என்று சிலர் உளறிக் கொண்டு திரிந்தனர்.

ஹிந்தி, சிங்கள மொழிகளில் கூட, புலிகளை கொச்சைப் படுத்தும் சினிமா வரக்கூடாது என்று தடுக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்த ஆங்கிலத் திரைப்படம் வெளியானது தெரியாதா? மெட்ராஸ் கபே, கத்திக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள், காமன் மேனை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிய மாயம் என்ன? அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதால் எல்லோருக்கும் நடுக்கம் வந்து விட்டது போலும்.

கமலின் உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் தீவிரவாத எதிர்ப்புப் படங்கள், அடிப்படையில் தமிழ்த் தீவிரவாதத்திற்கும் எதிரான அரசியலைத் தான் பேசுகின்றன. அத்தகைய படங்களை வரவேற்று, ஆதரிக்கும் தமிழர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இந்திய - இலங்கை அரசுக்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

போலித் தமிழ் தேசியவாதிகளின் மொழியில் சொன்னால், "நுணுக்கமான இனப்படுகொலை" இது தான். புலிகளை அழிக்கப் பட வேண்டிய பயங்கரவாத சக்தியாக சித்தரிக்கும் A Common Man, உலகம் முழுவதும் சினிமா இரசிகர்களின் மனங்களில் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய முக்கியமான படம் இது தான்.

இன்றைக்கும் சில இந்து, அல்லது கிறிஸ்தவ அடிப்படைவாத தமிழர்கள், இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு காரணமாக, "முஸ்லிம் பயங்கரவாதம் அழிக்கப் பட வேண்டும்" என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முஸ்லிம் வெறுப்பு அரசியல், புலிகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அது எப்படி சாத்தியமாகும் என்று அறிய விரும்புவோர், உன்னைப்போல் ஒருவன், A Common Man ஆகிய இரண்டு திரைப் படங்களையும் பார்க்க வேண்டும்.  படத்தை முளுமையாக பார்க்க                                               ......நன்றி கலையகம்

samedi 14 février 2015

காதல் நோயாலும் அறிகுறிகள்.காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம்.;விஞ்ஞானிகள்

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒரு விதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.
முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் -- இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.ஆனால் இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.
எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !1. காமம் :காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் ( testosterone) , மற்றும் ஈஸ்ட்ரோஜென் ( oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2.ஈர்ப்பு:இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.
செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !

காதலின் பல நிலைகள்
3. பற்று , பாசம் : இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது !
இந்தப் பற்று என்பது மேலும் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதிப்பாடு என்று சொல்லலாம். இந்தப் பிணை அல்லது பந்தம்தான் காதலர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்து, அவர்கள் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுகிறது.
இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.
வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin) : நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.
விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.
ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.
இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.
அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !
"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?     bbc

1,000 ஏக்கர் விடுவிப்பு பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தலைமையில் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் கிராம சேவைப்பிரிவு ஜேஃ284க்கு சொந்தமான 220 ஏக்கர் காணி மீள கையளிக்கப்படும். இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச் என 1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும் எனவும் பாடசாலை, ஆரம்பப்பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும். மிகுதி 780 ஏக்கர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

யுத்தகாலத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றது. தற்போதுள்ள 6152 ஏக்கர் நிலத்திலிருந்தே குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்கென 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை - கிழக்கு மாகாணத்தில் விமானப்படை உயர்பாதுகாப்பு வலயமான பானம பிரதேசத்தில் தற்போது கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற 25 ஏக்கர் நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தவிர்ந்த சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு கீழ் உள்ளன.

எனவே, அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இப்பிரதேச மக்களதும் நிலங்களை வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார். தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு, கிழக்கில் தேவையற்ற விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்து அக்காணிகளை அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு மீளக் கையளிப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதி அளித்திருந்தனர். அதற்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தின் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் 1000 ஏக்கர்களால் குறைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

vendredi 13 février 2015

ஒபாமாவுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவதுபிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், ‘மிஷல் ஒபாமா...உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும். 

அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றும் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதாக தெரிய வந்துள்ளது 

காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு 63 பேர் கைது

திருப்பூர்:காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்யக்கோரி, திருப்பூரில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக, இந்து முன்னணி சமையல் கலைஞர்கள் சங்கத்துக்கு முன், கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்பகுதியில், 'சீர்திருத்த திருமணம்' என பேனரும் கட்டியிருந்தனர்.அங்கு வந்த தெற்கு போலீசார், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தாமு, கோட்ட செயலாளர் செந்தில்குமார் உட்பட, 63 பேரை கைது செய்தனர்.

samedi 7 février 2015

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குமிடையே சந்திப்பு


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்குமான விசேட கலந்துரையாடல் இன்று 06.02.2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு விஜயராம வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தற்கால, எதிர் காலங்களில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்,பிரதித்தலைவர் யோகவேள் செயலாளர் பூ.பிரசாந்தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலான கிழக்குமாகானசபை உறுப்பினர் புஸ்பகுமார் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது

பத்து ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்திருக்கிறார்;சந்திரிகா!

கட்சியின் எதிர்ப்பை மீறி அதிபர் வேட்பாளராக நிறுத்திய என்னை ராஜபக்சே, தகாத வார்த்தையினால் பேசி கேவலப்படுத்தினார் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க பத்து ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்திருக்கிறார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சந்திரிகா அளித்த பேட்டியில், "நான் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக்சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபராக வேட்பாளராக நியமித்தோம். ஆனால் நான் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததை கூட அவர் பொருட்படுத்தாமல் அப்போதிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக மேடை பேச்சுக்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்கவிடம், அவரது கட்சியிலுள்ள 23 முக்கிய உறுப்பினர்களை தான் பதவிக்கு வந்த பின்னர் தனது கட்சிக்கு அழைத்து கொள்கின்றேன் என வாக்குறுதியளித்திருந்தார். எனினும் அவரால் அந்த வாக்குறுதியை செயற்படுத்த முடியாமல் போன நிலையில், அவருக்கு மாத்திரம் தனது கட்சியில் இடங்கொடுத்தார். அவரின் இந்நடவடிக்கைகளை நான் அறிந்திருந்தும் பழைய விஷயங்களை பெரிதுபடுத்தக் கூடாது என்ற காரணத்தினால் அவர் அதிபராக பொறுப்பேற்றதன் பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசினேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மாத்திரமேயறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் மகிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார். எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த கடந்த 9 வருடங்களாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.

எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன்" என்றார்.

இலங்கையில் மீண்டும் சோதனை நடவடிக்கை பழையபடி ஓமந்தையிள்

சோதனை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து பழையபடி நடந்துகொள்ளுமாறுமேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது'
omanthai check pointஇலங்கையின் வடக்கே, கடந்த திங்கட்கிழமை 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள், புதன்கிழமை இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் இருந்து கிடைத்த திடீர் உத்தரவையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெப்ரவரி 2 ஆம் திகதி பகல் விடுத்த உத்தரவுக்கு அமைவாக இந்த சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, ஏ9 வீதியில் வாகனங்கள் எந்தவித சோதனைகளுமின்றி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், வடக்கு நோக்கிச் செல்கின்ற லொறிகளில் வெடிபொருட்கள் மற்றும் பைனாகுலர்ஸ் போன்ற வடபகுதிக்குக் கொண்டு செல்ல முடியாதவை என்று தடை செய்யப்பட்டிருந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைப் பரீட்சிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, வடக்கில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை ஏற்றிவருகின்ற லொறிகளில் யுத்த மோதல்களின்போது கைவிடப்பட்ட அல்லது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்படுகின்ற வெடிபொருட்களும் பழைய இரும்புப் பொருட்களுடன் கொண்டு வரப்படலாம் என்பதால், பழைய இரும்புப் பொருட்களை ஏற்றி வருகின்ற லொறிகள் சோதனையிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, சோதனை நடடிக்கைகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டாவது நாளான நேற்று புதன்கிழமை இரவு முதல் மீண்டும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் முன்னைய நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஓமந்தையில் சோதனை நடவடிக்கைள் நிறுத்தப்பட்டிருப்பதாத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே, நீங்கள் ஏன் சோதனையிடுகின்றீர்கள் என ஓமந்தை சோதனைச்சாவடிடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வினவியுள்ளனர்.
'சோதனை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து பழையபடி நடந்துகொள்ளுமாறு எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்' என்று அங்குள்ள அதிகாரிள் ஓமந்தை ஊடாகப் பயணம் செய்த பயணிகளிடம் தெரிவித்துள்ளனர்.