mercredi 15 avril 2015

மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு ஜெர்மனியில்

ஜெர்மனியில் பிரதமர் மோடியை நேதாஜியின் பேரன் சந்தித்து பேசினார். அப்போது, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு தலைநகர் பெர்லினில், ஜெர்மனிக்கான இந்திய தூதர் விஜய் கோகலே விருந்து அளித்தார்.
அதில் பங்கேற்க வருமாறு ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் பேரனும், இந்தோ–ஜெர்மன் சங்க தலைவருமான சூர்ய குமார் போசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவரும் விருந்தில் கலந்து கொண்டார்.
பின்னர், பிரதமர் மோடியை சூர்ய குமார் போஸ் தனியாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து பின்னர் போஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நேதாஜியின் குடும்பத்தை நேரு அரசு உளவு பார்த்ததாக வெளியாகி வரும் தகவல்கள் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பின்னணியில், நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர், உண்மை வெளிவர வேண்டும் என்று தானும் விரும்புவதால், இப்பிரச்சினையை கவனிப்பதாக உறுதி அளித்தார்.
இந்த பிரச்சினையில், உண்மை வெளிவருவதற்காக, மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட 2 விசாரணை கமிஷன்கள் போலியானவை. மேலும், அகிம்சையால்தான் இந்தியா விடுதலை பெற்றதாக பொய்களை பரப்புவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். நேதாஜியின் பங்கு இல்லாமல், விடுதலை பெற்றிருக்க முடியாது.
இவ்வாறு போஸ் கூறினார்.
முன்னதாக, இந்திய தூதர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:–
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் வானொலியில் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை இடம்பெற்றது. அப்போது, இந்தியாவில் கூட சமஸ்கிருத செய்தி அறிக்கை கிடையாது. ஒருவேளை, மதச்சார்பின்மை பாதிக்கப்படும் என்று நினைத்து இருக்கலாம்.
ஒரு மொழி காரணமாக, மதச்சார்பின்மை உலுக்கப்படும் அளவுக்கு மதச்சார்பின்மை பலவீனமாக இல்லை. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நமது தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுவின் அளவு மிகவும் குறைவானது. இருப்பினும், வளர்ந்தநாடுகள் நம்மை திட்டுகின்றன. இயற்கையை பாதுகாப்பது இந்தியர்களின் பாரம்பரியம் ஆகும். பருவநிலையை அழித்தவர்கள், நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் பதில் சொல்லப் போவதில்லை. ‘நீங்கள்தான் இயற்கையை அழித்தீர்கள்’ என்று அவர்களிடம் சொல்வோம். இருப்பினும், பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். அப்போது, நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் கையெழுத்து பிரதிகள் மற்றும் படைப்புகளின் மறுபதிப்புகளை மெர்கலுக்கு பரிசளித்தார்.
பின்னர், மெர்கலுடன் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘ஐரோப்பிய கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஏஞ்சலா மெர்கலின் உதவியை கோரினேன்’ என்று மோடி கூறினார்.பின்னர், பெர்லின் ரெயில் நிலையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, கனடா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

எதிர்­வரும் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா

chandrika-7 எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது. இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உட்­பட குழு­வினர் கடந்த காலங்­களில் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­த­தோடு, மஹிந்­த­விற்கு ஆத­ர­வாக பொது கூட்­டங்­க­ளையும் நடத்­தி­யோடு மஹிந்­தவும் ஜனா­தி­பதி தேர்­தலின் தோல்­விக்கு பின்னர் ஒதுங்­கி­யி­ருக்­காது விகா­ரை­களில் நடை­பெறும் விழாக்­க­ளிலும் மற்றும் மத அனுஷ்­டா­னங்­க­ளிலும் கலந்­து­கொண்­ட­தோடு அவ்­வப்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்டார்.
கொழும்பு நாரன்­ஹேன்­பிட்டி அப­ய­ராம விகா­ரையில் மஹிந்­த­வுக்கு என தனி­யான அலு­வ­ல­கமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மறு­புறம் ஏ.எஸ்.பி. லிய­ன­கே­வுக்கு சொந்­த­மான பீகொக் மாளி­கை­யையும் மஹிந்த தங்­கு­வ­தற்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு அங்கு தற்­போது யாகங்­களும் நடை­பெற்­றுள்­ளன.
இவ்­வாறு மீள அர­சியல் பிர­வே­ச­வத்­திற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரும் சூழ் நிலை­யி­லேயே, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கும் 19ஆவது திருத்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அரசு முன்­வைத்­தது.
இதற்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்­பாக அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஹெல உறு­மய மற்றும் சுதந்­திர கட்­சியின் சிலரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிலரும் முரண்­பா­டுகள் தலை­தூக்­கின.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும்இஜே.வி.பி.யும் இதற்கு ஆத­ரவை வெளி­யிட்­டன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவு 19 க்கு ஆத­ரவு வழங்கா விட்டால் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­வித்தார்.
இதன் பின்னர் கல­வ­ர­ம­டைந்த சுதந்­திர கட்­சி­யினர் ஜனா­தி­ப­தியை சந்­தித்து 19 க்கு ஆத­ரவு தெரி­விக்­கவும் அத்­தோடு 20 ஆவது திருத்­த­மாக தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தையும் கொண்டு வந்து நிறை­வேற்ற இணக்கம் தெரி­வித்­தனர்.
ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொது செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான சம்­பிக்­கவும் திருத்­தங்­க­ளு­ட­னான ஆத­ர­வுக்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.
இவ்­வா­றா­னதோர் நிலை­யி­லேயே மஹிந்­தவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தோடு பொது தேர்­தலில் சுதந்­தி­ர­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா போட்­டி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­து.
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் புதிய அணி­யொன்றை உரு­வாக்கி பொதுத்­தேர்­தலில் கள­மி­றங்க மஹிந்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அத்தோடு பீகொக் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்கும் ஏ.எஸ்.பி. லியனகே தனது கட்சியான இலங்கை தொழிலாளர் கட்சியை மஹிந்தவுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் திகதிகளில் 19 ஆவது 20 ஆவது திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடுவதோடு தேர்தல் திருவிழாவும் ஆரம்பமாகி விடும்.

இந்தியாவிற்கு செல்ல ஒன்-அரைவல்-விசா அமுலுக்கு வந்துள்ளது

இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
images (3)கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும்.  http://www.virakesar...ஒன்-அரைவல்-விசா

lundi 13 avril 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 20 ஆண்டுகளாக நேரு உளவு பார்த்தாரா?

பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பிறகு, கொல்கத்தாவின் உட்பர்ன் பார்க்கில் உள்ள எல்கின் சாலையில் சுபாஷ் சந்திர போஸின் 2 உறவுக்கார குடும்பங்கள் வசித்து வந்தது. அந்த இரண்டு குடும்பங்களையும், 1948ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
 

 
இது உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினருக்கு வரும் கடிதங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவை நகல் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது.
 
சுபாஷ் சந்திரபோஸின் உறவினர்கள் கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் பாதுகாப்பு படை மற்றும் ஐ.பி. உளவுப்பிரிவு தலைமையகத்திற்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ கூறுகையில், “இது தவறான வரலாற்று விளக்கமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார். ஆம் ஆத்மி தலைவர் அசுதோஸ், “இது வலி மிகுந்ததாகவும், அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது என்றூ தெரிவித்துள்ளார்.
 
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “நீங்கள் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை பார்த்தீர்களேயானால், எங்கேயும் அதனுடைய இருட்டடிப்பை காண முடியும். அவர்களால் மறைக்கப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன.
 
தற்போதுதான் அத்தகைய எண்ணற்ற விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அவற்றில் நிறைய உண்மைகள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 20 ஆண்டுகளில் சுமார் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.

யுவதிகள், சிறுமிகள் ஆகியோரை மகாத்மா காந்தி பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தி இருக்கின்றார்.

Mahatma Gandhi's1
யுவதிகள், சிறுமிகள் ஆகியோரை மகாத்மா காந்தி பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தி இருக்கின்றார்.
பெரிய மனிதர் என்கிற போர்வையை பயன்படுத்தி பெண்களை செக்ஸ் தேவைகளுக்கு காந்தி சுரண்டினார் என்று ஆய்வாளர்கள் கண்டு உள்ளார்.
காந்தியின் ஆச்சிரமத்தில் ஏராளம் யுவதிகள் இருந்து உள்ளனர். சில சிறுமிகளும் இருந்து உள்ளனர்.
இவர்களில் ஒருவர் மனு காந்தி.மகாத்மா காந்திக்கு மிக நெருக்கமான இரத்த உறவினர். பேத்தி. காந்தியுடன் பல இரவுகளில் ஒரே படுக்கையில் நிர்வாணமாக தூங்கி உள்ளார். காந்திக்கு அப்போது 70 வயது. மனுவுக்கு 17 வயது.
திருமணமான பெண்கள் மீதும் காந்திக்கு அதீத நாட்டம் காணப்பட்டு உள்ளது.
மகாத்மா காந்திக்கு மிக மிக நெருக்கமான நண்பர்கள், விசுவாசிகள், ஊழியர்கள் பலரும் இவரது செக்ஸ் சுரண்டல்களை பிடிக்காமல் இவரை விட்டு விலகியும் உள்ளனர்.
பெண்களை செக்ஸ் பரிசோதனைப் பொருட்களாக காந்தி பயன்படுத்தினார் என்பதை அனைவரும் பொதுவாக ஒப்புக் கொள்வர்.
Mahatma Gandhi's1
Mahatma Gandhi's2
Mahatma Gandhi's3
Mahatma Gandhi's4

dimanche 12 avril 2015

ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி

அன்பார்ந்த பெண்ணுலகமே
ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி. ஒட்டுமொத்த மக்களின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பேச்சுரிமை ஒடுக்கப் படுகிறது. எழுத்துரிமை நசுக்கப் படுகிறது. தனிமனிதனின் சுயமரியாதை தாக்கப்படுகிறது.
மதத்தின் ஆட்சியிலே ஆரம்ப கட்ட நிலைதான் இது. இன்னும் வளர்ந்தால் பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக பெண்கள் மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப் போடும் இருக்கவேண்டிய காலமிது. உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம், மதரீதியான தாக்குதல்கள் மறுபுறம்.
இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பெண்ணுலகம். இதில் மதரீதியான தாக்குதல்களை பெண்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது
ஏற்கெனவே மதத்தின் பெயராலும் முடை நாற்றமெடுக்கும் மூடத்தனத்தின் மொத்த உருவமாய் பெண்கள். எனவே மதரீதியான தாக்குதலில் பலியாக்கப்படுவோரும் பெண்களே. படித்த பெண் களும் பாமரர்களுக்கு இணையாய் மூடநம்பிக்கை யிலே. எச்சில் இலைமீது உருளுவதும் ,காலில் அணிய வேண்டிய செருப்பை உடல்மீது வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடக்கும் அவலத்தின் உச்சியிலே இன்னமும் பெண்கள்.
கழுதைக்கு திருமணம் செய்ய வேண்டி முன்ன ணியில் பெண்கள்.கழுதையின் கழுத்திலேயும் தாலி ,பெண்கள் கழுத்திலேயும் தாலி.சூடு சுரணையற்ற நிலையில் பெண்ணுலகம். தாலி அணிவதும் ,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதைப்பற்றி விவாதம் செய்யவும் விமர்சிக் கவும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.
அதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய கடமை பெண் களிடம் தான் உள்ளது.கழுதையின் கழுத்தையும் நாயின் கழுத்தையும் அலங்கரிக்கும் தாலி பெண்களுக்கு தேவையா? சிந்தித்து பாருங்கள். பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று உள்ளவர்களும், மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துடைய வர்களும் பெருந்திரளாக போராட களம் இறங்கவேண்டிய நேரமிது.
இல்லையென்றால் எத்தனையோ போராளிகளும் புரட்சியாளர்களும் பாடுபட்டு கிடைத்த பெண்ணுரிமை களை மதத்தின் கீழே தொலைக்க வேண்டி வரும். மதவாதிகள் ஆன்மீகத்தின் மீதான பாசிசத்தை பலமாக எழுப்ப துடித்துக் கொண்டுள் ளனர். அதை அனுமதித்தால் முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும்.
சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண் இனத்தை ஒரு பார்வையாள ராக வைத்துக் கொண்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த போராட்டம் வெற்றி பெறாதுஎன்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுகொள்வோம். நாடு தழுவிய வட்டார மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.
பெண்கள் பெருந் திரளாக பங்கேற்போம். ஒவ்வொரு மேடையிலும் பகுத்தறிவு பரப்ப பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு எதிராக பெண்களே போராட வேண்டும்.இது நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு பாதுகாப்புப்பணி.
ஆரோக்கியமான வாழ்வோடு மத ஆளுமை யில்லாத ஒரு உண்மையான ஒரு சுதந்திரத்தை நம் அடுத்த தலைமுறை அனுபவிக்க போராட வேண்டியது நம் கடமை.
- ந.தேன்மொழி, குடியாத்தம்

வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யச் சொல்வதன் இரகசியம்

ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கும் 18-ம் என, அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள‍லாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம்செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல் லை.

ஆனால், அதன் சாதகபாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு, பின்னர் கவலைப்படக் கூடாது.
பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாத விடாய் நிற்கும் வரைதான். அதன் பின்னர், அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது.

ஆனால், ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனை இல்லாத்தால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும்.

25 வயது வாலிபன், 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப்பெண்ணை திருமணம் செய்தால் அப்பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது, அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்தியசுகம் கொடுக்க முடியாததால், இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்.

தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியா விட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை.

இதனால், அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இதைக்கவனத்தில் கொண்டுதான், ஆணைவிட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது.

பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சணைகள் வராமல் இருக்கும்.

மேலும், தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை, மற்ற பெண்கள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால், மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில், பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ள து. படுக்கையில் மல ஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால், பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள்.

மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

இந்த நிலையில், வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலை ஏற்படும்.

ஆனால் தன்னைவிட குறைந்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும்.
இதுபோன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில்கொண்டு முடிவுசெய்வது நல்லது.

கடத்தியது கருணா குழுவினரே! ஆணைக்குழு முன் யுவதி சாட்சியம்!

கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். 
வீரையடி வீதி விநாயகபுரம் எனும் முகவரியைச் சேர்ந்த மேற்படி பெண் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எமது வீட்டுக்கு கருணா குழுவைச் சேர்ந்த சிலர் வந்து விசாரணையொன்றின் நிமித்தம் தேவைப்படுவதாகக் கூறி, எனது கணவரை அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர் இன்றவரை திரும்பவில்லை.
கருணா குழுவினரின் அலுவலகமொன்று எமது வீட்டுக்கு அருகாமையில் இருந்தது. அங்கு சென்று, எனது கணவர் பற்றி விசாரித்தேன். ஆனால், அவர்கள் எதுவித தகவலையும் கூறாமல் என்னை விரட்டிவிட்டனர்.
எனது கணவரை அழைத்துச் சென்றவர்களில் தயாபரன் என்கிற நபரொருவரும் இருந்தார். அவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர். தயாபரன் எனும் அந்த நபர், தற்போது ஆலையடிவேம்புப் பகுதியில் திருமணம் செய்துள்ளதாக அறிகிறேன்.
என்னுடைய கணவரை கருணா குழுவினர் அழைத்துக் கொண்டு சென்றமையை எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணமுத்து, வித்தியாபதி ஆகியோரும் கண்டுள்ளார்கள். எனது கணவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தேன்.
எங்கள் பகுதியில் கருணா குழுவினர் இருந்த அலுவலகமும் இப்போது இல்லை என்றார்.
அப்பட்டமான பொய்! ஆதாரமற்ற குற்றச்சாட்டு!- கருணா மறுப்பு
விநாயகபுரத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த போது எனது பெயரைக் குறிப்பிட்டு என்மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட காலத்தில் உண்மையில் நான் இலங்கையிலேயே இருக்கவில்லை. என கருணா என்ற வி.முரளிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்க சகோதரி ஏன் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. இது அப்பட்டமான பொய், ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தனது பெயரைக் கெடுப்பதில் சிலர் கங்கணங்கட்டிக் குறியாகச் செயற்பட்டு வருகின்றனர். அத்தகையதொரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் என முரளிதரன் எம்.பி. தெரிவித்தார்.
சகோதரி சசிகலா மட்டுமல்ல முன்னாள் எம்.பி. சந்திரநேருவின் புதல்வரும் என்மீது இவ்வாறுதான் குற்றஞ்சாட்டினார். அதுவும் திட்டமிட்ட பொய்யானதொரு குற்றச்சாட்டு.
உண்மையில் இந்த ஆணைக்குழு முன்பாக நானாக முன்வந்து பல உண்மைகளை முன்வைத்தேன். அவை பதிவில் உள்ளது.
முதலில் என்னை கருணா குழு என அழைப்பதை நிறுத்த வேண்டும். அத்தகையதொரு குழு என்னிடம் எப்போதுமே இருக்கவில்லை.
நான் 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பலிருந்து விலகியது முதல் தனித்து எனது போக்கில் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக இயங்கி வருகிறேன்.
பின்னர் தேசியக் கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் உயர்பதவியில் அமர்ந்து அமைச்சர் பதவியை வகித்து மக்களுக்குச் சேவை செய்து வந்தேன். இப்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவை புரிகின்றேன்.
காணாமல் போனோருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நானும் கவலைப்படுகிறேன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் அங்கம் வகிக்கவே இல்லை. என்னை அக்கட்சியுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

தூங்கிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் தூங்கிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

பலுசிஸ்தான்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. ஏழ்மையான இந்த மாகாணம், தலீபான் தீவிரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆட்கடத்தல்காரர்கள் உள்ளிட்டவர்களின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது.

இங்கு அவ்வப்போது தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கடத்துவதும், கொல்வதும், கியாஸ் ஆலைகள், ராணுவ சோதனை சாவடிகளில் தாக்குதல்கள் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

தீவிரவாதிகள் வெறிச்செயல்

இந்த நிலையில் அங்குள்ள டுர்பாத் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், காக்டன் என்ற இடத்தில் ஒரு பாலம் கட்டும் பணியில் சிந்து மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

நேற்று அதிகாலையில் அவர்கள் தங்கள் ஓய்விடத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த தாக்குதல்களால் தொழிலாளர்கள் நிலை குலைந்து ஓலமிட்டனர்.

20 பேர் உயிரிழப்பு

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தொழிலாளர்கள் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். ஆனாலும், 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்ட சதி

இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி இம்ரான் குரேஷி கூறும்போது, “இந்த தாக்குதல் சம்பவம், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு உடலில் பல இடங்களில் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன” என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலியானவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

கியூபப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்கா - கியூபா சந்திப்பு

 கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் ஒருவர் மற்றவரிடம் பகைமையும் அவநம்பிக்கையும் பாராட்டியும் வந்த நிலையில், இவ்விரு நாடுகளின் அதிபர்களும் இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
கியூபப் புரட்சிக்குப் பின்னர் இவ்விருநாடுகளின் அதிபர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது இதுவே முதல் முறை.
இந்த சந்திப்பின்போது கியூபாவில் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்படுவது பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா பேசவிரும்புவார்.
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவது பற்றியும், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளாக அமெரிக்கா வைத்துள்ள பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படுவது பற்றியும் கியூப அதிபர் ரவூல் காஸ்ட்ரோ பேச விரும்புவார்.
பனாமாலில் நடந்த அமெரிக்க கண்ட நாடுகளின் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கைகுலுக்கி அளவளாவியிருந்தனர்.
லத்தீன அமெரிக்காவில் அமெரிக்கா கேள்விக் கணக்கின்றி தலையிட்ட காலமெல்லாம் முடிந்துவிட்டது என்றும் முன்னதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

vendredi 10 avril 2015

20 தமிழ் கூலிகள் கொல்லப்பட்ட அதே நாளில் 5 இளைஞர்கள் படுகொலை

ஆந்திராவில் 20 தமிழ் கூலிகள் கொல்லப்பட்ட அதே  நாளில் தெலங்கானாவில் கோர்ட்டுக்கு . இவர்கள் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள் மட்டுமே. அதிலும் ஒருவரின் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து விடுவிக்கப்படும் சூழலில் இந்த படுகொலையை போலீஸ் நிகழ்த்தியுள்ளது. வேனின் கம்பிகளோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கும் இந்த இளைஞர்கள் போலீசை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தார்களாம் அதனால் போலீஸ் திருப்பி சுட்டார்களாம். இதற்கு முந்தைய வாரம் சிமி இயக்கத்தை சேர்ந்த 2 பேர் போலீசால் படுகொலை செய்யப்பட்டார்கள். சமீபத்தில் மொத்தம் 27 பேர் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். மதம், இன சாதி பாகுபாடின்றி அரசின் இந்த படுகொலைகளை கண்டிப்போம்
அழைத்து செல்லும் வழியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 5
 இளைஞர்கள்

சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள்

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.


9/11: RUSSIA PRESENTS EVIDENCE AGAINST US, UK AND ISRAEL CO-CONSPIRATORS & 9/11 WAS AN INSIDE JOB!

samedi 4 avril 2015

பெண் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்ட அரச பொம்மைகள்


த.தே.கூ. தலைவர் இரா சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை சென்றது.
அலுவலகத்திற்கு முன்னால் இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்ய வேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?' பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். கூட்டமைப்பின்  ஆதரவான  பிளட் அமைப்பின் மீதும் ஆங்காங்கே அவர்களு எதிரான சுவர் ஒட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது ...