இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். http://www.virakesar...ஒன்-அரைவல்-விசா
Aucun commentaire:
Enregistrer un commentaire