vendredi 29 mai 2015

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமான்;கலையகம்

கிட்லருக்கு வழங்கப்பட்ட கௌரவக் குடியுரிமையை டியட்ராம்செல் நகர் ரத்து செய்தது
தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை
சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 
வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்
வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர் 
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.


படுகொலை செய்யப்பட்ட வித்தியா. அரசியள் செய்யும் இலங்கை தலைவரும் முதல் அமைச்சரும்

  இலங்கையின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு. எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத அரசியள் அதிகாரரிகள் கடந்த 27/05/2015 அதிபர் மைத்திரிபால சிறிசேனா,மற்றும் வடமாகான முதல் அமைச்சர் எனைய அமைச்சர்களும் ஆறுதல் கூறினார்.மாணவியின் தந்தை மற்றும் சகோதரனை சந்தித்த இவர்கள் அரச புலனாய்வை இவர்களே அரசியள் புலனாய்வாக மாற்றும் திட்டத்துடன் இது குறித்து நேரடியாக ஆய்வு செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டுபிடிப்பதாகவும்  தண்டனை வழங்கித்தருவதாகவும் ,வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் வாக்குறுதியளித்துள்ளார்..

40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் சாலையில்

பழநி - கொடைக்கானல் சாலையில் கோம்பைபட்டி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி - கொடைக்கானல் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் கோம்பைக்காடு பகுதி உள்ளது. இங்கு பளியர் குடியிருப்பு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னி முத்து, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பழங்குடி பளியர் இனத்தவர் வரைந்த பழங்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன தொல்லியல் ஆய்வு நெறிமுறைகள் மற்றும் வழி காட்டுதலின் படி இந்த ஓவியங்ள் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது: இந்த ஓவியங்கள் பளியர் குடியிருப்பு மேல் புறம் உள்ள குகை போன்ற அமைப்புடைய பாறைகளில் வரையப்பட்டுள்ளன. ரத்த சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், தற்போது மங்கி செங்காவி நிறமாக உள்ளன. இவை அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங் கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஒரு ஓவியத்தில் ஒரு விலங்கின் மேல் 2 மனிதர்கள் அமர்ந்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியத்தில் ஒரு மனிதனின் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மனி தன் தனது வலது கையில் கோடாரியை ஏந்தியிருப்பது போன்றும், அந்த மனிதனின் காலடியில் மற்றொரு மனிதன் வீழ்ந்து கிடப்பது போன்றும் வரையப்பட்டுள்ளன. அடுத்த ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இரு புறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. சூலம் என்பது சைவ வழிபாட்டை குறிக்கும் சின்னம். இந்த சின்னம் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு சடங்குகள் தொடர்பானவையாகும். மற்றொரு ஓவியம் மனிதனின் கை ஓவியம் ஆகும். செங்காவி குழம்பில் கையை பதித்து, அந்த கையை பாறைகளில் பதியவைத்தது போல் உள்ளது. இது போன்ற ஓவியங்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. 40 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓவியங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

mardi 26 mai 2015

குகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம் பாரீசில் காலம் - 27/05/2015(புதன்) மாலை 16 மணி


வரலாற்று காலத்திற்கு முன் சென்னையை அண்டிய பகுதியில் குகைவாழ் மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம். இப்படத்தினை கான் திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தியவர்கள் பாரீசில் எமது ஆர்வலர்களுக்காக அதனை காண்பிக்கவுள்ளனர். காலம் - 27/05/2015(புதன்) மாலை 16 மணி இடம். 24 Rue du sous-lieutenant Alexis Le Calvez , La Courneuve-93120,France. Métro no 7 la courneuve. அலைபேசி- 0758754388 ஆர்வம் உள்ளவர்கள் வந்து சிறப்பிக்கவும் .

samedi 23 mai 2015

மத கோட்பாட்டிற்கு பயந்து தப்பி ஓடும் மக்கள்

இராக்குக்கும், சிரியாவுக்கும் இடையில், அரசாங்கத்தின் வசமிருந்த கடைசி எல்லைக் கடவையையும், இஸ்லாமிய அரசு கைப்பற்றியுள்ளது.
இரு நாடுகளிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்க இது அவர்களுக்கு உதவும்.
பல்மெய்ராவை கைப்பற்றிய இஸ்லாமிய அரசு, இராக்கில் Habbaniyahவுக்கு வெளியே, ஷியா ஆயுதக்குழுக்கள் சண்டைக்காக குவிந்துவந்த அரசாங்க பாதுகாப்பு பகுதியை உடைத்துவிட்டார்கள்.
இஸ்லாமிய அரசின் கொடூரங்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

பத்தர்கள் புடை சூழ ஆளுநர் ரோசையா தேவாரம் படிக்க நகை வேண்டாம் என்ற நடிகை பதவிக்குமட்டும் ஆசைப்பட்டு பதவி ஏற்பு

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 10.37: மணி காலை 10.37 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். வழி நெடுக அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 11 மணி: காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். பதவியேற்க உள்ள அமைச்சர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
பின்னர் வந்த ஆளுநரை ஜெயலலிதா பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
காலை 11.09 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி உள்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னையில் உள்ள 1 ரூபாய் சம்பளம் வாங்கும் அம்மா? உணவகத்தில் இலவசமாக சாப்பாடு.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் 5வது முறையாக முதல்வராக பதவியேற்பதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 207 அம்மா உணவகங்களில் மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் 5வது முறையாக முதல்வராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக அம்மா உணவகங்களில் இன்று மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான செலவுகள் முழுவதையும் சென்னைபதவி ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.கொள்ளையிட்ட பாவம் தின்ன கொடுத்தாள் தீரும் என்று பலமொழி மாறிவிட்டதோ தமிழ்

மாவோயிஸ்ட் அமைப்பினர் இனி சுதந்திரமாக கேரளாவில் சுதந்திரமாக நடமாடல்லாம்

230115kerala-hc[1]மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மாவோயிஸ்ட் என்கிற பெயரில் வன்முறையில் இறங்குவதுதான் குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Being a Maoist not a crime: Kerala HCகேரளாவில் சியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நீதிபதி முகமது முஸ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒருங்கிணைக்க முடியாத பட்சத்திலும், மாவோயிஸ்டாக இருப்பதே குற்றம் அல்ல என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். ஆனால் ஒரு தனிப்பட்ட நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம் ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில், சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

jeudi 21 mai 2015

கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் அறிவுபூர்வமாக அணுகுவது சரியான வழியில் செல்ல உதவலாம்;தாயகம்

தற்போதைய சிறுமியின் கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கும் அதனால் எழுந்த நடவடிக்கைகளும் உணர்வுபூர்வமாக இருப்பதாகவே உள்ளது. இதை அரசியலாக்கும் சந்தர்ப்பவாதம் முதல் அந்த மரணம் நடந்த விதம் பற்றி வக்கிர உணர்வுள்ளோருக்கு தீனி போடும் ஈனச் செயல்கள் வரைக்கும் எமது சமூகத்தின் பதில் செயற்பாடுகள் உள்ளன.
இதைக் கொஞ்சம் நிதானமாக அறிவுபூர்வமாக அணுகுவது எங்கள் இனம் சரியான வழியில் செல்ல உதவலாம்.
இந்தக் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைத்தல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல், இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் எங்கள் சமூகத்தில் நிகழாதிருப்பதை உறுதி செய்தல் என்பவற்றுக்கும் அப்பால், மற்றச் சமூகங்கள் போலன்றி, யுத்தத்தில் சிக்குண்டு அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஒரு நாகரிக சமூகமாக எழுச்சி பெறுவதற்கு, எமது சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களும் இதில் உள்ளன.
உணர்வுபூர்வமான முறையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வில் பலர் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. போதைப் பொருட் கடத்தலில் மரண தண்டனை பெற்றவரைக் காப்பாற்றத் துடித்த பலரும், தற்போது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட இந்த கொடூரச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்களைக் கொல்லத் தயாராக இருப்பது தான் இங்கேயுள்ள முரண். தமிழர்களாகிய எங்களின் நீதி உலக நீதியாக, பொதுவானதாக இல்லாமல், சுயநலம் சார்ந்ததாய் வசதிக்கு ஏற்ப மாறுகின்ற ஒன்றாக இருப்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை.
சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குவதற்கு பலர் முயன்றதாகவும், பொலிசாரின் பாதுகாப்பில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதையும் விட, முக்கிய சந்தேக நபர் ஒருவரை, தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் விஜயகலா மகேஸ்வரனும், சட்டத்தரணி ஒருவரும் தப்பி ஓட உதவியதாகவும் செய்திகள் வருகின்றன.

தண்டிக்கப்பட வேண்டிய ஈனர்கள் ஊடகவிலாளர்களே!

இந்தக் கொலையை வைத்து, வக்கிர உணர்வுகளுக்குத் தீனி போட்டு பிழைப்பு நடத்தும் ஈன வியாபாரிகளின் செயற்பாடு இன்னமும் முடியவில்லை. அந்த வீடியோக்கள் இணையத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என்ற செய்தி மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? போய் தேடிப் பாருங்கள் அல்லது எங்களுக்குக் கிடைத்ததும் முதல் வேலையாக அதை உங்களுக்கு காண்பிப்போம் என்பது தான்.
எங்களைப் பொறுத்தவரை, குற்றம் இழைத்தவர்களை விட, தண்டிக்கப்பட்ட வேண்டிய ஈனர்கள் இவர்கள் தான். இவர்களைத் தான் எங்கள் சமூகம் ஊடகவியலாளர்கள் என்று கொண்டாடுகிறது என்றால், தவறு எங்கள் சமூகத்தில் தான் இருக்கிறது. இது தற்போது இணையத் தளங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பத்திரிகைகளிலும் இதே கதை தான் என்பது தான் இங்கே அதிர்ச்சியைத் தருகிறது.
புலிகளின் கையில் போராட்டம் போன பின்னால், ஊடக அறம் என்பது கொலை செய்யப்பட்டு விட்டது. உண்மையான செய்திகளை வெளியிட்டு, சமூகம் செல்ல வேண்டிய திசையை, கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காண்பிக்க வேண்டிய ஊடகங்கள், வெறும் பொய்களைப் பிரசாரம் செய்யவும், ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்ட படங்களையும் விடயங்களையும் பிரசுரித்து, போராட்டத்தின் ‘புனிதம்’ பற்றியும், எதிரி பற்றிய கொடூரமான சித்தரிப்பையும், தமிழ் மக்கள் மனதில் திணிக்கும் கருவிகளாகவே மாறி விட்டிருந்தன. திணிக்கப்பட்ட அந்த ஊடக ‘நெறிமுறையைக்’ கடந்தவர்கள் கொல்லப்பட்டதனால் ஏற்பட்ட பயமும், புலிகளின் ‘ஊடக நெறிமுறை’ பிழைப்பதற்கான வழியாகவும் வந்த பின்னால், தமிழ் சமூகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கோமாளித்தனமான, ஆனால் அவற்றால் பயன் பெறுபவர்களால் சிலாகிக்கப்படுவதான ஒன்றாகவே இன்று வந்து முடிந்திருக்கிறது.

இவ்வாறான ஒரு ஊடகப் பாரம்பரியத்தையும், அந்த பாரம்பரியத்தைக் கைக் கொண்டு சமூகத்தை சிந்திக்க விடாமல் இருட்டில் வைத்திருப்பதையும், அதன் மூலம் வக்கிரங்களை விற்பனை செய்யவும் வழி வகுக்கும் ஊடகவியலாளர்களையும் சமூகமாக தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை எங்கள் தமிழினம் முடிவு செய்ய வேண்டும்.

இந்த ஈனப்பிறவிகள் அடையாளம் காணப்பட்டு, எமது சமூகம் அதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும். இந்த ஊடகங்களின் செய்திகளைப் பார்வையிடுவதை நிறுத்தினாலோ, அதில் விளம்பரம் செய்வோருக்கு அழுத்தம் கொடுப்பதாலோ மட்டுமே இவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தலாம். ஏனெனில், இவர்கள் ஊடகம் என்ற போர்வையில் பிணத்திலும் பணம் சம்பாதிக்கவே இயங்குகிறார்கள். அதற்காக எந்த வக்கிரங்களையும் ஆபாசங்களையும் பரபரப்பூட்டும் தலையங்கங்களுடனும், உசுப்பேத்தும் ‘கவித்துவமான’ தலைப்புகளுடனும், விற்பனை செய்யவே முயற்சிக்கிறார்கள். அதைப் பார்ப்போரின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு விளம்பரம் சேர்ப்பதன் மூலமே பணம் சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்திற்கான வழியை நிறுத்துவதன் மூலமே இந்தச் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த முடியும்.
இவ்வாறான ஒரு ஊடகப் பாரம்பரியத்தையும், அந்த பாரம்பரியத்தைக் கைக் கொண்டு சமூகத்தை சிந்திக்க விடாமல் இருட்டில் வைத்திருப்பதையும், அதன் மூலம் வக்கிரங்களை விற்பனை செய்யவும் வழி வகுக்கும் ஊடகவியலாளர்களையும் சமூகமாக தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை எங்கள் தமிழினம் முடிவு செய்ய வேண்டும்.

அரசியலாக்கப்படும் சமூகப் பிரச்சனை

அடுத்தது, இதை அரசியலாக்குவதில் எந்தத் தீர்வும் வந்து விடப் போவதில்லை. அரசியல் கட்சிகள் இந்தக் கொந்தளிப்பையும் அனுதாபத்தையும் தங்களுக்குப் பயன்படுத்துவதை ஒரு சமூகமாக அனுமதிப்போமாயின், இழந்த அந்த உயிருக்குச் செய்யும் அவமரியாதையாகும். இந்தப் பிரச்சனைக்குள் அரசியல்வாதிகளை அனுமதிக்காமல், இதை ஒரு சமூகப் பிரச்சனையாக எதிர்கொள்வது, எங்கள் சமூகம் தீர்வுகளைக் கண்டடைய வழி செய்யும்.
இந்தக் குற்றத்திற்கு எதிராக தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், கோஷங்களும் இதன் அடிப்படைக் காரணங்களை அடையாளம் காட்ட மாட்டா. வெறுமனே மரத்தைப் பார்த்துக் குலைக்கும் நாயைப் போல, இந்த கொடூரத்திற்கு எதிராக பாடசாலைப் பகிஷ்கரிப்போ, கடையடைப்போ பயன் தராது. தமிழ் நாட்டுப் போராட்டங்களின் பஸ், புகையிரத எரிப்புப் போல, டயர்களை எரிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், எங்கள் சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
பாடசாலைப் பிள்ளைகள், பெண்கள் உட்பட மக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பதாகைகள், கோஷங்களுடன் கூச்சல் போடுவது, இந்த கொடூரத்தின் பின்னாலுள்ள சமூகப் புற்றுநோய்களை அடையாளம் கண்டு தீர்வு காண விடாமல் நீர்த்துப் போகவே செய்ய உதவும். கொஞ்ச நாளில் இதை மறந்து, அடுத்த ஒரு பிரச்சனை வரும் வரைக்கும் தன்தன் வேலையைப் பார்க்கப் போகவே இது வழி செய்யும்.

வெறுமனே மரத்தைப் பார்த்துக் குலைக்கும் நாயைப் போல, இந்த கொடூரத்திற்கு எதிராக பாடசாலைப் பகிஷ்கரிப்போ, கடையடைப்போ பயன் தராது. தமிழ் நாட்டுப் போராட்டங்களின் பஸ், புகையிரத எரிப்புப் போல, டயர்களை எரிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், எங்கள் சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை தனியே ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’ என்று இதன் தாற்பரியத்தைக் குறுக்குவதும் இதே வழியில் தான் உண்மையான பிரச்சனை எது என்பதை அடையாளம் காண்பதில் இருந்து விலகிச் செல்லவே உதவும். காரணம், இது எங்கள் சமூகத்தில் நடைபெற்றதென்பதால்! பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறை குடும்ப அமைப்புக்குள் நியாயமாக்கப்பட்டு வழமையாக்கப்பட்ட சமூகத்தில், பால் வன்முறை பற்றிய விழிப்புணர்வும், அதற்கெதிரான தீர்வு தேடிய நடவடிக்கைகளும் அவசியமானது தான். ஆனால், அது மட்டும் தான் இந்த கொடூரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய தனிப் பொருள் அல்ல!
பிள்ளையைக் காணவில்லை என்று பெற்றோர் முறையிட்ட போது, பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை, எடுத்திருந்தால் பிள்ளையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று நம்பினால்…
சட்டம் தன்னுடைய வேலையைச் செய்யாமல், அரசியல் தலையீட்டினால் குற்றவாளிகளைப் பாதுகாத்திருந்தால், தப்ப விட்டிருந்தால்…
ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சிறை சென்று மீண்டவர்களின் நடமாட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகமாக இருந்து, அதை தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால்…
இந்தப் போராட்டம் பொலிசாரை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும்.
இன்று எமது சமூகத்தின் சீரழிவில் எங்கும் நிறைந்திருக்கும் குடிவகை, போதைப் பொருள் பாவனை முக்கிய பங்கு பெறுகிறது. பாடசாலை மாணவர்கள் மட்டத்திலேயே இந்த போதைப் பொருட் பாவனை மலிந்திருக்கும் அளவுக்கு, எமது எதிர்காலத் தலைமுறையைச் சிதைக்கும் இந்தப் போதைப் பொருள் விற்பனை பாடசாலை வாசல்களிலேயே நடைபெறும் அளவுக்கு வந்திருக்கிறது.
வெளியார்கள் இதை தமிழ்ப் பகுதிகளுக்குள் கொண்டு வந்தாலும், அந்தச் சங்கிலித் தொடரில் தமிழர்கள் இருக்கிறார்கள். இவ்வாறான சமூக விரோதிகளை சுதந்திரமாக போதைப் பொருள் விற்பனை செய்ய விட்டதற்காக பொலிசாரை நோக்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும். அந்த விற்பனையைச் செய்யும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டி, பாடசாலை வாசல்களில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தனியார்கள் செய்த குற்றச் செயலுக்கு எதிராகச் செய்யப்படும் வெறும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் சமூகம் தான் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை அடையாளம் காணாமல், வெறும் காட்டுக் கூச்சல் போட்டு கோபத்தை தணிக்க மட்டுமே உதவும்.

சட்டம் தன் கடமையைச் செய்ய விடுவோம்!

கடைசியாக, இந்தக் கொலை சம்பந்தமாக பலரும் கொலை வெறியில் உள்ளார்கள்.
சிவில் சமூகம் சட்டம், ஒழுங்கு முறைகளின் அடிப்படையிலானது. அதை உரியவர்கள் தவிர்ந்த, மற்றையவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. அதை அனுமதிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தீர்ப்பு வழங்க முற்பட்டால், ஒரு சமூகமாக நாங்கள் இயங்க முடியாது.
எமது இனம் சட்டம், ஒழுங்குகள் என்பன, ஒரு நாகரிக சமூகத்தின் செயற்பாட்டுக்கு அவசியம் என்பதை மனதில் கொள்ளாது, அது எமது இனத்தை அடக்குவதற்கு அடக்குமுறையாளர்களால் அநீதியாக திணிக்கப்பட்டவை என்ற போர்வையில் அதை மீறுவதை புத்திசாலித்தனமாகவே நினைக்கும் இனம்.
சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பதை விட, அதை மீறுவதில் எமக்குள்ள அக்கறை வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலை தொடர முடியாது.

இழப்பின் துயரமும், குற்றத்தின் கொடூரமும் உணர்வுபூர்வமாக கொந்தளிக்கச் செய்தாலும், அது நீதியின் கண்களை மறைக்க விடக் கூடாது. இதில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதும், சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் அவமானமும், இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதை தடுக்க உதவும்.

துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்களை சட்டத்தின் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் நினைத்து மரண தண்டனை கொடுப்பதை, இனத்தின் விடுதலைக்கான வழியாக ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். மரண தண்டனை வழங்கப்படும் போதும், தண்டனைக்குள்ளானவர்கள் தங்களை நியாயப்படுத்த வழி முறை செய்யப்பட்டதா என்ற கேள்வி கேட்காமல், தண்டனை வழங்கியயோர் சரியாகத் தான் செய்திருப்பார்கள் என்று நியாயப்படுத்தும் அளவுக்கு, தனி மனிதர்களிடம் அந்த அதிகாரம் போனதால் தான் எமது இனம் இன்றைய சீரழிவு நிலையில் இருக்கிறது.
இந்தக் கொலை சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். ஆனால், நீதி விசாரணைகள் நடந்து நீதிபதி முடிவு செய்யும் வரைக்கும், இவர்கள் சந்தேக நபர்களே. அவர்களுக்கு தங்களை நியாயப்படுத்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றம் செய்தவர்கள் தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் வழி விடப் பழக வேண்டும். இவை அடிப்படை மனித உரிமைகள்.
உணர்வு பூர்வமாக, நாங்கள் அவர்களுக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் உதவி வழங்கக் கூடாது என்று கூறலாம். அவர்கள் கொழும்பிலிருந்து கூட சட்டத்தரணிகளைக் கொண்டு வரலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் உரிமைகளை நாங்கள் மதிக்க வேண்டும்.
இழப்பின் துயரமும், குற்றத்தின் கொடூரமும் உணர்வுபூர்வமாக கொந்தளிக்கச் செய்தாலும், அது நீதியின் கண்களை மறைக்க விடக் கூடாது. இதில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதும், சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் அவமானமும், இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதை தடுக்க உதவும்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.
அவ்வாறில்லாமல், நீதி வழங்கப்படாது போனால், அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை.
அதற்காக, புலிகள் யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் மக்கள் வெள்ளத்தில் முன்னால் நிர்வாணமாக்கி அடித்துக் கொன்றது போல, பகிரங்கமாக இந்தக் குற்றவாளிகளையும் தண்டிக்க முடியாது.

புலிகளின் Kangaroo Court காட்டு நீதிமன்றத்தை Mob justice கும்பல் நீதிமன்றத்தால் பிரதியீடு செய்வது, சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாகரிக சமூகமாக வேண்டிய எங்கள் சமூகத்திற்கு ஆபத்திலேயே முடியும்.

mercredi 20 mai 2015

படுகொலையினை கண்டித்து இன,மத பேதமின்றி புத்தளத்தின் ஆர்ப்பாட்டம்

இன்று காலையில் 9.30 மணியளவில் புத்தளம் பிரதான தபால் நிலைய சுற்றுவட்டத்தின் முன்பாக மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து இன,மத பேதமின்றி புத்தளம் மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புக்களும் , ,இளைஞர்களும் ஒன்று கூடி வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளுக்கு அரசு மரண தண்டனையினை காலதாமதமின்றி விரைவில் அமூல்படுத்தக்கோரியும் , எந்த சட்டத்தரணிகளும் குற்றவாளிகள் சார்பில் முன்வரக்கூடாது என்பதையும் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனனர்.






mardi 19 mai 2015

தடைசெய்யப்பட்ட புலிகளை நினைவு கூரப்பட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Nimal-Siripala-(3)புலிகளை நினைவு கூருவது தடைசெய்யப்பட்டிருக்கையில் அவ்வாறு நினைவு கூரப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வட பகுதியில் புலிகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த எதிர்க் கட்சித் தலைவர் நீதிமன்ற உத்தரவை மீறி புலிகள் நினைவு கூரப்பட்டிருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த,
எமது ஆட்சியில் புலிகளை நினைவுகூர்வதை நிறுத்த நீதிமன்ற உத்தரவு பெற தேவையேற்படவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்ற உத்தரவு பெற்றே அவற்றை நிறுத்த வேண்டியுள்ளது. புலிகளும் புலி ஆதரவாளர்களும் இந்த அரசாங்கத்திற்கு அஞ்சவில்லை. அதுதான் எமது இரு அரசாங்கத்திற்குமிடையிலான வித்தியாசமாகும் என்றார்.

யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள்

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது.

பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையேபலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள். 

அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.

பாக்கு

பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இமமதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது. 

போதைப்பொருட்கள்

போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும் சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன. 

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர். 

போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள். 

இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.

அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.

ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது. காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.

எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.

இதயங்களை ஆற்ற உரிய நடவடிக்கை இல்லை;இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாரிய கட்டிடங்களும் வீதிகளும் அமைக்கப்பட்டிருந்தனவே ஒழிய போரினால் பாதிக்கப்பட்ட உள்ளங்களை ஆற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மாத்தறை பகுதியில் முக்கிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகளின் மூலம் மாத்திரமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று கூறிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், அபிவிருத்தியுடன் நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் தனது அரசாங்கத்தின் கொள்கை என்றார்.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலமே இனங்களுக்கு இடையிலான பீதி மற்றும் சந்தேகம் நீக்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழல் பாதுகாக்கப்பட்டு, மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முப்படைகளும் ஏனைய அரசாங்க நிறுவனங்களும் ஆற்றிய பங்களிப்பு நல்லிணக்க விடயத்திலும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.bbc

தலையை வெட்ட ஆட்கள் தேவை

சவுதி அரேபியாவில் தலையை வெட்டும் ஆட்கள் தேவை என்று அந்த நாட்டு அரசு விளம்பரம் செய்துள்ளது. உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியா 5வது இடம் பிடித்துள்ளது. அங்கு தண்டனைக்குள்ளானவர்கள் தலையை வாளால் வெட்டி கொலை செய்ய வேண்டும். இத்தகையை பணியினை செய்ய, பலரும் தயங்குகின்றனர். 

எனவே, ‘மரண தண்டனையை நிறைவேற்ற' ஆட்கள் தேவை என்று சவுதி அரசு விளம்பரப்படுத்தி உள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற 8 பேர்கள் வேண்டும் என்று சவுதி அரேபியா விளம்பரம் செய்து உள்ளது. அரசு வெப்சைட்டில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், சம்பளம் குறைவாகவே தரப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

vendredi 15 mai 2015

குமுதினி படகு படுகொலை


ஈராக்கில் கடத்தப்பட்ட, 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர்:சுஷ்மா சுவராஜ்

Sushma Swaraj
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
 ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மொசூல் நகரை கைப்பற்றிய போது, அங்கு இருந்து இந்திய கட்டிட தொழிலாளர்கள் 40 பேரை கடத்தி சென்றனர்.
 அதில் ஒருவரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி இந்தியா வந்துவிட்டார்.
 அப்போது அவர் மற்ற 39 பேரையும் தீவிரவாதிகள் கொன்று விட்டதாக கூறினார். ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் இதுவரை கூறவில்லை.
 இந்நிலையில், ஹர்ஜித் மாசி, மொகாலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று விட்டனர்" என கூறினார்.
 இந்நிலையில், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் டெல்லி சென்று சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம், சுஷ்மா சுவராஜ், "எனக்கு கிடைத்த தகவல்கள்படி, 39 இந்தியர்களும் உயிரோடுதான் உள்ளனர்" என்று கூறினார்.
 மேலும், "இந்திய தொழிலாளர்கள் பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது" எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

samedi 2 mai 2015

நாம் காகித மட்டை வீரர்களல்ல. களத்திலே நின்று நிஜத் துப்பாக்கியோடு போராடியவர்கள்! பிள்ளையான்

போராடுவோம் என்று காகித மட்டையில் துப்பாக்கி செய்து கூச்சலிடுகிறவர்களல்ல நாங்கள்.நாங்கள் நிஜத் துப்பாக்கியுடன் தமிழர் உரிமைக்காக தனித்து நின்று களத்திலே போராடியவர்கள்.நிஜத்துக்கும் நிழலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது இவ்வாறு கிழக்கு மகாகாண முன்னால் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேதினக் கூட்டத்தில் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சியினர் ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனையில் உள்ள ஞான ஒளி விளையாட்டுத் திடலில்
வெள்ளிக்கிழமை மாலை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.தொடர்ந்து அங்கு உரையாற்றிய சந்திரகாந்தன் கூறியதாவது,நாங்கள் களத்திலே நின்று போராடியதால்தான் சிறந்த ஆளுமையும் வீரம் நிறைந்த பண்புகளும் கிழக்கு மாகாணத்திலே தனித்து நின்று ஆட்சியமைத்து அதிகாரக் கட்டமைப்பைப் கொஞ்சமேனும் பலப்படுத்த வழி செய்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிறைவேற்றுக் குழுவிலே இருக்கின்றார்மட்டக்களப்பிலே 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விதவைகளாக்கப்பட்டு, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கவீனர்களாகவும் உள்ளார்கள். இவர்களுக்கான என்ன புனர்வாழ்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்கள்.? கிழக்கு மகாணத்தைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திப்பதே கிடையாது.வெறுமனே யாழ்ப்hணத்திலுள்ள படை முகாம்கள் மாத்திரம் அகற்றப்படவேண்டுமென்பதுதான் அவர்களது அரசியல் நகர்வுக்கான அக்கறை.தமிழர்களுக்காக நாங்கள் கட்டியெழுப்பிய சமூகக் கட்டமைப்பு, அதிகாரம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒரு பலவீனமான நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.இவர்களை இன்னமும் இந்த மண்ணில் கால் பதிக்க விடாமல் துரத்தியடிக்க வேண்டும்.தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் விரிந்து கிடக்கின்றதுவிவசாயிகளுக்கு மானியம், இழப்புக்கள் ஏற்பட்டால் நஷ்ட ஈடு பெறுவதிலே, விறகு வெட்ட காட்டுக்குச் சென்றால் அங்கே பிரச்சினை இருக்கின்றது, பிரம்பு வெட்டச் சென்றால் அதிலும் சிக்கல், மாடுகள் மேய்க்கச் சென்றால் மேய்ச்சல் தரையிலே பிரச்சினை இருக்கின்றது, இவற்றையும் விட அந்தந்தத் தொழில் செய்கின்ற சமூகங்களுக்கிடையிலே உள்ள சமூகப் பிரச்சினைகள் மிக அதிகமாக இருக்கின்றது.ஏழைத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடி நீர், கிணறு, மலசலகூட வசதி, காணி, பாடசாலை செல்லும் பிள்ளைக்கு சப்பாத்து, புத்தகப்பை, கொப்பி இல்லை, வாழ்வாதாரப் பிரச்சினை, மீனவர் விவசாயிகள், மணல் அகழ்பவர்கள், இவ்வாறு உழைத்துக் களைத்துப் போயுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நிலுவையிலுள்ளது.இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நாம்தான் வலுவான சக்திகளாக எழுந்து நிற்க வேண்டும்.இப்படியான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டாமல் இனத்துவேஷம் மட்டும்தான் தங்களுடைய அரசியல் பணி என்று கருதி செயற்பட்டு வருவதால் எங்களது சமூகப் பிரச்சினைகள் அப்படியே அமிழ்ந்து கிடக்கின்றன.மட்டக்களப்பு மாவட்டத்திலே உழைக்கும் வர்க்கம் வட்டித் தொல்லையால் மரணத்தையும் இன்னும் பல நெருக்கடிகளையும் எதிர்நோக்கி நிற்கின்றது.2008 ஆம் ஆண்டு பலருக்கு மறந்தே போயிருக்கும். அது மிகப்பெரிய நெருக்கடியான காலம்.எங்கு திரும்பிப் பார்த்தாலும் சடலங்களும் மரண ஓலங்களும்.ஒன்றும் செய்ய முடியாத நெருக்கடியான காலகட்டத்திலே நாங்கள் ஒரு ஜனநாயகப் பிரவேசத்தை மேற்கொண்டோம்.அந்த ஜனநாயகப் பிரவேசம்தான் கிழக்கு மாகாணத்திலே ஒரு சடுதியான ஜனநாயக மாற்றத்தைக் கொண்டு வந்தது.அதன் மூலமாக எம்மைச் சூழ்ந்திருந்த நெருக்கடிகள் அகற்றப்பட்டன.இப்பொழுதுதான் வடபகுதியிலே படை முகாம்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறன. ஆனால், நாம் ஜனநாயக வழிக்கு வந்த 2008 ஆம் ஆண்டிலேயே கிழக்கு மாகாணத்திலிருந்து படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட்டு விட்டன.அப்பொழுதிருந்தே கல்விச் சாலைகள் உருவாக வழிவகுத்தது. ஹர்த்தால் கடையடைப்புக்கள் இடம்பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.மிக முக்கியமாக தமிழர்களுக்கான அரசியல் ஆட்சியதிகார முறைமை ஒன்றுக்கு நாம்தான் வித்திட்டோம்.20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபை என்கின்ற அதிகார அரசியல் முறைமையை நாம்தான் தூசு தட்டி ஏற்படுத்தினோம்.இப்பொழுது தமிழ் பேசும் மக்களுடைய தலைவர் என்று சொல்கின்றவர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இணக்கப்பாட்டு அரசியல் இதுதான் என்று காட்டிய முன்னோடிகள் நாம்தான்.நல்லாட்சி என்கின்ற போர்வையிலே வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாகாண சபையிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள்.நாடாளுமன்றத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் கதிரைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றபோது இப்பொழுது கிழக்கு மாகாணத்தின் நிலைமையை சற்று உற்றுக் கவனித்துப் பாருங்கள்.
செல்லாக் காசாக இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கல்வி அமைச்சரால் ஒரு சுற்று நிருபத்தை தமிழில் வெளியிட முடிகின்றதா? அதுபோகட்டும் என்றால் அதனை வலுவாக எதிர்த்துக் குரலெழுப்பத்தான் முடிகிறதா?கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருக்கு ஒரு துடைப்பம் வாங்கி கட்டிடத்தைத் தூசு தட்டக் காசு இல்லை.

விவசாய அமைச்சருக்கு ஒரு சிறு குளத்தையாவது கட்ட முடியாத நிலை. இதுதான் இன்று கிழக்கு மாகாணத்திலே உள்ள நிலைமை.
நாங்கள் ஆட்சியிலிருக்கும் போது சாதித்தவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு வேறு யாரும் சாட்சி சொல்லத் தேவையில்லை. எங்களால் நிறைவேற்றப்பட்ட வேலைகளே அதற்குத் தகுந்த சான்று.மட்டக்களப்பிலே 75 சத வீதமான தமிழர்கள் வாழ்கின்றபொழது ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் அபிவிருத்திக்குத் தலைவராக உள்ளார்.
ஏறாவூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக இருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் இன்றைய நிலைமை.
நாங்கள் ஆட்சியிலே இருந்த பொழுது சிங்களவர்களுக்குப் பின்னால் இருந்து வால் பிடிக்கின்றோம் என்று விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுது முஸ்லிம்களுக்குப் பின்னால் இருந்து வால் பிடிக்கும் நிலைமையை என்னவென்று சொல்வது?
மஹிந்தவின் காலத்திலே மேய்ச்சல் தரைப் பிரச்சினையைத் தீர்க்க முடியால் போய் விட்டது என்று எங்களைக் கிண்டலடித்தார்கள். அப்படியாயின் இப்பொழுது மைத்திரியின் காலத்தில் உங்களால் அதனைத் தீர்க்க முடியுமா?எனக்கு நினைவிருக்கின்றது, ரணில் விக்கிரமசிங்ஹ மட்டக்களப்புக்கு வந்தபோது சொன்னார்; வரப்போகின்ற ஜனாதிபதி மைத்திரி மட்டக்களப்புக்கு அடுத்த மாவட்டத்தில் உள்ளவர். நீங்கள் போகும் வழியிலேயே அவரிடம் சென்று உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று சொன்னார். நான் சவால் விடுகின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஜனாதிபதியின் சொந்த ஊரான மட்டக்களப்புக்கு அடுத்துள்ள பொலொன்னறுவைக்குப் போய் ஜனாதிபதியிடம் சொல்லி மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் பார்க்கலாம்' என்றார்


வெப்பம் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13-இல் ஒன்று முற்றிலுமாக அழியும்

புவி வெப்பமயமாதல் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13-இல் ஒன்று முற்றிலுமாக அழியும் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனட்டிகட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர் மார்க் அர்பன், புவி வெப்பமயமாதலால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 131 ஆய்வுக் கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்தார். அந்தப் பகுப்பாய்வின் முடிவில் அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: புவி வெப்பமயமாதல் காரணமாக உலகிலுள்ள பல்வேறு உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து வருகின்றன. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சராசரியாக சுமார் 7.9 சதவீத உயிரினங்கள் புவி வெப்பமயமாதலால் அழியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 13 உயிரினங்களில் ஒரு உயிரினம் புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளால் அடியோடி அழியும். இந்த விகிதம் வட அமெரிக்காவில் குறைவாகவும் (20 உயிரினங்களுக்கு ஒன்று), ஐரோப்பாவில் அதைவிட மிகக் குறைவாகவும் உள்ளது. ஆனால் தென் அமெரிக்காவில் உயிரினங்கள் அடியோடி அழியும் விகிதம் 23 சதவீதமாக (ஐந்து உயிரினங்களுக்கு ஒன்று) இருக்கும். மற்ற எந்தக் கண்டத்தை விடவும், தென் அமெரிக்காவில்தான் புவி வெப்பமயமாதலால் அதிக விகிதத்தில் உயிரினங்கள் அடியோடு அழியும். தற்போது வளிமண்டலத்தில் கரியமில வாயு கலக்கப்படும் அளவு நீடித்தால், இந்த நூற்றாண்டின் முடிவில் உலகில் இருக்கும் உயிரினங்களில் 6-இல் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் "ஸயன்ஸ்' இதழில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசிய அரைவேக்காடுகள்.கலையகம்

"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்" என்பதை, மீண்டும் பல "தமிழர்கள்" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.

ஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.

ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.

மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. "தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது" என்று காமெடி பண்ணுகின்றனர்.

உலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.

முன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, "தமிழர்கள்" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், "வித்தியாசமான" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.

ஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா "ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்..." என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல "தமிழர்களுக்கு" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.

இலங்கையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி இலங்கை சென்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர் இராஜ்ய அதிகாரி இவர் தான்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜோன் கெர்ரி, அரசாங்கம் எட்டியுள்ள 'பெரும் முன்னேற்றங்களை' பாராட்டிப் பேசினார்.
ஜனநாயகத்தை மீளநிலைநாட்டும் பயணத்தில் அமெரிக்கா இலங்கைக்கு துணை நிற்கும் என்று கெர்ரி கூறினார்.
இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்த பின்னணியில் இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கருத்துக்கள் நிலவின.
கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் சர்வதேச உறவு முன்னேற்றமடைந்து வருவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறுதியுத்தக் காலத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது