அபிவிருத்திப் பணிகளின் மூலம் மாத்திரமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று கூறிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், அபிவிருத்தியுடன் நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் தனது அரசாங்கத்தின் கொள்கை என்றார்.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலமே இனங்களுக்கு இடையிலான பீதி மற்றும் சந்தேகம் நீக்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழல் பாதுகாக்கப்பட்டு, மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முப்படைகளும் ஏனைய அரசாங்க நிறுவனங்களும் ஆற்றிய பங்களிப்பு நல்லிணக்க விடயத்திலும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.bbc
Aucun commentaire:
Enregistrer un commentaire