தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்த போதிலும் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன், பொட்டு அம்மான் உயிரிழந்தாலும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள், ஆயுதங்களை வழங்கியவர்கள்,வாகனங்களை வழங்கியவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire