நல்லாட்சி அரசாங்கத்தை புதிய தேசிய அரசாங்கம் என்பதற்குப் பதிலாக புதிய திருடர்களின் கூட்டணி என்றே அழைக்கவேண்டியுள்ளதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய அரசாங்கம் பெயரளவுக்குத்தான் தேசிய அரசாங்கம். மற்றபடி இது திருடர்களின் கூட்டணி அரசாங்கம். திருடர்களைப் பாதுகாப்பதற்காக கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்படுகின்றவர்களே அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறைகேடு, எவன்காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சிய முறைகேடுபோன்ற பாரிய முறைகேட்டுச் சம்பவங்கள் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
எனினும் நாங்கள் இதுபோன்ற முறைகேடுகளை மூடிமறைக்க இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் பாரியமுறைகேடுகள் தொடர்பில் குரல் எழுப்பவும், பொதுமக்களை தெளிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
நல்லாட்சி குறித்த எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு ஆளும் கூட்டணி துரோகம் செய்தாலும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிமல் ரத்நாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire