ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிறைவாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
64 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரொருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவாண்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ் சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவும் அதேகட்சியிலேயே இருந்தார். எனினும் 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:
Enregistrer un commentaire