
இந்த நிலையில் அமெரிக்கா குறித்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி சர்ச்சையில் சிக்கி தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள ஸ்நோடென்தான் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மாஸ்கோ டிரிப்யூனுக்கு ஸ்நோடென் அளித்த பேட்டியில் ஒசாமா பின்லேடன் பஹாமாசில் இருப்பதாகவும், அவர் அமெரிக்க உளவு அமைப்பின் ஊதியம் பெறும் பட்டியலில் இன்னமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், சிஐஏவிடமிருந்து அவர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் பெற்று வருவதாகவும் கூறியுள்ள ஸ்நோடென், பின்லேடன் தற்போது தனது ஐந்து மனைவிகள் மற்றும் பல குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள தனது நூலில் ஆதாரங்களை தாம் வெளியிடப்போவதாகவும் ஸ்நோடென் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire