கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ப்பு தாய் மற்றும் சகோதரி, இன்று இங்கிலாந்தில் நேரிட்ட பயங்கர விமான விபத்தில் பலியாகியுள்ளனர்.
தெற்கு இங்கிலாந்தில் பின் லேடன் குடும்பத்திற்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில், அவரின் வளர்ப்பு தாயும், சகோதரியும் இங்கிலாந்தில் உள்ள பிளாக்புஷ் விமான நிலையத்துக்கு பயணம் செய்தனர்.

ஜெட் விமான விபத்தில் இறந்தது ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் தான் என ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களிலும் உயிரிழந்தவர்கள் ஓசாமா பின்லேடனின் உறவினர்கள் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire