இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமின்றி பல்வேறு தமிழ்க் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற விக்னேஸ்வரன், இம்முறை கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தாம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய நபர் என்பதால் பக்க சார்பின்றி நடுநிலை வகிப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire