ராஜபக்சேவை வீழத்தி புதிய இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்ரிபால சிறிசேனா ஆகஸ்ட் 17-ந்தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு அதிபர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த அதிபர் பாதுகாப்பு பிரிவு முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் உருவாக்கப்பட்ட பிரிவாகும். இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு வீரர்கள் மீது கொலைக்குற்றம் தொடர்பு இருப்பதாக தகவல் வந்தது. இதனடிப்படையில் இந்த பிரிவை உடனடியாக கலைத்து விட்டு, தீவிர பயிற்சி பெற்ற சிறந்த கமாண்டர்களை கொண்ட சிறப்பு ஆயுதப்படை வீரர்களை பாதுகாப்பிற்காக ஸ்ரீசேனா அமைத்துள்ளார்.
ராஜபக்சே கடந்த 10 ஆண்டு காளமாக அதிபர் பதவியில் இருந்தபோது பயன்படுத்திய பாதுகாப்பு படையைத்தான் இதுவரை சிறிபாலா பயன்படுத்தி வந்தார். ராஜபக்சே காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்றது. அப்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக பாதுகாப்பு படையினர் மீது புகார் எழுந்தது.
இதனால், தன்னுடைய பாதுகாப்பு படையை கலைத்துவிட்டார் என்று இலங்கை மந்திரி ஜான் அமரதுங்கா கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ‘‘ஆயுதம் ஏந்திய இலங்கையின் சிறப்பு ஆயுதப்படை சிறிபாலாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும்’’ என்றார்.
அதிபர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் ஆயுதங்களுடன் சிறிபாலா அருகில் கடந்த ஏப்ரல் மாத்ம நெருங்கி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், கடந்த 2012-ம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தஜுதீன் கொலை வழக்கில் அதிபர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே குற்றம்சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire