அரச ஊழியர்கள் தனது கையடக்கத் தொலைபேசியை முறையற்ற ரீதியில்
பயன்படுத்துவதனால் ஒரு நாளைக்கு சேவையின் போது 18 இலட்சம் மணித்தியாலங்கள்
வீணடிக்கப்படுவதாக அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரச துறையின் வினைத்திறனை முன்னேற்ற வேண்டுமாயின் இந்த நிலைமையை தொடர்பில் அரச நிருவாக அமைச்சு கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச தொழில் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரச நிறுவனங்களில் கையடக்க தொலைபேசி பயன்படுத்தல் தொடர்பாக கடும் அறிவுறுத்தல் ஒன்றை விடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire