ஜெர்மனியில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிட்லரின் சுயசரிதை மீண்டும் வெளியீடு

ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 1918 -ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக போரில் தனி அணி அமைத்து போரிட்டார். பின்னர் 1923 -ம் ஆண்டு ஜெர்மனியின் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுப்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த போது தனது வாழ்க்கை குறிப்பை மெயின் கேம்ப் என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் 1925-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியானது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஹிட்லரின் புத்தகத்தை வெளியிட ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டது. தற்போது புத்தகத்தின் காப்புரிமை காலாவதியாகி விட்ட நிலையில் ஜெர்மனி நாட்டின் வரலாற்று மையம் ஒன்று நேற்று மெயின் கேம்ப் புத்தகத்தை வெளியிட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire