சிரியா ராணுவம் கைப்பற்றிய 8 மணி நேர வீடியோவை அது ஸ்கை நியூஸ் சேனலுக்கு அளித்துள்ளது. இதில் ஒரு பகுதியில் ஐ.எஸ் உறுப்பினர்கள் சிலர் ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்குவது குறித்த பணியை காட்டுவதாகும்.
ஆனால் மனிதர் இருப்பது போன்ற உஷ்ண அடையாளங்களை காண்பிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அதில் உள்ளடக்கி, ராணுவ, அரசு கட்டிடங்களில் பாதுகாப்பு சோதனைகளை ஏமாற்றிக் கடக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது.
அதே போல் பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்களையும் அழிக்கும் தொழில்நுட்பங்களையும் வளர்த்து கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire