jeudi 31 octobre 2013

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.
அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
- தந்தை பெரியார்

புத்தூரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்டக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

kinaruயாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போய் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த மைதிலி அமிர்தலிங்கம் (வயது-26) என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேளை திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி சிவசொரூபனால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னரே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
மேற்படி சம்பவம் யாழ் மக்களிடையே ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன்: வாசு­தேவ நாண­யக்­கார

அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ் மக்­க­ளா­கட்டும் அனை­வரும் சுய­வி­ருப்­ப­தோடு எங்கும் வாழலாம். அதனை தடை­செய்ய முடி­யாது என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். வடக்கில் மக்கள் வாழும் இடங்­களில் இரா­ணுவ நடமாட் டத்தைத் தடை­செய்ய வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,
சிங்­கள மக்கள் தமது வர்த்­தகம் மற்றும் தொழில்கள் நிமித்­தமும், சுய­வி­ருப்­பத்­து­டனும் வடக்கில் குடி­யே­று­வதை தடுப்­பதும் எதிர்ப்புத் தெரி­விப்­பதும் ஏற்­றுக்­கொள்ள முடி யாதது.
முத­ல­மைச்­சரின் அந்த நிலைப்­பாட்டை எதிர்க்­கின்றேன். வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக அவ்­வா­றான ஒரு நிலை உரு­வானால் தெற்­கிலும் தமிழ் மக்கள் வந்து குடி­யேற முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும். இன­வா­தத்­திற்கு சாத­க­மாக அமைந்­து­விடும்.
எனவே, சிங்­கள மக்கள் தமது சுய­வி­ருப்பின் பேரில் வடக்கில் மட்­டு­மல்ல எங்கும் வாழ­மு­டியும். அதே­போன்று தமிழ் மக்­களும் தமது சுய­வி­ருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடை­போட எவ­ருக்கும் அதி­காரம் இல்லை.

அர­சாங்கம்

ஆனால், அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வடக்கில் தொகை தொகை­யாக சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க்கின் றேன்.
அதே­போன்று, தமிழ் மக்­களை சிங்­களப் பிர­தே­சங்­களில் குடி­யேற்­று­வ­தையும் எதிர்க்­கின்றேன். வடக்கில் மக்கள் குடி­யி­ருக்கும் பிர­தே­சங்­களில் இரா­ணு­வம நட­மா­டு­வதை தடை­செய்ய வேண்டும்.
இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளுக்­கு­ரிய இடங்­களில் இருக்க வேண்டும். அத்­தோடு, சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தினரின் தலை­யீட்டை இல்­லாது செய்ய வேண்டும். தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரி­வினர் நட­மா­டலாம். ஆனால், இரா­ணுவச் சீரு­டை­யுடன் மக்கள் மத்­தியில் நட­மா­டு­வ­தென்­பது, மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும், தாம் இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் சிக்­கி­யி­ருக்­கின்றோம் என்ற உணர்வை ஏற்­ப­டுத்தும்.
வடக்­கிற்கு இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை வழங்­கி­யுள்­ளது. அதனை சுவா­சிக்க மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

பொலிஸ் அதி­காரம்

எந்­த­வொரு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே, வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும் அதே நிலைதான்.
பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வதா? இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்.

ஆளுநர்

இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றி ;அனைத்து இறைச்சிக் கடைகளும் இழுத்து மூடப்பட வேண்டும்...!

தொம்பே தேர்தல் பிரிவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்ற பிரேரணை, பிரதேச சபையின் இம்மாதத்திற்கான கூட்டத்தில் மேலதிக 4 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

வாக்கின் போது, அதனை ஆதரித்து ஒன்பது வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் கிடைத்துள்ளன. உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்க மறுத்துள்ளனர்.

தலைவர் மிலான் ஜயதிலக்க (ஐ.ம.சு.மு) யினால் தொம்பே தேர்தல் பிரிவில் இறைச்சிக் கடைகளுக்காக ஏலவிற்பனை நடைபெறக்கூடாது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே, எந்தவொரு இறைச்சிக்கடையும் டென்ர்ருக்கு விடப்படக்கூடாது என்று இடையில் பிரதேச சபை உறுப்பினர் அமின்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு இதுபற்றி ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை சபைக்கு முன்வைக்கப்பட்டதன் பின்னர், இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமா? என்ற தேர்தல் இடம்பெற்று, அதில் மூடப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வெற்றிபெற்றுள்ளன.

படைகளை விலக்க முடியாது தமிழ்ச் சமூகத்தினரை படையில் இணையவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர். – மகிந்த ராஜபக்ச

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரோ அவர்களின் முகாம்களோ விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், 

“ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. 

வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை வெளியேற்ற முன்வைக்கப்படும் யோசனை நடைமுறைச்சாத்தியமற்றது. 

இந்த யோசனைகள் எங்கிருந்து வருகின்றன என்று நாம் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். 

வடக்கு, கிழக்கிலும், வெளிநாடுகளிலும் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையாகவே, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரும் யோசனைகள் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், இராணுவ முகாம்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன. அம்பாந்தோட்டையில் உள்ளன. மொனராகலயிலும் இருக்கின்றன. 

வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்காப் படையினரின் பிரசன்னத்தை அகற்றுவதன் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்? 

நாட்டைப் பிரிக்க முப்பது ஆண்டுகளாக முயற்சித்த தீவிரவாத தலைவர்கள், இப்போது அதற்கு ஜனநாயக வழிமுறைகளை கையில் எடுத்துள்ளனர். 

தமிழ்மக்கள் இந்தச் சூழ்நிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

முப்பது ஆண்டுகளாக எல்லா சமூகங்களினதும் சுதந்திரத்தை பறித்த கொடூரமான தீவிரவாதி மரணமான, முள்ளிவாய்க்காலை நினைவுச் சின்னமாக்க சில சக்திகள் கடும் முயற்சி எடுக்கின்றன. 
இத்தகைய சக்திகளின் முயற்சிகள், அமைதியை விரும்பும் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. 

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற, ஜெயசிறி மகாபோதி, தலதா மாளிகை, ஏனைய பல வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்களை நடத்திய தீவிரவாதி மரணமான இடம்தான் வெள்ளமுள்ளிவாய்க்கால். 

தமிழ்த் தலைவர்களின் பிரிவினைவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் பாடங்களை எல்லா சமூகங்களும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிரிவினைவாதத்தை தோற்கடிக்க புதிய அணுகுமுறையை சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்தோம். 

தீவிரவாதத்தின் வேர்களை அழிக்க, வடக்கு,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம். 

நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாக உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த செயல்முறையில் பங்கேற்பதற்கு உரிமை உள்ளது. 

வடக்கு,கிழக்கிலும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும், அங்குள்ள மக்களின் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசாங்கம் சிறியளவிலேயே பணிகளை மேற்கொண்டுள்ளதாக சில சக்திகள் குற்றம்சுமத்துகின்றன. 

சிறிலங்கா படையினரை சிங்கள் இராணுவம் என்று கூறி, தமிழ்ச் சமூகத்தினரை அதில் இணையவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர். 

இன்று பாதுகாப்புப் படைகளில், சிவில் பாதுகாப்பு படையில், காவல்துறையில் அதிகளவான வடக்கு கிழக்கு மக்கள் எந்த சிக்கலுமின்றி, இணைந்து கொண்டுள்ளனர். 

போர் நடந்த காலங்களில் வடக்கில் பணியாற்றிய, ஐ.நா முகவர் அமைப்புகளும், அரச்சார்பற்ற நிறுவனங்களுமே அங்கிருந்த நிலைமைக்கு சாட்சியாக உள்ளன. 

முகமாலையில் இருந்து வடக்கு,கிழக்கின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் தமது ஆட்சியில் வைத்திருந்தனர். 

இப்போது வடக்கு கிழக்கில் அமைதிய நிலவுகிறது, தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன. 

வடக்கில் நடந்த தேர்தலைக் கண்காணிக்க வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பாதுகாப்புப் படையினர் ஒழுக்கத்துடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

mardi 29 octobre 2013

ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள் வடமாகாணத்தில்

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பணிகளை 2015 இல் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

dimanche 27 octobre 2013

இவர்களுக்கா போட் போட்டீர்கள் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார்


வட மாகாண சபையின் கன்னி அமர்வு கைதடியில் அமைக்கப்பட்டு உள்ள மாகாண சபையின் புதிய கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்றபோது முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்உட்பட மாகாணசபை உறுப்பினர் புளொட் சித்தார்த்தர் ஏனைய உறுப்பினர்கள்  பார்வையாளர் தரப்பிலிருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் போன்ற  முக்கியஸ்தர்கள் போட்டதூக்கத்தையும் இப்புகைப்படங்களில் காணலாம்.
news (1)
news (6)news (3)

புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது.- கன்னியமர்வில் கமலேந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில்இருந்தவற்றை இழந்தோமே தவிர எதையும் பெறவில்லை எனவடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்தெரிவித்தார்இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வடமாகாணசபையின் கன்னியமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்எமது மக்களின் அரசியல்உரிமைகளுக்காகவும்விடுதலைக்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம்செய்த அத்தனை போராளிகளையும் பலியாகிப்போன எமது மக்களையும்நினைவில் வைத்துக்கொண்டு எனது கன்னியுரையினை நிகழ்த்துவதில்பெருமையடைகின்றேன்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்குமாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதை முதல்கட்டமாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகஅமுல்படுத்துவதை கட்டங் கட்டமாக நகர்த்தி தீர்வு நோக்கி முன்னேறவேண்டும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோதுபுலிகளின்அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமேபலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்தவாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்டவடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாகவும்இலட்சங்களாகவும்அதிகரித்து இருக்காதுடன்ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் இங்கேநிகழ்ந்திருக்காது.
வடக்குகிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணமாகவும் பொலிஸ்,காணி அதிகாரங்களும் இந்திய அரசின் பக்கபலமும் இந்தியாவின்உயர்தரமான உதவியும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அந்தபொற்காலத்தினை புலிகள் தூக்கி எறிந்ததுடன்பொறுப்பெடுத்தவர்கள்துஷ்பிரயோகம் செய்தார்கள்.  
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மாகாண சபையிலிருந்து நாம்உரிமை இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிவந்துள்ளோம். எமது நிலைப்பாட்டை மாறி மாறி வந்த இலங்கைஜனாதிபதிகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியும்வந்துள்ளோம்.
எம்மோடு தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறந்த புத்திஜீவிகளையும்இழந்துள்ளோம். அவர்களின் தியாகமும்எமது நம்பிக்கை மிகுந்தபோராட்டமும் இன்று நனவாகியுள்ளது.
இந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றில் எனதுஉரையினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் இந்த மாகாணசபை ஊடானஆட்சியும் ஆளுமையும் எமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்குவித்திடும் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அத்தகையபயனுள்ள திட்டங்களை ஆதரித்து தமிழ் மக்கள் பயன்பெறச்செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு.
நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கானமுன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும்சமூகத்தில்எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ்இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பைஏற்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமானநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீதுசுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்குஉட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல்உள நலன் சார்ந்தவழிகாட்டுதல்கள்சிகிச்சைமுறைகள்நலனோம்பும் செயற்பாடுகளைஎமது சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.
இயற்கை வளம் செழித்த எம் பிரதேசங்களில் கைத்தொழில்விவசாயம்,என்பவற்றை ஊக்குவித்து மக்களுக்கு வருமானத்தையும்வேலைவாய்ப்புக்களையும் உள்வாங்கும் நிலைகளைத்தோற்றுவிப்பதற்கும்உள்ளுர் உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின்உதவியுடன் பெருக்கவும்உற்பத்தித் தொழில்பேட்டைகளை நிறுவிஏற்றுமதி தொழில் வாய்ப்பை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும்நாம் முன்னின்று உழைக்கவேண்டும்.
எமது மக்கள் தமது தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்குஏற்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் ஊடாக இலகு கடன்களைஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களது நடைமுறை வாழ்வுக்கானதொழிற்துறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன்வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம்இந்த வழிகள் நம் மக்களைசுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும்.
கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியானசூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்தநிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம்ஏற்படுத்த வேண்டும். யுத்தத்தினால் எமது சிறார்கள் பலர் தம் கல்வியைமுறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதாரகாரணங்களினாலும்யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்கள் காரணத்தினாலும்கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள்.
கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்குஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கானமூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கானஆயத்தநிலைகளை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
நிரந்தரமானதும்கௌரவமானதுமான அரசியல் தீர்வு நோக்கியபயணத்துக்கு வடமாகாண சபையை நாம் முன் நகர்த்திச் செல்லவேண்டும். இந்த முயற்சியில் சகோதர முஸ்லிம் மக்களோடுஇணக்கப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதோடுபெரும்பான்மை சிங்களமக்களிடமும் எமது உரிமை கோரிக்கையின் நியாயங்களை தெளிவுபடுத்தநாம் உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் 7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்

புதிய பழைய தமிழ் பட அடையாளங்களை அழிக்கலாமா?

unnaipol oruvanunnaipol oruvan-jபுதிய தமிழ் படங்கள் தொடர்ச்சியாக ஒரு தவறைச் செய்துவருகின்றன. பழைய தமிழ்ப் படங்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருவதுதான் அந்தத் தவறு. இது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. இதில் உள்ள நுட்பமான அரசியலும், வியாபாரத் தன்மையும் மிக ஆபத்தானவை. எம்.ஜி.ஆரின் படங்களை வெவ்வேறு நடிகர்கள்,ரஜினி தொடங்கி விஜய் வரை தொடர்ச்சியாகத் தங்கள் படங்களுக்குச் சூட்டிக்கொள்கிறார்கள். எப்போதும் போல் இதிலும் கமல் முன்னோடியாகவே இருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், உன்னைப் போல் ஒருவன் என்று அவர் பயன்படுத்திய பழைய படங்களின் தலைப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உன்னைப் போல்ஒருவன் என்று ஒருவர் ஜெயகாந்தனின் படத்தைத் தேடினால், அவருக்குக் கமலின் படம்தான் கிடைக்கும். ஜெயகாந்தனின் திரைப்படம் பற்றிய தகவல் கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.

ஆய்வு செய்பவர்கள், வெளிநாட்டில் இருந்து தமிழ் திரைப்படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் வரும் பலநண்பர்களுக்கு, படத்தின் பெயரைத் தாண்டி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை என்றால், அவர்கள் தேடும் படங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, கே. ராம்நாத்தின் மனிதன் திரைப்படத்தை அதன் உள்ளடக்கத்திற்காக ஒருவர் தேடினால், ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம்தான் அவருக்குக் கிடைக்கும்.

பல நல்ல பழைய படங்களின் பெயர்களைப் புதிய படங்களுக்குச் சூட்டுவது எத்தகைய வியாபார தந்திரம்!

நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்த்துத் திரைப்பட ரசனையை ஒருவர் வளர்த்துக்கொள்ள இந்தப் பெயர் வைக்கும் முறை பெரும் தடையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி என்கிற பெயரும் கூட ஒரு பழைய படத்தின் பெயர்தான்.

Raja-Rani-Movieஉலகில் வேறெந்த நாட்டிலும், வேறெந்த மொழியிலும் ஒரு முறை வெளியான படங்களின் பெயரைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதில்லை. பழைய படங்களின் பெயரை மீண்டும் சூட்டுவதை அவர்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். அனைத்து நாடுகளிலும் வெளியாகும் திரைப்படங்களின் தகவல் களஞ்சியமான ஐ.எம்.டி.பி. (IMDB) இணையதளத்தில் மிக தெளிவாக படங்கள் பற்றிய தகவல் வெளிவர வேண்டுமென்றால், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உலகின் மற்ற நாடுகளின் படங்கள் எல்லாம் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஐ.எம்.டி.பி. இணையத்தில் பதிவு செய்யப்படும்போது, தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

இணையம் எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்தியிருக்கிறது, எனவே இணRaja rani sivajiையத்தில் தேடினால், நிச்சயம் பழைய படங்களும் கிடைக்கும் என்றெல்லாம் பேச முடியாது. அதிகமாகத் தேடப்படும், அல்லது பார்க்கப்படும் ஒன்றையே இணையம் முன்னிறுத்துகிறது. உன்னைப் போல் ஒருவன் என்று நீங்கள் தேடினால், அதிகப்படியான இணைய வாசகர்கள் கமல்நடித்த உன்னைப் போல் ஒருவனைத்தான் தேடியிருப்பார்கள். எனவே இணையமும், கமல் நடித்த உன்னைப் போல் ஒருவனைத்தான்முதலில் உங்களுக்கு கொடுக்கும். ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் கிடைக்காது. இப்படித்தான் இந்தப் போக்கு பழையபடங்களைச் சுவடு தெரியாமல் அழிக்கும்.

தமிழில் யாராவது நாவல்களுக்கோ மற்ற முக்கியமான புத்தகங்களுக்கோ பழைய பெயரைச் சூட்டுகிறார்களா? மகாபாரதம் என்று புதிய புத்தகம் ஒன்று வெளிவந்திருக்கிறதா? புயலிலே ஒரு தோணி பெயரைப் புதிய நாவல் ஒன்றிற்குச் சூட்டியிருக்கிறார்களா? அம்மா வந்தாள், கடல் புறா, கனவுத் தொழிற்சாலை என்று பழைய சிறுகதை அல்லது நாவலின் பெயரைப் புதிய நாவல் அல்லது சிறுகதைக்கு யாராவது சூட்டுகிறார்களா?

உலகில் வேறெந்த நாட்டிலும், வேறெந்த மொழியிலும் ஒரு முறை வெளியான படங்களின் பெயரைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதில்லை                                  
அருண்.மோ

lundi 21 octobre 2013

கதை இயக்கும் அமெரிக்கா இந்தியா .இந்தியா திரைப்படத்திலேயே விக்னேஸ்வரன் நடிக்கிறார்

அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் சிறந்த முறையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதன் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு 'தலைசுற்றும்" என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானாலும் இலங்கைக்கு எதிரான கொள்கை மேலும் உச்ச கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

சிவாஜிலிங்கத்தை போன்று சிறுபிள்ளைத் தனமான அரசியலை மேற்கொள்ளாது நாகரீகமான முறையில் மிகவும் முன்னேற்றகரமான பாதையில் விக்கினேஸ்வரன் தனது அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுக்கின்றார்.

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது அரசுடன் நட்புறவுடன் செயற்பட தயாரென தெரிவிப்பது, மாகாண சபை அதிகாரங்கள் ஊடாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதே தனது நோக்கம் என்பதை வெளிப்படுத்துவதிலும் கூட்டமைப்புக்குள் உள்ள கடும் போக்காளர்களின் போக்கை ஏற்றுக்கொள்வதில்லையென்ற தனது போக்கினை வெகுவாக பிரபல்யப்படுத்தி வருகிறார்.
இது அமெரிக்கா எழுதிய கதை. இந்தியா அதனை இயக்குகின்றது. கதாநாயகனாக சிறப்பாக விக்கினேஸ்வரன் நடிக்கின்றார். சிவாஜிலிங்கத்தை போன்று உணர்வுகளை தூண்டி விட்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலை விக்கினேஸ்வரன் மேற்கொள்ளவில்லை. மாறாக நாகரீகமான முன்னேற்றகரமான அரசியல் பாதையில் பயணிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு அரசாங்கம் ஏமாந்து விட்டது. கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து விட்டது என கனவு காண்கிறது.

ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் படமாக்கப்படும். அக்காட்சிகளில் அரசாங்கத்துடன் நட்புறவை பேணினோம். மத்திய அரசாங்கத்தை மதித்தோம். ஆனால் வட மாகாண சபைக்கு அரசாங்கம் அதிகாரங்களை வழங்க மறுக்கின்றது என்ற இறுதிக்காட்சியை விக்கினேஸ்வரன் ஐ.நா.வில் நடிப்பார்.

அப்போது தான் அரசாங்கத்தின் தலை சுற்றப் போகின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்களை இவ் இறுதிக் காட்சி ஊடாக விக்கினேஸ்வரன் பெற்றுக் கொள்வார். அதன் பின்னர் தனித் தமிழீழத்துக்கான அரசியல் போராட்டம் ஆரம்பமாகும்.

vendredi 18 octobre 2013

பனிமனிதன்' யார்?

பனிமனிதன் என்று செவிவழி நம்பிக்கையாக இருந்துவரும் விலங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய துருவக்கரடி இனத்தின் வாரிசு என்று டிஎன்ஏ ஆய்வில் உறுதி
இமயமலைக் காடுகளில் நடமாடுவதாக ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டுவரும் யெட்டி அல்லது பிக்ஃபூட் எனப்படும் இராட்சத பனிமனிதர்கள் உண்மையிலேயே விலங்குகள் தானா அல்லது அவை வெறும் கற்பனைத் தோற்றமா என்ற கேள்விகளுக்கு பிரிட்டன் விஞ்ஞானி ஒருவர் நவீன டிஎன்ஏ ஆய்வுகள் மூலம் விடை கண்டிருக்கிறார்.
இந்த இராட்சத பனிமனித விலங்கு துருவக்கரடியினதும் பழுப்புநிறக் கரடியினதும் கூட்டுக்கலவையில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மரபணுத்துறை பேராசிரியர் பிரையன் சைக்ஸ் நம்புகிறார்.
'இந்தக் கரடியை இதுவரை எவரும் உயிருடன் பார்த்ததில்லை.. ஆனாலும் அவை உண்மையில் இருக்கக்கூடும். பெரும்பாலும் துருவக்கரடியின் மரபணுக்கள் தான் இந்த விலங்கில் அதிகளவில் இருக்க வேண்டும்' என்றார் பேராசிரியர் பிரையன் சைக்ஸ்.
வடக்கு இந்தியாவில் இமயமலைத் தொடரின் மேற்கே லடாக் பகுதியிலிருந்தும் கிழக்காக பூட்டானிலிருந்தும் கிடைத்த அடையாளம் உறுதிசெய்யப்படாத இரண்டு விலங்குகளின் மயிர்களைக் கொண்டே விஞ்ஞானி பிரையன் டிஎன்ஏ ஆய்வு நடத்தியுள்ளார்.
40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்குச் சொந்தமான நார்வேயிலிருந்து கிடைத்த போலார் பியர் என்ற துருவக் கரடியினத்தின் தாடை எலும்பின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்ட இந்த விலங்கு மயிர்களின் டிஎன்ஏ தரவுகள் 100 வீதம் ஒத்துப்போயுள்ளன.
இந்தியாவின் லடாக்கிலிருந்து கிடைத்த மயிர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டைக்காரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட விலங்கொன்றிலிருந்தே பெறப்பட்டவை. மற்ற விலங்கின் மயிர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூங்கில்காடுகளில் ஆய்வுப் படப் பிடிப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடமிருந்து கிடைத்தவை.

துருவக் கரடியின் வாரிசுகள்

பனிமனித விலங்கினது என்று நம்பப்படும் எலும்புகள்
'பழங்காலத்து துருவக் கரடியிலிருந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து உருவாகியதாக நம்பப்படும் பழுப்பு நிற கரடி வகையொன்றிலிருந்தே இந்த இமயமலை இராட்சதக் கரடிகளும் உருவாகியிருக்கக்கூடும்' என்ற கருத்துக்கு மரபணு நிபுணர் பிரையன் சைக்ஸ் வருகிறார்.
அல்லது அந்த பழங்காலத்து துருவக் கரடியின் வழிவந்த வாரிசுக்கும் பழுப்பு நிற கரடியினத்துக்கும் மிக அண்மையில் ஏற்பட்ட கலப்பில் இந்த இராட்சத விலங்குகள் பிறந்திருக்கக்கூடும் என்ற எடுகோளுக்கும் அவர் வருகிறார்.
இதன்படி, இமயமலையை அண்டிய மக்கள் மத்தியில் செவிவழி நம்பிக்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் இந்த இராட்சத பனிமனித விலங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கரடியினத்தின் வாரிசு தான் என்ற உண்மை இப்போது தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே 2008-ம் ஆண்டில், இந்த இராட்ச பனிமனிதனின் மயிர் என்று கூறி வடகிழக்கு இந்தியாவின் மேகாலய மாநிலத்திலிருந்து பிபிசிக்குக் கிடைத்த விலங்கு மயிர்களை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.
அது இமயமலைக் காடுகளில் வாழும் ஒருவகை ஆட்டினத்தின் மயிர் என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அரசாங்கம் அல்ல.அது தமிழீழ விடுதலை புலிகளேயாகும்;-எம்.ஆர். ஸ்டாலின்

(பாரிஸில் கடந்த 13 ஒக்டோபர் அன்று வட மாகாண சபை தேர்தலும் அதன் எதிர்காலமும் எனும் தலைப்பில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் எம்.ஆர். ஸ்டாலின் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை  வசகர்களுக்காக இங்கே  பிரசுரமாகிறது)
வட மாகாணசபை தேர்தல் நடந்த விதம் பற்றியும்அதில் பலரும் எதிர்பார்த்ததை விட தமிழரசு கட்சி அதிகூடிய வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்திருப்பது பற்றியும் அரசின் தோல்விக்கான காரண காரியங்கள் பற்றியும் பல தோழர்கள்  இங்கு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வட மாகாண  சபையின் எதிர்காலம் குறித்து சிலகருத்துக்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.
முதலில் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதாவது முன்வந்தமை சந்தோஷமான ஒரு விடயமாகும். காரணம் இந்த மாகாண சபையை அன்று வரதராஜபெருமாள் பொறுப்பெடுத்தபோதும் கிழக்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சந்திரகாந்தன் பொறுப்பெடுத்தபோதும் அவை துரோகங்களாகவே சித்தரிக்கப்பட்டன.ஒருவித அதிகாரமும் அற்ற "உது எதற்கு?"என்று எள்ளி நகையாடப்பட்டது. ஆனால் அதே மாகாண  சபையை    தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிகொண்ட போது ஏதோ தமிழீழத்தை வென்றெடுத்ததுபோல்  ஆரவாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் வானளாவ உயருகின்றன.
எது எப்படி இருந்தபோதிலும் தமிழரசு கட்சியின் 63வருடகால அரசியல் வரலாற்றில் இப்போதுதான் யதார்த்த ரீதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இதனை பார்க்கமுடியும்.தமிழர்களுக்கான ஒரு தீர்வு எனவோ இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு எனவோ இந்த மாகாணசபையை தாண்டி எதுவும் இனியொருபோதும் கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையில் இந்த மாகாணசபைமுறைமையையாவது காப்பாற்றிகொள்ளவேண்டியது அவசியமானதொன்றகும். இதனை நான் முதலாவது கிழக்கு மாகாண  சபை தேர்தல் காலத்தில் இருந்து அடிக்கடி கூறிவருவது இங்குள்ள பலதோழர்களுக்கு நினைவிருக்கலாம்..
தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக செய்யப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் சிங்கள அரசாங்கங்கள் கிழித்தெறிந்தே  வந்திருக்கின்றன என இங்கு சிலர் சுட்டிகாட்டினர். அக்கூற்றுக்கள் உண்மையானவையாக இருக்கலாம் . ஆனபோதிலும் இந்த மாகாணசபை முறைமைகளை உருவாக்கிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அரசாங்கம் அல்ல.அது தமிழீழ விடுதலை புலிகளேயாகும் என்பதை இங்கே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். அன்று இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவிடம் பெற்றுக்கொண்ட பணங்களுக்கும் ஆயுதங்களுக்கும்  பிரதியுபகாரமாக புலிகள் தமிழ் மக்களுக்கு அந்த துரோகத்தை  செய்தனர்.1987ல் புலிகள் சுமார் ஆயிரம் பேரை பலிகொடுத்த நிலையில் ஏற்றுகொண்டிருக்கவேண்டிய இந்த மாகாணசபையை  கடந்த இறுதியுத்தம் வரை சுமார் 25ஆயிரம் உறுப்பினர்களையும் இறுதி யுத்தத்தில் எண்ணற்ற உயிர்களையும்  இழந்த பின்னர்  ஏற்றுகொள்ளவேண்டியநிலையில் தமிழ் மக்களை  கொண்டுவந்து விட்டது புலிகளது அரசியல் வங்ககுரோத்துத்தனமேயாகும். அந்த வகையில் தான் இப்போதாவது  வட மாகாண சபை உருவாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதொன்றகும்
முதலில் இந்த வட மாகாண  சபை தனது நிதி ஆதாரம் பற்றி கவனம் கொள்ளவேண்டும். மத்திய அரசாங்கத்தினால்  மாகாண  சபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை மட்டும் நம்பியிருக்காது தனது சொந்த நிதி வருமானங்களை பெருக்கிக்கொள்ள முயலவேண்டும். இன்றைய நிலையில் வடமாகாணத்துக்கென இறைவரி திணைக்களமே இல்லையென அறியமுடிகிறது. முதலில் இதுபோன்ற பல திணைக்களங்கள் உருவாக்கப்படவேண்டிய தேவை உண்டு. மாகாணசபைகளுக்குரிய நிதிமூலங்களாக மதுவரி, நீதிமன்றவரிகள், முத்திரைவரிகள் போன்றன மட்டுமே இலகுவாக அடையாளம் காணத்தக்கனவாகும். இவற்றுக்கான நியதிசட்டங்களை உருவாக்கி அவற்றை மாகாணசபையில் நிறைவேற்றவேண்டும். அதன்பின்னர் அச்சட்டங்கள் ஆளுநரின் அங்கீகாரத்தை பெற  பலமாதங்கள் காத்துகிடக்க நேரிடலாம். அது மாகாண சபை அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வுகளின் பாற்பட்டது. ஆளுநரின் அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே எந்த ஒரு நியதிசட்டங்களும் சட்ட அங்கீகாரத்தை பெறமுடியும். இதுபோன்ற மாகாண சபை இயங்குவதற்குரிய அடிப்படை விடயங்களை உறுதிபடுத்திக்கொள்ளமுன்பே ஆளுனருடன் முரண்படும் செயல்பாடுகள் இடம்பெற்றால் அவை வட மாகாண  சபையின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மிக முக்கியமானது கல்வி அதிகாரம் ஆகும். இதுபற்றி நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிலையங்களை தவிர ஏனைய அனைத்து கல்விசார் சாலைகள் அனைத்தும் மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு உட்பட்டவையே ஆகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள் முழுமையாக செயல்படமுடியும். காணி போலிஸ் அதிகாரங்களைவிட இந்த கல்வி அதிகாரம் வடமாகாண சபைக்கு மிக முக்கியமானது என கருதுகின்றேன்.ஏனெனில் வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மூலதனம் என்பதே கல்விதான். அதனைகொண்டுதான் கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் நிமிர்ந்து நின்றது.அந்த வகையில் இன்று கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வடமாகாண சபை யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முடியும்.கிழக்கு மாகாண சபையானது  மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி அதிகாரத்தை பூரணமாக பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கிழக்கு மாகாண சபை உருவாகும் போது  பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியபற்றாக்குறை தலைவிரித்தாடியது.கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெரும் பாலான பாடசாலைகளில் இருக்கவேயில்லை. அதேவேளை நகர்ப்புற பாடசாலைகள் மேலதிக ஆசிரியர்களை கொண்டிருந்தன. இவற்றுக்கு அமைச்சர்களின் செல்வாக்குகளும் கல்வி அதிகாரிகளில் அனுசரணைகளும் துணை நின்றன.இந்த அவல நிலைமைகளை மாற்றியமைப்பதில்  முதலமைச்சர் சந்திரகாந்தன் எடுத்த உறுதியான முடிவுகள் பெரும் பங்காற்றின. பாலர் பாடசாலைகளுக்கான நியதிசட்டத்தை நிறைவேற்றியமை, பல கிராமிய பாடசாலைகளை தரமுயர்த்தியமை. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட படுவான்கரை, திருக்கோவில் பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு புதிய கல்வி வலயங்களை கூட கிழக்குமாகாண சபை உருவாக்கியமை போன்றன மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி அதிகாரத்தை பூரணமாக பயன்படுத்தியதன் வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற பலவித தேவைகளுக்காக  இறுதியுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிபிரதேசத்துக்கு மாணவர்கள் காத்துகிடக்கின்றார்கள்.வடமாகாண சபை இந்த விடயத்தில் அதிசிரத்தை கொள்ளவேண்டிய கடப்பாடு உண்டு.
மேலும் கடந்த 25 வருடகாலமாக இந்த மாகாண சபைகள் தென்னிலங்கையில் இயங்கிவருகின்ற போதிலும் அவை வடக்கு கிழக்கில் இயங்க புலிகள் அனுமதிக்க வில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  மாகாண சபைகளுக்குரிய பலவித அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெற்று கொண்டு வருகின்றது. இது பற்றிய எமது கடந்தகால கவனகுவிப்புக்கள் மிக குறைவாகாவே இருந்து வந்துள்ளன.. இன்று உருவாகியுள்ள   வட மாகாண சபை இன்னும் சில வருடங்களுக்கு முன்னராவது உருவாகியிருந்தால் மத்திய அரசின் இச்செயல்பாடுகளை தடுத்திருக்க முடியும். அதேபோன்று சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபை இயங்கிய காலங்களில் மாகாண  சபைகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் சிறுபான்மை இனங்களின் நலன்களை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைந்த ஒருசில சட்டமூலங்களை அரசாங்கம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைந்தது. அவற்றை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை கிழக்கு மாகாண சபை மேற்கொண்டது. எனினும் சந்திரகாந்தனின் ஆட்சி முழுமையாக தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் பெரும்பான்மையில் தங்கியிருக்காத காரணத்தினால் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரவரம்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் உள்ளுராட்சி மன்ற சட்டமூலம் காணி சீர்த்திருத்த சட்டமூலம் நாடு நகர சட்டமூலம்போன்றவற்றில் சிறுபான்மை இனங்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு பலதிருத்தங்களை செய்வதில் கிழக்குமாகாண சபையின் இருப்பு வெற்றிகண்டுள்ளது.
இவ்வாறான 13வது சட்டதிருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஒருமித்து குரல்கொடுக்க தாம் தயார் என்றும் அதுபற்றிய உரையாடல்களுக்கு தாம் தயாராயிருப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமை சம்பந்தருக்கு2011 ஜனவரி 1ம் நாள்  கடிதம் எழுதினார்.ஆனால் கூட்டமைப்பு அதுபற்றி கருசனை கொள்ளவில்லை.மாறாக கடிதத்துக்கான  பதில் எழுதும் அரசியல் நாகரிகத்தை கூட பின்பற்றவில்லை. இது போன்று கடந்த காலங்களில் தவறவிட்ட  பல விடயங்களில் இன்று உருவாகியுள்ள வட மாகாண  சபை தமிழ்மக்களுக்காக எதிர்காலத்தில் கருமமாற்ற முடியும் என நான் நம்புகின்றேன்.அதற்கு வட மாகாணசபை தொடர்ச்சியாக இயங்குவது அவசியம்.
அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற காலாவதியாகி போன கடந்த நூற்றாண்டு சிந்தனைகளை  விடுத்து வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் பரஸ்பர ஒத்துழைப்புகளுடன் இயங்க முன்வரவேண்டும்.காணி அதிகாரம் போலிஸ் அதிகாரம் போன்றவற்றை கோரி மாகாண சபைகளை முடங்க செய்வதை விட செய்யவேண்டிய இசெய்ய கூடிய பல விடயங்களில் முதலில் கருமமாற்ற  வட மாகாண  சபை முன்வரவேண்டும். மாகாண சபைகளின் ஊடாக நிறைவேற்றப்படும் நியதிசட்டங்களும் அவற்றையொட்டிய நிர்வாக செயல்பாடுகளுமே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கையகப்படுத்துவதற்கான படிமுறைவளர்ச்சியின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆகும்.
அவையே எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி நகருவதற்கான சட்ட வலுவாக்கத்தை இம்மாகாண சபைகளுக்கு வழங்கும். இன்றைய மாகாணசபைகளின் இருப்பை உறுதிசெய்வதில் கிழக்கு மாகாண  சபை நிறைவேற்றிய நிதிவசூலிப்பு சட்டமூலங்களும் பாலர் பாடசாலை சட்டமூலம் தனியார் போக்குவரத்து அதிகாரசபை சட்டமூலம்  போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாது  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடந்தகாலங்களைபோல தமிழரசுகட்சி செயல்பட்டால் இந்த நம்பிக்கைகள் பாழாய்ப்போகும் வாய்ப்புகளும் உண்டு. 13வது சட்டதிருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பன தனியாக தமிழர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டவையல்ல. அவை இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் பொதுவானவையாகும்.இந்த புரிதல்களின் துணையோடு ஏனைய மாகாணங்களையும் படிப்படியாக அதிகாரங்களுக்காக குரல்கொடுக்க தயார் செய்ய வேண்டும்.அதற்காக இடதுசாரிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் எமது உறவுகளை  வட மாகாண சபை விருத்திசெய்ய வேண்டும்.இங்கு பலரும் குறிப்பிட்ட "தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பது" என்பதை நாம் இவ்வாறாகத்தான் முன்னேடுக்கமுடியுமென நான் நம்புகின்றேன்.

mercredi 16 octobre 2013

ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டவர்கள் கேவலம் சத்தியபிரமாணத்தை கூட ஒற்றுமையாக செய்ய முடியவில்லை இவர்களை நம்பி வாக்களித்த வடமாகாண மக்கள் பாவம்.



(1)வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடந்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 




(2)வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் கொழும்பில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்





(3)சிவாஜிலிங்கம்
  முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் டாக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.


புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்- 



(4)புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்          

(1234)மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் பஞ்சாயத்து

 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

mardi 15 octobre 2013

தூத்துக்குடி கடல் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட அமெரிக்க நிறுவன கப்பல்

ship-usa
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் துப்பாக்கிகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட அமெரிக்க நிறுவன கப்பலில் இருந்தவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 20 கடல் மைல் தொலைவில் இந்திய கடல்பகுதியில் சுற்றித் திரிந்த அமெரிக்க நாட்டில் உள்ள அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு என்ற பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்  படையினர் கடந்த 12-ம் தேதி சுற்றி வளைத்தனர்.அந்தக் கப்பலில் 35 நவீன ரக துப்பாக்கிகளும், 25 பாதுகாப்பு வீரர்களும், 11 மாலுமிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் சிலரிடம் இருந்து கப்பலில் உள்ளவர்கள் 1500 லிட்டர் டீசலை திருட்டுத் தனமாக பெற்றது கண்டறியப்பட்டதால் கப்பலை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.இதையெடுத்து, கடலோர காவல் படை அதிகாரிகள், கடலோரா காவல் பாதுகாப்பு குழும (மரைன்) போலீஸப்ர், தூத்துக்குடி மாவட்ட போலீஸார் மற்றும் உளவுத் துறை போலீஸார் கப்பலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் உள்ள 36 பேரில் 11 பேர் இந்தியர்கள் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக கொச்சி துறைமுகத்தில் கப்பல் உரிமையாளர்களிடம் விளக்கம் அளித்துவிட்டு திரும்பும்போது தவறுதலாக தூத்துக்குடி கடல் பகுதிக்குள் வந்துவிட்டதாகவும் கப்பலில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், கப்பல் பிடிபட்டது குறித்து அமெரிக்காவில் உள்ள கப்பல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வந்தார். அவரிடம் போலீஸார் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு விதிமுறைகளை மீறியதாக கப்பலில் இருந்தவர்கள் மீது தூத்துக்குடி கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீஸார் இரண்டு சட்டத்தின் கீழ் 9 பிரிவுகளின் படி திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், கப்பலில் உள்ளவர்கள் யாரும் இதுவரை கரைக்கு கொண்டுவரப்படவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில் ஆயுதங்களுடன் செல்ல தடை என்ற 1878-ம் ஆண்டு சட்டத்தின் கீழும், அத்தியாவசியப் பொருள்களை திருட்டுத்தனமாக பெற்ற சட்டத்தின் கீழும் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கப்பலில் உள்ளவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் 36 பேரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கப்பலில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் இருநாட்டு பிரச்னை என்பதால் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மத்திய, மாநில உளவுத் துறை போலீஸார், கடலோர காவல் படை அதிகாரிகள், கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீஸார் ஆகியோருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.