samedi 31 octobre 2015

தீவிரமாக உழைத்து வந்த பெண்ணொருவர் ஜனாதிபதியாக நேபாளில்

நேபாளில் முதல் தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கொம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் சார்பில் பித்யா பந்தாரி (வயது 54) அவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தென்னாசியா பெண்களை அரசியல் தலைவர்களாகவும், நாட்டுத் தலைவராகவும் உருவாக்கிய அரசியல் மரபைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் தென்னாசியாவில் பெண்களை நாட்டின் தலைவியாக தெரிவு செய்த வரலாறுண்டு.

துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொருமுறையும் அரசியல் தலைவராக இருந்த ஆண் எவரேனும் மரணித்ததால் அவருக்கு பதிலாக அவரின் மகளோ, மனைவியோ தெரிவு செய்யப்படுகின்ற வரலாறே தொடர்ந்துள்ளது. அது இன்று நேபாளிலும் நேர்ந்துள்ளது.

ஆனால் நேபாளில் 1993 இல் கார் விபத்தில் கொல்லப்பட்ட அரசியல் தலைவரான மதன் பந்தாரியின் மரணத்தைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபாடுகொள்ளத் தொடங்கியவர் பித்யா பந்தாரி. ஆகவே ஏனைய பெண் அரசியல் தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

குறிப்பாக பெண்ணுரிமை, சமத்துவம், ஜனநாயகம், அரசியல் சீர்திருத்தம் போன்ற விடயங்களில் தீவிரமாக உழைத்து வந்தவர்.

217 அப்பாவி பயணிகள் கொளைக்கு கடவுளுக்கு நன்றி” என கூறியுள்ளது ஜஎஸ்

isisஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த எகிப்து மீட்பு படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 17 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, தாங்கள் தான் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளமும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த தளத்தில் “ஐ.எஸ். எகிப்தின் சினாய் மாகாணத்தில், 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கடவுளுக்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.

ஏழு மணி நேரம் காத்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ கடும்பில் விசனம்

xSpeechஏழு மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த போதிலும் விசா­ரணை எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடும் விசனம் வெளி­யிட்­டுள்ளார்.
பாரிய நிதி மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் எதிரில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.
சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் அவர் நேற்று முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி ஆணைக்­குழு காரி­யா­ல­யத்­திற்கு சென்­றி­ருந்தார்.
எனினும், ஏழு மணித்­தி­யா­லங்கள் அங்கு காத்­தி­ருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதி­யப்­ப­ட­வில்லை என அவர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
நானும் எனது சட்­டத்­த­ர­ணி­களும் முழு நாளும் இங்கு காத்­தி­ருந்தோம்.
எனதும் எனது சட்­டத்­த­ர­ணி­க­ளி­னதம் கால நேரம் விர­ய­மா­கி­யது.
இது மிகப் பெரிய உள­வியல் பாதிப்­பாகும். தொடர்ச்­சி­யாக இவ்­வா­று­செய்­வது என்­னிடம் பழி­வாங்கும் நோக்­கி­லாகும்.
வெறு­மனே எனது காலத்தை விர­ய­மாக்­கு­கின்­றனர்.
இப்­போது இவர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யாக இருக்கும். நான் செய்த கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­படவில்லை. என்­னுடன் எவ்­வித கொடுக்கல் வாங்­கல்­களும் கிடை­யாது.
எனினும் நான் தொடர்ச்­சி­யாக ஆணைக்­குழு எதிரில் பிர­சன்­ன­மா­கின்றேன். பிரச்­சனை என்­ன­வென்றால் எனது கால நேரம் விர­ய­மா­கின்­றது என்றார்.

பாடத்திட்டத்திலேயே கொண்டுவரவேண்டும் சிறுவர்களுக்குத் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விடயங்களை;இரா. சிவலிங்கம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாவர். இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால், தற்போது சிறார்கள் படும் வேதனையையும், இன்னல்களையும், கொடூரங்களையும், பாலியல் வன்முறைகளையும், யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

அரசாங்கம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இதனை எவ்வாறு ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர். அதேவேளை, பொதுமக்கள் இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோருவதும், அவ்வப்போது வீதியில் இறங்கி போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இன்றைய சமூகத்தில் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். இவ்வாறான நிலைக்கு இன்றைய சமூகம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்க வழக்கம், விழுமியம் போன்ற உயர் சிந்தனைகளிலிருந்து படிப்படியாக கீழிறங்கி சென்று கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. குறிப்பாக, இன்று வயது வித்தியாசமின்றி சிறுவர்கள், குறிப்பாக, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனித இனத்தின் இழிந்த நிலையையும், கேவலமான சிந்தனையையும், மோசமான செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

அனைத்து சமயங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில் மனித நேயமற்றவர்களால் சிறார்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதென்பது எந்தளவிற்கு சிறுவர்களை மதிக்கின்றார்கள், அவர்களை நேசிக்கின்றார்கள், விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஆலயங்களில், விகாரைகளில், கோயில்களில், பள்ளிவாசல்களில் போதிப்பது எல்லாம் வீணாகின்றதா? சமயம் ஒன்றே. எந்தவொரு சமூகத்தையும் சரியான வழியில் வழிநடத்தக்கூடியதொன்றாகும். கடந்த வருடத்தில் மட்டும் 2,500 இற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஒரு புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் மிகவும் கொடூரமானவையாகும். குறிப்பாக, வித்தியா, சேயா, பிரசாந்தி போன்ற சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் கலங்கடித்துவிட்டன எனலாம்.

பெருந்தோட்டப்புற சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களே அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் இன்று பலராலும் பல்வேறு முறைகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதை கேள்விப்படுகின்றோம்.

இவ்வாறான விடயங்களில் யாரை நம்புவது? யாரை நம்பாது விடுவது என்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தனது சொந்த மகளையே துஷ்பிரயோகப்படுத்தும் தந்தைமார் எமது சமூகத்தில் உள்ளனர். சொந்த சகோதரியை மானபங்கம்படுத்தும் சகோதரன் இருக்கின்றான். மாதா, பிதா, குரு என்ற முதுமொழியின்படி தாய், தந்தைக்குப் பின் தாய், தந்தையாக இருக்கக்கூடிய குருவே (ஆசிரியர்களே) தன்னுடைய மாணவர்களை (பெண் பிள்ளைகளை) துஷ்பிரயோகப்படுத்தும் செய்திகளும் வராமல் இல்லை.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு தரப்பை நாடும்போது அங்கும் பாதுகாப்பு கிடைக்காமல் துஷ்பிரயோகப்படுத்தும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. அதாவது வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது?

பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக, தாய்மார்கள் மிகவும் கவனமாகப் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இன்றைய சினிமா கலாசாரம், தொலைக்காட்சி, இணையத்தளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர், தொடர் நாடகங்கள், ஆபாசப் படங்கள், வீடியோ, கையடக்கத்தொலைபேசி பாவனை போன்ற விடயங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

அத்துடன் அதிகரித்த மதுபாவனை, போதைவஸ்து பாவனை, குடு, கஞ்சா, ஹெரோயின் பாவனை, வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அங்கத்தவர்கள், அயல் வீடுகளில் வசிக்கும் பிழையான நடத்தைக் கொண்டவர்கள் போன்ற விடயங்களும் இதற்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.

குறிப்பாக வறுமை, கல்வியறிவு குறைவு, அறியாமை, விழிப்புணர்வின்மை, ஆலோசனை கிடைக்காமை, தொடர் வீடமைப்பு முறை, (லயத்து அமைப்பு முறை) போன்ற விடயங்களும் ஏதுவாக அமைந்து விடுகின்றன. பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான வழிகாட்டல் ஆலோசனைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பிரச்சினை அல்லது தப்பு நடந்தபின்பே அதுபற்றிய விடயங்கள் பேசப்படுகின்றன. இது நேரத்தையும், வளத்தையும் வீணடிக்கும் செயல்களாகும்.

வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும். அரசாங்கம் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வுகளை பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டும் நடத்தவேண்டும். கல்வித் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். பாடசாலை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்விடயம் சம்மந்தமாக போதிய வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அரசினால் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களை பாராபட்சமின்றித் தண்டிக்கவேண்டும். பாடசாலைக்கு தனியார் வாகனங்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களே விழிப்புடன் இருக்கவேண்டும். தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்களும,; சமூகமும் இணைந்து செய்யவேண்டும்.

சிறுவர்களுக்குத் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விடயங்களை பாடத்திட்டத்திலேயே கொண்டுவரவேண்டும். அத்துடன் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலை தோறும் விழிப்புணர்வு செயலமர்வுகளை அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கும், சமூகத்திலுள்ளவர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும். துர்நடத்தைகளில் ஈடுபடும் நபர்களை சமூகத்திலுள்ளவர்களே காட்டிக் கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பிரதேசத்தில் மதுபானசாலைகளை குறைக்கவேண்டும். கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனைகளை பொலிஸார் தடுக்க வேண்டும். பாடசாலை விடும் நேரங்களிலும், பாடசாலைக்கு பிள்ளைகள் வரும் நேரங்களிலும் மாணவர்கள் சேர்ந்து போகவேண்டும். சந்தேசங்களில் இடமான நபர்கள், வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றை பொலிஸார் தொடர்ச்சியாகக் கண்கானிக்க வேண்டும். பாடசாலைகளில் தியான வகுப்புக்கள், யோகா பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களை தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளக் கூடியவாறு தயார்படுத்த வேண்டும். சமய நிறுவனங்கள் போதியளவான பங்களிப்பை உடனடியாக செய்வதற்கு முன்வர வேண்டும்.

இன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில்; இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் வயது வந்த பிள்ளைகளையும், சிறுவர்களையும் தந்தையின் பொறுப்பிலும், உறவினர்கள் (தாத்தா, பாட்டி) பொறுப்பிலும் விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதைக் காணலாம். இவர்களுக்கான பாதுகாப்பு சகல வழிகளிலும் கேள்விக் குறியாகவே உள்ளதை அவதானிக்கலாம்.

கல்வி அமைச்சும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தேசிய கல்வி நிறுவனமும் சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக உருவாக்க வேண்டும். இலங்கையில் இவ்வாறான ஒரு துரதிஷ்டமான செயல்கள் எவ்வாறு உருவாகியது, இதற்கான காரணங்கள் யாது? இதனை எவ்வாறு தடுக்கலாம், இதனை செய்வது யார்? எப்படி இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக நடக்க முடியும் என்பதுபற்றி ஆராய்ந்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தேசத்துரோகமா?உத்தமி போயசில் உல்லாசமா?அம்மாவின் மரண தேசம்.பாருங்கள்.அறிமுகப்படுத்துங்கள், பகிருங்கள்

மிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும்  தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.தமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா?                                                                                                                                                           எனில் பெண்களை இழிவுபடுத்துவது யார், விதவைகளாக்குவது யார், இலட்சக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக்குவது யார், யார் தேச விரோதி, சமூகத்தின் இணக்கத்தை சீர்குலைப்பது யார்? – அனைத்திற்கும் இப்படம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையின் மூலம் பதில் அளிக்கிறது 45. நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை முழுமையாக பாருங்கள். நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், அம்மாவின் மரண தேசம் 

lundi 26 octobre 2015

பதவியை இழந்த கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் விலக்கிக் கொள்ள முடிவு

karunaவீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட கருணாவுக்கு, கட்சியின் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் பிரதி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், புதிய அரசாங்கம் சிறிலங்காவில் பதவியேற்றதையடுத்து, அவர் பிரதி அமைச்சர் பதவியை இழந்தார்.
மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட்ட போது, கருணாவிடம் இருந்து கட்சியின் உப தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட மறுத்த கருணாவுக்கு, தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டது.
ஆனாலும், அவரது பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் அவர், கட்சியின் மீது அதிருப்தியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படை பழைய, கிபிர் மற்றும் மிக்- 27 போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிய நவீன போர் விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியில், பாகிஸ்தானின் ஜே.எவ்- 17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் மறுத்திருந்தன.
இந்தநிலையில், இந்தியாவும் சிறிலங்கா விமானப்படைக்கு தேஜஸ் போர் விமானங்களை வழங்க முன்வந்திருப்பதாக நேற்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், சிறிலங்கா விமானப்படையின், இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் மற்றும் ரஷ்யத் தயாரிப்பாக மிக் -27 போர் விமானங்களுக்குப் பதிலீடாக, தமது நாட்டுத் தயாரிப்பான போர் விமானங்களை வழங்க இந்தியாவும், பாகிஸ்தானும் முன்வந்திருப்பதாக, சுயாதீன வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

சவூதியில் பணிபுரிந்த தமிழகப் பெண் கஸ்தூரி கை துண்டிப்பு விவகாரம்:

சவூதியில் பணிபுரிந்த கஸ்தூரி முனிரத்னம் என்ற பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி முனிரத்னத்திற்கு சரியான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டுமென ஜெயலலிதா கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கஸ்தூரி முனிரத்னம் தான் வேலைபார்க்கும் வீட்டைவிட்டு தப்பும்போதுதான் கை துண்டிக்கப்பட்டதாக சவூதி காவல்துறை சொல்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பதாகவும் கஸ்தூரியை வேலைக்கு வைத்திருந்தவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேலும், கஸ்தூரி முனிரத்னத்திற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு அவரைப் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டுமென்றும் ஜெயலலிதா கோரியிருக்கிறார். கஸ்தூரிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த விவகாரத்தை சவூதி அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் அவர் அடைந்த துன்பத்திற்கும் போதுமான இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிஸ்டல் வேண்டும் எம்.பி.க்களில் 35 பேர்

fggஅமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போல 9 எம்.எம். வகையான பிஸ்டல் வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவாகியுள்ள கோரியுள்ளனர்.
நாடாளுமன்றத்துக்குப் புதிதாக தெரிவாகியுள்ள 33 உறுப்பினர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள், நாடாளுமன்ற சேவைகள் காரியாலயத்துக்கு எழுத்து மூல கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்.
தங்களுக்கு வழக்கவிருக்கின்ற 03.8 வகையைச் சேர்ந்த ரிவோல்வர் பழைய வகையைச் சேர்ந்ததாகும். எனவே, அந்த பழைய ரிவோல்வர் வேண்டாம். 9 எம்.எம் வகையான பிஸ்டல்தான் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்முறை நாடாளுமன்றத்துக்குப் புதிதாக 61 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அதில், 35 புதிய உறுப்பினர்களே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுடைய பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டும், தங்களுடைய வரப்பிரசாதங்களின் அடிப்படையிலுமே இவ்வாறான கோரிக்கையை விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும், 03.8 வகையைச்சேர்ந்த ரிவோல்வர் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயக காரியாலயம், அவர்களுக்கு அறிவித்துள்ளது.

mardi 20 octobre 2015

இனியாவது படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.அந்த வரலாறு முடிவுக்கு வருகிறது




Oct212015 நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…

Gaரியைத் தோற்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உலகத்தமிழர் இயக்கத்தினர் வேலை செய்தபடியால்தான் Gaரிக்கு இன்னும் பலமாக ஆதரவு அலை வீசியிருந்திருக்க வேண்டும். உலகத்தமிழர் இயக்கத்தினர் Gaரியை எதிர்த்திருக்காவிட்டால் இந்த அளவிற்கு மக்கள் ஆதரவு Gaரிக்குக் கிட்டியிருக்காது.
லிபரல்கள் ஊடாக ஒரு புதிய இளம் தமிழ்த் தலைமை கனடாவில் தமிழர்களுக்கு உருவாகியிருப்பதுபோன்ற தோற்றப்பாடு அனைவர் மனதிலும் இப்போது வேரூன்றி விட்டிக்கிறது. இது விடுதலைப் புலிகளும் உலகத்தமிழர் இயக்கமும் சேர்ந்து ஏற்கனவே உருவாக்கி வைத்திருநத அரசியல் வெற்றிடத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை.. இனியாவது படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
Gaரி வென்றதாக அறிவிக்கப்பட்டாலும் எனக்கென்னவோ ”Gaரியின் தந்தை வீ. ஆனந்த சங்கரிதான் வென்றிருக்கிறார்” என்றே தோன்றுகிறது. காரணம்??? இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்பா ஆனந்தசங்கரியைத் “துரோகி” “துரோகி” என்று சொல்லித்தான் மகன் ஆனந்தசங்கரியை டிஸ்க்கிரடிட் பண்ணியது உலகத்தமிழர் இயக்கம். ஆனால் “இந்தக் கதையை இனி இங்கு விடாதே அப்பனே…” என்று உலகத்தமிழர் இயக்கத்திற்கு ஸ்காபரோ ரூஜ்பார்க் ‌தொகுதித் தமிழர்கள் சொல்லிவிட்டார்கள்…
கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் ஒருகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோல உலகத்தமிழர் இயக்கம் ரொன்டோவை ஒருகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்து. இப்போது அந்த வரலாறு முடிவுக்கு வருகிறது. இனி “அவர்கள்” இந்தக் கிளிநொச்சியை கட்டுப்படுத்த முடியாது..
காரணம் அன்றைய கிளிநொச்சி எம்பியின் மகன்தானே இன்றைய Gaரி…!!! இதைக் Gaரியும் புரிந்து கொள்ள வேண்டும்:
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”
பொழிப்பு: மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

புலிகளாள் கொளைசெய்யப்பட அல்பிறட் துரையப்பாவின் பேரன் கனடாவில் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்

Nishanthan Thuraiappa நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடா சென்றிருந்தார்.கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக ஹால்டன் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.நிஷாந்தன் துரையப்பா ஏனைய பிரஜைகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்வதாகவும் ஹால்டன் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கனடாவின் ஹால்டன் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பொலிஸ் உத்தியோகத்தராக நிஷாந்தன் துரையப்பா விளங்கியதுடன், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அக்னியை தடுக்க அமெரிக்கா சதி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமை யிலான விஞ்ஞானிகள் குழு தயாரித்த அக்னி ஏவுகணையை செலுத்தி சோதனை செய்வதை தடுக்க அமெரிக்கா கடும் அழுத்தம் தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை யாக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக எழுதிய புத்தகங்களில் ஒன்றான அட்வான்டேஜ் இந்தியா: பிரம் சேலஞ்ச் டு ஒப்பர்சுனிட்டி விரைவில் விற்பனைக்கு வரவுள் ளது. அப்புத்தகத்தில் கலாம் கூறியுள்ளதாவது: என் தலைமையிலான விஞ்ஞானிகளின் நீண்டகால ஆராய்ச்சிகளின் பலனாக அக்னி ஏவுகணை உரு வானது.
 1989 மே 22ல் ஏவுகணையை செலுத்த திட்டமிட்டிருந்தோம். அன்றைக்கு அதிகாலை 3:00 மணிக்கு அப்போதைய பிரதமர் ராஜpவின் கெபினட் செயலர் டி.என்.சே'னிடமிருந்து ஹொட்லைன் அழைப்பு வந்தது.
அக்னி ஏவுகணை செலுத்தும் பணி எந்த கட்ட த்தில் உள்ளது? என சே'ன் கேட்டார்.
தொடர்ந்து பேசிய சே'ன் ஏவுகணை சோத னையை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பிடமிருந்து கடும் அழுத்தம் தரப்படுகிறது என்றார். பின் முதலில் எழுப்பிய கேள்வியை மீண்டும் அழுத்தமாக கேட்டார்.
சே'னின் கேள்வி மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில வினாடிகளில் என் சிந்த னை ஓட்டம் பன்மடங்காகி இருந்தது. 10 ஆண்டு களுக்கு முன் கவனமாக தேர்வு செய்யப்பட்ட துடிப்பான இளம் விஞ்ஞானிகளின் அயராத கடின உழைப்பு வீணாகி விடுமோ என்ற கவலை என்னை வாட்டியது.
என் மன ஓட்டத்தை அலசி ஆராய்ந்து ஏவுக ணை செலுத்தும் திட்டத்தை நிறுத்த முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது என சே' னுக்கு பதில் அளித்தேன். இதைக் கேட்டு சே'ன் விவாதம் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் ஓகே ஏவுகணையை செலுத்துங்கள் என சொல்லிவிட்டு ஹொட்லைன் இணைப்பை துண்டித்தார்.
மூன்று மணி நேரம் கழித்து திட்டமிட்டபடி அக்னி வெற்றிகரமாக பாய்ந்து இலக்கை தாக்கியது. இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. இவ்வாறு அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது

அரச நிருவாகம் ஓரிடத்தில் மட்டும் குவிந்து கிடக்காமல் பிரதேச மட்டத்தில் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் - செழியன்

நாட்டின் அரச நிருவாகம் ஓரிடத்தில் மட்டும் குவிந்து கிடக்காமல் பிரதேச மட்டத்தில் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையிலேயே பிரதேச செயலக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஆர். பிரேமதாச, இந்தக் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலக முறைமையினை கொண்டு வந்தார்.

நாட்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இருந்த ( 1656 – 1796) கச்சேரி முறையை (மாவட்ட செயலகம் ) மாற்றி பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே உதவி அரசாங்க அதிபர் பிரிவு ( A.G.A. Divison ) பிரதேச செயலகங்களாக ( Divisional Secretary Division ) மாற்றியமைக்கப்பட்டன. முன்னர் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கச்சேரி என்பனவற்றால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் மாவட்ட செயலகங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் மொத்தமாக 333 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 3 தொடக்கம் 27 வரையிலான பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்தளவாக மூன்று பிரதேச செயலகங்களும் குருநாகல் மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 27 பிரதேச செயலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டம் சுமார் 1237. 11 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் அங்கு ( 2007 கணக்கெடுப்பின்படி ) சுமார் இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு மூன்று பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதுடன் 95 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
குருநாகல் மாவட்டம் 4812.7 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. மக்கள் தொகை 14,52,369 ஆகும். இம்மாவட்டத்தில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் 1610 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட மாவட்டமாகும்.

அந்த வகையில் மத்திய மலைநாட்டை உள்ளடக்கிய நுவரெலியா மாவட்டம் பல்வேறு வகைகளில் ஒரு முக்கியத்துவம் பெற்ற மாவட்டமாகக் காணப்படுகின்றது. இயற்கை அமைவு, காலநிலை, பொருளாதார பயிர்ச்செய்கை, சுற்றுலா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,720.5 ச.கி.மீ. ஆகும். இலங்கையின் மொத்த பரப்பளவில் 2.7% வீதத்தை கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,11,664 ஆகும். எனினும் இந்த மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களே இருக்கின்றன. மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்கள் அமையப் பெறவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகும்.

உதாரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியை எடுத்துக்கொண்டால் அங்கு இரண்டு பிரதேச செயலகங்களே இருக்கின்றன. ஒன்று நுவரெலியா மற்றையது அம்பகமுவ ஆகும். நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் சுமார் 2,12,094 பேரும் அம்பகமுவ பிரதேச செயலக பிரதேசத்தில் 2,05,738 பேரும் வசிக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையிலேயே இங்கு அமைந்துள்ளது.

இது மக்கள் தொகைக்கு அல்லது பரப்பளவுக்கு ஏற்ற வகையில் அமையப்பெறவில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, இந்த பிரதேச செயலகங்களினால் தமது செயற்பாடுகளை இலகுபடுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.

40 ஆயிரம் மக்களை கொண்ட அல்லது 40 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டதாகவே ஒரு பிரதேச செயலாளர் பிரிவு அமையப்பெற்றுள்ளது. ஆனால், நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நிலைமை எதிர்மாறாகவே உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா செயலாளர் பிரிவு 6,904 பேருக்காகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவு 3,824 பேருக்காகவும் திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு 7,968 பேருக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் தொகை அடிப்படையில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 80 ஆயிரத்துக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையிலாவது நிறுவ முடியும் நிறுவப்பட வேண்டும்.

அதன் படி புதிய பிரதேச செயலகங்களை ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, தலவாக்கலை, நானுஓயா, கந்தப்பளை போன்ற இடங்களில் அமைத்தால் அப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைய முடியும்.

தற்போது தலவாக்கலை, டயகம, கந்தப்பளை போன்ற தூர இடங்களிலுள்ள மக்கள் கூட தமது தேவைகளுக்காக நுவரெலியாவிலுள்ள பிரதேச செயலகத்துக்கே செல்ல வேண்டியுள்ளது. அதேபோன்று மஸ்கெலியா, பொகவந்தலாவை, ஹட்டன் பிரதேச மக்கள் அனைவரும் தூர இடத்திலுள்ள கினிகத்தேனைக்கே ( அம்பகமுவ ) செல்ல வேண்டிய நிலைமை காண்படுகிறது. இதனால் பண விரயமும் நேரமும் அதிகமாகின்றது.

பொதுவாக இதனால் தோட்டத்தொழிலாளர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர். முன்னரெல்லாம் தமது அனைத்துத் தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தையே தொழிலாளர்கள் நம்பி இருந்தனர். பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, சுகாதாரம், கல்வி, உணவு என அனைத்தையும் தோட்ட நிருவாகங்களே கவனித்துக்கொண்டன. ஆனால் இவை அனைத்தையும் பெறுவதற்கு தற்போது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றுக்கே செல்ல வேண்டியுள்ளது.

அது மட்டுமின்றி உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண சபை, பாராளுமன்றம் என்பவற்றுக்கு பிரதி நிதிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுள்ளனர். எனவே, பிரதேச செயலகங்கள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. எனவே நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் 10 முதல் 12 புதிய பிரதேச செயலகங்களை அமைக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமென்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தத்தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடைபெறுமென்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையிலா ? அல்லது புதிய தொகுதிவாரி அடிப்படையிலா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

எந்த முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறப் போகின்றது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அனைத்தும் கலைக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படியே எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமை ஏற்கனவே பராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் புதிய முறைமையில் நடத்தப்பட வேண்டும். இது இவ்வாறிருக்க தொகுதி எல்லை நிர்ணயம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த தொகுதி நிர்ணயம் அதாவது எல்லை ஒழுங்கமைப்பில் பக்கச்சார்பு இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாண உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளூராட்சித் தேர்தல் எல்லை சீர்திருத்த அமைச்சரவை உபகுழுவை சந்தித்து நுவரெலியா மாவட்டத்தில் எல்லை மீள் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. எனவே இதை மலையகத் தலைமைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் இவ்விடயத்தில் மலையக தலைவர்கள் கவனமெடுப்பது அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி

இலங்கை அரசு நியாயமானதொரு அரசியல் தீர்வவை மக்களுக்கு வழங்கப்படவேண்டும்

நியாயமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும் இதுபற்றி சர்வகட்சிக் குழுக் கூட்டத்திலும் எடுத்துரைக்கப்படும் என்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இதில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சில கட்சிகள் இன்னும் இறுதிமுடிவை எடுக்கவில்லை.இந்நிலையில், லங்கா சமசமாஜக் கட்சியின் பங்குபற்றல் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது, "சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் எமது கட்சி பங்கேற்கும். தேவையான யோசனைகளையும் நாம் முன்வைப்போம். மற்றுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் கூறவேண்டியுள்ளது.ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழர் விடயத்தில் சமசமாஜக் கட்சியின் கொள்கை மாறிவிட்டதாக சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறான வதந்திகளை நம்பவேண்டாம் என நாம் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று அன்றிலிருந்து இன்றுவரை நாம் வலியுறுத்தி வருகிறோம். இது விடயத்தில் எமது கொள்கையில் என்றுமே மாற்றம்வராது.எதிர்க்கட்சியில் இருந்தாலும் தமிழ் மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலிக்கும். சர்வக்கட்சிக் குழுக் கூட்டத்திலும் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டியதன் அவசியத்துவத்தை வலியுறுத்துவோம் '' - என்றார்.

lundi 12 octobre 2015

புலிகளை தாராளமாக உபயோகித்துவிட்டு அவர்கள் மீதும் போர் குற்ற விசாரணைகளை நடத்தும்படி கேட்டுக்கொண்டமை கூட்டமைப்புக்கு தகுதி இல்லை-வீ. ஆனந்த சங்கரி!

தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இந்த உரை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஆனந்த சங்கரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூறுவது பொருத்தமற்றதென்றும் கூற முடியாது. ஏனெனில் உண்மைகள் திரிபுபடுத்தப்படக்கூடாது. அப்படி நாம் செய்தால் அது திருப்பி வந்து எம்மையே தாக்கும்.

"இலங்கையில் ஜனநாயகம் உயிர் வாழாவிடின் நாடு அழிந்துவிடும். இந்த நாடு அழிந்து போவதற்கு எவரும் தயாரில்லை. ஆதலால் ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் சகல தருணத்திலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தனது பொறுப்புணர்வு குறித்துத் தேர்தல் திணைக் களம் அறிந்திருப்பது அவசியம் "இவ்வாறு அவர் கூறியது என்னை சிரிக்க வைத்தது.


திடகாத்திரமானதாக கூறுவது என்னவெனில் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், பலகோடி பெறுமதிமிக்க தனியார், பொதுச் சொத்துக்களையும் இழந்திருக்க நேர்ந்திருக்காது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் தத்தம் கணவருடன் மேலும் பல குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பர்.


பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக இருப்பதை தவிர்த்திருப்பார்கள். நாட்டின் எப்பகுதியிலும் ஒருவரேனும் பட்டினியால் உயிரிழந் திருக்கமாட்டார்கள். நான் கிளிநொச்சியில் வாழ்ந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் ஒரே நபர் தனது ஒரு ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு என்னிடம் வருவார். தம்பி பிரபாகரன் கூட முதலமைச்சராக வந்திருக்கலாம்.


2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற போதுத் தேர்தலின் போது நாடு தழுவியளவில் என்றும் எதிர் நோக்காத வகையில் படுமோசமான அரசியல் அனர்த்தம் ஏற்பட்டது. வட கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம் முற்றுமுழுவதாக தடம் புரண்டமைக்கு திருவாளர்கள் சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் பொறுப்பேற்க வேண்டும்.


அரச ஊழியர்களின் கடமையை விடுதலைப் புலிகள் பொறுப்பேற்றனர். தேர்தலில் போட்டியிட்ட 22 பேரும் 95 வீத வாக்குகளை பெற்று பெரும் சாதனையை நிலை நாட்டினர்.


இந்த வெற்றி, வெற்றி பெற்றவர்களின் சம்மதத்தோடு அவர்கள் மீது திணிக்கப்பட்டமையால் மறுநாளே ஒட்டு மொத்தமாக தங்கள் பதவியை அவர்கள் துறந்திருக்க வேண்டும்.


ஆனால் பதவிக்குரிய சகல செளபாக்கியங்களையும் அனுபவித்துக் கொண்டு எதுவித தடையுமின்றி ஆறு ஆண்டுகள் தொடர்ந்து மிக்க வசதியாக 22 பேரும் தத்தம் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். தேர்தல் முறைகேடுகளை ஆட்சேபித்து இவர்களின் தேர்தலை தள்ளுபடி செய்து புதிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆணையாளரிடம் விட்ட கோரிக்கை சட்டத்தில் அதற்கு இடமில்லையென கூறி நிராகரிக்கப்பட்டது.


இதற்கு நிவாரணம் தேடக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசு அதனைச் செய்ய வில்லை. அவ்வாறு தெரிவு செய் யப்பட்டவர்கள் ஒன்றில் நீக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். தாமாக அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய சொல்லவுமில்லை.


அவர்கள் மீது சட்ட நடவடிக்கையாரும் எடுக்கவுமில்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய சபையின் 10 வீத உறுப்பினர்களாகிய 22 பேரும் எவ்வித இடை யூறுமின்றி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பதவியில் நீடித்தனர். இதே நபர்கள் இதே சட்ட ரீதியான குறைப்பாட்டுடன் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 14 பேர் 10 வீத வாக்குகளை மட்டும் பெற்று வெற்றியீட்டினர்.


தமிழர் விடுதலைக் கூட்டணி இத் தேர்தலில் சாதாரணமாக தோற்க வில்லை. அகிம்சைக்கு கட்டுப்பட்ட மிதவாத கட்சியினராகிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஒரு காலத்தில் 18 பேரை பாராளுமன்றத்தில் உறுப்பினராக கொண்டிருந்தவர்கள், திட்டமிட்டு நிரந்தரமாக சட்டத்துக்கு விரோதமாக நீக்கப்பட்டார்கள். அவர்களை மீளவைக்க அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது.


தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமி ஆ ழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன இணைந்த கூட்டு முயற்சியே 22.10.2001 ஆம் ஆண்டு உருவாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். என்னையே முதல் தலைவராகக் கொண்ட அமைப்பே இது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் அன்றைய செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனும் ஏனைய மூன்று கட்சியின் செயலாளர்களும் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.


2001 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும் அதன் சின்னமாகிய "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிட்டு 14 ஸ்தானங்களை கைப்பற்றியது.


அத்தேர்தலில் பல்வேறு கட்சிகளாலும் தெரிவாகிய ஒன்பது உறுப்பினர்களில் நானே 36,000 இற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக தெரிவானேன். 2004 ஆம் ஆண்டு முற்பகுதியில் கெளரவ இரா.சம்பந்தன் தலைமையில் ஒரு பிளவு ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட நபரின் வற்புறுத்தலால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும், அவர்களே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனவும் ஏற்றுக்கொண்டு 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரகடனப்படுத்தியிருந்தனர்.


அதேபோன்று அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க இலங்கை தமிழரசுக் கட்சியை அதன் ஸ்தாபகர் சா.ஜே.வே. செல்வநாயகம் இறந்து 26 ஆண்டுகளின் பின் புதுப்பிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தெரிவிக்காது இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இடத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிடித்துக் கொண்டது.


2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 12 பேரில் த.தே.கூ.க்கு ஆறு இடங்களை மாத்திரம் கொடுத்து எஞ்சிய ஆறு இடங்களையும் தமிழ்ச் செல்வன் அவர்கள் தம் இஸ்டம்போல் வழங்கியிருந்தார்.


த.தே.கூ. பாராளுமன்றம் செல்வதற்கு விடுதலைப் புலிகளை தாராளமாக உபயோகித்துவிட்டு அவர்கள் மீதும் போர் குற்ற விசாரணைகளை நடத்தும்படி கேட்டுக்கொண்டமை அனைவரும் அறிந்ததே. ஏனெனில் உண்மைகள் திரிபுபடுத்தப்படக்கூடாது. 

ஈ.என்.டி.எல்.எப். அஞ்சலி! ஆயுதப் போராட்டத்துக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் .தியாகி டேவிட் ஐயாதான்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, யாழ்.கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்துறையைச் சேர்ந்த, தியாகி. உயர்திரு.டேவிட் ஐயா (சொலமோன் அருளானந்தம் டேவிட்)  தியாகம் என்பதே அவர் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்த கொள்கையாகும்.


ஈழத் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும், அதிலும் ஆயுதம் ஏந்திப் போரிட்டு எங்கள் விடுதலையைப் பெறவேண்டும் என்று சிந்தித்துச் செயற்பட்டவர் உயர்திரு. டேவிட் ஐயா அவர்கள்.


கருவி ஏந்திப் போராடும் சிந்தனையை, நான்தான் நீதான் என்று பலரும் நூல்கள் வழியாக பெருமை பேசிக்கொள்கின்றனர். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் உயர்திரு. டேவிட் ஐயாதான் என்பது பின்நாளில் வளர்ச்சிப்பெற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!


1968 ஆம் ஆண்டு சாம்பியாவிலிருந்து இஸ்ரவேல் தலைநகர் ரெல்லவீவ் விமான நிலையத்தைச் சென்றடைந்தார் டேவிட் ஐயா. நேராக ஓர் வாடகை வாகனத்தை அமர்த்திக்கொண்டு இஸ்ரவேல் இராணுவத் தமைமை அலுவலகத்தைச் சென்றடைந்த டேவிட் ஐயா அவர்கள், அந்நாட்டின் இராணுவத் தளபதியை சந்திக்க வேண்டும் என்று ஓர் துண்டுக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.



அதனை வாங்கிப் படித்த இராணுவ கடமை அலுவலர் என்ன விடயமாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று வினவினார். ஓர் பயிற்சி சம்பந்தமாக (பயிற்சி) பார்க்க வேண்டும் என்று அந்த அதிகாரியிடம் தெரிவித்தார்.


கடவுச் சீட்டை வாங்கிப்பார்த்த அந்த அதிகாரி இவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதைத் தெரிந்து கொண்டு, தளபதியிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு, இல்லை. என்று கூறியுள்ளார் ஐயா!


பயிற்சி என்ன? என்றதற்கு, ஆயுதப் பயிற்சிதான் என்று பதில் கூறியதைக் கேட்ட அந்த அலுவலர் திகைப்படைந்துவிட்டார். இருங்கள் என்று உள்ளே சென்ற அந்த அதிகாரி மேலும் சில உயர் அதிகாரிகளுடன் வந்து டேவிட் ஐயாவைச் சந்தித்தார்.


தேனீர் வரவழைத்து பருகச் சொல்லி விலாவாரியாகச் சொல்லுங்கள் உங்கள் பிரச்சினையை என்று அந்த அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர்.


இரண்டு மணித்தியாலங்கள் அந்த அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார் டேவிட் ஐயா. யூதர்கள் பட்ட கொடுமைகள் போன்றுதான் நாங்களும் ஈழத்தில் பட்டுவருகிறோம். எனவேதான் எங்கள் விடுதலையைப் போராடிப் பெறவேண்டும் என்ற கொள்கையுடன் பயிற்சிக்காக உங்களிடம் வந்துள்ளேன் என்று விளக்கினார் அவர்களுக்கு. பெரும் குழப்பத்துடன் உள்ளே சென்ற அந்த இராணுவ அதிகாரிகள் நான்குமணி நேரம் கழித்து வந்தனர்.


ஹலோ இளைஞன் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் யாருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்குவதில்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம் என்று கூறிவிட்டனர். இவர் மீண்டும் ஓர் விண்ணப்பத்தை அவர்களிடம் முன்வைத்தார். அன்றைய இஸ்ரவேல் இராணுவத் தளபதிகளில் முக்கியமானவர் மோசேஸ் தயான் என்பவர்.


அவரை மட்டுமாவது சந்திக்க அனுமதி கொடுங்கள் என்று வேண்டினார். அதற்கும் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. நீங்கள் சென்று வரலாம் என்று கூறி ஓர் இராணுவ வாகனத்தில் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர் டேவிட் ஐயாவை.


இதன் பின்னர்தான் காந்தியடிகளின் வழியில் தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற சிந்தனையில் "காந்தீயம்" என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, முதற் கட்டமாக மலையக மக்களை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியமர்த்தும் பணியினை மேற்கொண்டார்.


1983 ஆம் ஆண்டுடன் அவை தடைபட்டன. பின்னர் அவரை சிங்கள அரசு கைது செய்து வெலிக்கடையில் அடைத்தது, படுகொலையிலிருந்து தப்பி மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து தப்பித்து இந்தியா சென்றடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே!



அன்று யாருமே ஆயுதப் போராட்டங்கள் பற்றிச் சிந்திக்காத வேளை திரு.டேவிட் ஐயா அவர்கள் பிற நாடு ஒன்றுக்குச் சென்று பயிற்சி பெற்று வந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முற்பட்டதற்கு நாம் அனைவரும் தலை வணங்கியே ஆகவேண்டும். அந்த வழி அடைக்கப்பட்டு விட்டது என்று சோர்ந்து விடாமல், தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று விடாது முயற்சி மேற்கொண்டார் உயர்திரு. டேவிட் ஐயா அவர்கள்.


இவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த, ஈழப் போராட்டத்தின் முன்னோடி. உயர்திரு. காந்தியம். டேவிட் ஐயா அவர்களுக்கு, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) தலை வணங்கி அஞ்சலி செய்கிறது.


அன்னாரின் இறுதி ஊர்வலம் 14-10-2015 புதன் கிழமை நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.


இவ்வண்ணம்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)

நான் சோர்ந்து போகவில்லை டேவிட் அய்யா -1924 – 2015 – வாழ்வும் பயணமும்… !


தனது 92 -வது வயதில் கிளிநொச்சியில் மறைந்திருக்கிறார் டேவிட் அய்யா. தமிழீழம் அமைந்தால் ஈழத்திற்குச் செல்வேன் என்று சொன்ன அந்த முதியவர் சென்னையில் இருந்து ஜூன் மாதம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை வாழ்க்கை முழுக்க கசப்பும், அந்நியமுமான அவருடன் நான் நடத்திய நீண்ட உரையாடல் இது,
உங்களுடைய இளமைக்காலம் பற்றிய நினைவுகளைக் கூறுங்கள்?
நான், 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கரம்பனில் பிறந்தேன். அப்பா பெயர் அருளானந்தம், அம்மா பெயர் மரியப்பிள்ளை, எங்கள் வீட்டில் ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இரண்டு பேர். என்னையும் அண்ணனையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள்.


 கரம்பனில் இருந்த கொன்வென்டில் எனது ஆரம்பக் கல்வியைத் துவங்கினேன். ஐந்தாண்டுகாலம் அதில் பயின்ற பின்னர் மூன்று வருடங்கள் தமிழைப் பயின்றேன். அதற்கு பிறகு நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன். எனது அண்ணன் புனித அந்தோனியார் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அங்கு சென்று ஆங்கிலம் பயின்றேன். ஆனால் ஆங்கிலக் கல்வி பயிலப் போதுமான பண வசதி என்னிடம் இருக்கவில்லை. தகப்பனாரிடமும் அவ்வளவு பணம் இல்லை. அப்பொழுது அப்பா சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. அவர் சொன்னார் ‘’ உனது அண்ணனை எப்பாடு பட்டாவது நான் ஆங்கிலம் படிக்க வைத்து விடுவேன். அவன் ஆங்கிலம் படித்தால்தான் நல்லதொரு உத்தியோகத்தில் சேர முடியும். ஆனால் உன்னை என்னால் அவன் போல படிக்க வைக்க முடியாது. அதனால், தம்புதேனியாவில் இருக்கும் எனது சிறிய கடையில் வேலைக்குச் சேர்ந்து கொள்” என்றார்.


அந்தப் பிராயத்தில் எனக்கு படிப்பு, உத்தியோகம் பற்றிப் பெரிய அபிப்பிராயங்கள் இருக்கவில்லை. நான் தந்தையின் முடிவை ஏற்று சரி என்று சொன்னேன். நானும் என் தகப்பனாரும் பின்னர் ஒன்றாக வீட்டிற்குச் சென்றோம். ஆனால் அப்பா மறு நாள் கல்லூரிக்குக் சென்று மகனின் ஆங்கிலக் கல்வி விருப்பதைச் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியரோ அப்பாவைத் திட்டியிருக்கிறார். ஏனென்றால் அவர் என்னை நன்கு அறிவார். “அவனது கல்வி பற்றி உனக்கு எந்த கவலையும் வேண்டாம். அதற்கான செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.


மறு நாள் நான் இரண்டு சிறிய வேட்டி, இரண்டு சிறிய சட்டை, ஒரு துவாய் என எடுத்துக்கொண்டு கிளம்பினேன். என்னை வழியனுப்ப எனது தகப்பனார் வரவில்லை. அவருக்கு மனதில் ஏதோ சங்கடம் இருந்ததுபோல் தெரிந்தது. ஆக நான் மட்டும் கிளம்பிச் சென்றேன். எனது வீட்டிலிருந்து புனித அந்தோனியார் கல்லூரிக்கு செல்ல ஒரு மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும். காலை 6 லிருந்து 7 மணிவாக்கில் நான் கிளம்பினேன் . அங்கு போனதும் தலைமை ஆசிரியர் அந்தோனியார் பள்ளியிலிருந்து இளவாலையில் இருக்கிற ஹென்றிக் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்குதான் தான் ஆங்கிலக் கல்வி பயின்றேன்.

ஆங்கிலம் படிக்க இளவாலைக்கு வந்த நாள்முதல் நான் வீட்டிற்கு செல்லவே இல்லை அங்கேயே படித்து அங்கேயே சாப்பிட்டு உறங்கி வாழ்ந்தேன். எனக்கு எந்த ஓர் உலக அனுபவமும் கிடைக்கவில்லை என் மனம் முழுக்க பள்ளிச்சூழல் மட்டுமே இருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு ஒரு முறை எனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் ஊர்காவற்துறை சந்தையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் 16 வயது இருக்கும். அப்போது வெள்ளை சட்டை வேட்டி சால்வை அணிந்திருந்த ஒரு பெரியவர் என்னிடம் வந்து என்ன தம்பி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போல, என்ன யோசிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன். “தமிழர்களின் நிலையை பற்றி எனக்கு இப்போது சில விஷயங்கள் புரிகிறது. ஆனால் அதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்பது பற்றிய சிந்தனைகள் எனக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.”

அப்போது அவர் “தம்பி அது இப்போது வளர்ந்து விட்டது இனி அதனைத் திருப்பி எழுதுவதற்கு இடமில்லை அதனை முழுதாக அழித்து விட்டு புதிதாக எழுத வேண்டும்” எனறுவிட்டு தன் பாட்டில் போய்விட்டார் . இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஏதோ ஓர் உந்து சக்தி எனக்கு பின்னாலிருந்து என்னை தள்ளுவது போன்ற உணர்வு எழுந்தது.எனக்கு அப்போது பெரிய கனவு இருந்தது. திருகோணமலையில் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதற்காக நல்லதொரு வரைபடத்தையும் நான் தயாரித்திருந்தேன்.

ஓர் ஆர்க்கிடெக் ஆவதென்று எப்படி முடிவு செய்தீர்கள்?
நான் சிறுவனாக இருந்த போது என்னிடம் ஒரு அழகிய ஜப்பானிய மிட்டாய் டப்பா ஒன்று இருந்தது. அதில் ஒரு சின்ன வண்டிலுக்குள் பூனையொன்று விளையாடுவது போல ஓர் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதனை இப்போது கூட என்னால் அழகிய ஓவியமாக தீட்ட முடியும். அந்த அளவுக்கு அந்த மிட்டாய் டப்பாவும் அதில் வரையப்பட்டிருந்த ஓவியமும் எனக்குப் பிரியமானதாக இருந்தது. பார்க்கும் திறனும், கிரகிக்கும் திறனும் எனக்கு அதிகமாக இருந்ததாக நம்பினேன். மேலும் சிறு பிராயத்திலேயே எனக்கு ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. மிட்டாய் டப்பாவில் இருந்த அந்த ஓவியம் என்னைக் கவர்ததால் ஆங்கிலக் கல்விக்கு நான் இளவாலை சென்ற போது அதனையும் கூட எடுத்துச் சென்றேன்.

பின்னர் கரம்பன் கொன்வென்டில் படிக்கும்போது ஓவியம் தீட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். எங்களுடைய ஆசிரியர் ஒருமுறை ஒரு மாங்காயை மேசையின் மீது வைத்து அதனை ஓவியமாக வரையுமாறு கூறினார். நான் கூர்மையாகக் கவனித்து அதனை தாளில் ஊன்றிக் கீறினேன். ஆசிரியர் அதனைப் பார்த்து விட்டு “நீ அழகாகத்தான் கீறியிருக்கிறாய்.

ஆனால் முதலில் கீறும் போது அழுத்தமாக கோடுகளை போடாமல் இலேசாக கீற வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிழை செய்தாலும் அதனை அழித்து சீராக வரைய முடியும். மேலும் தாள் பாழாகாமல் இருக்கும் என்று கூறினார். வேறு ஒரு தாளில் மீண்டும் வரையுமாறு கேட்டுக்கொண்டார். நானும் ஆசிரியர் கூறியது போல இலேசாக மாங்காயினை கீறியிருந்தேன்.

அதைப்பார்த்த ஆசிரியர் எங்கேயடா கீறியிருக்காய் என்று கேட்டார். அந்த அளவுக்கு கண்ணுக்குத் தெரியாதபடி மெல்லியதாய் வரைந்திருந்தேன். அந்த நாள்தொட்டு ஓவியக்கலை என்னோடுகூடவே ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
இளவாலையில் படிக்கும்போது நிறைய ஓவியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அப்போது பெரிய பெரிய ஓவியங்களை தீட்டி அதற்கு வண்ணங்களையும் தீட்டி முழுமையான ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன் . அந்தக் காலத்தில்தான் இளவாலை தூய ஹென்றி கல்லூரியில் முதன்முதலாக அறிவியல் பாடப்புத்தகங்கள் வரத்துவங்கின. அப்போதுதான் எல்லோரும் என்னிடம் அறிவியலில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

 நான் ஓவியங்களில் தேர்ந்து விளங்குவது உண்மையென்றாலும் அறிவியல்தான் இனி வரப்போகும் காலங்களில் வாழ்க்கைக்கு கைக்கொடுக்கும் என்று விளக்கினார்கள். ஆனால் எனக்கு ஓவியங்கள் வரைவதில் இருந்த ஆர்வம் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இல்லாமல் இருந்தது. எல்லோரும் என்னை அறிவியல் பாடத்தில் கவனம் கொள்ளுமாறு சொன்ன போது. நான் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேன் என்னால் அது முடியவே முடியாதென்று. எனக்கு விருப்பமான கட்டிட வரைகலையில் நான் கவனம் செலுத்தத் துவங்கியது ஓவியத்தின் மீதான எனது நாட்டத்திலிருந்துதான் துவங்கியது.

வேதநாயகம் என்றொரு ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க வருவார். நான் ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் கொண்டவன் என்பதனைப் புரிந்திருந்த அவர் என்னிடம் தனிக் கவனம் எடுத்துக் கொண்டார். எந்த அளவுக்கு அவர் அன்பு கொண்டிருந்தார் என்றால் விடுதியில் நல்ல உணவு கிடைக்காது என்பதால் என்னைத் தனியாக அழைத்து அவர் எடுத்து வந்த உணவைக் கொடுப்பார். அவருடைய அன்பும் அரவணைப்பாலுமே நான் ஆங்கிலக் கல்வியில் புலமை பெற முடிந்தது. பின்னர் என்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்தது அதுதான்.

கல்விக்குப் பின்பான காலங்கள் எப்படியிருந்தன?
ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டு போகும் போது ஒரு பெரிய தபால் நிலையம் இருந்தது. அதற்கு எதிரே பொதுப்பணித்துறை கட்டிடம் இருந்தது. அது சிவப்புச் செங்கலால் கட்டப்பட்டு வடிவாக இருந்தது. அதன் கூரையில் அழகான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.

அந்த சிறு பிராயதில் அப்படிப் பூ வேலைப்பாடுகள் செய்வதுதான் ஆர்க்கிடெக்கினுடைய வேலை என்று நினைத்தேன்.
கிராமத்திலே வாழ்ந்த எனக்கு புதிதாக கொழும்பிற்கு வந்து பெரிய பெரிய கட்டிடங்களைப் பார்க்கும்பொழுது ஒருவித வியப்பும், அச்சமும் ஏற்பட்டது . பயத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தேன். பிறகு கிளிரிக்கல் பகுதிக்குள் நுழைந்தேன். அங்கே ஒரு தமிழர் இருந்தார் அவரிடம் போய் நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தினேன்.

 அப்போது அவரிடம் நான் நன்றாக படங்கள் கீறுவேன். கட்டிடங்களில் உள்ள பூ வேலைப்பாடுகள் எல்லாம் நான் நன்றாக செய்வேன் என்று கூறினேன். மேலும் என்னை பொதுப்பணித்துறையில் சேர்த்து விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன் அவர் என்னிடம் வயதைக் கேட்டார். நான் 47 என்று கூறினேன். 46 – இற்கு உள்ளாகத்தான் இங்கே பணியில் அமர்த்துவார்கள் ஆக நீங்கள் இங்கு சேர்வது கடினம். ஆக நீங்கள் ரெக்னிக்கல் கல்லூரியில் உங்களது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பியுங்கள் என்று கூறினார்.

ரெக்னிக்கல் கல்லூரியில் போய் எனக்கு ஓவியம் கற்றுக்கொள்ளத்தான் விருப்பம். ஆனால் காடுகளில் சென்று நிலம் தொடர்பான சர்வே எடுக்கவும் கருவிகளைக் கொண்டு கோணங்களை அளவிடவும் வேண்டியதான படிப்பு படிக்க வேண்டியிருந்தது. நல்ல வடிவமைப்பாளராக வேண்டுமென்றால் டிராட்ஸ்மேன்ஷிப்பும் படிக்க வேண்டும். எனக்கு சர்வேயிசத்தில் விருப்பமில்லை.

ஆனால் அனைத்தையும் ஒன்றாகத்தான் படிக்க வேண்டும். விதிவலியது என்பது போல என்னை எனக்குப் பிடிக்காத சர்வேயிசத்தில் போட்டார்கள். அப்போது கல்லூரியில் பொதுப்பணித்துறையில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவர் அங்கு ஆசிரியராக வந்தார். நான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்.

அவர் வண்ணங்களைப் பற்றி பாடம் நடத்துவார். அன்று சகாரா பாலைவனத்தைப்பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அதில் மஞ்சள் நிற மணல், பச்சை நிறத்தைக் கொண்ட ஒயாஸிஸ் மரங்கள், நீல நிறத்தை உடைய தண்ணீர் என்று வண்ணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்னையே மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னை அவர் சகாராவுக்கு அழைத்துச் சென்று விடுவார். அப்படியொரு அதியசயக்காரர் அவர். ஒரு நாள் நன்றாக மது அருந்தி வந்தவர், டேவிட் என் மகன் என்றார். நான்நெகிழ்ந்து போய் பாடம் முடிந்த பின்னர் அவரிடம் சென்று என் மனதில் உள்ள சங்கடங்களை எல்லாம் சொன்னேன்.

எனக்கு சர்வே படிப்பை விட டிராட்ஸ்மேன்ஷிப் படிக்கத்தான் ஆசை என்றேன். ஆனால் என் விருப்பத்தையும் மீறி என்னை இங்குதான் சேர்த்து விட்டார்கள் என்றேன். உடனே அவர் என் கையைப் பிடித்து கொண்டு நேராக கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றார். கல்லூரி முதல்வர் இவரை விட வயதில் சிறியவர் என்பதால் அவரை திட்டத் துவங்கினார். விருப்பமில்லாத பையனை ஏன் வேறு துறையில் படிக்க வைக்கின்றீர்கள். பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதைத்தான் அவர்கள் படிக்க வேண்டும் என்றார். இறுதியில் என் விருப்பபப்டி டிராட்ஸ்மேன்ஷிப்பை நான் படித்தேன்.

 என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழலிலும் ஒரு மேய்ப்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என் கைகளைப் பற்றி என்னை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்தான் அந்த பொதுப்பணித்துறை அதிகாரியும். பின்னர் படித்து முடித்து பொதுப்பணித்துறையில் வேலையும் கிடைத்தது.

பொதுப்பணித்துறை வேலை அனுபவங்களைச் சொல்லமுடியுமா?
அப்போது அங்கு இரண்டு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஒருவரது பெயர் வின் ஜோன்ஸ் மற்றொருவரின் பெயர் நினைவில்லை.

ஆனால் அவர்தான் அங்கிருந்த தலைமை அதிகாரி. அவர்கள் இருவரும்தான் வெளிநாடு சென்று படிப்பதற்கான ஸ்கொலர்ஷிப் கொடுப்பவர்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அவர்கள் அந்த ஸ்கொலர்ஷிப்பை எனக்குத்தான் தந்தார்கள்.

ஆனால் என்னுடன் பணிபுரிந்த மற்றைய சிங்களவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்து எனக்கெதிராக ஒரு மனுவை உயரதிகாரிக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த மனுவில் எனக்கு ஆஸ்த்துமா வருத்தம் இருப்பதாக ஒரு தகவல் இருந்தது. நான் உடனே பொது மருத்துவமனைக்குச் சென்று முழுதாக உடற்பரிசோதனை செய்து சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தேன்.

அவர்கள் என்னை ஆஸ்திரேலியா செல்ல அனுமதித்தனர். நான் 1953இல்; அவுஸ்திரேலியா சென்று 1956இல் திரும்பி வந்தேன்.

எப்படி அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது? காந்தி எப்படி அறிமுகமானார்? அப்போது உங்களுடைய அரசியல் பார்வை என்ன?
நான் ஆரம்பத்திலிருந்தே காந்தியடிகள் பற்றிப் படித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

எனக்கு அவருடைய எளிமை, உண்மை, தேசத்திற்காக அவர் வாழ்க்கையில் செய்த தியாகங்கள் என்று எல்லாமே மனதில் பதிந்திருந்தது. அவர் என்னை மிகவும் கவர்ந்திருந்தார். அவரைப்பற்றிய புத்தகங்கள் நிறைய வாங்கிப் படித்திருந்தேன்.

 மேலும் சத்திய சோதனை போன்ற புத்தகங்கள் அவர்மீது எனக்கிருந்த மரியாதையை அளவற்றதாக அதிகரித்தது. இவை அனைத்தும் எனக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருந்தன. நான் எனது இரண்டாவது ஒப்பந்த காலத்தில் ஆபிரிக்காவில் உள்ள கென்யாவின் மும்பாஸா நகரில் நகர வடிவமைப்பாளராக வேலை பார்த்தேன். அங்கே ஒரு நல்ல நூலகம் இருந்தது. அந்த முனிசிபாலிட்டி நூலகத்தில் ஏராளமான இந்தியத் தத்துவ மரபுகள் அடங்கிய நூல்கள் இருந்தன. அவற்றை வாசித்த போது காந்தியடிகள் தொடர்பான அபிப்பிராயங்கள் எனக்கு அதிகரித்தன.

அரசியல் தொடர்பான சிந்தனையின் துவக்கம் இந்த வாசிப்புகளில் இருந்து தொடங்கியதா?
1976இல் தமிழர்களுக்காக எனது வாழ்வைச் செலவிட வேண்டும் என எண்ணினேன். தீவில் நிலவிய சூழல் என் நிம்மதியைக் குலைத்தது. அடிப்படையிலிருந்தே நாம் மாற வேண்டும்.

நமது தனித்துவத்தைப் பேண வேண்டும் என்றெல்லாம் எண்னினேன். அந்தக் காலத்தில் எனது வருமானம் நாற்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வரும். உள்ளூரில் வேலை செய்யும் போது எனக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்ய மாட்டேன். என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு என் இரண்டு சகோதரிகளுக்கும், சித்தி மாமா, அத்தை என அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்தேன்.

 இப்போது அதெல்லாம் இல்லை. அவர்களும் சிங்கள இனவாத நெருப்பால் துரத்தப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். பின்னர் உலகம் முழுக்க சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு நான் விரும்பிய இடங்களுக்குச் சென்று வந்தேன்.

நான் ஒரு ஆர்க்கிடெக். உலகெங்கிலும் கட்டிடக் கலை வளர்ச்சி எப்படி வளர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அப்படிப் பயணம் செய்தேன்.

எனக்கு அப்போது பெரிய கனவு இருந்தது. அது திருகோணமலையில் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதற்காக நல்லதொரு வரைபடத்தையும் நான் தயாரித்திருந்தேன்.

அதற்காக ஒரு நிகழ்ச்சியை துறைமுக வீதியில் ஏற்பாடு செய்து அதைத் துவங்கி வைக்க தந்தை செல்வாவையும் அழைத்திருந்தோம். என் கனவில் அது சிறந்த கட்டிடக் கலை நகரமாக உருவாகும் என்று நான் ஆசைப்பட்டேன். துறைமுக வீதி முழுவதையும் நான் அப்படிக் கற்பனை செய்திருந்தேன். ஆனால் இப்போது அதெல்லாம் வெறும் நினைவுகளாகிப் போய் விட்டன.
அரசியலில் தீவிரமாக இறங்குவதற்கு காரணமாக சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா?
வேலை ஒப்பந்தங்கள் முடிந்து ஊருக்கு வரும் போது மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்த போதும் அரசியல் வேட்கை எனக்குள் இருந்தது. அது பல நேரங்களில் என் நிம்மதியைக் குலைத்தது. சனங்கள் நிம்மதியற்று அலைந்து திரிந்ததும், அரசியலில் வெளிப்படையாக சிங்களர்கள் இனவாதத்தோடு நடந்து கொண்டதையும் அறிய நேரிட்ட போதெல்லாம் வேதனைதான் மிஞ்சும்.

1947ஆம் ஆண்டு நான் முதன்முதலாக தந்தை செல்வாவின் பேச்சைக் கேட்டேன். அவர் பேசிய அத்தனை வார்த்தைகளும் எனது மனதில் நிரந்தரமாகப் பதிந்திருந்தது. அவுஸ்திரேலியாவில் படித்துவிட்டு நான் 1956இல் திரும்ப்பி வந்தேன்.

 அதற்கு மறுநாள் செல்வநாயகம் முதலானோர் சத்தியாகரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அங்கு பொலிஸ்காரர்கள் நிறையப்பேர் குவிக்கப்பட்டு இருந்தனர் . எங்கும் பதட்டம் நிலவியது. இலங்கையில் என்னுடன் பணியாற்றிய சில சிங்களவர்கள் என் மீது அதிக விருப்போடு இருந்தார்கள். அவர்கள் என்னை வெளியில் போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் நான் போயாக வேண்டும் என்று கூறி வெளியில் வந்து பார்த்தேன்.

உண்ணாவிரதம் இருந்தவர்களை பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். அந்தச் சம்பவங்கள் என்னை மேலும் இறுக்கமாக மாற்றியது. நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்தேறியிருந்தது. அனைத்தையும் நான் என் கண்ணாலே பார்த்தேன். எனக்குத் தெரிந்து 1947இல் தான் இந்த இனவாதம் வெளிப்படையாக துவங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் எப்படி ஆர்வம் வந்தது?
அதனை நான் விடுதலைப் போராட்டம் என்று சொல்ல மாட்டேன். தமிழ் மக்களுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்திற்கான போராட்டமாக அதை நான் காண்டேன். நான் இலங்கைக்கு திரும்பி வந்த நாள் தொட்டே தமிழ் மக்களுக்கு தனித்துவமான வாழ்க்கையை நாம் தேடித்தரவேண்டும் அது காந்தியத்தால்தான் சாத்தியமாகும் என்று நம்பினேன். சிங்களவர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர வேண்டும் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த மக்கள் தங்களை சுயமாக ஆளத் தெரிந்தவர்களாக மாற வேண்டும் என விரும்பினேன். கல்வியும், காந்தீயமும் அதை சாதிக்கும் என நம்பினேன்.

வவுனியாவில் நாவலர் பண்னை என்ற பெரிய பண்ணையை உருவாக்கினோம். சுமார் 10 ஏக்கர் பரப்பில் அதை ஒரு விவசாய கல்விப் பண்ணையாக உருவாக்கினேன். அந்த இடத்தை நானே தேர்ந்தெடுத்து அதன் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு விவசாயத்தை அறிமுகம் செய்யலாம் என நினைத்து ஒரு டிராக்டரும் வாங்கினேன். அவர்களுக்கு வேண்டிய உணவு கொடுத்து வயலில் எப்படி விவசாயம் செய்வது என்று கற்றுக் கொடுத்தேன். ஆனால் இரண்டு வருடம் கழித்து அவர்கள் நெல்லை அறுவடை செய்து தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள் (சிரிக்கிறார்)
ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை.

 நானும் டொக்டர் ராஜசுந்தரமும் புதிய வழிகளை ஆராய்ந்தோம். ராஜசுந்தரத்தைப்போல ஒருவர் இல்லாவிட்டால் எங்களால் காந்தீயத்தை வளர்த்திருக்க இயலாது.   

 நித்திரை கொள்ளாமல் இருக்கச் சொன்னால் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பார், வண்டியை ஓட்டவேண்டும் என்றால் உடனே வந்து உதவுவார், ரைப் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அதையும் விரைவாகச் செய்து கொடுப்பார். அவரது மனைவி சாந்தியும் கணவரைப் போலத்தான். அவரும் எல்லா உடல் சுகக்கேடுகளையும் பரிவாய் குணப்படுத்துவார்.


காந்தியம் என்ற அமைப்பு பெரும் வெற்றி பெறக் காரணமாக அமைந்தவர்கள் ராஜசுந்தரம் தம்பதிகளே. அவரும் நானுமாக பண்ணையில் தங்கியிருந்து படிக்கும் ஆர்வம் உள்ளவர்களைத் தேடினோம். 12,15 இளைஞர்கள் வந்தார்கள். அவர்களுக்கென சிறிய குடில்களை அமைத்து அங்கேயே கல்வி கற்றுக் கொடுக்க உரிய ஆசிரியர்களையும் நியமித்தேன். ஒரு பக்கம் உழைப்பு, இன்னொரு பக்கம் கல்வி என்பது காந்தியத்தின் விதியாக இருந்தது. அதை நான் அவர்களுக்குப் போதித்தேன். அந்த வழிமுறைகள் பெரும் வெற்றியடைந்தன.


நோர்வே, ஹொலண்ட் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.அத்துடன் நாங்களும் கொஞ்சம் பணம் போட்டு 600 பெண் குழந்தைகளுக்கு 3 மாதம் என்ற கணக்கில் பயிற்சி அளித்து வந்தோம் . ஐந்து பிரிவுகளாக பாடத்தினை வகைப்படுத்தி கற்பித்தோம் அதில் முதலாவதாக காந்தியம். காந்தி யார் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பனவற்றைக் கற்பித்தோம். பிறகு கல்வி, மூன்றாவதாக உடல் நலம். மருத்துவர் சாந்தி அதனைக் கவனித்துக்கொண்டார். அவர் கணவர் மற்றப் பொறுப்புகளை ஏற்றிருந்தார். குடும்பமாக அவர்கள் இந்தப் பணியினைச் செய்தார்கள்.


குழந்தைகளுக்கு படிப்பு பாரமாக இருந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம் . அவர்களுக்கென்று ஒரு பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். ஒவ்வொரு ஊராகச்சென்று அங்கிருந்த தலைமை அதிகாரியை சந்தித்து எங்களது நோக்கத்தை தெரிவித்து அங்கிருந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தோம். இப்படியாக 500 கிராமங்களிலிருந்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த பாடத் திட்டத்தினை படிப்பித்தோம். அந்த 500 பெண்களும் இங்கே அனைத்தையும் கற்றுக் கொண்டு தங்களது ஊர்களுக்குத் திரும்பி மற்றவர்களுக்கு அதைக் கற்பிப்பர்கள். வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எங்கள் குடில்களில் விட்டுச் செல்வார்கள். இதற்கென ஒவ்வொரு ஊரிலும் ஓலையால் குடில்களை அமைத்து அதிலே சுத்தமான வெண் மணலைப் பரப்பி வைத்திருந்தோம். பயிற்சி பெற்ற பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். எங்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள் நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பார்க்க வவுனியாவுக்கு வருவார்கள். ஒரு கட்டத்தில் காந்தியம் பரந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று 500 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்திருந்தது.இதையெல்லாம் இலங்கை அரசும் அறிந்திருந்தது.


 நாங்கள் எங்கு கிணறு தோண்டுகிறோம், எங்கெல்லாம் எங்கள் பண்ணைகள் உள்ளன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
காந்தியம் என்ற அறவழி அமைப்பில் ஈடுபட்டிருந்த நீங்கள் எப்படி புளொட் என்னும் ஆயுதக் குழுவோடு இணைந்தீர்கள்?
புளொட் அமைப்பினுள் நான் எப்படி வந்தேன் என்றால் அதற்குச் சந்ததியார்தான் காரணம். புளொட்டில் உமா மகேஸ்வரன் தலைவராக இருந்தார். அவருக்கு உதவியாக சந்ததியார் இருந்தார்.


சந்ததியார் மிகவும் கெட்டிக்காரர். மிகச் சிறந்த படிப்பாளி, சிறந்த பேச்சாளர். அவர் பேசுவதை மணிக்கணக்கின்றி கேட்டுக் கொண்டிருக்கலாம். அவருக்குள் ஒரு கம்யூனிஸ்ட் இருந்தான். ஆனால் முட்டாள் கம்யூனிஸ்ட் மாதிரி பேச மாட்டார். முதலாளித்துவத்தையும் ஆதரிப்பார். கம்யூனிசத்தையும் ஆதரிப்பார், எங்கள் காந்தியத்தையும் ஆதரிப்பார். அதனால் அவரை எனக்குப் பிடிக்கும்.
புளொட்டுக்கு அவரும் ஒரு தூணாக இருந்தார். சந்ததியாருடன் இன்னொருவர் இருந்தார். அவரை புலிகள் அச்சகத்தினுள் வைத்து சுட்டுக் கொன்றார்கள். காந்தியத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் சந்ததியார் செய்து கொடுத்தார். எங்களையும் புளொட் இயக்கத்தோடு சேர்க்க வேண்டும் என அவர் எண்ணியிருந்தார். நாங்களும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களோடு இணைந்தோம். அதே நேரம் ஏனைய அமைப்புகளை வீழ்த்தி புளொட் அமைப்பு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்து அவர்களோடு நாங்கள் சேரவில்லை.ஆனால் அமைப்பினுள் சென்ற பின்னர் அனுபவங்கள் வேறு மாதிரி இருந்தன. துப்பாக்கி வழியே சகல கோட்பாடுகளையும் வென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை புளொட்டில் இருந்தது. அளவு கடந்து ஆயுதங்களை வழிபடும் மூட நம்பிக்கை எந்த அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. இது என்னைப் போன்றவர்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியது.

புளொட்டுடன் ஏற்பட்ட தொடர்பினால்தான் கைது செய்யப்பட்டீர்களா?
சந்ததியார் காந்தியம் அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரே புளொட் அமைப்பிலும் செயற்பாட்டாளராக இருக்க நாங்களும் இலங்கை அரசின் வளையத்தினுள் கொண்டு வரப்பட்டோம். அதைவிடவும், நாங்கள் புளொட் அமைப்போடு நெருக்கமாக இருந்தது வேறு சிலருக்குப் பிடிக்கவில்லை, என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும் கூட பிரிக்க சிலர் திட்டமிட்டார்கள். நான் மிகவும் நேசிக்கும் டாக்டர் ராஜசுந்தரம் சீமெந்துப் பொருட்களைத் திருடியதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
ஆயினும் நான் தொடர்ந்தும் புளொட்டில் இயங்கி வந்தேன். அப்போது டொக்டர் ராஜசுந்தரத்திற்கு வவுனியாவில் எம்.பியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு முறை நான் அதை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்னேன். அன்றைய தினத்தில் அவருக்கு அங்கும் நல்ல அறிமுகம் இருந்தது. ஆனால் எங்களைப் பிடிக்காத ஒருவர் இதைப் பொலீசிடம் சொல்லி விட்டார்.

1983 ஏப்ரல் மாதம் என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும் கைது செய்தார்கள். கொழும்பு வை எம் சி ஏ (லுஆஊயு) வில் வைத்து இரவு 12 மணிக்கு என்னைக் கைது செய்து நான்காம் மாடி குற்றப்புலனாய்வு விசாரணை முகாமுக்குக் கொண்டு சென்று ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். அங்கே கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார். அவர் என்னிடம் “உங்களது அனைத்து வேலைகளும், திட்டங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவரையும் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்த பின்னரே சிறைப் பிடித்தோம். ஆக எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மாட்டிக்கொள்ளாதீகள். மாறாக என்ன செய்தீர்களோ அதைக் கூறிவிட்டு குறைவான தண்டனையுடன் விடுதலையாகுங்கள்” என்று கூறினார்.

காவல்துறையினர் எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டார்கள்?
எனது வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டார்கள். அப்போது புன்னியா டி சில்வாதான் சி.ஐ.டி. பெரியவராக இருந்தார். நான்காம் மாடியில் என்னுடன் இன்னொருவனும் இருந்தான். அவனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்தான். அவனையும் எங்களைப் போல அங்கிருந்த மேசையின் மீதே படுத்துறங்கச் சொன்னார்கள். ஆனால் அவன் மிகவும் வசதி படைத்தவன். யாருக்கோ தொலைபேசிமூலம் பேசி, அவனது ஆட்கள் உயர் அதிகாரிகளோடு பேசி அவனை அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

என்னிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக சி.ஐ.டி. அதிகாரியின் உதவியாளரை அனுப்பி வைத்திருந்தனர். அவர் அதிகாலையிலேயே வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தார். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கூறினேன். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிக்கே தலை சுற்ற ஆரம்பித்தது. இத்தனை படித்தவர், உலகத்தினைச் சுற்றி வந்தவர் நைஜீரியா கென்யா போன்ற இடங்களில் பணியாற்றியவர் இப்படி சாரத்துடன் தன்முன் அமர்ந்து வாக்குமூலம் கொடுப்பதை எண்ணிச் சற்றுக் கலங்கினார். பிறகு அனைத்தையும் பதிவு செய்தபின்னர், அதனை எழுதி சி.ஐ.டி. உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். அதனை முழுதாக வாசித்துப் பார்த்து விட்டு புன்னியா டி சில்வா மறுநாள் காலையில் என்னைப் பார்க்க வந்தார். என்னிடம் ஒன்றும் பேசாமல் கை குலுக்கிவிட்டு “நீங்கள் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும். நான் எல்லா அதிகாரமும் உள்ளவனாக இருந்தால், உங்களை என்னோடு காரில் வை.எம்.சி.ஏவிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வந்திருப்பேன். ஆனால் மந்திரியின் உத்தரவின் பேரில் உங்களை நான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.” என்று கூறினார்.

பிறகு என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும் பனாகொடை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள இராணுவ அதிகாரிகளிடம் என்னை அடிக்க வேண்டாமெனவும் அவர் ஒன்றும் அறியாதவர் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சென்றதுதான் தாமதம் எங்களைச் சுற்ற இராணுவ வீரர்களை நிற்க வைத்து விட்டு பள்ளிச் சிறுவர்களை அழைத்து வந்து எங்களை வேடிக்கைப் பொருட்களைப் போல அவர்களுக்குக் காட்டினார்கள். வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடிய நிலையில் என் உடுப்புகளை அவிழ்த்து விட்டு நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் நெஞ்சில் ஒருவன் குத்தினான். நான் வலியில் அப்படியே சுருண்டு கீழே விழுந்து விட்டேன். வலியிலும் பயத்திலும் சிறுநீர் கழித்து விட்டேன். கீழே கிடந்த என் ஆடையும் நனைந்து விட்டது. பின்னர் அந்த சிறுநீரால் நனைந்த ஆடையை உடுத்தச் சொல்லி என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும் வெலிக்கடை சிறையில் அடைத்தார்கள். அங்கு ஏராளமான பொடியன்களை அடைத்து வைத்திருந்தார்கள். அவர்கள் எம்மைக் கண்டதும் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னார்கள். சில சாரங்களை எங்களுக்குக் கொடுத்து உதவினார்கள்.

சிறையில் நடந்த சித்திரவதைச் சம்பவங்களையெல்லாம் நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். ஏனெனில் மக்களுக்கு இந்த விஷயங்கள் தெரிய வேண்டும். இப்படியெல்லாம் கூட கஷ்டப்பட்டார்களா? என்று அனைவருக்கும் தெரிய வேண்டும். ஆகவேதான் கூறுகிறேன். சிறையில் சில நேரங்களில் நான்கு காலில் சென்று சாப்பாட்டினைக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி அதனை மேற்பார்வையும் செய்வார்கள்.


அப்போது அங்கே இன்னொரு அதிகாரி வந்தான். அவன் எங்களுக்கு அன்று ஒரு பரீட்சை வைக்கப்போவதாகக் கூறி எங்களை முழங்காலில் இருக்கச் சொல்லி சாப்பாடுத்தட்டினை வேறொரு மூலையில் வைத்துவிட்டு யார் நான்கு கால்களில் வேகமாகச் சென்று எடுத்துக்கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று கூறினான். நாங்கள் எதிர்க்க வலுவில்லாமல் அவர்களுக்கு கேளிக்கை பொருளாக மாறி வாழ்ந்து கொண்டிருந்தோம். இதெல்லாம் நடந்த 1983ஆம் ஆண்டு. எனக்கு வயது 63 அல்லது 65 இருக்கும் என்று நினைக்கிறேன்.கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள் டொக்டர் ராஜசுந்தரத்தை வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.


பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள்
வெலிக்கடைச் சிறையில் நடந்தேறிய படுகொலைகளின் வாழும் சாட்சி நீங்கள். அப்படியெல்லாம் சிறையில் நடக்குமென்று முன்னரே எதிர்பார்த்தீர்களா?
இல்லை. நான் நினைக்கவில்லை. சித்திரவதைகள் இருந்ததுதான். ஆனால் இப்படி ஒட்டு மொத்தமாக கொலை செய்வார்கள் என்று நான் அப்போது நினைக்கவில்லை. 1983 யூலை 25இல் கொழும்பில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையின் கீழ் தள அறைகளுக்குள் புகுந்தார்கள். நாங்கள் மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்தோம். சிறை அதிகாரிகள் பூட்டுக்களைத் திறந்து சிங்களக் கைதிகளைத் திறந்து விட்டார்கள். அவர்கள் வெறியோடு தமிழர்கள் இருந்த ஒவ்வொரு அறையாகத் தாக்கினார்கள்.ஒரே நாளில் 35 பேர் கொல்லப்பட்டார்கள். குட்டி மணி, ஜெகன், தங்கதுரை போன்ற போராளிகள் எல்லாம் முதல் நாள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இரவாகி விட்டதால் நிறுத்தினார்கள். ஆனால் காயமடைந்தவர்களுக்கு வைத்தியம் பார்க்காதபடியால், ரத்தம் வீணாகி பல இளைஞர்கள் இறந்து கொண்டிருந்தார்கள்.

மறு நாள் 26 ஆம் தேதி சிறை அமைதியாக இருந்தது. 27ஆம் தேதி விடிந்ததும் மீண்டும் தாக்கத் தொடங்கினார்கள். எங்களைப் போன்றவர்களை முதல் மாடியில் அடைத்து வைத்திருந்தார்கள். நாங்கள் எட்டு, ஒன்பது பேர் வயதானவர்கள் சுமார் 40 அடி அகலமுள்ள அறையில் முதல் மாடியில் இருந்தோம். அதில் டொக்டர் ராஜசுந்தரம், பாதிரியார் சின்னராசா, ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தோம். முதல் நாளே டொக்டர் தர்மலிங்கம் – அவருக்கு 75 வயதிருக்கும், – அவர் எங்களிடம் “யாரும் இந்த அறையை உடைத்து சண்டை போட வந்தால் நாமும் சண்டை போட்டுதான் சாகவேண்டும்” என்று கூறினார். எப்படியும் நாமும் கொல்லப்படுவோம் என்றார் அவர்.மறுநாள் அவர் கூறியபடியே எங்கள் அறைக்கு வந்தார்கள். ஆனால் எங்களின் அறை வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்தது. எங்களது பாதுகாவலர் பூட்டிவிட்டு சாவியைக் கொடுக்காமல் போய்விட்டார் . அவர்கள் பூட்டை உடைக்க ஆரம்பித்தார்கள். அப்போது எங்களுடைய ஆட்கள் அவர்களை எதிர்த்துப் போராடினார்கள் . டாக்டர் ராஜசுந்தரத்திற்கு சிங்களம் நன்கு தெரியும் அவர் அவர்களிடம் “எங்களை ஏனப்பா இப்படிக் கொல்கிறீர்கள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் ஈழத்துக்கு ஆதரவாகத்தான் உள்ளோம், ஆனால் நாங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை.” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்தக் கதவினுடைய பூட்டு உடைந்தது.

எங்களை அடிப்பதற்காகக் கொண்டுவந்த பொல்லுகளைப் பிடித்து தடுத்துக் கொண்டு டொக்டர் தர்மலிங்கம் நின்றார். அவருக்கு அந்த வயதில் இருந்த பலம் சொல்லில் அடங்காதது. கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள் டொக்டர் ராஜசுந்தரத்தை வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள். அந்த நிமிடம் என் மனதில், இப்படிச் சாவது பெருமையானதுதான் என்று தோன்றியது.அந்த நேரம் கீழேயிருந்து ஒரு கொமாண்டர், அவர் ஒரு முஸ்லீம் – எங்களை கீழே அழைத்து வரும்படி உத்தரவிட்டார். எங்களைப் பாதுகாப்பாக கீழே குனிந்து நடக்கும்படி சொல்லி, ஒரு திறந்த பாதை வழியாக அழைத்துச் சென்றார்கள். வழியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை நான் கண்டேன். அதில் பலருடைய உயிர் பிரியாமல் உடல் துடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சாகட்டும் என்று அப்படியே விட்டிருந்தார்கள். பின்னர் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று லொறியொன்றில் ஏற்றி குப்புறப்படுக்கச் சொன்னார்கள். அப்படித்தான் நாங்கள் மட்டக்களப்புச் சிறைக்குப் போனோம்.நான் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் ஏராளமான பொடியன்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப வேதனையாக இருந்தது.

மட்டக்களப்பு சிறை உடைப்புப் பற்றிச் சொல்லுங்கள்..
ஆமாம். அந்தச் சிறை உடைப்பை புளொட் மட்டும் செய்தது என்று சொல்ல முடியாது. மற்றைய போராளிகளும் இணைந்துதான் அதைச் செய்தோம். எங்களுக்கு இந்தியாவுடைய ஆதரவு அப்போது இருந்தது. பொதுவாகவே சிறையிலிருந்து எங்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. பலரும் அதற்கு உதவ மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை மீட்டார்கள். அதில ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். சிறை உடைப்பின் போது, அங்கிருந்த கைதிகளின் அறைகளைத் திறந்த நேரம், இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்றால், சிறையில் திருட்டு, பாலியல் குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாதாரண கைதிகளையும் திறந்து விட்டுவிட்டார்.சிறையை உடைத்து எல்லோரையும் மீட்டு விட்டார்கள் என்றதும் பெரும் எழுச்சி தமிழ் மக்களிடம் காணப்பட்டது.

இயக்கங்களுக்கிடையில் அது உரிமைகோரல் போட்டியாகவும் இருந்தது.
மட்டக்களப்பிலிருந்து யாழ்பாணம் போக சுமார் இருபது நாட்களுக்கும் மேலானது. அங்கிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் தப்பிச் சென்றோம். அப்போது தமிழக மக்களும் போராளிகளும் எங்களை வரவேற்ற நினைவு இன்னமும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் 1978இல் ஆரம்பித்த காந்தீயம் அமைப்பின் முதுகெலும்பாக இருந்த டொக்டர் ராஜசுந்தரம் இல்லை என்பதை நினைக்கும் போது மிகுந்த தனிமையை உணர்ந்தேன்.அவரும் அவரது மனைவி காராளசிங்கம் சாந்தியும் எப்பேர்ப்பட்ட மனிதர்கள். மிகவும் சுகபோகமாய் வாழ்ந்த லண்டன் வாழ்வை உதறிவிட்டு காந்தியம் அமைப்பிற்காக ஈழத்திற்கு வந்தவர்கள். மலையக மக்கள் வாழ்வில் அறிவொளியையும் விவசாயச் சேவைகளையும் செய்த 500 குடிகளைக் கொண்ட எங்கள் காந்தியம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு டொக்டர் கொல்லப்பட நான் தமிழ்நாட்டிற்கு வந்து இறங்கியிருந்தேன்.
தமிழ்நாட்டில் புளொட் அமைப்பில் உங்கள் பணி என்ன. உமா மகேஸ்வரனுடன் உங்களுக்கு எப்படி முரண்பாடு ஏற்பட்டது?
அந்தக் காலத்தில் தமிழக மக்கள் போராளிகளை மிகவும் மதித்தார்கள்.


எங்கு சென்று ஈழப் போராளி என்றாலும் ராஜ உபசாரம்தான். இந்திய அரசும், மாநில அரசும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதால் இங்கு நல்ல சௌகரியத்துடன் வாழ்ந்தோம். ஆனால் எந்நேரமும் எங்களுக்குள் விடுதலை வேட்கை மட்டுமே இருந்தது. அது ஒன்றுதான் எண்ணம். அது பற்றியே சிந்தித்தோம். நான் புளொட்டுடன் சில மாதங்கள்தான் வேலை செய்தேன். நான் வந்தவுடன் புளொட்டில் உள்ள உயர்மட்ட ஆட்கள் என்னிடம் அனைத்து முக்கியமான வேலைகளையும் தந்தனர் . நீங்கள்தான் நிர்வாக வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். கணக்கு வழக்குகள், பத்திரிகை, தொலைத் தொடர்பு, போன்ற வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் புளொட்டில் இணைந்த சில மாதங்களிலேயே எனக்கு அது சரிவரவில்லை. ஒரு குழுவை அமைத்து அவர்கள்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு தனி நபர் சர்வாதிகாரி போல இருந்து கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது என்று முகுந்தனிடம் சொன்னேன். முகுந்தன் இதைக் கேட்டு அமைதியாக இருந்தார்.


பின்னர் நான் உமா மகேஸ்வரனுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு என் அறையில் இருந்த ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது உமா எங்கே செல்கின்றீர்கள் எனக் கேட்டார். நான் எல்லாவற்றையும் சொன்னேன். பின்னர் கடும் சினங்கொண்டவராக அவர் சொன்னார் “உமக்கு எப்படி பாடம் படிப்பிக்க வேண்டும் என எமக்குத் தெரியும்”நான் வெளியேறி அந்த நகரத்தின் தெருவழியாக நடக்கத் துவங்கினேன்.
சந்தியார் எப்பேர்பட்ட மனிதன். எளிமையிலும் எளிமையானவன். இடைவிடாது மக்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் சிந்தித்த அவனை அவர்கள் கொலைசெய்திருக்கக் கூடாது.சென்னையில் உங்களைக் கடத்தியவர்கள் புளொட் அமைப்பினரே என்று அறிந்துள்ளோம்…அண்ணா நகர் பேருந்து டெப்போ பக்கத்தில் சென்று கொண்டிருந்த என்னை காரில் வந்து தூக்கிச் சென்றார்கள். இப்போது கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம் என எந்நேரமும் பரபரப்பான இடமாக இருக்குமிடம் அந்நாட்களில் மனித நடமாட்டம் அற்ற காடு போல இருக்கும். அந்தப் பக்கம் என்னைக் கொண்டு போனதும் நான் உரக்கக் கத்தினேன். எனது குரலைக்கேட்ட அந்த ஓட்டுனர் “யாரையடா பிடித்து வந்திருக்கிறியள் டேவிட் ஐயாவையா” என்று கேட்டு எனது கட்டுகளை அவிழ்த்து விட்டான். உண்மையில் அவர்கள் வேறு யாரையோ பிடிக்க வந்து அடையாளம் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள்.

உண்மையில் என்னைப் பிடிப்பதும் அவர்களுக்கு ஒரு நோக்கமாக இருந்த போதிலும், அது அவசரத் தேவையாக இருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் சந்ததியாரைப் பிடிக்க வந்திருக்கலாம். பின்னர் நான் இரவு ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டேன்.

ஒரு வழியாக அறைக்கு வந்து சேர்ந்த போது சந்ததியார் எனக்காக அங்கே காத்திருந்தார். நான் அவரை எச்சரித்தேன். உன்னைப் பிடிக்க வந்துதான் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள். நீ கவனமாக இரு என்று எச்சரித்தேன். நான் திரும்பி வந்த மூன்றாம் நாள் சந்ததியாரைப் பிடித்துச் சென்றார்கள். அவன் என் அறைக்கு அடிக்கடி வருவான் என்றாலும் அவன் தங்கியிருந்த இடம் வேறு. அதை ரகசியமாக அறிந்து அங்கு போய்தான் அவனை பிடித்துச் சென்றார்கள். என்னையும் அழைத்து விசாரித்தார்கள். நான் விசாரிக்கப்படும் வரை சந்ததியார் உயிரோடுதான் இருந்தார். பின்னர் அவருக்கு என்னவானது என்றே தெரியவில்லை. வல்லநாட்டிலோ, ஒரத்தநாட்டிலோ கொண்டு போய் அவர்கள் அவனை கொன்றிருக்கக் கூடும். சந்தியார் எப்பேர்பட்ட மனிதன்.

 எளிமையிலும் எளிமையானவன். இடைவிடாது மக்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் சிந்தித்த அவனை அப்படி அவர்கள் கொலை செய்திருக்கக் கூடாது.பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை
அதன் பின்னர் அமைப்புகள் எதிலும் செயற்படவில்லையா?
ஆம். அனுபவங்கள் அப்படியாகி விட்டன. நாங்கள் பொறுப்பற்றவர்களாக மனித உயிர்களின் பெறுமதி தெரியாதவர்களாக ஆனோம். எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய நாங்கள் எங்களின் சாதாரணமான கருத்து முரண்களை துப்பாகியால் எதிர்கொண்டோம். ஒரத்தநாட்டிலும், சென்னையிலும் எத்தனை எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து உயிர் தப்பிய சூழலில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்திடமிருந்தும் உயிர் தப்ப வேண்டி இருந்தது. எல்லோரும் புலிகளின் கொலைகளை மட்டும் பேசுவார்கள். ஆனால் எல்லா இயக்கங்களும் அப்படித்தான் இருந்தது. புலிகள் எப்போதுமே பிறத்தியாரின் நெருக்குதலுக்கு அஞ்சாமல் சுய இயக்கமாக செயல்பட்டார்கள். இந்தியாவின் சொல்வழி கேட்டோ, அல்லது வேறு தலைவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவோ இருக்கவில்லை. என்னைக் கேட்டால் பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களும் அரசியல் கொலைகளைச் செய்தார்கள். இதனால் பெரும் சோர்வுக்குள்ளாகி அமைப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா நான் பிரபாகரனை இதுவரை சந்தித்ததே இல்லை.

தமிழகத்தில் வாழ்க்கை எப்படிப் போகிறது?
161983இல் இங்கு வந்தேன். வந்த புதிதில் போராளிகள் என்றால் பெரும் மரியாதை. மக்கள் எல்லாப் போராளிகளையும் நாயகர்களாகப் பார்த்தார்கள். இவர்கள் இங்குள்ள சனங்களிடமும் தங்களின் சாகசங்களைக் காட்டினார்கள். அது பல பிரச்சனைகளை இங்கே உருவாக்கினாலும். மக்களிடம் போராளிகளுக்கென்று செல்வாக்கிருந்தது. ஆனால் குறிப்பாக ராஜீவ் கொலைக்குப் பிறகு எல்லா நிலைமைகளும் மாறிப் போனது. மரியாதை போனதென்று இல்லாமல், மக்கள் போராளிகளை அச்சத்தோடு பார்த்த காலமும் வந்தது.

ஒரு சில இயக்கங்கள் தவிர்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றது போல ஈழ மக்களின் பிரச்சனைகளைப் பேசுகிறார்கள். துரோகமும், வஞ்சகமும் சூதுமான அரசியல் களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில் இங்கு வாழ்வதை விட சிங்களவன் கையால் குண்டடி பட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருவாயைக் கொண்டு வாழ்ந்தேன். அது எனக்குப் போதுமானதாக இருந்தது. சுயமரியாதையாக வாழ பணம் தேவையில்லை. ஆசைகளைச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்தாலே போதும். இங்கு வந்த பின்னர் பெரியாரை வாசித்தேன். அவர் தமிழக மக்களின் தன்மானத்திற்காக போராடிய தன்னிகரில்லாத தலைவர். ஆனால் அவர் பெயரை பயன்படுத்துகிறவர்கள் அவரைப் போல உண்மையானவர்கள் இல்லை.

ஒரு முறை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஈழ அகதிகளுக்கான கிளியரிங் சான்றிதழுக்காகச் சென்றேன். பல மணி நேரம் என்னைக் காக்க வைத்த பின்னர், என் கையில் இருந்த பேப்பரை கிழித்து வீசினார் அந்த இன்ஸ்பெக்டர். இதுதான் தமிழகம். அரசியல்வாதிகள் சும்மா மேடையில் பேசுவார்கள். ஆனால் எங்களின் நிலை இதுதான். இங்கே ஆறு விதமான அகதிகள் உள்ளனர். அவர்களின் திபெத் அகதிகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு ஒழுங்கான கட்டிடம் கூட ஈழ சனங்களுக்கு இல்லை. சாக்குப் பைகளால் மூடப்பட்ட கொட்டகைகளுக்குள் முகாம் என்று வாழ்கிறார்கள். என்னைப் போல வெளியில் இருப்போர் நிலமையும் கொடுமைதான். ஒவ்வொரு ஆறு மாதமும் பொலிசாரிடம் சான்றிதழ் பெற்று, வாடகைக்கு இருக்கும் வீட்டு ஓனரிடம் கடிதம் பெற்று குடிவரவு அதிகாரியிடம் சென்று கொடுத்தால் தங்கியிருப்பதற்கான அனுமதியை அடுத்த ஆறு மாதத்திற்கு நீட்டிப்பார்கள். இப்படி ஒவ்வொரு ஆறு மாதமும் செய்ய வேண்டும்.

 இதற்கு நாய் படாத பாடு படவேண்டும். 90 வயதில் ஓவ்வொரு முறையும் நான் இதற்காக அலைக்கிறேன்.ஆனாலும் நான் இங்கும் பல உருப்படியான காரியங்கள் செய்தேன். பெரியார் தொடர்பாக எழுதினேன். மிக முக்கியமாக Tamil Eelam Freedom Struggle என்ற நூலை எழுதினேன். என்னைப் பற்றியும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.

ஈழத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைக்கிறீர்களா?
நான் விரும்பினாலும் இங்கிருந்து செல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு பாஸ்போர்ட் கிடையாது. மேற்குலக நாடுகளில் வாழும் அகதிகளைப் போன்ற உரிமைகளை நாங்கள் அனுபவிக்கவில்லை. தவிரவும் ரெட் புக் எனப்படும், அபாயமானவர்கள் பட்டியலில் தொண்ணூறு வயதான என்னையும் வைத்திருக்கிறார்கள். என்றாலும் நான் நிச்சயம் இலங்கைக்குச் செல்ல மாட்டேன். அது என் மக்களைக் கொன்றொழித்த பூமி. ஒடுக்கப்பட்டு வாழ்விழந்த மக்களின் நிலையை இந்த வயதில் என்னால் தாங்க இயலாது.

நன்றி, அருள் எழிலன்.