நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடா சென்றிருந்தார்.கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக ஹால்டன் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.நிஷாந்தன் துரையப்பா ஏனைய பிரஜைகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்வதாகவும் ஹால்டன் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கனடாவின் ஹால்டன் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பொலிஸ் உத்தியோகத்தராக நிஷாந்தன் துரையப்பா விளங்கியதுடன், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire