இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப் போவதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளை தேசிய மட்டத்திலேயே நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், பொதுநலவாய செயலகத்தின் மனிதஉரிமை பிரிவின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் டிசெம்பர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே முதலில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதனையே பொதுநலவாயம் நம்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் தேசிய ரீதியிலான விசாரணைகளை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire