செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேவிற்கு இலங்கையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலம் மக்ரே, இன்றைய தினம் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நோ பயர் ஸோன், கில்லிங் பீல்ட் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாது, படையினர் மீது மட்டும் செனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்து விமான நிலையத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதாகைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்ரேவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். செனல்4 ஊடகவியலாளரை நாட்டுக்குள் அனுமதித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire