அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தகைய உருவங்களை மது போத்தல்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது.
ஏனெனில், இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவிதமான நம்பிக்கைக் குறியீடுகளும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தெய்வங்களை கோவில் சந்நிதிகளிலோ அல்லது வீட்டிலுள்ள இறைகூடங்களிலோ வைத்து வழிபட வேண்டுமே தவிர வணிகப் பேராசைக்காக பியர் போத்தல் விற்பனைகளில் பயன்படுத்தக்கூடாது என்று ராஜன் கூறினார். தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பியர் போத்தல்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவுஸ்திரேலியா இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் அவர்கள் தனிநபர் கடைகளைப்போன்று கோவில்களிள் கடவுளின் பேராள் மது மாதுபோன்ற ஈனச்செயலில் இடுபடுபவர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் எனபது......?
இலங்கையில் கல்வியங்காடு பகுதியில் சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் பெறுமதியான விக்கிரகங்கள் மற்றும் வெண்கல உபகரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன பிள்ளையார் விக்கிரகம் உட்பட சுமார் 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இவ் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று காலை சனிக்கிழமை பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தபோது மூலஸ்தான வாசல்
கதவுபூட்டு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை மற்றும் வெண்கல உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இத் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் மோப்பநாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire