
ஆம், உள்ளது. இவர்கள் குறிப்பிடும் பகுதி, கிழக்கு சீன கடலின் பெரும்பகுதிக்கு மேலே உள்ள வான்பகுதி. ஜப்பான் உரிமைகோரும் தீவு இருப்பதும் அங்குதான் என்பதே இந்த அறிவிப்பில் உள்ள விசேஷம்.
கடநத வாரம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் முதலாவது வான் பாதுகாப்பு எல்லைப் பகுதி (ADIZ – Air Defence Identification Zone) என இந்த வான்பகுதியை அறிவித்தது. இங்குள்ள தீவுப் பகுதி தம்முடையது என உரிமை கோரும் ஜப்பான், தமது விமானப்படையின் போர் விமானங்களை தீவின் மேலே பறப்பதற்கு அவ்வப்போது அனுப்புவது வழக்கம்.

காரணம், அமெரிக்காவின் பசுபிக் தள போர்விமானங்கள், மற்றும் உளவு பார்க்கும் விமானங்கள் இந்தக் கடலின்மேல் பறப்பது வழக்கம். சில வருடங்களுக்கு முன், அமெரிக்க உளவு விமானம் ஒன்றை சீன போர் விமானங்கள் பலவந்தமாக தரையிறக்கிய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்போது, அமெரிக்க உளவு விமானம் பறந்துகொண்டிருந்த வான் பகுதியும், கிழக்கு சீன கடலின் மேலுள்ள பகுதிதான்!
சீனா தமது வான் பகுதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டபின், அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. நேற்று முன்தினம் தமது B-52 குண்டு வீச்சு விமானங்களை அந்த வான் பகுதியில் இப்படியும், அப்படியுமாக பறக்க விட்டுக்கொண்டு இருந்தார்கள்!
அமெரிக்க விமானங்கள் பறந்தபின் இன்று, மேஜர் ஜெனரல் குயேயோ லியாங் சீன அரசு வானொலிக்கு வழங்கிய பேட்டியில், “இந்த வான் பகுதியில் எந்தவொரு வெளிநாட்டு விமானம் பறப்பதை எமது போர் விமானிகள் கண்டாலும் சுட்டு வீழ்த்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானத்தை கண்டால் எமது விமானிகள், தரையில் இருந்து அனுமதி பெற வேண்டியதில்லை. உடனடியாக சுட்டு விடலாம்” என்றார்.
அடுத்த சில தினங்களுக்கு இந்த வான்பகுதியில் நடக்கக்கூடிய சம்பவங்கள், சில முறுகல்களை நிச்சயம் ஏற்படுத்ததான் போகின்றன.
இது ஒரு சுவாரசியமான விவகாரம். சற்று ஆழமாக தெரிந்துகொள்ள விரும்பினால், நாம் இணைத்துள்ள போட்டோக்களை பாருங்கள்.
1-வது போட்டோ, சீனா புதிதாக அறிவித்துள்ள வான் பகுதியை காட்டுகிறது. 2-வது போட்டோவில் உள்ளதுதான், ஜப்பான் உரிமைகோரும் தீவுகள். 3-வது போட்டோவில் அந்தப் பகுதியில் பறக்கும் போர் விமானங்கள். 4-வது போட்டோவில், தீவு அருகே வரும் சீன கப்பல்களை ஜப்பானியக் கப்பல் தண்ணீர் அபிஷேகம் செய்து துரத்துவதையும், 5-வது போட்டோவில், இரு ஜப்பானியக் கப்பல்கள், சீனக் கப்பலை சிறைப்பிடித்து இருப்பதையும் பாருங்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire