mardi 31 mars 2015

கிழக்கு மாகாணசபை 07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்களுக்கு 500 மில்லியனும் என்றால் எப்படி சமத்துவம்?

நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் எந்த வித ஊழல்களும் இல்லாமல் சிறந்த முறையில் ஆட்சியை கொண்டுசெல்லும் வகையில் செயற்படுவதற்காக கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சியில் அமர தீர்மானித்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தம்முடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதனால் நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 11 மாகாணசபை உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை பிடிக்கவேண்டும் எண்ணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரமூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் விடுதலைஇ காணிப் பிரச்சினை பற்றி பேசுபவர்கள்இ மூன்று இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுள்ளனர். இதனை தமிழ் மக்கள் இன்று
இவர்களின் ஆட்சி தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். கிழக்கு மாகாணசபையில் அபிவிருத்தி நிதி 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு அமைச்சுகளை கொண்டுள்ள முதலமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்த ஒருவருக்கு நூறு மில்லியனும்  மாகாண சபை உறுப்பினரக்கு 260 மில்லியனும்  11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 500 மில்லியநும் ஏனைய செலவுகளுக்கு 40 மில்லியன் ரூபாய்களுமாக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 500 மில்லியநும் என்றால் எப்படி கிழக்கு மாகான சபையில் சமத்துவம் நிலவுகின்றது என்பதற்கு இதுவே உதாரணம்
நல்லாட்சி சமத்துவமான நிதிப் பங்கீடு என்கிறார்கள். 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதியெடுத்ததை தாண்டி பிழையான முறையில் பங்கிட்டுள்ளதை நாங்கள் காண்கின்றோம்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்களான உதுமாலெப்பை, விமலவீர திசாநாயக்க, பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட 10மாகாணசபை உறுப்பினர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

டோக்கியோவில் உள்ள மாவட்டம் ஒன்று அங்கீகரித்திருக்கிறது இருபாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக ஒரு பாலின கூட்டுறவை

ஒருபாலின உறவை, இரு பாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக டோக்கியோவில் உள்ள மாவட்டம் ஒன்று அங்கீகரித்திருக்கிறது. ஜப்பானிலேயே இதை முதல் முறையாக அங்கீகரித்திருப்பது இந்த நகராட்சிதான்.
ஒருபாலின திருணத்திற்கு எதிரான கண்ணோட்டம் ஜப்பானிய சமூகத்தில் உள்ளது
ஒருபாலின திருணத்திற்கு எதிரான கண்ணோட்டம் ஜப்பானிய சமூகத்தில் உள்ளது
டோக்யோவின் ஷிபூயா வார்டைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள், இருபாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக ஒரு பாலின கூட்டுறவை அங்கீகரிக்கும் சிறப்பு சான்றிதழ் தருவதற்கு, ஒப்புதல் அளிக்கும் அவசரச் சட்டதிற்கான வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்.
இந்த சான்றிதழ்களை சட்ட அங்கீகாரமாகக் கருத முடியாது என்றாலும் கூட, இருபாலின திருமணம் செய்து கொள்வோருக்கு உள்ள உரிமைகள் இந்த ஒருபாலின கூட்டுறவுக்கும் உண்டு என்பதை அது உறுதிசெய்யும்.
டோக்யோவின் மற்ற பகுதிகளும் இதை பின்பற்றதொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜப்பானின் சமூக அமைப்பின் அடித்தளத்திற்கு இந்த முடிவு பெரும் அச்சுறுதலாக அமையும் என்று கருதும் இருக்கிறது. ஜப்பானிய அரசிடமிருந்து இந்த நடவடிக்கைக்கு பலமான எதிர்ப்பு வரும் என்று தெரிவதாக டோக்யோவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மாடுகளை புகைப்படம் எடுக்க போலிஸ் உத்தரவு

மஹாராஷ்டிராவில் பசு மாட்டின் உரிமையாளர்கள் தமது மாட்டின் புகைப்படத்தை எடுத்து அதை அதிகாரிகளிடம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பசுப் பாதுகாப்பு இந்துத்துவ அரசியலின் முக்கிய அங்கமாக உள்ளது
பசு மாடு
பசு மாட்டு இறைச்சிக்கு மஹாராஷ்டிரா விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை அமல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என்று காவல்துறை கூறுகிறது.
பசு மாட்டை புனிதமாகக் கருதும் இந்துத்துவ கட்சிகளான பாரதீய ஜனதாவும், சிவசேனையும் இணைந்த கூட்டணி அரசு சில வாரங்களுக்கு முன்பு பசு மாட்டிறைச்சிக்கு ஒட்டு மொத்தத் தடை விதித்தது.
பசு மாட்டை படம் பிடித்து வைத்துக்கொள்வதன் மூலம், பசுமாடு சட்டவிரோதமாகக் கொல்லப்படுகிறதா என்பதை கண்டறிய உதவும் என்று மலேகான் நகர காவல்துறை கூறியுள்ளது.
இந்தத் தடையானது சிறுபான்மையினருக்கும், மாட்டிறைச்சியை உணவாகக் கொண்ட தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரானது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் வந்ததில் இருந்து சந்திரிகாவை நம்பும் சம்பந்தே!

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான எல்லா விபரங்களையும் அவரிடம் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த பிரச்னைகள் அர்த்தபூர்வமான வகையில், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
 
1994ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க அதிபராக பதவியேற்ற போது, தமிழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை கொண்டிருந்தார். அந்தப் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளையும் ஆரம்பித்திருந்தார். எனினும் அதை வெளிப்படையாக காண முடியவில்லை.

கடந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து, அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன. சிங்கள மக்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக அவரை ஆதரித்திருந்தனர். அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியினால் எல்லோரும் நன்மை பெற வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன மதிப்பளிப்பார் என்று நம்புகிறேன். அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதில் நாம் தெளிவான கவனம் செலுத்த வேண்டும். பொருத்தமான அரசியல் தீர்வு காணுமாறு அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

2006ல், தமிழ் அரசியல்வாதி கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் கைது

இலங்கையில், 2006ல், தமிழ் அரசியல்வாதி கொல்லப்பட்டது தொடர்பாக, இரண்டு அதிகாரிகள் உட்பட, கடற்படையைச் சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த, 2006ல், இலங்கையில் ராஜபக் ஷே அதிபராக இருந்தபோது, பிரபலமான தமிழ் அரசியல்வாதியான நடராஜா ரவிராஜ், 44, என்பவர், தன் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரான போலீஸ் அதிகாரியும் பலியானார். தமிழ் தேசிய கூட்டணியின் பிரபலமான தலைவரான ரவிராஜ், எம்.பி.,யாகவும் இருந்தார். யாழ்ப்பாணம் நகர முன்னாள் மேயர் மற்றும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, வெளிப்படையாக சில கருத்துக்களைத் தெரிவித்தவர். இவரது படுகொலை, மனித உரிமை மீறல் என, பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தப் படுகொலை தொடர்பாக, இலங்கை போலீஸ் தகவல் தொடர்பாளர் ருவான் குணசேகரா கூறியதாவது: ரவிராஜ் படுகொலை தொடர்பாக, அதிகாரிகள் இருவர் உட்பட, இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று பேரும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன், இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டது மற்றும் காணாமல் போனது தொடர்பாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு, ருவான் குணசேகரா கூறினார்.

vendredi 20 mars 2015

பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெண்ணியம்;மீரா பாரதி

ஆரோக்கியமான எதிர்கொள்ளலுக்கு ஒரு சிறு பங்களிப்பாவது செய்யவேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்துடன் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெண்ணியம் என்ற இந்த நூலை,

மீரா பாரதி அவர்கள் அனைத்துப் பெண்களுக்கும் Shirley க்கும் சமர்ப்பணமாக வெளியிட்டிருக்கின்றார்.

பெண் – பெண்ணியம் என்பது பற்றிய எனது பார்வையை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, நடிகை என பல்வேறு பரிமாணங்களில் செயற்படும், Lena Dunhamன் கூற்றுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். “Feminism isn’t a dirty word. We don’ think women should take over the planet, raise our young on our own or eliminate men from the picture.”

பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றுக்கே பெண்ணியம் எதிரானதேயன்றி அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆதிக்கமற்ற ஒரு உலகத்தை உருவாக்கவே அது முனைகின்றது,

பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் கலாசாரரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் இருக்க வேண்டும் என்பதை வலுயுறுத்துவதே, பெண்ணியம் ஆகும்

பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளையும் அகற்றி அவர்களுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெறுவதற்குமான போராட்டமும் அந்தப் போராட்டத்திற்கான வழிமுறைகளும் பெண்நிலைவாதத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கின்றன.

எங்களுடைய முன்னோர்களுக்குக் கிடைக்காத சில அடிப்படை உரிமைகள் எங்களுக்கு தற்போது கிடைத்திருந்தாலும்கூட அவற்றில் பல பத்திரங்களில் மட்டும்தான் காணப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் இன்னும் நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டிய தேவையிருக்கின்றது.

பெண்கள் ஊடகங்களில் பண்டங்களாகத்தான் பாவிக்கப்படுகின்றனர். CEO போன்ற உயர் பதவிகள் ஆண்களினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகின்றன. girl toy வேண்டுமா boy toy வேண்டுமா, என்றுதான் McDonald’s எங்களைக் கேட்கிறது. Harry Potter புத்தங்கள் விலைப்படுவதற்கான உத்தி, அதனை எழுதியவர் ஆண் எனக் காட்டுவதுதான் என்ற சிபாரிசு Joanne Rowlingஐ J.K. Rowling எனத் தனது பெயரை மாற்ற வைத்திருக்கின்றது. அதேபோல் சமூக நியதிகளுக்கேற்ற ஆணாக, அந்தப் பாத்திரத்திற்கேற்ற முறையில் இயங்காதவர் ஏதோ ஒரு வகையில் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்.

இவ்வகையில் சமூகத்தின் நன்மை கருதி பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பெண்ணிலைவாதிகளாக தொழிற்படல் அவசியமாக உள்ளது எனலாம்.

மேலும் எங்களில் ஒவ்வொருவரும் எங்களுக்குள் உண்மையாகவே மாறும் வரைக்கும் கிடைக்கும் உரிமைகளின் முழுமையான பயனைக்கூட எம்மால் அனுபவிக்க முடியாமலிருக்கும் எனலாம்.

உதாரணத்துக்கு, விவாகரத்துச் செய்வதற்கு உரிமை இருந்த போதும் வன்முறையின் கொடுமையில் தினமும் செத்துமடிந்தாலும் பரவாயில்லை, வீட்டுப்படி தாண்டக்கூடாது என்பதே எம்மில் பலரின் கொள்கையாகவும் விருப்பமாகவும் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகத்தின் பார்வைகள் மட்டுமன்றி, அந்தக் கலாசாரத்துக்குள் ஊறிப் போய்விட்ட எங்களினதும் எங்களைச் சூழவுள்ளவர்களின் மனப்பான்மையும் இதற்கான அடித்தளமாக இருக்கின்றது. விவாகரத்து எடுத்தவர்களில் கூடப் பெரும்பான்மையார், பழைய கணவன் ஏதாவது கஷ்டத்துக்குள்ளாகும் போதோ அல்லது இரண்டு வீட்டுக்குள் பங்குபோடப்படும் வாழ்க்கைப் பயணத்தில் பிள்ளைகள் படும் அல்லல்களைப் பார்க்கும்போதோ ஏதோ ஒரு குற்றவுணர்வை உணர்கின்றோம். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒன்றை வடிவமைத்து காலாகாலமாக அதைப் பேணி வளர்க்கும் கலாசாரம் ஒன்று எமக்குள், நாம் வேறு, அது வேறு எனப் பிரிக்க முடியாமல் ஊடுருவிப் போயிருப்பது இதன் காரணமாக இருக்கலாம்.

அத்துடன் அதிகாரம் பகிரப்படாத வரை, உரிமைகளுக்கான அறைகூவல் தொடர்ச்சியானதொரு போராட்டமாகவே அமையப் போகின்றது. ஆனால், எதற்கான போராட்டம் என்பது சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்ப மாறுபடும். தனி மனித மட்டத்தில் நோக்கினால்கூட ஒருவருடைய தேவை இன்னொருவடையதை ஒத்திருப்பதில்லை. உதாரணத்துக்கு வேலைக்குப் போக உரிமை வழங்கும் வீட்டிலுள்ள ஒரு பெண்ணுக்குத் தான் விரும்பிய உடை உடுக்க உரிமை இல்லாமலிருக்கலாம். அதேபோல், குடும்ப வாழ்வுதான் அடிமைத்தனத்தின் ஆணிவேர் என ஒரு பெண் நினைக்கலாம், ஆனால் இன்னொரு பெண்ணுக்கோ குடும்ப அமைப்புக்குள் தங்கி வாழ்வதும் மற்றவர்களின் தங்கியிருப்புக்காக, தான் வாழ்வதும் மிகவும் வேண்டியதாக இருக்கலாம்.

ஆகவே தாம் விரும்புவதை தாங்கள் செய்வதற்கான சுதந்திரமே பெண்களுக்குத் தேவையானதாகவுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எது தேவை என நினைக்கின்றாளோ அது கிடைக்கும் போது தான் அவளுக்கான உரிமையுடன் அவள் வாழ்கின்றாள் எனலாம்.

மீரா பாரதி அவர்கள் பல தத்துவஞானிகளின் கூற்றுக்களை மேற்கோள் காட்டியிருப்பதுடன் அவை சம்பந்தமான தனது அபிப்பிராயங்களைச் சுயவிமர்சனத்துடன் நேர்மையாக இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.

முதலில் அவருடன் முரண்படும் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

பெண்கள் கருத்தியல் தளத்தில் மட்டும்தான் வாதிடுகிறார்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றவில்லை, ஆளை ஆள் கொல்லவில்லை என அவர் சொல்லியிருப்பதற்கு, மாறாக நடந்தவற்றுக்கும் பல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன.

அதே போல், ஜனநாயகம், மனித நேயம், பரஸ்பரம் மதித்தல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளல், அன்பு ஆகிய பண்புகள் பெண்ணியத்தின் அடையாளங்கள் என அவர் பொதுமைப்படுத்துவதும் பொருத்தமானதல்ல. இந்தப் பண்புகள் அனைத்து மனிதர்களுக்கும் இருக்கவேண்டிய பண்புகள். இவை பெண்ணிடம் இருக்கும், இருக்க வேண்டும், ஆனால் ஆணிடம் இருக்காது அல்லது எதிர்பார்க்க முடியாது என்ற முறையிலான தவறான வழிநடத்தல்தான், சற்றுக் கனிவைக் காட்டும் ஆண்களிடம் பெண்களை ஏமாறச் செய்கிறது, அவர்கள் நல்லவர்கள் என நம்ப வைக்கின்றது, அத்துடன் இவை அனைத்துப் பெண்களினதும் இயல்புகள் என்றும் சொல்ல முடியாது, எத்தனையோ மோசமான அம்மாமார்கூட எங்களுக்குள் வாழ்கின்றனர். எனவே இந்தப் பண்புகள் இல்லாதவன் மனிதல்ல என்ற பார்வையே தேவையானது என நான் நினைக்கின்றேன்.

மேலும், பெண்கள் சுதந்திரமாகவும் சமவாய்ப்புக்களுடனும் உரிமைகளுடனும் தமக்குப் பாதுகாப்பான கலாசாரத்தில் வாழ்வதற்கு மதமே தடையாக உள்ளது என்கிறார் மீரா பாரதி. எங்களுடைய இந்து மதம் பெண்ணை சக்தியாக வழிபடுகிறது, சிவனை அர்த்தநாரீஸ்வர்ராக காண்கின்றது. மத குருவாகவோ, பூசகராகவோ பெண் இல்லை என்பது சரிதான், ஆனால்  நாளாந்த வாழ்க்கையைச் சிக்கலின்றி, மன உளைச்சலின்றி வாழத் தேவையான உரிமைகளைப் பாதிப்பதாக —- பெண் சுதந்திரத்துக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பது … கலாசாரம்தான் என்பேன், நான்.

திருமணம் என்பது அவசியமானது என்ற கலாசாரப் பெறுமானம் தான் பெண் குழந்தை பிறந்த நேரம் முதல் அவள் சுதந்திரத்தில் தாயாகவும் தந்தையாகவும் சொந்தமாகவும் அயலவராகவும் தலையிடுகின்றது. அடக்கமாக அழகான பெண்ணைத் தேடும் மாமா, மாமிமாருக்காகவும் மாப்பிள்ளைமாருக்காகவும் அவள் வடிவமைக்கப்படுகிறாள். நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை என ஒரு பழமொழியைப் பார்த்துப் பயந்து பயந்து தாயும் தன் சுதந்திரத்தைப் பிள்ளையின் கலியாணத்துக்காக அடைவு வைக்கின்றாள்.

வெளியில் பெண்ணியம் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்கள் கூட பெண்களாக இருந்தால் என்ன ஆண்களாக இருந்தால் என்ன, பெரும்பாலானவர்கள் பெண் என்பவள் அமைதியானவளாக, அழகானவளாக, இசைந்து கொடுப்பவளாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

மேலும், ஆண்களால் தமது பாலியல் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் பலாத்தகரமான வன்புணர்வைத் தடுப்பதற்கு பெண்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் சமூகம் நினைக்கின்றது. அவளின் உடையும் நடையும்தான் ஆண் பிழைவிடுவதற்கும் அவளைத் தாக்குவதற்கும் காரணம் என பெண்ணின் மேல்தான் சமூகம் குற்றம் சாட்டுகின்றது. அதனையே ஆணித்தரமாக நம்புகின்றது. பெண்ணைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிப் புத்தி சொல்கிறது. அதனால்தான் தாக்கப்படும் போது, பெண்கள்தான் அதை எண்ணி வெட்கப்படுகிறார்கள் அது தங்களின் பிழை என்றுதான் நினைக்கின்றார்கள்.

புரட்சிகரத்தை எங்கும் எவரிடம் எதிர்பார்ப்போம் ஆனால் எமக்கு மனைவியாக வரப்போறவளிடம் பழமைவாதியாகவே இருப்போம் என்றே பத்தில் ஒன்பது பேர் நினைக்கின்றார்கள். அத்துடன் காதலில்கூட என் உறனினால் வரும் சந்தோஷம் உனக்குப் போதாதா அதற்காக நான் சொன்னமாதிரி இரு என அன்பை ஆயுதமாக்குவோரும் ஒருவர் பாதிக்கப்படும்போது கூட நியாயத்தின் பக்கம் நிற்காமல் சமூக நியதி, குடும்பக் கட்டுக்கோப்பு என்பன பற்றிப் பேசுவோரே எங்கும் நிறைந்திருக்கின்றனர்

மேலும் பெண் பொறுமையானவள், கரிசனை காட்டுபவள் என்ற ஆலாபனைகள் அவள் செய்வாள் அது அவள் கடமை என்ற எதிர்பார்ப்பைத்தான் உறுதிப்படுத்துகின்றது. பெண்ணில் அனுகூலம் எடுக்கச் செய்கின்றது. குடும்ப உடைவுக்குக்கூட பெண் மீதே பழி சுமத்துகின்றது. அதே நேரம் ஒரு ஆண் பொறுமையாக, கரிசனையாக இருந்தால் ஓகோ என அவனைப் பாராட்டுகின்றது.

அதற்காக இனிவரும் காலம் பெண்களின் காலமாக இருக்கட்டும். எதிர்காலம் பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கி வழிவிடப்படவேண்டும். பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்கையும் ஒளியும் வழியும் தரும் என்றும் மீரா மேற்கோளிட்டிருக்கும் என ஓசோவின் கூற்றையும் என்னால் ஏற்க முடியாது. ஆரோக்கியமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லோருமே சம்மாக இருத்தலே அவசியமானது, எவருக்கும் அதிகாரம் வேண்டாம், என்பேன், நான்.

எழுத்துப்பிழை, வசனப்பிழைகள், எழுவாய், பயனிலை ஒத்துப்போதலில் பிரச்சினை என்பன இதில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். நிரூபித்தல், துஷ்பிரயோகம், உந்துதல், எதுவரை போன்ற சில சொற்கள் திரும்பத்திரும்ப அதே மாதிரிப் பிழையாக எழுதப்பட்டிருக்கின்றன.. வசனப் பிழைகளால் சில இடங்களில் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.  இதனை ஒரு கட்டுரை நூல் என்பதை விட மீரா பாரதியின் மனப் பிரதிபலிப்புக்கள் எனலாம்.

நிறைவாக, வன்முறையில் ஈடுபடுபவர்கள், ஆயுதத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஆயுத உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நாட்டின் தலைவராக இருந்தால் என்ன, ஒரு இயக்கத்தின தலைவராக இருந்தால் என்ன அல்லது எப்பதவிகளிலிருந்தாலும், இவர்கள் அனைவரும் ஒருவகையான மனநோயாளிகள். இவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மாறாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள்.
என்றும்
ஆணாதிக்க கருத்தியலுக்கு விடைகொடுத்து ஆணாதிக்க போர்க்குணாம்ச வன்முறை செயற்பாடுகளிலிருந்து நம்மை நாமே விடுதலை செய்வோம். ஆணாதிக்க போக்குகளுக்கான ஆதரவையும் வழங்காது விடுவோம்.
என்றும்
அன்பு, காதல், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் என்பதன் மூலம் நமது தனி மனித உரிமைகளை உறுதி செய்து கொண்டு நம்மை நமது வாழ்வை நமது சூழலை இயற்கையை எதிர்காலத்தை அழகானதாக உருவாக்குவோம்
என்றும் சொல்லும் மீராபாரதியின் கருத்துக்கும் சங்கற்பத்துக்கும் ஆமென் சொல்லி விடைபெறுகின்றேன்

20,000 க்கும் அதிகமான வங்கி முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி;கலையகம்

ஜெர்மனி, பிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ள, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு (ECB) எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. 20,000 க்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. பொலிசாரின் கண்மூடித் தனமான தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்கள், பதிலடியாக பல பொலிஸ் வாகனங்களை எரித்து நாசமாக்கியுள்ளனர். 


பிராங்பேர்ட் நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம் தொடர்பான பின்னணித் தகவல்கள்:

"முதலாளித்துவம் கொல்லும்!"
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) பிராங்பெர்ட் நகரில் அமைந்துள்ளது. மார்ச் 18 ம் தேதி, ECB பெரும் பொருட்செலவில் கட்டிய புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவிருந்தது. கிரீஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் தலையிடுவதில் ECB முக்கிய பங்குவகிக்கிறது. 

அதாவது, IMF மாதிரி, ஐரோப்பிய மத்திய வங்கியும் கடன் கொடுப்பது, வட்டி வீதம் தீர்மானிப்பது போன்ற பல பொருளாதாரத் திட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிப்பது வழமை.

ஜெர்மனியில், "Blockupy" என்ற ஐக்கிய முன்னணி ஒன்று இயங்கிவருகிறது. ஜெர்மனியின் தீவிர இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Blockupy கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. புதிய கட்டட திறப்புவிழாவை இடையூறு செய்யும் வகையில், பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு Blockupy அறைகூவல் விடுத்திருந்தது. கடன்சுமையால் மக்கள் கஷ்டப் படுகையில் திறப்புவிழா கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் வாதம்.

(Klasse gegen klasse) வர்க்கத்திற்கு எதிராக வர்க்கம் 
பெருமளவு மக்கள் கலந்து கொண்டஆர்ப்பாட்டம், இறுதியில் கலவரத்தில் முடிந்தது. முன்னூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டார்கள். நூற்றுக்கணக்கான பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர். பொலிஸ் வாகனங்கள் எரிக்கப் பட்டன. வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன. 


முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர்களின் குழு ஒன்று முதலாளித்துவ இலக்குகளை தாக்கும் வன்முறைகளில் இறங்கினார்கள். அவர்கள் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் போன்று, குறுகிய நேரத்திற்குள் மில்லியன் யூரோக்கள் சேதம் உண்டாக்கி விட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், தெருக்களில் தடையரண்கள் போட்டு பொலிசாருடன் மோதினார்கள். ECB கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட தடையரண்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பொலிசாரை நெருங்க விடாமல் தடுப்பதற்கு பல வகையான உத்திகளை பயன்படுத்தினார்கள். 

பொலிஸ் வாகனங்களை நோக்கி கற்கள் வீசப் பட்டன. வர்ணப் பூச்சுக் கலவைகள் விசிறியடிக்கப் பட்டன. இதனால் எழுந்த புகை மண்டலம் காரணமாக, நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பொலிசார் தமது சேவைக் காலத்தில், இது போன்றதொரு கலவரத்தை காணவில்லை என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.

jeudi 19 mars 2015

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடம்

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.91 வயதாகும் லீ, உடல்நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார்.1990ம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார்.

mardi 17 mars 2015

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவிடம் வாக்குமூலம்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர்.
இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட தனுன, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தான் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில், ஆயுதக் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டதாக கூறப்படும் மோசடி தொடர்பில், தனுன திலகரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கூட்டு திருடர்களுக்கு சம்ந்தம் இல்லாத ஒன்று தேசிய கீதத்தை தமிழில் பாட

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதைத் தடை செய்ய  சிவில் நிர்வாக, கல்வித்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
இது அரசியலமைப்பு உரிமையாகும். இதைத் தடை செய்வது சட்டவிரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும்  ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதிமொழி நேற்றைய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின்போது மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது ; 
தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரே மெட்டில் ஒரே அர்த்தம் தொனிக்கும் வண்ணம் நீண்டகாலமாகப் பாடப்பட்டு வந்தது.
கடந்த ஆட்சியின் போது இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து அதை இனவாத நோக்கில் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச மற்றும் அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்தார்கள்.
அந்நேரம் மொழி அமுலாக்கல் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் எவ்வளவு எடுத்துக் கூறியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இனவாதிகளின் கருத்துக்கு இடம் கொடுத்து வந்தார்.
இந்தக் குழப்பநிலை காரணமாக ஒரு பிரிவு தமிழ், முஸ்லிம் சிவில் மற்றும் கல்வி அதிகாரிகளும் தன்னிச்சையாக இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாடப்படுவதைத் தவிர்த்து அல்லது தடுத்து வந்தனர்.
இதனால் தமிழ் பேசும் பிரதேச நிர்வாக நிகழ்வுகளிலும் நாடு முழுக்க தமிழ், முஸ்லிம் பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாட முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்த குழப்ப நிலைமை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் மொழியிலான தேசிய கீதம் நிகழ்வை நடத்துபவர்களின் விருப்பத்தின்படி பாடப்பட முடியும். இதைத் தடுக்க முயல்பவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் ஆவர் என்றார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/xflcgaxkap8886c165ed49ed26022inzljbd0e69b120bee701bdb794i8jlc#sthash.sWG86Uu2.dpufஇலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதைத் தடை செய்ய  சிவில் நிர்வாக, கல்வித்துறை மற்றும் இராணுவ அஇலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதைத் தடை செய்ய  சிவில் நிர்வாக, கல்வித்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.இலங்கையில் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை செய்ய அதிகாரம் கிடையாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இன்று தேசிய நிர்வாக சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய நிர்வாக சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், தேசிய கீதத்தை தமிழில் பாடலாமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, ''இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாகம், கல்வித்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கும் அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுவதும் அமலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையும் அதிபர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கும் அதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன்'' என்றார் இது அரசியலமைப்பு உரிமையாகும். இதைத் தடை செய்வது சட்டவிரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும்  ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதிமொழி நேற்றைய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின்போது மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது ; 
தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரே மெட்டில் ஒரே அர்த்தம் தொனிக்கும் வண்ணம் நீண்டகாலமாகப் பாடப்பட்டு வந்தது.
கடந்த ஆட்சியின் போது இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து அதை இனவாத நோக்கில் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச மற்றும் அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்தார்கள்.
அந்நேரம் மொழி அமுலாக்கல் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் எவ்வளவு எடுத்துக் கூறியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இனவாதிகளின் கருத்துக்கு இடம் கொடுத்து வந்தார்.
இந்தக் குழப்பநிலை காரணமாக ஒரு பிரிவு தமிழ், முஸ்லிம் சிவில் மற்றும் கல்வி அதிகாரிகளும் தன்னிச்சையாக இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாடப்படுவதைத் தவிர்த்து அல்லது தடுத்து வந்தனர்.
இதனால் தமிழ் பேசும் பிரதேச நிர்வாக நிகழ்வுகளிலும் நாடு முழுக்க தமிழ், முஸ்லிம் பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாட முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்த குழப்ப நிலைமை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் மொழியிலான தேசிய கீதம் நிகழ்வை நடத்துபவர்களின் விருப்பத்தின்படி பாடப்பட முடியும். இதைத் தடுக்க முயல்பவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் ஆவர் என்றார். 
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/xflcgaxkap8886c165ed49ed26022inzljbd0e69b120bee701bdb794i8jlc#sthash.sWG86Uu2.dpufதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
இது அரசியலமைப்பு உரிமையாகும். இதைத் தடை செய்வது சட்டவிரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும்  ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதிமொழி நேற்றைய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின்போது மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது ; 
தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரே மெட்டில் ஒரே அர்த்தம் தொனிக்கும் வண்ணம் நீண்டகாலமாகப் பாடப்பட்டு வந்தது.
கடந்த ஆட்சியின் போது இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து அதை இனவாத நோக்கில் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச மற்றும் அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்தார்கள்.
அந்நேரம் மொழி அமுலாக்கல் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் எவ்வளவு எடுத்துக் கூறியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இனவாதிகளின் கருத்துக்கு இடம் கொடுத்து வந்தார்.
இந்தக் குழப்பநிலை காரணமாக ஒரு பிரிவு தமிழ், முஸ்லிம் சிவில் மற்றும் கல்வி அதிகாரிகளும் தன்னிச்சையாக இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாடப்படுவதைத் தவிர்த்து அல்லது தடுத்து வந்தனர்.
இதனால் தமிழ் பேசும் பிரதேச நிர்வாக நிகழ்வுகளிலும் நாடு முழுக்க தமிழ், முஸ்லிம் பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாட முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்த குழப்ப நிலைமை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் மொழியிலான தேசிய கீதம் நிகழ்வை நடத்துபவர்களின் விருப்பத்தின்படி பாடப்பட முடியும். இதைத் தடுக்க முயல்பவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் ஆவர் என்றார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/xflcgaxkap8886c165ed49ed26022inzljbd0e69b120bee701bdb794i8jlc#sthash.sWG86Uu2.dpuf

samedi 14 mars 2015

ஈழத்தை கைவிட்டு தனது புளொட் தலைமை ஆழுமை பலகீனம் நிறைந்தது என்பதை ஒப்புக்கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்

SLT-Sithadthanதர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.
இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!.
இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா?
யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அடைப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை உத்தேசமாக முப்பதாயிரம் இருக்கும்.
அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?
2009 இறுதிப் போருக்கு பிறகு அவர்களுக்கு அரசு உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தவர்கள். இப்போது உள்நாட்டில் வேறு தொழில்கள் எதையும் செய்ய முடியாமல் பரிதாபமான முறையில் தான் காலத்தை கழிக்கிறார்கள்.
உங்களது வடக்கு மாகாண அரசு, ஏன் உதவவில்லை?
அவர்களுக்காக ஒரு நிதியம் அமைத்து உதவும் திட்டம் இருக்கிறது ஆனால் இதுவரை இலங்கை அரசு மறைமுகமாக அதற்கு தடைபோட்டு வந்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, “ தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவால் ஜெயித்தேன் என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எனவே, புதிய அரசு என்ன செய்யப் போகிறது? என்பதைப் பார்க்க வேண்டும்.
மைதிரிபால அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
மகிந்த காலத்தில் ஒவ்வொரு தமிழனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள் இப்போது அந்தப் பயம் இல்லை. தமிழர் பகுதியில் புதிதாக சிங்களவர் குடியேற்றம் இல்லை. தமிழர்களின் மீள் குடியமர்த்தல் பற்றி கதைக்கிறார்கள். ஜெயில்களில் இருப்பவர்களை விடுதலை செய்வது குறித்து பட்டியல் தயாரித்து கொண்டிருக்கின்றார்கள்.
புதிய அரசு அமைந்து, இரண்டு மாதம் ஆகிறது. இவர்களின் நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை.
வடக்கு மாகாண அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
மகிந்த அரசு இருந்தவரை, மக்கள் எதிர்ப்பார்த்த அளவில் செயல்பட முடியவில்லை. இப்போது புதிய அரசு வந்திருக்கிறது. மாகாண அரசின் நடவடிக்கைகளில் நேரடி தலையீடுகளை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் அபிவிருத்தி பணிகளை மாகாண அரசின் மூலமாக செய்ய வேண்டும். ஆளுனரின் தலையீட்டை தடுக்க வேண்டும்  இதெல்லாம் நடந்தால்தான் மாகாண அரசால் செயல்பட முடியும்.
வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடிகிறதா?
முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை (வயல்களை) இராணுவம் பறித்து சிங்களவர்களிடம் கொடுத்திருக்கிறது. அவர்களால் தங்களின் நெல் வயல்களில் வேலை செய்ய முடியாது.
திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கொக்குத்திருவாய் என்ற இடத்தில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் பறித்து கொண்டு போவதாக அந்தப் பகுதியினர் என்னிடம் கூறினர். வடக்கு மாகாணம் முழுக்க இப்படி களவு, கொள்ளை அதிகம் இருக்கிறது சமூக ரீதியான பிரச்சினை இருக்கிறது போலீஸ் நடவடிக்கை இல்லை.
மீண்டும் தமிழீழப் போராட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா?
இந்த தருணத்தில் இன்னொரு ஆயுதப் போராட்டம் உருவாகும் என நான் நம்பவில்லை காரணம். மக்கள் மிகக் களைத்துவிட்டார்கள் மக்களிடமும் முன்னாள் போராளிகள் பலரிடமும் பேசிவிட்டு அவர்களின் மனநிலையை அறிந்து இதைச் சொல்கிறேன்.
ஆனால் தமிழீழம் தான் தீர்வு! என தமிழகத் தலைவர்களான நெடுமாறன் வைகோ போன்றவர்கள் வலியுறுத்துகிறார்களே?
இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நியாயமான தீர்வைக் கொண்டுவரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அழுத்தம் தான் இந்திய அரசை இலங்கை பிரச்சினையில் ஓரளவு செயல்பட வைத்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டால் ஈழக் கோரிக்கை குறைந்துவிடும்.
இலங்கைத் தமிழர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாகக் கூற முடியுமா?
முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன் ஆனால் தனி ஈழம் சாத்தியமற்றது. என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் அந்த கோரிக்கையை முழுமையாக கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் மனநிலைக்கு கொண்டு வரவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு! அதாவது நாங்களும் இலங்கை நாட்டின் மக்கள் தான் என தமிழ் மக்கள் உணரும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
மீண்டும் ஆயுத போராட்டத்தை தமிழர்கள் ஆரம்பிக்கக்கூடும் என்கின்ற பயத்தில் தான் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க சிங்கள அரசு தயங்குகிறதா?
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வரும் என்கின்ற நம்பிக்கை  சிங்களத் தலைவர்களுக்கே இப்போது இல்லை. அதேசமயம் சிங்கள மக்களை தங்கள் பக்கத்தில் வைக்க இதை ஒரு அரசியல் உத்தியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இது எதிர்விளைவுகளை தான் உருவாக்கும். என்பதுகளில் நாங்களாக விரும்பி ஆயுதத்தை எடுக்கவில்லையே சிங்கள அரசுகள் எங்கள் மீது திணித்த இராணுவ அழுத்தங்கள் தான் ஆயுதப் போராட்டங்களுக்கு காரணம் எனவே இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்.
இந்தியாவிடம் என்ன மாதிரியான ஆதரவை எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
இரண்டு விதமான எதிர்ப்பார்ப்புக்கள் உண்டு மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் இன்னும் கூடுதலாக தேவை!
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்
தமிழ் மாகாண கவுன்சிலுக்கு நில அதிகாரம், மத்திய அரசின் நேரடி தலையீடு அற்ற நிர்வாகம் நாங்களே எங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை பெற்று தர வேண்டும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விசிட் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சுதந்திரத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் வரும் முதல் இந்தியப்பிரதமர் மோடி தான் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அவர் சந்தித்துப் பேசுவார் என நினைக்கின்றோம். அது போல இலங்கைத் தமிழ் மக்களையும் சந்தித்துப் பேச வேண்டும் தமிழர்களின் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை ஆகிய தீர்வுகளுக்கு மோடி அழுத்தம் கொடுப்பார் என மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி இலங்கை பிரதமர் ரணில் பேசியிருக்கின்றாரே?
அவரது பேச்சை ஏற்க முடியாது அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவ சமூகம் முப்பது வருடங்களாக அழிவை எதிர்நோக்கிய சமூகம். வறுமை கோட்டுக்கு கீழ் நின்று வாழும் சமூகம். அந்த சமூகம் தங்கள் தொழிலை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் இதை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைமைளும் மீனவர்களும் உணர்ந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தை மூலமாக பிச்சினையைத் தீர்க்க வேண்டும்.
இரு நாட்டு தமிழ் மீனவர்களின் மோதலாக இந்தப் பிரச்சினையை இலங்கை அரசுதான் திசை திருப்புகிறதோ?
இரு தரப்பு தமிழ் மீனவர்களும் கடலில் சந்திக்க வேண்டியிருக்கிறது தொழில் போட்டி இருப்பது இயற்கை எனினும் அதை ஊதி பெருக்க சிங்கள அரசு முயற்சிக்கும் எனில் தமிழர்களும் தமிழர்களும் மோதுவதை சிங்கள அரசு விரும்பும்.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பும் சூழல் உள்ளதா?
அவர்களுக்காக வாழ்விட வசதிகள் அங்கு வழங்கப்பட்டால் தான் அது சாத்தியம். அங்கு குடி பெயர்ந்த மக்களுக்கே இன்னும் வாழ்வாதாரம் கொடுக்கவில்லையே. இந்தியாவில் உள்ள அகதிகளின் காணிகள், இலங்கையில் தமிழர்களாலேயே பிடிக்கப்பட்டிருக்கலாம். அதை எல்லாம் சரி செய்ய கால அவகாசம் தேவைப்படலாம்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களா?
தமிழ் மக்களில் பலர் அவர் இல்லை என்று நம்புகிறார்கள் சிலர் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக அவர் பார்க்கப்படுகின்றார்.

vendredi 13 mars 2015

mercredi 11 mars 2015

இந்தோனேசியாவில் மனைவியுடன் சேர்ந்து வீடு விற்பனைக்கான விளம்பரம்

இந்தோனேசியாவில் மனைவியுடன் சேர்ந்து வீடு விற்பனைக்கு என வெளியான விளம்பரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில், இரண்டு படுக்கை அறை, இரண்டு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கிய அந்த இணையதள விளம்பரம், கடைசியில் 'ஒரு அரிய வாய்ப்பு' இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம்,  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய  வீனா லியாவின் புகைப்படமும் வெளியாகி இருந்தது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி லியாவை அணுகினர். அப்போது இது எல்லாம் லினாவின் நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கரின் வேலை என்று தெரிய வந்தது. போலீசாரிடம் இத்தகைய விளம்பரத்தை தான் வெளியிட கூறவில்லை என்று கூறிய லினா, தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்த சொன்னதாகக் கூறினார்.
அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருக்கும் பட்சத்தில் தனக்கு தெரியப்படுத்துமாறு கூறியதாகவும் லினா போலீசாரிடம் தெரிவித்தார்.
அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால் விதவையாக இருக்கும் தானும் அந்நபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தாகவும் லினா கூறியுள்ளார். ஆனால் ஒரு போதும் இந்த விவரத்தை ஆன் லைனில் வெளியிடுமாறு தான் கூறவில்லை என்றும் லினா கூறினார்

ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தோழர் கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று 13/03/2015 மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,

aravinthanஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான  தோழர் கி.பி. அரவிந்தன் நெடுந்தீவு அவர்களின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று 13/03/2015 மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் நாளையும் மறுநாளும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்படும்.நாளை புதன்கிழமையும், நாளை மறுநாள் வியாழக்கிழமையும், Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, France என்ற முகவரியில், பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை, கி.பி அரவிந்தன் அவர்களின் உடல், பார்வைக்காக வைக்கப்படும்.அதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.                                                                    தொடர்புகளுக்கு
சுமத்திரி பிரான்சிஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134506256
செல்லிடப்பேசி: +33760194974
ஜோர்ஜ்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625285233
ஜேம்ஸ்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915129002155
அல்போன்ஸ்(சகோதரன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790185892
றொபின்சன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664118809
றெஜி(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168435832
சுரேஸ்(மைத்துனர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4925015882699
ரிற்றோ(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663653151

lundi 9 mars 2015

பிரேமதாஸ கொடுத்த ஆயுதம், பணத்தை பிரபாகரன் பெற்றார் - ராஜபக்சே கொடுத்த பணத்தையும் பிரபாகரன் பெற்றார்..விக்கிரமசிங்கே!

ராஜபக்சே கொடுத்த பணத்தை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெற்று கொண்டார் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கூறி சூட்டை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், ''கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை. இது, தமிழக அரசியலில் ஒரு பகுதி என்று எனக்கு தெரியும்.

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, அது எங்கள் வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்தது. எங்கள் தெற்குப் பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.

இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. போர்க் காலத்தில் எங்கள் மீனவர்களை நாங்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை. நாங்கள் அனுமதித்து இருந்தால், அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்திருப்பார்கள். ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களைச் சுட ஆயுதம் கூட விடுதலைப்புலிகள் கொடுத்தனர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

தமிழக-இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னையை, பேசித் தீர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இலங்கை மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் இப்படி மீன் பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்? கச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படகு வகைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் தயார் என்றால் அதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். சில அப்பாவி தமிழக மீனவர்களை கடந்த காலங்களில் இலங்கைக் கடற்படை சுட்டுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், தற்போது சுடுவதில்லை.

இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் வரும் எந்த ஒரு செயலையும், மற்ற நாடு செய்யாது என்று பரஸ்பரம் முடிவு செய்திருக்கிறோம். எனவே சீனாவுடனான உறவிலோ, இதர நாடுகளுடனான உறவிலோ இந்த ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறோம்.

ஆனால் ராஜபக்சே ஆட்சியில் என்ன நடந்தது என்றால் சீனாவை மிரட்ட இந்தியாவின் பெயரையும், இந்தியாவை மிரட்ட சீனாவின் பெயரையும் பயன்படுத்தினார். இது விவேகமற்ற கொள்கை. இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. இந்திய உதவி இல்லாமல், ராஜபக்சேவால் புலிகளை அழித்திருக்க முடியாது. இந்திய உதவிகளை பெற்றுக் கொண்டவர், 13-வது சட்ட திருத்ததை அமல்படுத்தி, பின் அதற்கும் மேலே சலுகைகளை அளிப்பதாக வாக்களித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதை நான் ஏற்கவில்லை. வடக்கு மாகாண முதல்வரின் பேச்சு பொறுப்பற்றது. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றிப் பேசி வருகிறேன். போர் நடந்தபோது அனைத்துத் தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லபட்டனர்.

பொதுவாகச் சொன்னால், இலங்கை பாதுகாப்புப் படையினர், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் என்று அனைத்துத் தரப்பினராலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இதற்கு, இலங்கை அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் தலைமை மிச்சம் இருந்திருந்தால், விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று முதல்வராகப் பதவி ஏற்றிருக்க முடியாது என்பதை அவரே அறிவார்.

ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென் பகுதி மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதில், ராஜபக்சேவிற்கும், புலிகளுக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. ராஜபக்சே புலிகளுக்கு பணம் கொடுத்தார். இதை ராஜபக்சே கூட மறுத்ததில்லை. பிரபாகரன் பணத்தை பெற்று கொண்டார். பணத்தை எடுத்து சென்று கொடுத்தவர் இன்றைக்கும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ உள்ளார்" என்று கூறி உள்ளார்.                                                     .....சாகரன்

நீதி செத்துப்போன நாடொன்றில் இறுதியாகக் கேட்கப்பட்ட கேள்வி. யாரிடமும் பதிலில்லை.ஈழத்திலும் கூட்டு பாலியல் வன்புணர்வு

விசேட ஆக்கம் கொழும்பு மிரருக்காக ஜெரா
Rape1இலங்கையின் பிரமாண்ட சாலைகளில் சரித்திர முக்கியமானது ஏ-9. கண்டியிலிருந்து தொடங்கி யாழ்ப்பாணத்தில் முடிகிறது. அதன் பயணத்தில் சிங்கள, முஸ்லிம், தமிழ் பண்பாடுகள் கடந்துபோகும். இது 24 மணிநேரமும் இயங்கக்கூடியது. வாகன ஓட்டங்களால் கலகலப்பானது.

வளைவுகள் குறைந்த இந்தச் சாலையில் மேடுகளும், பள்ளங்களும், பற்றைக் காடுகளும், அடர்காடுகளும் அதிகம். வன்னியை ஏ–9 சாலை குறுக்கிடுகையில் காடுகளும், பற்றைக்காடுகளும், குடிமனைகளும், சிறுநகரங்களும் மாறிமாறிவரும்.
அப்படி வன்னிக்குள்ளால் குறுக்கிட்டுப் பயணிக்கும் ஏ-9 சாலையின் ஓரத்தில் கனகராயன்குளம்- மாங்குளம் சிறுநகரங்களுக்கு இடையில் உள்ளது மன்னகுளம். இங்குதான் கூட்டு பாலியல் வன்புணர்வொன்று நடந்திருக்கிறது.
கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாகும்போது சரண்யாவுக்கு வயது 16. எனவே அவள் உச்சமான போர்க்காலத்தில் பிறந்தவள். ஏழு வயதைத் தொடுகையில் இவளின் தந்தையார் போரில் மரணமெய்திவிட்டார். தொடர்ந்து வந்த நாட்களில் தாயும் விபத்தொன்றில் இறந்துவிடுகிறார். இவளுடன் இணைந்த ஏனைய சகோதரர்கள் அனைவரையும் அம்மம்மா தத்தெடுத்துக்கொள்கிறார்.

Rape3இறுதிப் போர் முடிவுறும் வரையில் – முள்ளிவாய்க்கால் வரையில் வயதான அந்த மூதாட்டியின் பாதுகாப்பிலேயே சரண்யா வளர்ந்தாள். போர் முடிந்தவுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த சரண்யாவும் சகோதரர்களும் மற்றும், அம்மம்மாவும் நிர்க்கதியாகின்றனர். அப்போதுதான் சரண்யாவை வவுனியாவில் இருக்கின்ற சிறுவர் பராமரிப்பு நிலையமொன்று பொறுப்பெடுத்துக்கொள்கின்றது.
வன்னி மக்கள் மீள்குடியேறி சில வருடங்கள் வரை அவள் அந்த சிறுவர் இல்லத்திலேயே வளர்ந்தாள். அங்கேயே கற்றாள். கெட்டிக்காரியாக வளர்ந்தாள். ஊர் நிலமைகள் வழமைக்குத் திரும்ப அம்மம்மாவிடமே திரும்பிவிடுகிறாள் சரண்யா. அருகிலிருக்கும் பாடசாலையில் படிக்கத்தொடங்கினாள். அந்த மூதாட்டி தன் உடலை வருத்திக் கூலி வேலையும், வீட்டு வேலைகளும் செய்தே சரண்யாவைப் பார்த்து வந்தார். இப்படியே காலம் கடக்கையில்தான் அவள் 16 வயதைத் தொட்டாள். கடந்த வாரத்துக்கு சில நாட்கள் முன்பு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் திருவிழா வந்தது. அந்தத் திருவிழாவுக்கு தன் உறவுக்காரர்களுடன் சென்றாள். திருவிழா முடிந்து ஊர் திரும்பிய சரண்யா அம்மம்மாவின் வீட்டு வரவில்லை. உறவுக்காரரின் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.

“சரண்யாவின் படிப்பறை”
Rape2அம்மம்மா என்கிற மூதாட்டி வீட்டில் இல்லாத தருணம் பார்த்து புத்தகங்களையும், தன் உடைகளையும் எடுத்துப்போய்விட்டாள். திருவிழா போய் வந்து சில நாட்கள் பாடசாலையும் போகவில்லை. சிலநாட்கள் கழித்து பாடசாலை சென்றாள். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொண்டாள். அன்றைய தினம் இரவு ஏதோ இனந்தெரியாத நோயொன்று அவளைத் தாக்கியுள்ளதாக உறவினர் சந்தேகப்பட்டனர். மயக்கமடைந்திருந்தாள். அவளை மாங்குளம் மருத்துவமனையில் அவர்கள் அனுமதித்தனர்.
உடனடியாகவே அவளைப் பாதுகாத்த மூதாட்டிக்கு அறிவித்தனர். அவரும் பதறியடித்துக்கொண்டு மாங்குள மருத்துவமனைக்கு ஓடினார். சரண்யாவுக்கு மனநோய் எனத் தெரிவித்ததோடு, மல்லாவி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாக மாங்குளத்தில் சொல்லியிருக்கின்றனர். மல்லாவிக்கு ஓடினார் அந்த வறிய மூதாட்டி. மல்லாவியில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாக சொன்னார்கள். கிளிநொச்சிக்கு ஓடினார். கிளிநொச்சி மருத்துவமனையில் விசாரித்தார். அப்படி யாரும் வரவேயில்லை என்றுவிட்டனர்.
மீண்டும் மாங்குளத்துக்குப் போனார். கிளிநொச்சி மருத்துவமனையில் 10 ஆம் இல்ல விடுதியில் அனுமதிக்கப்பட்டதாக அப்போது மாங்குளத்தில் சொன்னார்கள். மீண்டும் கிளிநொச்சிக்கு வந்தார் மூதாட்டி. 10 ஆம் இலக்க விடுதிக்கு ஓடினார். அங்கு சரண்யா படுத்திருந்த கட்டில் தனியாகக் கிடந்தது. இப்போதுதான் மையவார்ட்டுக்கு எடுத்துப் போகிறார்கள் என்றனர் அயல் கட்டில்காரர்கள். சரண்யா தன் அம்மம்மாவைப் பார்க்காமலே கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டாள்.

“மனநோயாளியான சரண்யா வகுப்பில் கற்றவை”
Rape4அலறியடித்த அம்மம்மாவை மரணங்களுடன் தொடர்புடைய மருத்துவ அதிகாரி தன் அறையில் சந்தித்தார். பூட்டப்பட்ட அறைக்குள் மூதாட்டியும், பொலிஸ் உறுப்பினர் ஒருவரும் அந்த அதிகாரியை சந்தித்தனர். “மூன்றுக்கு மேற்பட்டவர்களால் பிள்ளையின் மல வாசல் வழியாவும், மர்ம உறுப்பு வழியாகவும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கு” – தமிழிலும், சிங்களத்திலும் அந்த மருத்துவர் தங்களிடம் கூறியதாக அம்மம்மா எங்களிடம் கண்ணீரோடு சொல்கிறார்.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானவுடன், நேற்றைய தினம் பொலிஸார் அவரின் வீட்டுக்கு சென்றனர். சரண்யா மனநோயின் காரணமாகவே இறந்தாள் எனவும், வயதான மூதாட்டி பணத்தை வாங்கிக்கொண்டு மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறையிடப்படுவார் எனவும், அப்படி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படவில்லையென அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் மிரட்டிச் சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனை கொடுத்த மரணச் சான்றிதழ் மனநோயின் காரணமாகவே சரண்யா இறந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்படித் தெரிவித்த பொலிஸாரில் ஒருவர், முந்தைய தினம் மருத்துவர் சரண்யா கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலமே மரணமடைந்தார் என்று கூறும்போது அருகில் நின்றவர். எனவே அவரை நோக்கி நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று மூதாட்டி சொல்ல, மூதாட்டியே பொய் சொல்வதாகவும், மருத்துவர் அப்பிடிசொல்லவேயில்லை எனவும் பொலிஸார் உடனடியாகவே மறுத்துவிட்டார்.
”என் சொந்தப் பேரப்பிள்ளையை ஊடகங்களில் அவமானப்படுத்துவேனா??” – நீதி செத்துப்போன நாடொன்றில் இறுதியாகக் கேட்கப்பட்ட கேள்வி. யாரிடமும் பதிலில்லை.

dimanche 8 mars 2015

துயர் நிறை நெஞ்சோடு அஞ்சலிகள். 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் கி பி அரவிந்தன் இவரும் ஒருவர் .

கி பி  அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது  70 களில்  ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .அஞ்சலிகள்தலைப்புசுந்தர் என்று தோழர்களால் அழைக்கப்பட்ட இவர் 1970 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமாரனோடு தீவிரமாக இயங்கிய சிலரில் ஒருவர் கி.பி.அரவிந்தன் ஈழம் என்னும் கருத்து வரலாற்று பூர்வமானது. அது சிலரது மன வக்கிரம் சார்ந்த ஒன்றல்ல ...அவரின் முன்னைய கருத்துக்களுடன் ..இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'குமுதம்' குழுமத்தின் 'தீராநதி' மாத ஏட்டுக்கு அவர் வழங்கிய முழுமையான நேர்காணல் வருமாறு: ஈழப் போராட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய பின்னடைவுக்கு காரணமாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலிருந்து நாம் தொடங்கலாம். அந்த விமர்சனங்களில் முக்கியமானது, 'முப்பதாண்டுகலமாக நடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டம் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டமாக மட்டும் நடந்தது என்பது; இன்னொன்று, 09/11 அமெரிக்க இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்குப் பிறகான உலகச் சூழலை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறியது. உங்கள் எண்ணம் என்ன?உங்கள் கேள்வியே பதிலைச் சொல்லி நிற்கின்றது. 2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு செல்லவும் கையெழுத்திடவும் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகள் அதன் பின்னரான அரசியல் போக்குகளை கையாள்வதில் திறனற்று போனதே அவர்களது வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும் என்றுதான் நானும் கருதுகிறேன். 'ஒற்றை மைய உலகில் போரும் சமாதனமுமென' சிந்திக்கவும் எழுதவும் முனைந்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு போன்றோர் வன்னிக்குள்ளேயே அருகில் இருந்தும் புலிகள் கேளாச் செவியர்களாக இருந்தது, 'கெடுகுடி சொற்கேளாது' என்பதற்கு உதாரணமாயிற்று. அடுத்தது... புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தின் உண்மை நிலையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உலக மக்கள் மத்தியில் சரியாக எடுத்துச் செல்லவில்லை; உலக நாடுகள் தமிழர்கள் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல், சிங்கள அரசின் பக்கம் நிற்க இதுவொரு காரணம் என்ற விமர்சனமும் இப்பொழுது எழுந்துள்ளது. குறிப்பாக, உலகெங்கும் உள்ள தங்களைப் போன்ற ஒடுக்கப்படுகிற இனங்களையும்கூட ஈழத் தமிழினம் அடையாளம் காணத் தவறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆம். இது ஒரு வேதனையும் வேடிக்கையும் கொண்ட விடயம்தான். இதற்கு ஈழத் தமிழர்களின் உளவியல் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதாவது தாங்கள் ஒருவகையான 'தூய்மை' கொண்ட இனம் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள்; குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழர்கள். இதனை யாழ்ப்பாணியம் எனவும் கொள்ளலாம். ஒருவகையில் பார்ப்பனியத்திற்கு நெருக்கமானவர்கள் இவர்கள். வெள்ளையர்களை தேவர்களாகவும் அவர்களுக்கு அடுத்தாக தாங்கள் இருப்பதாகவும் நம்புவர்கள். இன்னும் சொன்னால் ஐநூறாண்டு காலமாக ஐரோப்பியரின் ஆளுமையில் இருந்த அடிமைப்புத்தி அல்லது விசுவாசம் நிரம்பபெற்றவர்கள். இதனால் பல்தேசியத்தாருடன் இணைதல் அல்லது அவர்கள் துன்பத்தில் பங்கெடுத்தல் என்பவை பற்றி கவலையின்றி இருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் நீங்கள் ஈரோஸ் அமைப்பில் இருந்தீர்கள். ஈரோஸ் போன்ற பல்வேறு அமைப்புக்கள் ஆரம்ப காலத்தில் போராட்டத்தில் இருந்தன. அதில் எவையெல்லாம் இன்றும் போராட்டத்தில் ஈடுபடும் பலத்துடன் உள்ளன? உண்மையில் இன்று எத்தனை அமைப்புக்கள் இருக்கின்றன என்பதை எண்ணுவதை விடவும் ஈழத் தமிழர்களை யார் ஒன்றிணைக்கிறார்கள், பொது வேலைத்திட்டத்தை முன்வைக்கிறார்கள் என்பதே முக்கியமானது. வீழ்ந்துவிட்ட சமூகத்துக்குள் அரியாசனம் தேடுவதை தவிர்த்து ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைவது என்பதே சமூக நலன் விரும்பிகள் செய்யக்கூடிய பணியாகும். ஈரோஸ் அமைப்பின் பணிகள் என்றோ முடிந்துவிட்டன. அதில் காலத்திற்கேற்ப என்ன மாற்றம் மேற்கொள்ளபட்டது என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. அதை மீள கட்டிப்பிடித்திருப்பவர்கள் அரியாசன ஆசை கொண்டவர்கள் என்றே சொல்வேன். புலம்பெயர் தமிழர்கள் இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? எம்மக்களின் மனோநிலை இன்னும் தெளிவடையவில்லை. சற்று நாளெடுக்கம் என்றே நினைக்கிறேன். முப்பது ஆண்டுகால மனப்பதிவை மாற்றுதல் என்பது இலகானதொன்றல்ல. எந்த சமூகத்திற்கும் தலைமை ஒன்று உண்டு. தலைவர்கள் என்றும் இருப்பர். அவர்கள் மீதான பற்றும் ஈர்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பர். அப்படித்தான் ஈழத் தமிழ் சமூகமும்; தங்களுக்கான தலைமை அல்லது தலைவர் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை நம்புதல் கசப்பானதுதான். இது போராட்ட முன்னெடுப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்தான். ஏனெனில், போராட்ட முன்னெடுப்புக்கு நம்பகம் என்பது முக்கியமானது.ஆனாலும், இன்று புலம்பெயர் தமிழர்களே ஈழத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்னும் நிலை. உலகெங்கிலும் சுமார் எவ்வளவு ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்? இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் கடந்த காலத்தில் நடந்ததா? அண்ணளவாக ஒரு மில்லியன்; அதாவது, பத்து லட்சம் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். பிரித்தானியாவிலும் கனடாவிலும் அரை மில்லியன் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இம்மக்களை விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் பிணைத்திருந்தன. ஈழப் போராட்டத்தின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தம்மை பிரகடனம் செய்திருந்ததால் புலம்பெயர் தமிழர்களும் அவர்களை நம்பியிருந்தனர். இந்த ஒருங்கிணைப்பு என்பது மேலிருந்து கீழான திணிப்பாக மேற்கொள்ளப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி வரும் காலங்களில் இது நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மேலிருந்து எதனையும் திணிக்கும் அளவுக்கு ஒரு ஆளுமை இப்பொழுதுள்ள யாரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன்.கிட்டதட்ட முப்பதாண்டுகளாக ஈழத் தமிழர்கள் புலப்பெயர்வு வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளின் வாழ்க்கைச் சூழல், குறிப்பாக மேற்குலகம் அவர்களின் வாழ்வில் கலாசார, பொருண்மிய, அரசியல் மாற்றங்களைக் கொண்டிருக்கிறதா? வாழ்வியல் முறைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதுதான். இது தவிர்க்க முடியாதது. ஆனால், உளப்பண்பாட்டில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக நான் கருதவில்லை. மேற்குலகிலேயே கருவாகி உருப்பெற்ற இளைய தலைமுறையினரிடம் கூட உளப்பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனக்கு அது குறித்த சில சந்தேகங்கள் உண்டு. அதாவது புலம்பெயர் இளையோர் எனத் தம்மை அழைப்பவர்கள் நடாத்தும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டபோது அவர்களின் நடைமுறைப் பண்புகள் மிகவும் பிற்போக்கானதாக, நவீனத்துவத்தை உள்வாங்காதவர்களாக இருப்பது கண்டு அதிர்ந்து போனேன். எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் நிலை கவலையளிப்பதாக இருந்தது. புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் இலங்கை அரசை ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் இந்தத் தனது ஆதரவு தமிழ் குழுக்களை ஒருங்கிணைத்து தேசீய ஒருமைப்பாடு கருத்தரங்குகள் தொடங்கி முதலீடு தொடர்பான உரையாடல்கள் வரைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்களே; சர்வதேச அளவில் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?ஆனால், இலங்கை அரசின் இம்முயற்சிகள் சர்வதேச அளவில் கவனத்தை பெறவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. புலிகள் இல்லாத நிலையில் சர்வதேசம் இவற்றிற்கு ஆதரவு வழங்கும் என்றும் நான் நம்பவில்லை. செல்வராசா பத்மநாதனின் முயற்சிக்கும், அவரது நாடு கடந்த அரசு பற்றிய கருத்தாக்கத்திற்குமே சர்வதேச ஆதரவு கிட்டிவருவதாக நான் அறிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனப்பட்டிருக்கிறது. ஆனாலும், மீதி இருக்கும் போராளிகள் மூலம் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், வன்னி மக்களிடம் நேரடியாகச் சென்று பணி செய்ய முடியாத சூழலில் அது எந்தளவுக்கு சாத்தியம்? இது ஒரு முக்கிய பிரச்னைதான். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநித்துவத்தை இழக்காதிருப்பது ஓர் ஆறுதலை அளிக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் (யாழ்பாண மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள்) தமிழ் தேசிய கூட்டமைப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு ஊடாக பணி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. யாழ்ப்பாண நகரத்தில் 80 சவீதத்தினர் வாக்களிக்காமல் இருந்ததும் அவர்களுள் இருக்கும் சிறிலங்கா அரசு மீதான அதிருப்தியையே காட்டுகின்றது. இவை புலம்பெயர் தேசத்தில் உருவாக்கப்படும் பொது வேலைத்திட்டத்தை, ஈழத்தின் உள்ளேயும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதென்பதையே உணர்த்துகின்றன. இலங்கையில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் போராளிகளும் அவர்களின் பிரதான தளபதிகளும் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிய முடிந்ததா? அறியமுடியவில்லை. என்னால் மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர்களாலும், செயற்பாட்டாளர்களாலும் கூட அறிய முடியவில்லை என்பதே கவலை தரும் செய்தியாகும். இந்தியா நினைத்தால் இதனை வெளிப்படுத்த முடியும். நீண்ட காலமாக பிரான்சில் வசித்தும் இன்னும் பிரான்ஸ் குடியுரிமை வாங்காமல் இருக்கிறீர்கள், ஏன்? இலங்கைக்கு, குறிப்பாக உங்களின் பிறந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் நம்பிக்கை இன்னும் இருக்கிறதா? சங்கடமான கேள்வியை முன்வைத்துள்ளீர்கள். எனது அரசியல் வேட்கைகள் நிறைவேறி, எனது ஊருக்கு திரும்ப வேண்டுமென்ற நம்பிக்கையுடனேயே இன்றும் உள்ளேன். எனது பணிகளைக்கூட அந்நோக்கிலேயே மேற்கொள்கிறேன். அரசியல் வேட்கைகள் எதுவும் நிறைவேறாத எனது ஊரை திரும்ப சென்று பார்ப்பதைவிடவும் புலம்பெயர்ந்த நாடொன்றிலேயே புதைபடுவது மேலானது என்ற எண்ணமே என்னிடம் உண்டு. அகதி நிலையை துறந்து, சிறிலங்கா குடியுரிமையில் வாழவேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்படுமானால் நாடற்றவன் என்ற நிலையை பெறுவதற்கான சட்ட போராட்டத்தை நடத்தவே முயற்சிப்பேன். இவ்வெண்ணம் கொண்ட என்போன்றோருக்கு நாடு கடந்த அரசு என்ற கருத்தாக்கமும் செயல்வடிவமும் உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன். உங்கள் கேள்வி சட்டவாளர்களுடன் ஆலோசனை நடத்த என்னை உந்துகின்றது. தனி ஈழம் மலர்ந்தாலும், எந்த புலம்பெயர் தமிழரும் ஈழத்திற்குச் செல்லமாட்டார் என்றொரு விமர்சனம் முன்பு முன்வைக்கப்பட்டது. இப்போதோ, 'இலங்கையில் போர் முடிந்துவிட்டது; தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி வந்து முதலீடு செய்ய வேண்டும்' என இலங்கை அரசு கோரிக்கை விடுகிறது. அதற்கான முயற்சிகளையும் புலத்தில் செய்கிறது. புலம்பெயர் தமிழர்கள் திரும்பிச் செல்வது குறித்த பேச்சுக்களையும் விமர்சனங்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?முதலில் இக்கேள்வியை ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பொருத்திப் பார்க்காமல் புலம்பெயர்ந்த அனைத்து சமூகங்களின் நடைமுறைகளுடனும் ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமானது. வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிய வரலாற்றை யூதருடன் பலரும் ஒப்பிடுவதுண்டு. ஆனால், அது எம்முடன் பொருத்தக்கூடியதா என்பது சந்தேகமே. இதேவேளையில் அமெரிக்காவிற்கு அடிமைகளாக இழுத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்களிடையே சுதந்திர இயக்கம் தோற்றம்பெற்ற வேளையில், ஆப்பிரிக்காவிற்கு திரும்புதல் என்பது அடிப்படைக் கருத்தாக இருந்தது. வில்லியம் கார்வெ என்பவர் இவ்வியக்கத்தை தோற்றுவித்திருந்தார். ஆனால், அந்த இயக்கம் வெற்றிபெறவில்லை. இவ்வாறே புலம்பெயர்ந்த பல தேசியத்தார் பெரும்பாலும் திரும்பிச் சென்றதில்லை. ஆதலால், ஈழத் தமிழர்களின் மனோநிலையிலும் திரும்புதல் இனிய கனவாக மட்டுமே இருக்கும். இரண்டாவது, திரும்புதல் என்பது பொருளாதாரத்துடனும் இணைந்தது. பொருளாதாரம் கையில் சேரும்போது திரும்புதல் என்னும் தீர்மானத்தை எடுப்பவர்களாக அடுத்த தலைமுறை மாறிவிடுகின்றது. அத்துடன் சாதிய கட்டுமானத்தை கொண்ட, ஐனநாயக மறுப்பு கொண்ட எம் சமூக அமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தேசங்களே அனைத்து வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. ஆதலால், அவர்கள் திரும்புதலை விரும்பார் என்றே நினைக்கிறேன். உங்கள் இளமைக்காலங்களில், ஈழத்துக்கு அடுத்தபடியாக அதிக வருடங்கள் நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்கள். சென்னையில் இருந்ததுக்கும் புலத்தில் இருப்பதுக்கும் வேறுபாடாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? சென்னைக்கு வந்ததே பின்தளம் ஒன்றை கட்டியெழுப்பும் பணியாகத்தான். ஆனால், புலம்பெயர்ந்தது ஒதுங்கிச் செல்லும் மனோநிலையில்தான்; இருந்தும் ஒதுங்கிச் செல்ல முடியவில்லை என்பது வேறு விடயம். ஆதலால், இரண்டும் ஒன்றல்ல. கருத்துக்களை காவிச் செல்வதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறேன். கலை - இலக்கிய பண்பாட்டு தளங்களிலேயே அதிகம் நடமாடி வருகிறேன். சென்னையில் தங்கியிருந்தபோது இளமையும் அதனுடன் கூடிய வேகமும் இருந்தது. இப்பொழுது அரசியல் ரீதியாக நீங்கள் தனிமைப்பட்டிருப்பதாக உணருகிறீர்களா? நீங்கள் என விளித்தது என்னை மட்டுமா அல்லது நான் சார்ந்த சமூகத்தையா? ஈழத் தமிழ்ச் சமூகத்தவர்கள் அனைவருமே அரசியல் ரீதியாக தனிமைப்பட்டுள்ளோம். இந்த தனிமைதான் சிறிலங்கா எம்மை தோற்கடிக்க உதவியது என்பதும் மிக முக்கியமானது. உலக அரசியலின் போக்கை எமது அரசறிவியலாளர்கள் புரிந்திருந்த போதும் அதனை எமது சமூகம் விளங்கிக்கொள்ள மறுத்து வருகின்றது. அல்லது அக்கறை கொள்ள மறுக்கின்றது என்றே நினைக்கிறேன். இந்த அரசியல் தனிமையை போக்கவே தற்போது பலரும் முனைந்து வருகின்றார்கள். எனது பணியும் அதை நோக்கியதே. 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' மூலம் போராட்டத்தை முன்னெடுத்து தாயக நிலத்தை மீட்பது எந்தளவுக்கு சாத்தியம்? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (கிழிசி) பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) என்பன மறைமுக அரசை நிறுவி நடத்தியவர்கள்தான். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மொசாம்பிக்கிலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் துனுசியாவிலும் இவ்வகை அரசுகளை நிறுவினர். இன்றைக்கு அவர்கள் வீழ்ந்தவர்களாக இல்லையே. அவர்களிடம் சட்டபூர்வ அரசு என ஒன்று உள்ளதே. நாடு கடந்த அரசு பற்றிய விளக்கமளிக்க நான் பொருத்தமானவன் அல்ல. நான் இன்னமும் அதனை விவாத அதாவது உரையாடல் நிலையிலேயே வைத்துள்ளேன்.யுத்தத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியா மௌனமாக சகித்துக் கொண்டிருந்தது. போருக்கும் உதவியதாக தமிழகமே சொன்னது. இத்தகைய சூழ்நிலையில் இன்னும் 'நாடு கடந்த தமிழீழ அரசை' அமைத்திருப்பவர்கள் இந்தியாவை நம்பி இருப்பது போல் தெரிகிறதே? கி.பி.அரவிந்தன்: இந்தியாவை தவிர்த்த மாற்றுத் தெரிவு ஏதும் எங்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலங்கைத் தீவின் அரசியல் என்பது இந்திய துணைக்கண்ட நலனுடன் பிணைந்தது. எங்கள் அரசியல் நியாயத்தை இந்திய நலனுடன் எப்படி இணைப்பது என்பதே எதிர்காலத்தில் எங்கள் அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கும். அதனையே நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்திருப்பவர்களும் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். இன்றைய உலகமயச் சூழலில், ஆசியப் பிராந்திய இந்து மகாசமுத்திர அரசியலில், இன விடுதலைப் போர் ஒன்றை இந்தியா ஆதரிக்கும் என இன்னமும் நம்புகிறீர்களா? ஈழத் தமிழர்களின் அரசறிவியலாளர், சிந்தனையாளர் என நான் மதிக்கின்ற மு.திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொல்வதானால் இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை. 'ஈழம் என்கிற கருத்து செத்துவிட்டது' என்கிறார் 'இந்து' ராம்; 'ஈழம் சாத்தியமில்லை' என்கிறார் ஷோபா சக்தி. நீங்கள் என்ன நம்பிக்கையில் தொடர்கிறீர்கள்? கி.பி.அரவிந்தன்: ஈழம் என்னும் கருத்து வரலாற்று பூர்வமானது. அது சிலரது மன வக்கிரம் சார்ந்த ஒன்றல்ல. நரிகள் ஊளையிடுவதனால் சூரியன் மறைந்து விடுவதில்லை. ராமும் சோபா சக்தியும் ஓரே புள்ளியில் சந்திப்பது ஆச்சரியமானதொன்றல்ல.