
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய மகளிர் தின 2015ம் வருடத்தின் நிகழ்வுக்கான தொனிப்பொருளாக ‘பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர் அணிக்குழு கூட்டத்திலேயே மேற்படி தொனிப்பொருள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக பெண்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளும், விவாகரத்துக்களும் தலைதூக்க தொடங்குவதோடு அரசியலிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. பெண்களின் வலுவாக்கமே ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்கும், அடையாளத்திற்கும் முக்கியமானதாகும். பெண்களை வலுவானவர்களாக உயர்த்த வேண்டியதும் சமுகத்தின் பொறுப்பாகும் என்பதனை வலியுறுத்தும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் (லேக் வீதி) அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி.செல்வி மனோகர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாக சி.சந்திரகாந்தன் மற்றும் பலரும் கந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire