இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் இதுவே இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதலாவது உரையாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை(4) மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆகாஸ் கொட்டலில் இடம் பெற்றது. வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், இந்திய துணைத் தூதரகத்தின் அரசியல் பிரதிநிதி எஸ்.டி.மூர்த்தி ஆகியோருக்கு இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மன்னாருக்கு வருகை தரும் போது அவரை வரவேற்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட மகஜரொன்றை இந்தியப்பிரதமரிடம் கையளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire