இம்மாதம் இடம் பெறவுள்ள பிரான்ஸ் நாட்டின் பிராந்திய நிர்வாக அcergya phoமைப்புகளுக்கான தேர்தலில் (Élection Départementale en France) களம் இறங்கியுள்ளார் பொதுச் சேவையில் நடுநிலையடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைப் பெண் சேர்ஜியா மகேந்திரன்.
பிரான்சின் நிர்வாக பிரிவுகளில் முக்கியமானதும், பல்லின மக்களும் பரவலாக அன்புடனும்-அமைதியுடனும் வாழும் பிரதேசமும், பொன்த்ஆஸ் (Pontoise) நகரை தலைமையிடமாகவும், கொண்டுள்ள பிரான்சின் 95வது பிரிவான "வல்டுவாஸ்" (Departement du val D'oise) பிராந்திய அமைப்புகான தோதலிலேயே இவர் போட்டியிடுகிறார்.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொல சக்கொஸி (Nicolas Sarkozy) சார்ந்துள்ள முக்கிய வலதுசாரிக் கட்சியான UMP (Union Pour Un Mouvement Populaire) சார்பில் இத்தேர்தலில் போட்டியிடும் சேர்ஜியா மகேந்திரன், ஏற்கனவே இந்தப்பிராந்திய அலகினுள் அமைநதுள்ள கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) கிராம சபைத் தேர்தலில் கடந்த ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், அங்கே துணை மேயராகவும் நியமிக்கப்பட்டு சேவையாற்றிக் கொணடிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
101மாவட்ங்களையும் (Departement),அவற்றினுள் பல உபபிரிவுகளையும் (Canton), கொண்டுள்ள பிரான்சின் நிர்வாக அலகுகளின், ஒவவொரு உபபிரிவிலிருந்தும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மக்கள் பிரதிநிதிகளாக (Conseils Departementaux) தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது, பிரான்ஸின் தற்போதைய பிரான்சுவா கொலண்ட் (Franவூois Hollande) அவர்களின் சோசலிசக் கடசி அரசாங்கம் நிறைவேற்றிய புதிய, நல்லபல சட்ட மூலங்களில் ஒன்றாகும். ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிகாரத்தில் இருக்கவேண்டும், குறிப்பாக அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கின்ற சமத்துவ சிந்தனா அடிப்படையிலான இந்த மாற்றத்துடன் நடைபெறும் முதலாவது தோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
21உபபிரிவுகளை கொண்டுள்ள பிரான்சின் 95வது நிர்வாக அலகின்,கார்ஜ் லெ கொணேஸ் (Garges les Gonesse), மற்றும் அர்னோவில் (Arnouville) ஆகிய பகுதிகள் இணைந்த கன்ரோனை (Canton), பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு அங்கத்தவர்களுக்கான தேர்தலில், Arnouville பகுதியின் நகரபிதாவான(Maire), மிசேல் அஃமா (Michel Aumas) அவர்களுடன் இணைந்து, பெண் பிரதிநிதியாக போட்டியிடுகிறார் சேர்ஜியா என்பதும் அவருக்கு கிடைத்துள்ள மற்றொரு பெருமை.
பதவி என்பது தமக்கான, தம்சார்புக்கான பெருமை என நம்பிக்கொணக்கொணடிருக்கும் நம் யாழ்பாண சிந்தனாவாதத்தை தகர்த்து, உழுத்துப்போன நமது பாரம்பரியங்களை, இன்றும் பின்பற்றிக் கொணடிருக்கும் நம் சமூகத்தினர் மத்தியில் சமத்துவத்தை நிலைநிறுத்தி, சார்பு நிலை எதுவுமற்ற ஒரு சேவகியாக, தன்னை அடையாளப்படுத்திவரும் சேர்ஜியா மகேந்திரனின் சேவைகள் Garges les Gonesse ஐயும் தாண்டி வளர வேண்டும் என்பதே மாற்றம் சார் சமூக ஆர்வலர்களினதும், யதார்த்த வாதிகளினதும் விருப்பாக இருக்கும்.
அந்த வகையில் இம்மாதம் (March-2015) 22ம், 27ம் திகதிகளில் இரண்டு சுற்றுக்களாக நடைபெறும் இந்தத் தேர்தலில், பிரான்சின் Garges les Gonesse, Arnouville ஆகிய பகுதிகளில் வசிக்கும்,பிரான்சில் வாக்குரிமை உடைய நம்மவர்கள் அனைவரும், தகுதி உடைய உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் இணைத்துக்கொண்டு, சேர்ஜியா மகேந்திரனுக்கு வாக்ளிப்பதன் மூலம் நல்லதொரு சமூக சேவகிக்கு வாக்களித்தோம் என்கின்ற பெருமையை மட்டுமல்லாது,நமது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மறுத்து வாக்களித்தவர்கள் என்கின்ற பெருமையையும் பெற்றவர் ஆவீர்கள்.
Égalité,Fraternité - - சமத்துவம்,சகோதரத்துவம்
cergia photo
Aucun commentaire:
Enregistrer un commentaire