www.bbc.com ‘புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ப்ரூஸ், முதன்முதலா இந்தக் குகைகளை ஆராய்ந்து எழுதியிருக்கார். அதுக்கப்புறம் இந்திய - தமிழக ஆய்வாளர்கள் நிறைய பேர் இந்தக் குகைகளைப் பத்தி தொல்பொருள் ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள் செஞ்சு விளக்கமா எழுதியிருக்காங்க. ஆனா, 1965க்குப் பிறகு இந்தக் குகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவுமே நடக்கல. யாரும் வராததால இந்த ஏரியாவே புதர் மண்டிப்போச்சு.
இப்போ இந்த குகை இருக்கிற இடத்தை புலிக்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட்னு சொல்றாங்க. ஒரு அகழ்வாராய்ச்சி சைட்டாவோ, சுற்றுலாத் தலமாவோ இல்லை. கற்கால மியூசியமாஇருக்க வேண்டிய இடம், ஏன் இப்படி காடாச்சு? யாருக்குமே தெரியல!’’ என்கிற இவர், தானே முன்வந்து இங்கு சில ஆராய்ச்சிகள் செய்து அதை ஆவணப்படத்தில் இணைத்திருக்கிறார்.‘‘இந்தப் படத்துக்கு கேமரா பண்ணினது என் ஃப்ரெண்ட் வசந்த். திரைப்படக் கல்லூரியில படிச்சவர்.
எக்கச்சக்க நேரத்தையும் பணத்தையும் ரெண்டு பேருமே இதுக்காக செலவு பண்ண வேண்டியிருந்துச்சு. நாங்க அலசின வரைக்கும் இங்க வாழ்ந்த மக்கள், தனித்தனியா உணவு சேகரிக்கும் குழுவா வாழ்ந்திருக்காங்க. வேட்டைக்காக கல் ஆயுதங்களை உருவாக்கியிருக்காங்க.
Aucun commentaire:
Enregistrer un commentaire