அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா இத்தகவலை தெரிவித்தார். இலங்கையில் தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாலே அவர் இங்கு வர தீர்மானித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அவருடைய இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire