உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு கால கட்டம் பூமியில் உருவாகி வருவதாகவும், இந்த கால கட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. மனிதத் தலையீடு இல்லாமல் சாதாரணமாக விலங் கினங்கள் அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில், தற் போது நூறு மடங்கு அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிந்துவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விலங்கினங்களுடைய வாழ்விடங்கள் மாறிப்போவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், காலநிலை மாற்றமும் இந்த அழிவிற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்தனை உயிரினங்கள் அழியக் காரணமாக இருப்ப தால், தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் கட்டமைப் பையும் மனித இனம் தானாகவே அழித்துக்கொள்கிறது என இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகிறார். ஆறரை கோடி வருடங்களுக்கு முன்னால், பெரும் விண்கல் பூமியில் விழுந்து டைனோசர்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் அழிந்த காலகட்டத்துக்குப் பிற்பாடு, மிக அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிவது தற்போதுதான் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire