வங்காளதேசத்தில் 1971ஆம் ஆண்டு நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜமாத் இ இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் மொல்லாவிற்கு தூக்கு தண்டனையை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு போர்க்குற்ற தீர்ப்பாயம் அப்துல் காதர் மொல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மேல் அப்பீல் கோர்ட்டு மரண தண்டனையாக மாற்றியது.
இந்த தூக்கு தண்டனை நேற்று முந்தினம் இரவு நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் அப்துல் காதர் மொல்லாவை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.இந்த தடை காலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.காலை அப்துல் காதர் மொல்லா தரப்பு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும், இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெறும் என தலைமை நீதிபதி முஜாமல் உசேன் அறிவித்தார். அதன்படி விசாரணை நடைபெற்றது. அப்போது கோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. எனினும் அவரை தூக்கில் போடுவதற்கான புதிய திகதி சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்படவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire