இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும்
பயனற்றவை” என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை தடுக்கும் முயற்சியில் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் ரவுப், துண்டு அறிக்கையை தயார் செய்து உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு துண்டறிக்கைகளை வீசிக்கொண்டே வீர மரணத்தை தழுவினார்.
எப்படி போராட்டங்கள் நடத்தினாலும், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றவையே.
இலங்கை பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது. ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது” என்றார்.
இவ்வளவு காலமும் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக கவனஈர்ப்பு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின், ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வறு கூறியிருக்கிறாரே.. என்ன விவகாரம்? ஒருவேளை ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப் போகிறாரோ!

Aucun commentaire:
Enregistrer un commentaire