புவனேஸ்வர் : இளைஞர்கள் அடிமைத்தனமான மனநிலை விட்டு, சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்திய சமுதாயத்திற்கு சீர்திருத்தத்திற்கான மாற்றங்கள் தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சுவாமி சிதானந்தா ஜன்மா ஷதாபார்ஷிகி மகோற்சவா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்துல் கலாம், இந்திய இளைஞர்கள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : அறிவியல் ரீதியிலான முன்னேற்றம் தொடர்பான அறிவு, மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற விஷயங்களுக்கு எதிரான அறிவு ஆகியனவே நாட்டின் சீர்திருத்தத்திற்கு தேவையான, பயன்தரும் அம்சங்களாகும்; மத தலைவர்களும், ஆன்மிக தலைவர்களும் இது போன்ற சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்; மதம் சார்ந்த அடையாளங்கள், இனம் மற்றும் ஜாதி ஆகியன இந்திய சமுதாயத்தில் மாற்றமுல், சீர்சிருத்தமும் ஏற்பட மிகப் பெரிய சவாலாக உள்ளன; சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த அறிவை பெற இளைஞர்களை தூண்ட வேண்டும்; அவற்றை ஆராய்ந்து, அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மூட நம்பிக்கைகளில் இருந்து விடபட செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இளைய இந்திய தலைமுறை, மற்றவர்களின் வழிகாட்டுதல் இன்றி தானே தன்னை உணர்ந்து சுயஅறிவை வளர்த்துக் கொள்ளும் திறனை ஏற்படுத்துவது நமது கடமை; வழிகாட்டி திறமையை வெளிப்படுத்துவது உண்மை இல்லை; சுயமாக உருவாக்குவது, சுயமாக அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இது அறிவுத்திறஜ் குறைபாட்டை ஏற்படுத்தாது; உறுதி குறைப்பாட்டை ஏற்படுத்தி விடும்; தனி மனிதனை விட நாடு முக்கியம்; இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்; மக்களை வலிமைப்படுத்தி, பிரிவினையை அகற்ற மத தலைவர்கள் முன்வர வேண்டும்; மனித சமுதாயம் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டுள்ளது; பயங்கரவாதமும், மத மோதல்களும் உலகின் பல பகுதிகளை பாதித்துக் கொண்டுள்ளது; இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட ஆன்மிக சமுதாயத்தினர் உறுதி கொள்ள வேண்டும்; மத ஒருங்கிணைப்பு ஏற்பட கோட்பாடு மற்றும் உலக ஒத்துழைப்புடனான வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலாம் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் தான் எழுதிய வட்டத்தை சதுரமாக்குவது : இந்திய மறுமலர்ச்சிக்கு ஏழு படிகள் என்னும் புத்தகத்தை மேற்கோள் காட்டியும் அப்துல் கலாம் உரை நிகழ்த்தினார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire