இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உள்ள நீதிமன்றமொன்றில் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான செயன்முறைகளுக்கு தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விபரங்கள் 2031ம் ஆண்டு வரையில் இரகசியமாகப் பேணப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி தாரூஸ்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அறகி;கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் பற்றிய தகவல்களை வெளியிடத் தயாரில்லை என அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் பற்றிய தகவல்களை வெளியிடத் தயாரில்லை என அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் அமெரிக்காவும் சொந்த நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ ஏனைய சர்வதேச அமைப்புக்களோ நேரடியாக தலையீடு செய்ய முடியும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire