மிக மோசமான கல்வித்தரம் காரணமாக பல நாடுகளால் சிறுவர்களை படிக்க வைக்க முடிவதில்லை என்று ஐ.நா மன்ற கல்வி,அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் ( யுனெஸ்கோ) கூறுகிறது.
ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் கணக்குப் போடும் திறன் கிடைக்கவில்லை என்று யுனெஸ்கோவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், கால் பங்குக்கும் மேலான ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி தரப்படுவதில்லை என்றும் அது கூறியது.
மிகவும் மோசமான நிலைமை நீடிக்கும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே படித்தல் மற்றும் கணிதம் ஆகிய இரு விஷயங்களின் அடிப்படையான அம்சங்கள் தெரிந்திருக்கின்றன என்று இஸ்லாமாபாதில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire