தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக் காணப்படுவதால் இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் அனைவரும் வழங்க வேண்டும் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடத்திய 2014 ஆண்டுக்கான தைப் பொங்கல் விழாவின் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
மேலும் நாட்டின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளாக இவ்வாறான நிகழ்வுகள் கொண்டாடப் படுவதன் மூலம் அவர்களுடைய பாரம்பரிய, கலாசாரங்கள் வெளிப்படுத்தப் படுவதுடன் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர் வட பகுதியிலும், தென்பகுதியிலும் இருக்கக் கூடிய கலாசாரங்களுக்கிடையில் வேறுபாடு கிடையாது என்பதுடன் இரு இடத்திற்கும் மொழிகள் மட்டுமே மாற்றாக இருந்தாலும் அவை இரண்டும் தாய் மொழி யாகக் கொள்ளப்படுவதால் இரு மொழிகளுக்கும் சமமான உரிமை உள்ளது என தெரிவித்தார்.

இதனை விட எங்களுடைய வரலாறு, பாரம் பரியக் கலாசாரம் என்பவற்றைக் கொண்டே நாம் வாழ் கின்றோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
முன்னதாக விழாவுக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய கிராமிய நடனத்துடன் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire