இறுதி யுத்தத்தினில் காணாமல் போயிருந்த விடுதலைப்புலிகளது மற்றொரு தளபதியான பாப்பா உயிரிடனிருப்பது உறுதியாகியுள்ளது. பாப்பா உயிருடன் உள்ளார் அங்கு போனார் இங்கு வந்தார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவரை நேரினில் கண்ட சாட்சிகள் ஏதுமிருந்திருக்கவில்லை.
இந்நிலையினில் யாழ்.நகரினில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது பகிரங்கமாக பலரும் பாப்பாவை கண்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தினில் பணியாற்றுகின்ற மூத்த இராணுவ அதிகாரிகள் சிவிலுடையினில் அந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்த நிலையினில் அங்கு அவர்களுடன் பாப்பாவும் பிரசன்னமாகியுள்ளார்.
குறித்த அதிகாரிகள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி கத்துருசிங்கவின் உதவியாளர்கள் என்ற வகையினில் பலாலியிலிருந்தே வந்திருந்ததாகவும் அவ்வகையினில் பாப்பாவும் அங்கிருந்தே வந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.
இறுதி யுத்தத்தினில் சரணடைந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளது நிலை பற்றி தகவல்கள் அற்றிருக்கின்ற நிலையினில் அவர்களுடன் சரண் அடைந்த பாப்பா உயிருடனிருப்பது காணாமல் போனோரது குடும்பங்களிடையே சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.அரச தரப்பினால் இரகசிய தடுப்பு முகாம்கள் பேணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையினில் பாப்பா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே புலிகளது தளபதிகளான பதுமன் மற்றும் ராம் நகுலன் ஆகியோர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையினில் தற்போது பாப்பாவும் வெளியே வந்துள்ளார்.
வருட இறுதி கொண்டாட்டமாக கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள குமரிகளது குத்தாட்ட நிகழ்வொன்று மதுபான விருந்துடன் குறித்த விடுதியினில் ஏற்பாடாகியிருந்தது.இந்நிகழவிற்கே பாப்பா வருகை தந்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire