போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியா விஷேச ஒத்துழைப்பை அளித்துவருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் மீனவப் படகுகள் மூலமே இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன், இந்திய, பாகிஸ்தான் , நேபாளம், பர்மா, மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு இடையில் பிராந்திய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் உதவியுடன் ஆசிய தகவல் பறிமாற்ற சபை ஒன்றை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.இது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டோம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர் பின்வருமாறு விளக்கினார்:
எந்த ஒரு திணைக்களத்தனாலும் கைப்பற்றப்படும் போதைப்
பொருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடமே கையளிக்கப்படும். இவ்வாறு கையளிக்கப்படும் அல்லது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முதலில் முழுமையாக போதைப் பொருள் தடுப்பு பிரிவால் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படும்.
அங்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுஇ கைப்பற்றப்பட்ட பொருட்கள் போதைப் பொருட்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டால்,உரியமுறையில் சீல்வைக்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் நீதிமன்றத்துக்கு கையளிக்கப்படும்.கைப்பற்றப்படுகின்ற ஹெரோயின் போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகள் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. 500 மில்லிகிராமுக்கு குறைவான ஹெரோயின் கைப்பற்றப்படும் போது அது தொடர்பான வழக்கு நீதிவான் நீதிமன்றத்திலும் 500 மில்லிகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் தொடர்பா வழக்குகள் மேல் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுக்கப்படும்.இவ்வாறு கையளிக்கப்படும் ஹெரோயின் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின்னர் தண்டனைச்சட்டக் கோவையில் உறுப்புரை 425 முதல் 433 இல் கூறப்பட்டுள்ள முறைமைக்கு அமைய ஹெரோயின் அழிக்கப்படும்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிஇ பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதியான ஓர் உயர் அதிகாரிஇ நீதிமன்ற பதிவாளர்இ தேசிய அபாயகரமான ஒளடத கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகள்இ சட்டத்தரணிகள், நீதிபதியின் அனுமதிக்கு இணங்க ஊடகவியலாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் இரகசியமாக அல்லாமல் திறந்த இடத்தில் இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தண்ணீரில் கரைக்கப்பட்டு மலசலக்கூட குழியில் ஊற்றப்பட்டு அழிக்கப்படும்.
இந்தப் போதைப் பொருட்கள் கடலில் கரைத்து அழிப்பதால் சூழல் மாசடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. அதேவேளை அப்போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்படுமானால் சமூகத்திலுள்ள, போதைப் பொருள் உபயோகிக்காத மக்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கில் இந்த முறைகள் தவிர்க்கப்படுகின்றன. அதனால் தண்ணீரில் கரைக்கப்பட்டு மலசலகூட குழியில் ஊற்றி அழிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசலக்கூட குழிகளிலேயே இவ்வாறு கரைத்து ஊற்றப்படுவதாக அவர் தெரிவித்தார் அவ்வாறால்லாமல் வேறு ஒரு இடத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமானால் குறித்த இடத்துக்கு மேற்படி அதிகாரிகள் அனைவரும் வருகைதர வேண்டும்' என அவர் கூறினார்.கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் அழிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக நாட்டில் பல்வேறுபட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகள் இடம் பெற்றுவருகின்றன. ஹெரோயின் தொடர்பில் 12,000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரால் இலங்கையில் செயற்பட்டு வருகின்ற இந்த போதைப் பொருள் வலையமைப்பை முடக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச அளவில் இந்த போதைப்பொருள் மோசடி நீண்டு செல்வதாகவும் சர்வதேச அளவில் இருந்து செயற்படும் போதைப் பொருள் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் இலங்கை பொலிஸார் நாடியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.போதையற்ற ஓர் உலகை கட்டி யெழுப்பவும்,எதிர்கால சமூகத்துக்கு ஒரு சிறந்த உலகை கையளிக்கவும் இந்த ஆபத்தான போதைக் கெதிராக ஒவ்வொரு மனினும் தன்னால் முடியுமான முயற்சிகளை செய்ய முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்