விழுப்புரம் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திரு.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி.அங்கயற்கண்ணி அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டப் பொருள் பற்றி விளக்கமாகப் பேசினார்.
தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களும், அவர்களது குடும்பங்களும் சீரழிந்து போவதை அன்றாட செய்திகளிலும், ஊடகங்களிலும் பார்த்து மனம் நொந்து போன தாயுள்ளம் கொண்ட கழக தொண்டர்கள் "மது விலக்கை அமல்படுத்துவோம்" என்று அறிவித்த. அந்த அறிவிப்பிற்கு மாவட்டக் கழகம் தனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.
நான்கு தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட இறப்பு மற்றும் இரு முறை பதிவு வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக செயலாளர்கள் சரி பார்த்து குறைபாடுகள் இருப்பின் அதற்குண்டான படிவத்தை பூர்த்தி செய்து, குறைகளை நிவர்த்தி செய்திட விரைந்து செயல்பட வேண்டும் எனவும், நீதி கேட்கும் பேரணி விளக்க தொடர் பொதுக்கூட்டங்களை அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் சார்பில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, மற்றும் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயசூரியன் அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் திரு.ராமமூர்த்தி அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.கென்னடி அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு.காமராஜ், திரு.ஆசிர்வாதம், திருமதி.அமிர்தவள்ளி கோவிந்தராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.செல்வநாயகம், பொது குழு உறுப்பினர்கள் திரு.எஸ்.என்.டி.முருகன், திரு.ஜெகதீசன், திருமதி.சுபாஷினி அய்யனார் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.துரைராஜ், திரு.வசந்தவேல், திரு.முருகன், திரு.வைத்தியநாதன், திரு.ராஜ்வேல், திரு.வெங்கடாசலம், திரு.அரவிந்தன், திரு.ஆறுமுகம், திரு,கனகராஜ், திரு,பாண்டுரங்கன், திரு.பெருமாள், திரு.சின்னதம்பி, திரு.கிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர்கள் திரு.பொன்.ராமகிருஷ்ணன், திரு.டேனியல் ராஜ், திரு.செந்தில்குமார், திரு.சத்தியமூர்த்தி, திரு.எம்.எஸ்.குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.வி.பி.தாகப்பிள்ளை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு.அருண் பிரசாத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு.சத்தியகீர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் திரு.சர்ப்புதீன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் திரு.மாயக்கண்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire