இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 17ந் தேதி நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக செயல்பட ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இதற்காக தங்கள் அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கையில் ஆகஸ்டு 7–ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பார்வையாளர்களை அனுப்புமாறு அந்த நாடு விடுத்த அழைப்பின் பேரில், ஐரோப்பிய ஒன்றியம் தனது தேர்தல் பார்வையாளர் குழுவை இலங்கைக்கு அனுப்ப தொடங்கி உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.ஐரோப்பிய ஒன்றியக்குழுவின் திட்டப்படி இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 18 நீண்ட கால பார்வையாளர்கள் நிறுத்தப்படுவர். மேலும் 28 குறுகிய கால மேற்பார்வையாளர்களும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து பணியை தொடங்குவர்.இந்த தேர்தல் மேற்பார்வைக்குழுவினர் இலங்கை மற்றும் பிராந்திய, சர்வதேச சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.அதன்படி தேர்தலுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பு, தேர்தல் ஆணைய செயல்பாடுகள், அரசியல் கட்சியினரின் பிரசார நடவடிக்கைகள், மக்களின் அடிப்படை சுதந்திரத்தை மதிக்கும் பாங்கு, ஊடகங்களின் தலையீடு, வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் அறிவித்தல் போன்றவற்றை இந்த குழு கண்காணிக்கும். தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்கள் மற்றும் முறையீடுகளையும் இந்த குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire