lundi 27 juillet 2015

உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு கருவியாக தான் பயன்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கருணா,

எல்.ரீ.ரீ.ஈ யின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரும் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஒரு காலத்திய மெய்ப்பாதுகாவலருமாக இருந்த வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா கடந்த காலத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ யினைக் கைவிட்டு பிரதான அரசியல் நீரோட்டத்தில் தான் நுழைந்ததால் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு கருவியாக தான் பயன்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கருணா, ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் தேர்தலில் பங்குபற்ற தனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப் படாததையிட்டு மிகுந்த சீற்றம் அடைந்துள்ளார்.
ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலையாக இருந்த கருணா, எல்.ரீ.ரீ.ஈ யினால் ஆயுதப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூலோபாயமாக இருந்துள்ளார். வரப்போகும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை இணைத்துக் கொள்ளாததையிட்டு தனது கோபத்தை தெரிவித்த அவர், சில அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த சில கொலையாளிகளைக் கூட கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள், ஆனால் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக இருக்கும் தன்னை வரப்போகும் தேர்தல்களில் ஒரு வேட்பாளராக இணைத்துக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2004ல் எல்.ரீ.ரீ.ஈ யில் நம்பமுடியாத பிளவு ஏற்பட்ட உடனேயே, கருணா மற்றும் அவரது சக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரான பிள்ளையான் ஆகியோர் பிரதானமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேறு சில நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களுடன் சேர்ந்து அந்த அமைப்பை விட்டு வெளியேறி இருந்தார்கள், முறையற்ற உட்பூசல் காரணமாக ஏற்பட்ட அந்த சூழ்நிலை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களிடையே பயங்கரமான மோதல் உருவாவதற்கு வழி வகுத்தது.
அரசியல் படுகொலைகள்  கடந்த காலத்தில் நடைபெறும் ஒரு வழமையாக இருந்தபடியால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரும் மற்றும் ஐதேக வை சேர்ந்த ரி. மகேஸ்வரனும் 2005 மற்றும் 2008க்கு இடையில் படுகொலை செய்யப் பட்டார்கள்.
காலஞ்சென்ற சட்டமா அதிபர் கமலசபேசனின் மருமகனான காண்டீபனின் தந்தையான பாலேந்திரன் கொழும்பில் கப்பம் கோரி நடத்தப்பட்ட சர்ச்சையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப் பட்டது உட்பட பல தமிழ் வர்த்தகர்களும் கொல்லப் பட்டார்கள்.
கணிசமான அளவு தமிழ் வர்த்தகர்கள்; கொழும்பு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பகுதிகளில் வைத்து வெள்ளை வான்களில் வந்த மர்மமான நபர்களால் கடத்தப் பட்டார்கள், அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈ யினால் நடத்தப்பட்ட போரை தாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக ராஜபக்ஸ ஆட்சி பெருமை பேசினாலும், யுத்தத்துக்கு பின்னான காலநிலை வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற வடிவத்தில் பெரும் எண்ணிக்கையிலான மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுத்திருந்தது.
எனவே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தளபதியான கருணா, சிலோன் ரூடேக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில வேட்பாளர்களின் பின்னணி விபரங்களை வெளிப்படுத்தி, அவர்கள் கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் நடைபெற்ற அநேக அட்டூழியங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும் சொல்லியுள்ளார்.
கருணா தான் யாரை கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் எனக் குறிப்பிடுகிறேன் என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிடா விட்டாலும் கூட, அவரது வெளிப்படுத்தல்கள் உறுதிப் படுத்துவது, நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பெருமளவுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினைக் கைவிட்ட பின்புதான் நடந்துள்ளது மற்றும் அவரது வழிகாட்டிகள், கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் என அழைக்கப் படுபவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்துள்ளது, என்பதையே.
எல்.ரீ.ரீ.ஈ யினை விட்டு விலகி பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்த உடனேயே ஒரு பிரதி அமைச்சர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) கொள்கைகளைத் தாக்கியதுடன் பல சந்தர்ப்பங்களில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களை ரி.என்..ஏ தான் தவறாக வழி நடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் சிலோன் ரூடே உடனான நேர்காணலில், ரி.என்..ஏ  தமிழர்களால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது மற்றும் தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடாமல் விலகியிருப்பது ரி.என்..ஏ யின் வாக்கு வங்கியை பாதுகாப்பதற்காகவே என்று சொல்லியிருப்பது, கருணாவின் அரசியல் முதிர்ச்சி அவர் எல்.ரீ.ரீ.ஈ யை கைவிட்டதின் பின்னர் தெளிவாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. கருணா மேலும் தெரிவித்தது, கடந்த காலங்களைப் போல அல்லாது தனது முடிவுகளில் ரி.என்..ஏ பிடிவாதம் காட்டுவதில்லை மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் குறித்த நிலைப்பாட்டிலும் அது நெகிழ் தன்மையைக் கடைப்பிடிக்கிறது என்று.
கிழக்கு தமிழர்களின் நாடித்துடிப்பு
கிழக்கிலுள்ள தமிழர்களின் நாடித்துடிப்பை படித்ததின் பின் கருணா மேலும் சொன்னது, ராஜபக்ஸவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியதின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு மங்கியுள்ளது என்று.
சமீப காலம் வரை கருணா, மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பனவற்றின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். எனினும் அரசியலில் நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ கிடையாது நிரந்தரமான நலன்கள் மட்டுமே உள்ளது, எனும் பழமொழிக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ யின் பலசாலி கருணாவும் நன்கு பொருந்துகிறார்.
கருணாவால் நன்கு குறிப்பிடப் பட்டதைப் போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளான, அதிகாரப் பரவலின் விரிவாக்கம் மற்றும் மனிதாபிமான விடயங்களான அரசியல் கைதிகளை விடுவிப்பது, மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்கள் என்பனவற்றுடன் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனத்தை செலுத்தப் போவதாக ஆகஸ்ட் மாத பாராளுமன்ற தேர்தலுக்கான  தேர்தல் விஞ்ஞ}பனத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ரி.என்..ஏயின் தேர்தல் விஞ்ஞ}பனத்தில், 2009 ல் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்டதாக நம்பப்படும் போர் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் பற்றி உறுதியாக வலியுறுத்தப் படுவதால், ஸ்ரீலங்காவில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை இந்த வருடம் செப்ரம்பர் மாதம் வெளியிடப்பட இருப்பதால், அது ரி.என்..ஏயின் விசாரணைக்கான அழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
ஆகவே கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் என தான் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கியதையிட்டு கருணா சீற்றம் கொண்டிருந்தாலும், திட்டமிடப் பட்டுள்ள உள்நாட்டு யுத்தக் குற்ற விசாரணை கூட மேலும் பல பின்னணி தகவல்களை சம்பந்தப் பட்டவரின் வாயிலிருந்தே நேரடியாகவே பெறக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.               நன்றி தேனி

Aucun commentaire:

Enregistrer un commentaire