சிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த நவ சம சமாஜக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் தேசியக் கொடியின் 75 சதவீதம் சிங்கள சமூகத்தையே பிரதிபலிக்கிறது.
வாளேந்திய சிங்கமும், நான்கு வெள்ளரசு இலைகளும், தேசியக்கொடியின் பெரும்பகுதியில் இடம்பிடித்துள்ளன.
ஏனைய சமூகங்களுக்கு சரியான இடமளிக்காத, இந்த தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகியங்கனை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரான வட்டரகே விஜித தேரர், பொது பல சேனாவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக பல சேனாவின் அமைப்பாளருமாவார்.
பொது பல சேனாவுக்கு எதிரான தீவிர போராட்டங்களில் ஈடுபட்ட இவர், கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire