நெப்போலியனையே மண் கவ்வ வைத்த அந்த வீர இளைஞன் வெலிங்டன் பிரபு, கத்தரினுக்கு எழுதிய அந்தப் பதில் கடிதத்தில் இருந்தது... மேலே குறிப்பிட்ட அந்த மூன்றே வரிகள்தான்.
எனக்கு அம்மை நோய் கண்டு விட்டது. அதன் பாதிப்பு என் முகத்தை விகாரமாக்கி விட்டது. அன்று நீங்கள் நேசித்து, நாளெல்லாம் வர்ணித்து மகிழ்ந்த அந்த வட்ட நிலா ஒளி முகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அழகிழந்த குரூபியாக உங்கள் கத்தரின் இருக்கிறேன். தயவு செய்து இனியும் என்னைப் பார்க்க வரவேண்டாம். நீங்கள் வேறு அழகான பெண்ணைப் பார்த்து மணம் புரிந்து கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் காதலி கத்தரின்.
அந்த வரிகளை மீண்டும் வாசியுங்களேன்....உங்கள் காதலை நீங்கள் நேசிப்பீர்கள்..!
நன்றி .வரதன் கிருஸ்னன்
Aucun commentaire:
Enregistrer un commentaire