mardi 14 février 2017

தமிழர்களை துன்புறுத்துவதற்கு பிரபல்யமான ரிவி சனல் மதங்களுக்கு கடும் குற்றச்சாட்டு

 தமிழ் மக்களை மதம் மாற்றி தமது தேவாலயத்திற்கு அன்பளிப்புக்கள் வழங்குமாறு கடும் அழுத்தம் கொடுப்பதாக அத்தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தேவாலயத்திற்கு சுமார் 500 குடும்பங்கள் அங்கத்தவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பங்களிடமிருந்தும் அவர்களின் சம்பளத்தில் 10வீதம் அறவிடப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பணம் செலுத்தாதவர்களை தண்டனைக்குள்ளாக்குவதாகவும் உங்களுக்கு ஆண்டவர் தண்டனை வழங்குவார் என சபிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கணவனும் மனைவியும் வேலைசெய்யும் சில குடும்பங்கள் மாதாந்தம் 500 பிறாங்குகளை வழங்கி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தலைமை போதகரான போல் சற்குணராஜா கருத்து வெளியிட மறுத்து விட்டார் என அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை அவர் மீதான குற்றச்சாட்டை தெளிவாகியுள்ளதாக அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அன்பளிப்பாக பணம் வசூலிக்கப்படுவதுடன் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கமான பணத்தை செலுத்தும் குடும்பத்தின் தம்பதிகள் பணம் செலுத்தியமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர்.
இந்த தேவாலயம் வருடந்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் மேற்பட்ட தொகையை அன்பளிப்பாக வசூலித்து வருவதாக அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து பேர்ண் நகரில் இந்த போதகர் ஆடம்பர மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாகவும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் மாளிகை ஒன்றையும் இந்த மிசனரிக்கான கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire