lundi 31 août 2015

ஒசாமா பின்லேடன் இன்னமும் அமெரிக்க உளவு அமைப்பின் ஊதியம் பெறும் பட்டியலில்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்  எட்வர்ட் ஸ்நோடென். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தை தகர்த்த அல் கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா  பின்லேடன் பாகிஸ்தானில் தலைமறைவாக தங்கியிருந்த போது அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடனை தீர்த்துக்  கட்டியது அமெரிக்காவின் சாதனையாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா குறித்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி சர்ச்சையில் சிக்கி தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள ஸ்நோடென்தான்  இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மாஸ்கோ டிரிப்யூனுக்கு ஸ்நோடென் அளித்த பேட்டியில் ஒசாமா பின்லேடன் பஹாமாசில்  இருப்பதாகவும், அவர் அமெரிக்க உளவு அமைப்பின் ஊதியம் பெறும் பட்டியலில் இன்னமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், சிஐஏவிடமிருந்து அவர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் பெற்று வருவதாகவும் கூறியுள்ள  ஸ்நோடென், பின்லேடன் தற்போது தனது ஐந்து மனைவிகள் மற்றும் பல குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில்  வெளிவரவுள்ள தனது நூலில் ஆதாரங்களை தாம் வெளியிடப்போவதாகவும் ஸ்நோடென் கூறியுள்ளார்.

mercredi 26 août 2015

இலங்கையில், 2009ல், நடந்த சண்டையில் ஐ.நா.,வில் ஆதரவு அமெரிக்க அரசு...பல்டி

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பின்பற்றிவந்த அமெரிக்கா, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, திடீர், 'பல்டி' அடித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவாக, ஐ.நா., வில் தீர்மானம் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில், 2009 ல், நடந்த சண்டையில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா ,, மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், கடந்தாண்டு நிறைவேறியது. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மைத்ரிபால சிறிசேன, அதிபராக பதவியேற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையுடன் மோதல் போக்கை பின்பற்றி வந்த அமெரிக்கா, தற்போது, ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இலங்கை வந்துள்ள, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான, அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, நிஷா தேசாய் பிஸ்வால்,
செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிதாக பதவியேற்ற அரசுக்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும். போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே நடத்தும் வகையிலான தீர்மானத்தை, அடுத்த மாதம் நடக்கவுள்ள, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, சர்வதேச நாடுகளுடன் ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, இந்த தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகளும் மாறியுள்ளன; இதை, அமெரிக்கா உணர்ந்துள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில், அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது, சர்வதேச அளவில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த மாற்றம்? சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ராஜபக் ஷே, இலங்கை அதிபராக இருந்தபோது, சீனாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். இலங்கையில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டாவில், பிரம்மாண்டமான துறை
முகத்தை அமைக்க, சீனாவுக்கு அனுமதி அளித்தார்.

இலங்கை கடல் பகுதிக்குள், சீன போர்க்கப்பல்கள் வருவதற்கும் அனுமதி அளித்தார். இதனால், 'இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும்' என, கருதிய அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக காய் நகர்த்தியது. இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததற்கு, இதுவே காரணமாக கூறப்பட்டது.

தற்போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, சீனாவுடனான உறவில், ஆர்வம் காட்டவில்லை. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறார். இதனால், அமெரிக்காவும், இலங்கை விஷயத்தில், தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ .6.5 கோடி உதவி: இலங்கையில் உள்நாட்டு போரால் இடம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி, வேகமாக நடந்து வருகிறது. திரிகோணமலை மாவட்டம், சாம்பூரில், மறுகுடியமர்த்தும் பணிகள் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டன. இந்த பணிகளுக்காக, 6.5 கோடி ரூபாய் அளிக்க, அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நிதியில், சாம்பூரில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் ஆகியவை கட்டப்படவுள்ளன.

முந்தைய தீர்மானம் என்ன?

* இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.
* இது தொடர்பாக, விரிவான, சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, இலங்கைக்கு எதிராக, 2014 மார்ச்சில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
* இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, அமெரிக்கா உட்பட, 23 நாடுகள் ஓட்டளித்தன.
* பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உட்பட, 12 நாடுகள், தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்தன.
* இந்தியா உட்பட, 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. 23 நாடுகள் ஆதரவுடன்
தீர்மானம் நிறைவேறியது.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் விபத்து 11 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

கொச்சி துறைமுகத்தில் இருந்து வியாபின் பகுதிக்கு கொச்சி மாநகராட்சி பயணிகள் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. நேற்று கொச்சி துறைமுகத்தை நோக்கி பயணிகள் படகு கடல் முகத்துவாரம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த படகில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது வேகமாக வந்த மீன் பிடி படகுடன் பயணிகள் படகு பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் படகு 2 துண்டாக உடைந்து கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேரின் பிணங்களை மீட்டதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் மறுக்கவில்லை. இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல் படையினர், நீச்சல் வீரர்கள், கடலோர கப்பல்கள், கடலோர ரோந்து படையினர் மற்றும் துறைமுக மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 5 கடலோர கப்பல்கள் உள்பட 11 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

மீட்பு பணியினர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும் மேலும் பல பயணிகள் காணாமல் போனதாக தெரியவருகிறது.

கொச்சி படகில் பயணம் செய்ய 25 பேருக்கு மட்டுமே டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. ஆனால் அந்த படகில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

dimanche 23 août 2015

குருநாகல் பகுதியில் சிவாஜிலிங்கம் மாத்தையா வடகிழக்கு மக்களுக்கு பெருமை செர்த்த வாக்கு 91

மகிந்த ராஜபக்ஸவை எதிர்த்து குருநாகலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் மட்டும் பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார்.தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.
 தலைவர் பிரபாகரனின் மைத்துனர் சிவாஜிலிங்கம் தனக்கு எதிராக களமிறங்கி குருநாகலில் போட்டியிடும் ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியவன் தான் என்றும் மகிந்த கூறியிருந்தார்.              .....கருடன்

பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி?கலையகம்

நீங்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதாரம் திவாலானால் என்ன செய்ய வேண்டும்? கிரேக்க மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். அந்த நாட்டில், யூரோ நாணயத்திற்கு பதிலாக, மாற்று நாணயங்களின் பாவனை பெருகி வருகின்றது. ஒரு மாற்று நாணயத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது எப்படி?

கிரேக்க நாட்டில், குறைந்தது 80 மாற்று நாணயங்கள் பயன்படுத்தும் அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன. குறைந்தது பத்துப் பேர், அதிகப் படியாக ஆயிரக் கணக்கில் உறுப்பினர்களை கொண்டதாக இந்த அமைப்புகள் உள்ளன. "மாற்று நாணய அமைப்புகள் அரசுக்கு வரி கட்டாமல் தவிர்க்கப் பார்க்கின்றன" என்று கிரேக்க அரசு குற்றஞ் சாட்டினாலும், அதை சட்டவிரோதமாக்க முடியாத நிலையில் உள்ளது.

TEM என்ற மாற்று நாணயம் மிகவும் பிரபலமானது. அதன் உறுப்பினர்கள் ஓராயிரத்தை தாண்டியுள்ளது. வோலோஸ் எனும் நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களினாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. TEM நாணயத்தின் பெறுமதி யூரோவுக்கு சரி சமமானது. ஆகவே, ஒருவர் யூரோவில் பணம் செலுத்துவது மாதிரி, TEM கொடுத்தும் பொருட்களை வாங்கலாம்.

நாணயப் பரிவர்த்தனை எவ்வாறு இயங்குகிறது? TEM பாவிக்கும் நபர்களின் பட்டியல், அவர்களிடம் உள்ள பணத்தின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் கணனியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் எங்கேயும் எப்போதும் பயன்படுத்தும் வகையில், இணையத்தில் பார்வையிடலாம். எவ்வளவு TEM செலவாகி உள்ளது, மிச்சம் எவ்வளவு என்பதையும் பார்க்கலாம்.

கடையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, வைத்தியரை பார்ப்பது, முடி திருத்துவது, கல்வி கற்பது, போன்ற சேவைகளுக்கும் TEM பயன்படுத்திக் கொள்ளலாம். யூரோ நாணயம் மாதிரி, TEM நாணயத்தை கண்ணால் காண முடியாது என்பது மட்டுமே வித்தியாசம். அதாவது, அதற்கு பணத் தாள்கள், சில்லறை குற்றிகள் எதுவும் கிடையாது.

ஒருவர் தனது மாற்று நாணயத்தை எவ்வாறு சேமிக்கிறார்? அதற்கு ஏதென்ஸ் நகரில் இயங்கும் ATX நாணயம் இலகுவான விளக்கம் அளிக்கலாம். 2011 ம் ஆண்டில் இருந்து இயங்கும் ATX வலையமைப்பில், ஆயிரக் கணக்கானோர் சேர்ந்து விட்டனர். அதனை "நேர சேமிப்பு வங்கி" என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்த வேலை நேரத்தை சேமித்து அதை பணமாக மாற்றுவது. 

உதாரணத்திற்கு, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உடல் உழைப்பை வழங்குகின்றார். அதே நேரம், ஓர் ஆசிரியர், பாடசாலையில் எட்டு மணி நேரம் படிப்பிக்கிறார். யார் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை. வேலை செய்யும் மணித்தியாலம் ஒவ்வொன்றுக்கும் பெறுமதியை பணத்தால் அளக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் சம்பளம் என்கிறோம்.

ATX வங்கியில், பணமல்ல, வேலை நேரம் மட்டுமே கணக்கு வைக்கப் படுகின்றது. உறுப்பினர்கள் தாம் வேலை செய்த நேரங்களை, அந்த வங்கியில் சேமித்து வருவார்கள். அதைக் கொண்டு, கடையில் பொருட்களை வாங்கலாம்! அதிசயம் ஆனால் உண்மை. இது நடைமுறைச் சாத்தியமான விடயம் தான். உண்மையில், பணம் என்பதன் அர்த்தம் அங்கே தான் உணரப் படுகின்றது.

என்னிடம் நூறு ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் அர்த்தம் என்ன? நூறு ரூபாய்க்கு பெறுமதியான உழைப்பை, சேவையை அல்லது பொருளை வழங்குவதற்கு இன்னொருவருக்கு கடமைப் பட்டுளேன். இன்னொரு விதமாக சொன்னால், எனது சேவை, உழைப்பு, பொருளை பெற்றுக் கொண்ட ஒருவர், தனது கடமைப்பாட்டை நூறு ரூபாய் மூலம் ஈடு கட்டியுள்ளார்.

இது தான் பணம் என்ற பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால் தான், ATX வங்கியில், பணத்திற்கு பதிலாக நேரத்தை சேமிக்கிறார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் நன்மை உண்டாகின்றது. பணம் இல்லாதொழிக்கப் பட்டுள்ள படியால், இலஞ்சம், ஊழல் நடக்கவும் வாய்ப்பில்லை. யாரும் செல்வம் சேர்த்து பணக்காரனாகவும் முடியாது. அதே நேரம் யாரும் ஏழ்மையில் கஷ்டப் படவும் மாட்டார்கள்.

பெண் கல்விக்காக துப்பாக்கிச் சூட்டை தாங்கிய சிறுமி மலாலா பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ* கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்'

பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் (வயது 17). கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்துவந்த இவர் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி பள்ளிக்கூட பஸ்சில் மலாலா பயணம் செய்தபோது தலீபான் தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். லண்டனில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின்மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற மலாலா, தலீபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.மலாலாவின் குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் வசித்து வருகின்றது. பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2014-ம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.

உயிர்பிழைத்த மலாலா யூசுப்சாய், லண்டனில் உள்ள பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுவருகிறார் மலாலா, கணிதம், இயற்பியல், தாவரவியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ * கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்' ரேங்குகளை பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

jeudi 20 août 2015

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேரும் தோல்வி

 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். சுயேட்சைக் குழு இல.4ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1979 ஆகும். முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 10 பேர் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட எதிர்பார்த்திருந்த நிலையில் கூட்டமைப்பு அவர்களின் கோரிக்கையை நிராகரித்தமையினால் சுயேட்சையாக அவர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .படம் பலயது 

lundi 17 août 2015

மாவை சேனாதிராஜாவின் சின்னவீடும் பிள்ளைகளும்!!


72 வயதான மாவை சேனாதிராஜா தனது சின்ன வீடாக கருதி தனது அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வரும் பகுதியாகவே யாழ்ப்பாணத்தைக் கருதியுள்ளார். இவரது பெரிய வீடு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ளது. அதன் புகைப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தனது சின்னவீடு உள்ள இடமாகக் கருதும் மாவை சேனாதிராசா 1989ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் போது இவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளின் அடிப்படையில் இவர் சாதாரண ஒரு அரச உயர் அதிகாரியின் சம்பளம் மற்றும் படிகளே பெறுவார். ஆனால் இவருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள பெறுமதியான இடத்தில் இவ்வளவு பெரிய மாளிகையை இந்த சம்பளத்தில் இருந்து பெற்றுக் காள்ள முடியுமா? இது சேனாதிராஜாவிற்கு மாத்திரம் அல்ல சுரேஷ், செலவம், சம்மந்தர், சரவணபவன் போன்ற பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பொருந்தும் செய்திதான் கடந்த காலங்களிலும் இதேமாதிரியாக தமிழ் மேட்டுக்குடி மிதவாதக் கட்சிகளின் 'தலவரகள் இருந்தார்கள். ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நல்லவர்கள் இருந்திருக்கின்றார்கள் தனிப்பட்ட வாழவில் அரசியல் செயற்பாட்டில் அல்ல.

பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை ;ஜோன் செனவிரத்ன

இலங்கை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள ஏழு சிரேஷ்ட சுதந்திரக் கட்சி தலைவர்களும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவே தகுதியானவர் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி மையகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு நியமிக்க நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, சமல் ராஜபக்ஷ, அதாவுத செனவிரத்ன, ஏ.எச்.எம். பெளசி, சுசில் பிரேம் ஜயந்த், அநுர பிரியதர்சன யாப்பா ஆகிய கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரே தகுதியானவர் என ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் செனவிரத்ன,
ஆட்சிக்கு வரும் ஐ.ம.சு.வுடன் இணைந்து செயற்பட தயார் என்பதை ஜனாதிபதி தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஐ.ம.சு.மு. வெற்றியை அவர் அதில் உறுதி செய்துள்ளார். சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை பிரதமராக்க ஒத்துழைக்குமாறு 7 பேரின் பேரை அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவே உகந்தவர். எமது பெயரை பிரதமர் பதவிக்கு உகந்தவர்களாக குறிப்பிட்டது குறித்து நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் நாம் 7 பேரும் பிரதமர் பதவி ஏற்க தயாரில்லை. மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு கோருகின்றனர் என்றார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம். பெளசி, சமல் ராஜபக்ஷ மற்றும் பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பங்கேற்கவில்லை.

சுசில் பிரேம ஜயந்த்
சுசில் பிரேம் ஜயந்த கூறியதாவது, 113 ற்கும் அதிகமான ஆசனங்கள் எமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எமது வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு பிரதான காரணமாக அமைந்தது.
ஐ.ம.சு.மு. வெற்றிக்கு ஜனாதிபதியின் கடிதத்தினால் அணுவளவு பாதிப்பும் ஏற்படாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்களினாலும் நாம் தளரவில்லை. சகல இனத்தவர்களுக்கும் நாட்டில் அமைதியை ஏற்படுத்திக் கொடுத்தது மஹிந்த அரசாங்கமே.
எமது தேர்தல் செயற்பாடுகளுக்கு நாம் பாதாள உலகத்தினரின் ஒத்துழைப்பை பெறவில்லை. ஒற்றுமையாக நாம் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைக்க ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களிக்குமாறு கோருகிறோம்.

தினேஷ் குணவர்தன
தினேஷ் குணவர்தன கூறியதாவது, தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஐ.தே.க. செயற்படுகிறது. ஐ.ம.சு.மு. வெற்றிக்கு மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். சந்தையில் அரசி 75 ரூபா முதல் 100 ரூபா வரை விற்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடமிருந்து 30 ரூபாவுக்கும் குறைவாகவே நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. இலங்கை வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யோசனைகள் தொடர்பான சட்டமூலங்கள் எதனையும் நிறைவேற்ற வில்லை. கடந்த நல்லாட்சி அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மக்கள் ஆணையை ஏற்று அதன்படி பிரதமரை நியமிப்பதை எவருக்கும் நிராகரிக்க முடியாது. சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு தெரிவான போது மக்கள் ஆணையை ஏற்று அவரை பிரதமராக நியமிக்க டீ.பி. விஜேதுங்க நடவடிக்கை எடுத்தார். ரணிலை சந்திரிகா குமாரதுங்க பிரதமராக நியமித்தார். மைத்திரிக்கும் இது தவிர வேறு வழி கிடையாது.

வாசுதேவ நாணயக்கார
வாசுதேவநாணயக்கார கூறியதாவது,
ஐ.ம.சு.மு. இந்த தேர்தலில் வெல்வதற்கான பெரிய சாட்சியமாக மைத்திரிபால ஜனாதிபதியின் கடிதம் விளங்குகிறது. அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஏகமனதாக சகல ஐ.ம.சு.மு. கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் வேறு பெயர்களை சிபார்சு செய்திருப்பது நகைப்புக்குரியதாகும்.
ஆளும் தரப்பு தேர்தல் பிரசாரத்திற்காக பெருமளவு பணம் செலவிடுகிறது. அடுத்த தேர்தலில் துரோகம் காட்டிக் கொடுப்புகளுக்கு மக்கள் உரிய பதில் வழங்குவார்கள்.

விமல் வீரவங்ச
விமல் வீரவங்ச கூறியதாவது,
தோல்வியில் இருந்து மீள அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றது. ரணில் - மைத்திரி திருமணம் ஒகஸ்ட் 17ம் திகதி விவகாரத்தானது. ஆனால் ஒகஸ்ட் 17ம் திகதி தமது அரசாங்கமொன்று உருவாகும். அவருக்கு இலகுவாக அதன்போது பணி புரிய முடியுமாகும். வாக்கில் வெல்லாமல் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க முடியும் என்றால் மக்கள் ஆணையுடன் வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏன் பிரதமர் பதவி வழங்க முடியாது? மஹிந்தவை பிரதமராக்குவதை தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஐ.ம.சு.மு. வெல்வது உறுதியானதாலே பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதி ஆராய்கிறார்.
த.தே.கூ. ஆட்டுவிக்கும் அரசாங்கமே ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் உருவாகும்.
ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராக தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். தேர்தலில் வெல்வது ஐ.தே.க. அல்ல ஐ.ம.சு.மு என தேர்தலுக்கு முன் அறிவித்தது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். 

தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் குஷ்பு பேட்டி

பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நேற்று பெங்களூர் சென்றிருந்தார்.

பின்னர் அவர், குயின்ஸ் ரோட்டில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குஷ்பு கூறியதாவது: -

மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பெங்களூருக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பிரசாரம் மூலம் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் மூலம் பெங்களூர் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் ஒரு நடிகையாக இங்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக வந்துள்ளேன்.

மாநகராட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். காங்கிரசில் தான் தமிழர்களுக்கு முக்கிய பதவிகள், பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 11 தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். எத்தனை வார்டுகள் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.

முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியால் மக்கள் தங்களது சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். மது விற்பனையால் தமிழ்நாட்டுக்கு ரூ .30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் பள்ளி மாணவ- மாணவிகள் மதுவுக்கு அடிமையாகி விட்டனர். சீருடை அணிந்து கொண்டு மது வாங்கி குடிக்கும் மாணவிகளை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

அதனால் தான் தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த போராட்டத்தில் சசி பெருமாள் உயிர் இழந்துள்ளார். கர்நாடகத்தில் அது போன்ற நிலை இல்லை. மது விற்பனையில் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே மது விற்பனையில் கர்நாடகத்தையும், தமிழகத்தையும் ஒப்பிட வேண்டியதில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினை இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது காவிரி பிரச்சினையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி பிரச்சினையால் தமிழ்நாட்டு விவசாயிகள் தான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது, எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும் உடனடியாக பேசி தீர்த்து விடுவார்.

ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக அரசுடன் பேசாமல் இருந்து வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்வந்து கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், காவிரி பிரச்சினைக்கு மட்டும் அல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் எந்த பலனும் இந்தியாவுக்கு கிடைக்கப்போவதில்லை.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

dimanche 16 août 2015

குறைந்தது 40 அகதிகள், கப்பல் ஒன்றில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிக்கு அருகில், குறைந்தது 40 அகதிகள், கப்பல் ஒன்றில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பலின் கீழ் தளத்தில், மூச்சுத் திணறி மாண்டதாக நம்பப்படுகிறது.இத்தாலியையும் கிரீசையும் சென்றடைய, ஆயிரக்கணக்கில் அகதிகள் முயன்றுவருவதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஆக மோசமான அகதிகள் பிரச்சினை அதுவென்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம், அதனைக் கையாள முயற்சி மேற்கொண்டு வருகிறது.போர், பேரிடர், வறுமை ஆகியவற்றால், அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.

இன்னும் மறக்கவில்லை கம்யூனிசத்தை

மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.

உதாரணத்திற்கு சில:

 - மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா?
"................" ???

- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. "தேசங்களின் செல்வம்" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? "................" ???

- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்?
 ".................." ???

- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உங்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா?
"..............." ???

- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா?
 "............." ???

இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? முதலாளித்துவ ஆதரவாளர்களே! அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்! குருவையே மறக்கலாமா?

ஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன!

இதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.

அதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.

ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அத்திகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.

இன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், "முதலாளித்துவ அறிஞர்" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."                                          ....கலையகம்

samedi 15 août 2015

ஒட்டுபுலி பழ. நெடுமாறன் பசிப்பதால் மரக்கறிகளையும் விட்டுவைகாத நாசிப்புலி

இலங்கையில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய கேரளா ஒப்பந்தம் போட்டிருப்பதாக இலங்கை தமிழர்களின் அழிவுக்கு காரணமான தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரள அரசின் இந்தப் போக்கை கண்டித்து தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பழ. நெடுமாறன் கூறியதாவது: இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, இலங்கையிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யும் நோக்கில்தான் தமிழக விவசாயிகளின் காய்கறிகளை புறக்கணிக்கும் செயலை செய்கின்றன என நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் மோடி இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும். தமிழக அரசு உடனடியாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காய்கறிகளை கொண்டு செல்வதை தடுக்கும் செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அன்று மத்திய அரசை எதிர்த்தவர்கள் இன்று மத்திய அரசிடம் இவ்வாறு சந்தர்ப்பவாதியான பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

jeudi 13 août 2015

றக்பி வீரர் வசீம் தாஜு ஆண்குறியை அறுத்து அசீட் ஊத்திய மகிந்தவின் மகன் ரோகித

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும்

ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர். தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிதவின் காதலி தெரிவித்த தகவல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.மகிந்தவின் மகன் ரோகித ஒரு காமக் கொடூரன். அவன் என்னைக் காணும் முன் நானும் வசீம் தாஜு நல்ல நண்பர்களாக இருந்தோம். ரோகித என்னுடன் தொடர்புபட்டபின் வசீம் தாஜு என்னை விட்டு விலகிவிட்டார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். ரோகிதவுடன் நான் தொர்பில் இருந்த போது என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி என்னை பாலியல்ரீதியில் பெரும் சித்திரவதை செய்தான்.


எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு பல தடவை கடித்த போது நான் அவனது தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன். ரகர் விளையாட்டில் வசீம் தாஜு மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவ விடவும் மென்னையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். "ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்" என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான். ரோகித ஒருதடைவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத் தாக்கினான்.
எனது வயிற்றுப் பகுதியில் தாக்கிய போது நான் மயங்கிவிட்டேன். என்னை அறைக்குள் விட்டுவிட்டு வெளியேறிவிட்டான். அதன் பின்னர் நான் ரோகிதவுடன் கதைக்கவில்லை.அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து நள்ளிரவில் ரோகிதவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர் என்னுடன் கதைத்த ரோகித "உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்" என கூறிய படி வசீம் தாஜு வை சித்திரவதை செய்யத் தொடங்கினான். ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது. வசீம் தாஜு க்கு நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித. நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான்.

அதன் பின்னர் வசீம் தாஜு என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல்சத்தம் 
 கேட்டது. அத்துடன்  அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் கேட்டது. அத்துடன் அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் எனக்குத் தெரிவித்த போது நான் தொலைபேசியை அணைத்துவிட்டு கத்தினேன். அதன் பின்னர் நான் நேரிடையாக அன்ரிக்கு (மகிந்தவின் மனைவி) தொலைபேசியில் தொடர்பு எடுத்தேன். ஆனால் என்னுடன் அவர் தொடர்பு கொள்ளவில்லை. ரோகித மீண்டும் மீண்டும் தொலைபேசியில் எனக்கு தொடர்பு எடுத்த போதும் நான் எடுக்க வில்லை. அதன் பின்னர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினான். உனது உடம்மை தொட்டு அனுபவித்தவன் தற்போது காருக்குள் கருகிக்கிடக்கிறான் போய்ப் பார் "என்று வந்தது, நான் அப்படியே மயங்கிவிட்டேன். அதன் பின்னர் காலையில் எனது நண்பி எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து காருக்குள் சடலம் கிடப்பதாகத் தெரிவித்த போது துக்கம் தாளாது அழுதேன்.இவ்வாறு தனது நெருங்கிய நண்பிக்கு தெரிவித்துள்ளாள் மகிந்த மகன் ரோகிதவின் முன்னாள் காதலி யசாரா !!
 நன்றி சிங்கள இணையம். மொழிபெயர்ப்பு அல்.றிஸ்வான்
எனவே தற்போதைக்கு கொலை என சந்தேகிக்கப்படும் வஸீம் தாஜுதீனின் மரணத்தின் மர்மத்தை துலக்கி காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் உள்ளது.
அதற்கான நாளும் வெகு தொலைவில் இல்லை. அரசியல் புள்ளியின் மகனான, நபருக்கு வஸீமை கொலை செய்ய (சந்தேகம்) உதவிய பாதுகாப்பு தரப்பினர் என பலரின் பெயர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள நிலையில் அவர்கள் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டால் அது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கான காரணம் அல்ல.





வரும் சமூகத்தை காக்க இன்றைய தீர்ப்பு மக்களிடம்!!!

மக்களின் விடுதலைக்காகன போராட்டத்தில் புளொட் இயக்கத்தில்தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பால தோழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. விடுதலை போராட்டத்தை தனது அதிகாரத்தில் வைத்து கொள்வதற்காக புலிகளினாலும் ஏனைய இயக்கங்களினாலும் புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறக வெளியில் இருந்து புளொட் இயக்கத்தை நோக்கி தாக்குதல்கள் நடைபெற்றதில் இயக்கம் அழிக்கப்படவில்லை. புளொட்டை வழிநடத்தும் பொறுப்பை தம்முடைய தலமையின்கீழ் கொண்டுவருவதற்காக உள்படுகொலைகளை மிகமோசமாக நிறைவேற்றி மாபெரும் இயக்கத்தை அழித்து கொலை கொள்ளை கும்பலாக மாற்றி அக்கும்பலை வழிநடத்திவரும் . சித்தாத்தன். மற்றும் சித்தாத்தனின் கைகூலிகளில் ஒன்றான கந்தையா சிவநேசன் இவரின் தகுதிப்பெயர் தூள்பவன் இவர்ளை ஓர்கணம் சிந்தித்து பாருங்கள் தோழர்களே! மக்களே!

  16 07 1989 அன்று உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் தலைவராக இருக்கும்   .சித்தாத்தன் இலங்கை அரசு கொடுக்கும் எலும்பு துண்டுகளை சூப்பிக்கொண்டு கொலும்பில் இருப்பதற்காக தூள்பவனின.; ஆர் ஆர்.
தூள்சூரி. பக்கிரிமோகன் போன்ற பல கிருமினல்களின் உதவியுடன் புளொட்டில் இருந்து வெளியேறி இருந்த பல நூற்றுக்கணக்கான தேழர்களை படுகொலை செய்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலைசெய்து அரச படைகளிற்கு சேவையாற்றியதன் மூலம். எக்கொடூரத்தையும் இவர்கள் தமிழ் மக்கள் மீது செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருந்தது.
குறிப்பாக தமிழ் சமூகத்தினரிற்கே கொலைக்கழகமாக திகழ்ந்த வவுனியா நகரைப்பற்றி மக்களே சிந்தித்துபாருங்கள்!!!
காணாமல் போன உறவுகளை தேடி இலங்கை அரசிடம் அலைகின்றேம். மனித உரிமை அமைப்புகளிடம் மனுக்கொடுக்கின்றோம். ஆனால் பல ஆயிரக்கணக்கான எம்உறவுகளின் கொலைகள்! கடத்தல்! கற்பழிப்பு! கொள்ளை! களவுகள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபட்ட இவ்அரசகூலிகளை எம்பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் மிககேவலமான அரசியல் சூழ்நிலை எம்சமூகத்தை ஆக்கிரமித்திருப்பது மிகவும் வருந்த தக்கது.

எமது சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு. ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் இச்சமூக விரோதிகளிற்கு தண்டனை கொடுக்க முடியும்.

இவர்கள் செய்த அனைத்து கொலைகளிலும் தன்னை நேரடியாக ஈடுபடத்தாத சித்தாத்தன் தன்னைசுற்றி வைத்துக்கொண்ட கொலை கும்மல்மூலம் அனைத்தையும் நிறைவேற்றி வந்தார். இன்று எம்முன் பாராளுமன்ற தேர்தலில் தன்னை ஈடுபடுத்தி வன்னி மாவட்டத்தில் ஓட்டு பொறுக்கி திரியும் கந்தையா சிவநேசன் இவரின் தகுதிப்பெயர் தூள்பவன் நேரடியாக செய்த கொலைகளில் சிலவற்றை இங்கே தருகின்றோம். இதற்கான தகுந்த தண்டனையை அப்பிரதேசத்து மக்களாகிய நீங்கள் தீர்ப்பாக வழங்குவீர்கள் என உறுதியுடன் எதிர்பார்திருக்கின்றோம்.

1.            முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியை நிரந்திர வதிவிடமாக கொண்டிருந்தவரும் முல்லைதீவு மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் பொறுப்பாளராக இருந்து புளொட் இயக்கத்தை வழர்த்த தோழர் சொக்கலிங்கம் சத்தியன் 26 05 1988 அன்று கொழும்பு விடுதியில் வைத்து தூள்பவன். ஆர் ஆர் இருவருராலும் சுடப்பட்டார்: - சாட்சிகள் நேரில் பார்த்த உறவினர்கள். விடுதிஉரிமையாளர்.

2.            அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள் மற்றும் அமைப்பு விதிமுறைகளிற்கு எதிரான     நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான                 நடவடிக்கைகளை முன்வைத்த புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் உமா பிரகாஸ் 26 01 1994 அன்று கொழும்பில் வைத்து தூள்பவனால் சுட்பட்டார். இவரது இழப்பை தாங்கமுடியாத மனைவி உமா இரண்டே வயதான மகனுடன் தற்கொலை செய்துகொண்டார்.

3. புளொட்டின் அரசியல் பிரிவான dplf கட்சியின் பிரதித்தலைவர் ஆறுமுகம் செல்லையா என அழைக்கப்படும் கரவை கந்தசாமி யுடன்ஏற்பட்ட  முரன்பாடுகளை அடுத்து சித்தாத்தனின் இடத்தை பாதுகாக்க கரவையை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற             தூள்பவனால் 31 12 1994 அன்று கொழும்பில சுட்பட்டார.;

4.            முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குளத்தை நிரந்தர வதிவிடகாகவும் புளொட் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ பொறுப்பாளராகவும் 1986               வரைக்கும் கடமையாற்றி வந்த தோழர் கோண் திருநாவல் குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து து}ள்பவன் மற்றும் தூள்சூரி என்பவர்களால் அவரது  மனைவி மற்றும் மகளிற்கு முன்னால் கொடூரமரமாக               சுட்டுக்கொல்லப்பட்டார்: காரணம்                 வவுனியாவில் சித்தாத்தன் கும்பல் மேற்கொண்டுவந்த அட்டூழியங்களிற்கும் அவர்களின் தேர்தல் பிச்சாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார் என்பதற்காகவே இத்தோழரை கொன்றார்கள்.   

5.            புளொட்டில் இருந்து வெளியேறி நீர்கொழும்பில் தங்கியிருந்த ஜெகன் வீட்டிற்கு இராணுவத்துடன் சென்ற து}ள்பவன் அவரை கைது செய்து வவுனியாவிற்கு கொண்டுவந்து காதை வெட்டி. கண்ணை தோண்டி. கழுத்தை வெட்டி மிககொடூரமாக கொலை செய்தவர் இன்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தூள்பவன்எனும் தகுதிப்பெயரைக் கொண்ட கந்தையா சிவநேசன்.

6. கனகராயன் குழத்தை நிரந்திர வதிவிடமாக கொண்டவரும். கனகராயன் குளத்து பளைய விதானையாரின் மகனான தம்பிராஜா திலீபன் வவுனியா பூந்தோட்ட அரசினர் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிவந்தார். மூன்று பிள்ளைகளின் தய்தையான இவரை தூள்பவன் கும்பல் அவரது வீட்டில்வைத்து சுட்டுக்கொன்றது. 
               
!!! தங்களால் நேரடியாக கொலை செய்ய முடியாத புளொட் உறுப்பினர்களை புலிகளின் உதவிகளுடன் படுகெலைகளை நிறைவேற்றிகொண்டார்கள். இவற்றில் சிலதகவல்களை தங்களிற்கு அறியதருகின்றோம்:

1. வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவானந்தன் சண்முகநாதன் எனஅழைக்கப்படும் வசந்தன் புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கிளைமோர் தாக்குதலினால் வசந்தனின் மகனுடன் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து 15 07 1998 அன்று தூள்பவனின் திட்டமிடலில் கொல்லப்பட்டார். காரணம்: இவர் மாணிக்க தாசனின் மிகுந்த விசுவாசியாக இருந்தமை.

2. புளொட் இயக்கத்தின் நடைமுறை தலைவராக  செயல்பட்டு வந்த நாகலிங்கம் மாணிக்கதாசன் புளொட்டின் அதிஉயர் பாதுகாப்பு முகாமான லக்கி முகாமிற்குள் மாடிக்கு ஏறும் வழியில் தூள்பவான் அணியினரால் மறைத்து வைக்கப்பட்ட கிளைமேரை 02 09 1999 அன்று வெடிக்கவைத்து மரண பட்டியலில் தாஸ்சனை இணைத்து கொண்டவர்கள்.

மாணிக்கதாஸ் இறக்கப்போகும் நிமிடங்களை கொழும்பில் இருந்து எண்ணிக்கொண்டிருந்த சித்தன். முன்கூட்டியே போடப்பட்ட திட்டத்தின் பிரகாரம். தாசன் இறந்ததை உறுதி செய்துகொண்டு. சந்திரிக்காவின் மெய்பாதுகாப்பு படையின் ஒரு பகுதியுடன் வவுனியாவிரைந்த சித்தன் மற்றும் சித்தனின் கூலிகள். மாணிக்கத்திற்கு நெருக்கமானவர்கள் என்ற ஓரேகாரணத்திற்காக 98 பேரை கைதுசெய்து மிககொடூரமான சித்திரவதைகளிற்கு உள்படுத்தி கொல்லப்படுகின்றார்கள் இவர்களில் சிலர் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தப்பியவர்கள் இன்றும் சாட்சிகளாக இருக்கின்றார்கள். தோழர்களே! மக்களே! சிந்தியுங்கள் இக்கொலைகளை! யாருடைய விடுதலைக்காக செய்தார்கள்!!


வீரமக்கள் தினம் மட்டுமின்றி இதுவித நிகள்விலும் மாணிக்கதாஸ்சின் படத்தை வைப்பதில்லை. இந்த வருடம் வீரமக்கள் தினம் தேர்தலை அண்மித்து வந்ததினால். ஓட்டுக்களை அதிகளவில் பொறுக்கி கொள்வதற்காக மாணிக்கதாஸ்சின் படத்தை வைத்தது மட்டுமல்லாது. அப்படத்திற்கு மாலை போட்டு விளக்கேற்றுவதற்காக அவரது உறவினர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் படங்களை ஊடகங்களில் பிரசுரித்து வோட்டிற்காக நாக்கைதொங்கப்போட்டு காத்திக்கிறது இக்கொலைகாற கும்பல்!!!              

கொலைகள். கொள்ளைகள் செய்த குற்றத்திற்காக இவர்களுடன் இணைந்து செய்த அரச படைகளே கைதுசெய்ய தேடும் அளவிற்கு மிககேவலமான தகுதிபெயர் தூள்சூரி மற.றும் தகுதிப்பெயர் தூள்பவன் என்ற கந்தையா சிவநேசன இவர்களை சிறைசெல்லாது பாதுகாக்க சிங்கள அரசிடமும் அரசபடைகளிடமும் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தினார் இவற்றிகு எல்லாம் தலைமைதாங்கிய தலைவர் சித்தாத்ன்.

இன்று உருத்திரபுரத்தில் சித்தாத்னிற்கு இருக்கும் 100க்கும் மேற்பட் ஏக்கர் வயல்கள். தென்னம்தோப்புகளை பராமரித்து இலயங்கை புலனாய்வு பிரிவுகளின் பாதுகாப்பில் உல்லாசமாக வாழ்கின்றான் தூள்சூரி

திருடர்களும் கொலைகாறர்களும் நம்சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை உருவாக்கும் இன்றைய காலத்தில். மக்களே! நீங்கள் கொடுக்கும் ஓட்டில்  தூள்பன் பாராளுமன்றம் செல்ல அலைகின்றார். இவர்கள் செய்ததில் மிக மிக சிறியதகவல்களையே உங்களிற்கு வழங்கியுள்ளோம்! மிகுதிகள் தெடர்ச்சியாக வெளிவரும் என்பதுடன் இவர்ளைப்போன்ற இன்னும் பலரை  மக்களின் தீர்ப்புக்காக உங்கள் முன்கொண்டுவருவோம் என்பதை தெரிவித்து கொள்வதுடன் சரியான தீர்ப்பை வழங்க உறுதியுடன் முன்வாருங்கள் எம்மக்களை தேழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களின் தேழர்கள்!