dimanche 13 octobre 2013

பிரபாகரனை வாக்கு வேட்டைக்காக மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்'

  2  
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபையிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர்.

இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில்  நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு வேட்டைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இப்போது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் மலினப்படுத்தியும் அறிக்கைகளை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் முன்நாள் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களை மட்டும் அவர் கொச்சைப்படுத்துகிறார் என பலரும் மௌனித்திருக்கின்றனர். எனினும் அவரது அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அவர் கொச்சைப்படுத்துவது நன்கு புலப்படும் என ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.  

கூட்டமைப்பின் இலக்கணங்களுக்கு புறம்பாக எதேட்சாதிகாரமாக செயற்படும் முதலமைச்சர் தனது உறவினர்களையும் வடக்கின் நிலமைகளை துளியளவும் உணரமுடியாத கொழும்பில் வசித்த தனக்கு வெண்டியவர்களுக்குமே இணைச் செயலாளர்கள் பதவியை வழங்க உள்ள நிலையில் மற்றவர்கள் மீது பழியை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சுப்  பதவிகளுக்காக அடிபடுகிறோம் என்ற கோதாவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முதலமைச்சர் மலினப்படுத்தி வருவதாகவும் கூறிய சுரேஸ் தமது உறுப்பினர்கள் முள்ளிவாய்காகலில் தமது சத்தியப்பிரமான நிகழ்வை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

இன்றய ஊடக சந்திப்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்த்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

mercredi 9 octobre 2013

புகலிட பெண்கள் சந்திப்பின் 30 வது தொடர் எதிர்வரும் 12-10-2013 திகதி பிரான்சில்

புகலிட பெண்கள் சந்திப்பு 
தோழமையுடன், 
புகலிட பெண்கள் சந்திப்பின் 30 வது தொடர் எதிர்வரும் 12-10-2013 திகதி பிரான்சில் நடைபெறஇருக்கின்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஆர்வமுள்ள பெண்களை அழைக்கின்றோம். மற்றும் மறுநாள் 13-10-2010 15.00 மணிக்கு நடைபெற இருக்கும் நடந்து முடிந்த வடமாகாண தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொள்ள அக்கறையுள்ளஅனைவரையும் அழைக்கின்றோம்.

.புகலிட தமிழர்களிடையே உருவாகி வளர்ந்த கருத்து சுதந்திரத்திற்கான முக்கிய நிகழ்வுகளில் இந்த பெண்கள் சந்திப்பும் ஒன்றாகும்.பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த சந்திப்பு தனது அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் தொடங்கி சமூகம்  சார்ந்து பெண்கள் மீது இழைக்கப்படுகின்ற அடக்குமுறைகள் பற்றிய பலவிதமான விடயங்கள் சார்ந்து உரையாடல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.காலத்துக்கு காலம் ஐரோப்பாவின் பலபகுதிகளிலும் இடம்பெற்று வரும் இச்சந்திப்பு பிரான்சில் இம்முறையோடு நான்காவது தடவையாக நடத்த படுகின்றது.வழமைபோல பலநாடுகளில் இருந்தும் இம்முறையும்.இலக்கியவாதிகளும்,பெண்ணியசெயல் பாட்டாளர்களும்,எழுத்தாளர்களுமானபலபெண்தோழிகள்பாரிசில் கூடுகின்றார்கள்.நிகழ்வுகளை விஜி ,வனஜா,தர்மினி,சீலா போன்றோர் முன்னின்று நடத்துகின்றனர்.2000ம் ஆண்டு முதல் தடவையாக பிரான்சில் 19வது சந்திப்பு நடந்தபோது எழுத்தாளர் சிவகாமி கலந்து கொண்டிருந்தார்.அப்போது அவர் தமிழ் பேசும் நல்லுலகில் இது போன்று  பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு சந்திப்பு இதுவரை காண கிடைக்காதது என பாராட்டினர். அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இம்முறையும் நிகழும் 30வது சந்திப்பும் திறம்பட வெற்றியடைய வாழ்த்துவோம்.

dimanche 6 octobre 2013

கூரை ஏறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை வடக்கு மாகாண முதல்வராக விக்கினேஸ்வரன், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில் பதவியேற்க ரெடி. ஆனால், தமது அமைச்சர்கள் யார் என்று பாவம், அவருக்கே தெரியாது. முதல்வருக்கே தெரியாதபோது, வாக்களித்த மக்களுக்கு தெரிந்துவிடுமா? அவர்களுக்கும் தெரியாது!
மக்கள் சேவையில் ‘மர்ம அமைச்சர்கள்’
‘மர்ம அமைச்சர்கள்’ யார் என்று முடிவு செய்யும் ‘இறுதி’ ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை நடந்தது. ‘இறுதியோ இறுதி’ ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொழும்புவில் நடந்தது. அதில் அடிதடி.
அதன்பின் ‘இறுதி பிளஸ்’ ஆலோசனைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. கலந்து கொண்ட தலைவர்கள், சட்டைதான் கிழியவில்லை என வெற்றிகரமாக தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள்.
‘இறுதி பிளஸ்’ ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர் ஒருவர் “அமைச்சர்கள் யார் என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டதா?” என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், “இறுதி என்ற சொல்லே அர்த்தமற்றது” என்றார்.
அத்துடன் நின்றுவிடாமல், “நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ‘இறுதி’ முடிவு எடுப்பது என்பதில் உறுதியாக உள்ளேம்” என்று ‘அர்த்தமற்ற சொல்லை’ தமது பதிலில் சேர்த்துக் கொண்டார், இந்த அர்த்தமுள்ள தலைவர்.
இன்று உங்கள் அபிமான திரையரங்கில்..
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை காலை, முதலமைச்சராக விக்கினேஸ்வரன் பதவியேற்கிறார். இன்றைய ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்காவிட்டால், பதவியேற்கும் முதல்வர், தமது ‘மர்ம அமைச்சர்கள்’ யார் என்று தெரியாமலேயே பதவியேற்பார்.
அதன்பின் ஏதோ ஒரு நாளில், ‘இறுதி சுப்ரீம் பிளஸ்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இந்த விவகாரத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். அந்த குழப்பம் என்னவென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் 1 முதல்வர் போக, 29 பேரையும் அமைச்சர்கள் ஆக்கலாமே? ‘இடியாப்பம் தயாரிப்பு அமைச்சர்’, ‘இடிஅமீன் கொள்கை பரப்பு அமைச்சர்’ என இஷ்டத்துக்கு பதவி கொடுக்கலாமே?
அதுதான் முடியாது!
குணம் அறிந்துதான் குதிரைக்கு கொம்பு கொடுக்கல!
தமிழர் இனப்பிரச்னையை தீர்க்க 30 பேர் கடும் ஆவலில் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்தோ, என்னவோ, “மாகாணசபைக்கு 4 அமைச்சர்கள்தான் நியமிக்கப்படலாம்” என இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்து விட்டார்கள். அதுதான் பெரிய சிக்கல். (அவசரப்பட்டு “சிங்கள ஏகாதிபத்திய சூழ்ச்சி” என்று சொல்லி விடாதீர்கள். தமிழ் மாகாணத்துக்கு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டம்தான்)முதல்வரை தேர்வு செய்த தமிழரசுக் கட்சி, கல்வி அமைச்சர் பதவிக்கு கிளிநொச்சியில் இருந்து தெரிவான குருகுலராஜாவையும், சுகாதார அமைச்சர் பதவிக்கு வவுனியாவில் இருந்து தெரிவான சத்தியலிங்கத்தையும் நியமிக்க விரும்புகிறது.
தலைவருக்கு எட்டாத (கிட்டாத) பேக்ஸ் எந்திரம்!
டெலோ இயக்கம் சார்பில் மன்னாரில் இருந்து தெரிவான குணசீலலை நியமிக்க அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விரும்புகிறார். ஆனால் பாவம், அவருக்கே தெரியாமல் அக்கட்சியினர் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான சிவாஜிலிங்கத்தின் (பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சித்தவர்) பெயரை கட்சி சார்பில் பரிந்துரைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு பேக்ஸ் அனுப்பி விட்டார்கள்.
இதையடுத்து தலைவர் செல்வம், “தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார். ஒன்றில் இவர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது கட்சியின் பேக்ஸ் எந்திரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அந்தக் கட்சிக்குள் உள்ள சிக்கல்.
புளொட் இயக்கம் சார்பில் அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.
இயக்கமே குடும்பம்.. குடும்பமே இயக்கம்.. பாலிசி
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் வேறு சிக்கல். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (முன்னாள் மண்டையன் படையணி பிரதான தளபதி) இயக்கத்தை, குடும்பமாக கருதும் முற்போக்காளர். அதனால், குடும்பத்தையும் இயக்கமாக கருதி, தமது சகோதரர் சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்கிறார்.
அதற்கு அவரது சொந்தக் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு. இதனால் அக்கட்சி யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால், 1 அமைச்சு பதவி வேண்டும் என்று கேட்கிறது. பதவி கிடைத்ததும், அமைச்சரின் பெயரை பாக்கெட்டில் இருந்து எடுப்பாராம் தலைவர் சுரேஷ்!
இந்த நிலையில்தான், மர்ம அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டம் இன்று பகல் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டங்களுக்கு டீ, வடை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் எடுத்தாலே, கோடீஸ்வரர் ஆகிவிடலாம் போலிருக்கிறது…
முதலில் இந்த தமிழர் பிரதிநிதிகள் தமது கட்சிக்குள் அதிகாரத்தை பகிரட்டும். அப்புறம் இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர ஆலோசிக்கலாம். ஐயாமாருங்க முதலில் கூரை ஏறி கோழி புடிக்கட்டும், அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.                          நன்றி விறுவிறுப்பு


பொறுப்புக்கள் கற்றவர்களுக்கு மட்டுமே! - விக்கி

வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களாக நியமிப்பதற்கு கல்வித் தகைமை மிக்கவர்களின் பெயர்ப்பட்டிய லை மாத்திரம் தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

போதியளவு கல்வித் தகைமைகள் இல்லாதவர்களை தனது அமைச்சரவைக்கு உள்வாங்குவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் விசேட கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.                                                  வடக்கின் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைக்குச் நடாத்துமாறும், தனக்கு மாகாண நிருவாகத்தை வழங்குமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் கூடியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளிடம் வேண்டியுள்ளார்.பிரபாகரன் எம்பிபிஎஸ் படித்தாரா என்று கேல்வி எழுப்பாமல் இருந்தாள்செரி

samedi 5 octobre 2013

பொது மக்களின் இளப்பை தவிர்த்து போராடிய மகா வீரன் சிறிசபாரத்தினத்தின் மரணத்தின் பின் பிரபாகரனின் நெரிங்கிய கூட்டாளியும் அடைக்கலமான செல்வம் டெலோவின் பதவி இராஜினாமா ?....?.....?

selvamதமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். 2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூற வேண்டிய தார்மிக பொறுப்பு என்னிடமுள்ளது. எனவே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன். இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன் என்றார்.

vendredi 4 octobre 2013

சம்மந்தரின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ டம்மி முதலமச்சர் எதிர்வரும் 7ஆம் திகதி சத்தியப்பிரமாணம்

ஓய்வுபெற்ற நீதியரசரும் வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான  சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   


மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்திற்கு பதில் பாலியல்; சுய தொழிலுக்காக அரங்கேறும் சம்பவங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. சுய தொழிலுக்காக நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கிவிட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாக இணையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளினால் இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இணையத்தின் தலைவரான வி.கமலதாஸ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப் பிரதேசங்களிலும் பின் தங்கிய கிராமங்களிலுமே இந்த நிலை காணப்படுவதாகவும் போருக்கு பின்னரே மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்களும் அதிகரித்துள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன. 

தமது இணையத்தில் அங்கத்துவம் பெறும் 17 அமைப்புகளுக்கு மட்டும் தங்களால் 2 கோடி ரூபாய் நுண்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், குறித்த நிதி நிறுவனங்களினால் ஆகக்குறைந்தது 60 கோடி ருபாய் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடடார். 

இவ்வாறான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி சில அதிகாரிகளினால் கொடுக்கப்படும் நெருக்கடிகளினால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார். 

இவரது இந்த புகார்கள் குறித்து அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்ற கூட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் தான் தொடர்பு கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் பதில் அளித்தார். 

திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது.

சந்தர்ப்பவாத அரசியலாளர்கள் இறந்தவர்களின் நெற்றிகளில் பொறிக்கப்பட்ட அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முயற்சிசெய்கிறார்கள் என தேசிய சுதந்தர முன்னணி குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அவர்களினால் இவ்வாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு:

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. அது மிகப் பாரதூரமான காரியம் என்று குறிப்பிடுகின்றது தேசிய சுதந்திர முன்னணி. 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் என்பன பிரிவினைவாதத்திற்கு வழிகாட்டக்கூடியன என்பதே தேசிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போது வடக்கு கிழக்கில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் கூட பிரிவினைவாதத்தை போஷிப்பவை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் 13 இனை உள்ளது உள்ளவாறே செயற்படுத்தற்கு கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வெற்றிகண்டுள்ள பிரேரணையானது பயங்கரமானதாகும். நாங்கள் இதற்கு முன்னரும் பலமுறை சுட்டிக் காட்டியது என்னவென்றால், வடக்கு கிழக்கினை மீண்டும் ஒன்றிணைப்பதானது மீண்டும் ஈனியா வுடனான தமிழ் அரசு மற்றும் முஸ்லிம் அரசுத் துண்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிவகுப்பதாகும். பிரிவினைவாதத்துடனான யுத்தத்தை தோல்வியடையச் செய்து, பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளும் முயற்சியாகும்.

உண்மையில் உருவாக்க முயற்சிப்பது தமிழ் முஸ்லிம் துண்டங்கள் ஒன்றிணைந்த ஒரு அரசாங்கம். அது துயரத்தில் வாடும் தமிழனினதோ முஸ்லிமினதோ அரசாங்கம் அல்ல. அவர்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும் அரசாங்கம் அல்ல. பிற ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு உருவாக்கப்படுகின்ற, இறந்தவர்களின் நெற்றிகளில் எழுதப்படுகின்ற, பழக்கப்பட்ட துயரங்களுக்குப் பதிலாக பாரிய துன்பங்களை ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாகும்.

அந்த துயர்மிக்க அரசாங்கத்திற்கு அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் இனவாத அரசியல் சார்ந்த அரசியலாளர்கள் பற்றி ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணி எதிர்வுகூறியுள்ளது. வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பலமாக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதா? இல்லாவிட்டால், சின்னஞ் சிறு வேலிக்கம்பங்களுக்கிடையே நின்று கொண்டு பிற எதிர்பார்ப்புக்களுடன் பலியாகி கொன்றொழிக்கும் பூமியை இலக்காகக் கொள்வதா? என மக்கள் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை தெளிவுறுத்துகிறோம்.

இதனை அரசியல் சட்டத்தின் மூலம் தர்க்க ரீதியான சட்டங்களின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது. தற்போதைய சூழ்நிலை, வரலாறு, எதிர்காலம் அனைத்தையும் எடுத்துநோக்கினால்தான் இதுபற்றிய தெளிவைப் பெறலாம், முடிவெடுக்கலாம். அந்த முடிவைச் சரிவர எடுக்காதவிடத்து, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும். அவர்களின் தலைவர்களாகக் காட்சிகொடுக்கின்ற இந்த சந்தர்ப்பவாதிகள் பற்றி எங்களுக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால், கோழிப்பண்ணையொன்றுக்குப் பொறுப்பாக வெளி எல்லையில் நிற்கின்ற நரிகள் அந்த கோழிப்பண்ணையின் உரிமையைப் பெறுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும்.

நியாயமற்ற அரசியல் திட்டமொன்றுடன் தங்களது சூழ்ச்சிக்குள் சிக்கவைக்க முயல்கின்ற இந்த பிரிவினைவாதிகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியப்படுவதில்லை. அத்துடன், அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு எதிரியாக நின்று யோசனைகளை முன்வைக்கின்ற இவர்கள் பற்றி எங்களுக்கு வெறுப்பு மட்டுந்தான் உண்டு. அரசியலுக்காக என்றும் பிரிவினைவாதிகளுடன் நின்றுகொண்டு, இலங்கையரின் வாக்குகளால் அன்றி மேற்கத்தேயவரின் வாக்குகளால் பலத்தை பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி விடயத்தில் எங்களுக்கு அநுதாபமே ஏற்படுகின்றது. குறித்த பிரேரணைக்காக வாக்களித்த ஆட்சியாளர்கள் விடயத்திலும் நாங்கள் சற்றுக் கவலையுறுகிறோம். மாகாண சபை தொடர்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூடக் கருத்திற் கொள்ளாமல், அதனால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றிச் சிந்திக்காது அவர்கள் எடுத்த முடிவானது பிரிவினைவாதத்திற்கு எதிரான தங்களது தலைமைத்துவத்தையும், அரசையும் நிலைகுலையச் செய்வதாகும்.

எது எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு இரு மாகாணங்களிலும் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அனைத்தையும் மீண்டும் அநாதையில்லங்களில், காப்பகங்களில் இட்டுச் செல்லும் இந்த ‘தனியரசு’ நாடகம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி எதிர்பார்க்கிறது என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

(கலைமகன் பைரூஸ்)

இலங்கை குடிவரவு குடியகல்வு கடவுச்சீட்டில் இனி சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படம்


அடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை 
அடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல் அறிய முடியுமெனவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

lundi 30 septembre 2013

குண்டு வைக்க ரூ.24 கோடி திடுக்கிடும் தகவல்

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.
டெல்லி ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு போன்று நாடு முழுவதும் ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் டெல்லி, மங்களூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன. இதற்கு ஆகும் செலவு மற்றும் நாடு முழுவதும் சென்று தீவிரவாத திட்டங்களை வகுப்பது போன்றவற்றுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் இந்த அமைப்புக்கு பணம் வழங்கப்பட்டது.
இதற்கு இந்தியா, நேபாளம், சவுதி அரேபியா, துபாய் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் உதவியாக இருந்துள்ளன. இதற்காக யாசின் பெயரில் பாங்கியில் தனி கணக்கு தொடங்கப்பட்டது. இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பில் இருந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.24 கோடியை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெற்றுள்ளது. இந்த பணம் கராச்சியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பாகிஸ்தானில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இக்பால் பகத், ரசாக் பகத் மற்றும் அவர்களது குழுக்கள் மூலம் இந்தியா வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்...! - வாசு

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை மத்திய அரசாங்கம் முழுமையாக தன்வசம் வைத்திரு க்காது, மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கக் கூடியதொரு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

அதற்காக தேசிய காணி ஆணைக்குழுவொன்றை நியமிப் பதற்கான பிரேரணையொன்றை தான் அரசாங்கத்திடம்முன்வைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், அந்தப் பிரேரணையை அடுத்த பாராளுமன்றத் தொடரில் தேர்வுக் குழுவினரின் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மத்திய அரசுக்கே சொந்தமானது என நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வு அதற்குப் பாதகமாக அமையாது எனவும், நீதிமன்றத்திடம் எத்தனை தீர்வுகள் இருந்தபோதும், அதற்கெல்லாம் மேலாக பாராளுமன்றத்திற்கே உயர் அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துணிகர பேச்சு பொலிவியா ஜனாதிபதி .ஐ.நா. சபையை மாற்ற வேண்டும். அமெரிக்க மண்ணில் நின்று (வீடியோ)

அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

இதில் பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் புதன்கிழமை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-உலகில் தீவிரவாதிகளை அமெரிக்கா ஆதரித்து அவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் அளித்து வருகிறது. ஊழலையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா உதவவில்லை. மேலும் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டியும், அகங்காரத்துடனும் நடந்து கொள்கிறது. மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது அமெரிக்காவின் வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதே போல் அமெரிக்கா வான் எல்லையில் மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது. அமெரிக்காவின் உளவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் அமெரிக்காவில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை.முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தலைவர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும். இது பற்றி நாம் கண்டிப்பாக மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொராலஸ் இந்த துணிகர பேச்சு ஐ.நா. சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டமைப்பு பதவிப்பிரமாணம் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம்


யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும்.

ஆனால் மாகாண அமைச்சர்கள், முதலமைச்சரின் முன்பாக பதவியேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

dimanche 29 septembre 2013

மகேந்தா ராஜபட்சா அல்சிரா விடியோ செய்தி

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. 

இதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

ஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது. 

ஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

எனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார். 

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார். 

தொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தமது பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

பாகிஸ்தானில் இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ் வாய்க்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் மற் றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் கடுமை யாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலை வில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில்6.8 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

mercredi 25 septembre 2013

திடீர் தீவு!பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில்


பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (24) ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற் கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியு ள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் திடீரென இத்தீவு அதிசயமாக தோன்றியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சித் திணைக்களத்தின் பொதுப்பணி ப்பாளர் ஆரிப் மஹ்மூத் கூறுகையில்,

'பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் அரேபியக் கடலில் ஒரு சிறிய தீவொன்று தோன்றியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 

சுமார் 9 மீற்றர் உயரமும் 100 மீற்றர் அகலமானதுமான இத்தீவினை பார்ப்பதற்கு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடுவதாக க்வதார் உயர் பொலிஸ் அதிகாரி உம்ரானி கூறியுள்ளார். 

நேற்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டது. இதில் இதுவரையில் 238 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது - காசி ஆனந்தன் (வீடியோ இணைப்பு)