dimanche 19 juillet 2015

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி விசாரணை செய்தி உண்மைக்கு புறம்பானது

pillaiyanஎனக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர்

எனக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்டு இர­க­சியப் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை என்று கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்­சியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­ கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் இர­க­சிய பொலிஸ் விசா­ர­ணைக்கு அழைப்பு என்று வெளி­யான செய்­தியில் எந்­த­வித உண்­மையும் இல்லை என்றும் அவர் தெரி­வித்தார்.                                                                                                                                                                                                                                              

இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பூ.பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கொழும்பு, இரகசிய பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கத்தோலிக்க ஆலயமொன்றின் முன்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணை நிமிர்த்தமே அவர் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் காலத்தில் எமது கட்சியின் மீதும் எமது தலைவர் மீதும் சேறு பூசும் செய்தியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.எமது தலைவரை இரகசிய பொலிஸார் விசாரணைசெய்யவேண்டுமென்றால் அவர்கள் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு வந்து விசாரணை செய்யமாட்டார்கள்.இரகசிய விசாரணை என்பது இரகசியமானமாகவே நடாத்தப்படும்.
ஆனால் எமது தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு இது தொடர்பிலான எந்த அழைப்பும் வரவில்லை.இது ஒரு முற்றுமுழுதான பொய்யான தகவலாகும்.
தேர்தல் காலம் என்ற காரணத்தினாலும் எமக்கு தமிழ் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் ஆதரவினை திசை திருப்பும் வகையிலும் இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றனர்.
ஆனால் இவ்வாறான செய்திகள் மூலம் எமது வெற்றியை ஒருபோதும் யாரும் தடுத்துவிடமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மதுரை 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக நகரம் BBC

தமிழ்நாட்டில் மதுரை நகருக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் வைகை நதியின் தென்கரையில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறை மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2,200 ஆண்டுகள் பழமையான சங்க கால நகரம் அங்கு இருந்திருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது மதுரை பகுதியில், குறிப்பாக வைகைக் கரையில் இம்மாதிரியான அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது இதுவே முதல் முறையென இந்த ஆய்வை மேற்கொண்ட இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரிக்கமோடு, காவிரிபூம்பட்டிணம் உள்ளிட்ட நகரங்களில் கிடைத்தைப்போல சங்க கட்டங்கள் இங்கும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.ரோமானிய மட்பாண்டங்கள், பழங்காலப் பொருட்கள் ஆகியவை இங்கு கிடைத்திருப்பதால், இந்தப் பகுதி ஒரு வணிக நகரமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இங்கு கிடைத்த பொருட்கள் இன்னும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும், மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த நகர நாகரீகம் இங்கு இருந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் துவங்கிய இந்த அகழ்வாராய்ச்சி, இன்னும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக அகழ்வாராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட கலந்துரையாடலில் அடிதடி காணொளி

                                                                                           ஏராவூரில் நேற்று 17.07.2015 வெள்ளிகிழமை இப்தார் நிகழ்சியோடு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரசின் போராலிகள் கருத்து தெரிவிக்கையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக சிறு கைகளப்புடன் பத்து நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அங்கிருந்த ஏனைய போராளிகளாலும், சமூகமளித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்ப்பாதுகாவலர்களாலும் பிரச்சனையானது சமாதானமாக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது.

இக்கலதுரையாடலில் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், முன்னணி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அலிசாஹிர் மெளலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர்களுடன் முக்கிய முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகளின் ஆதாரவாளர்களும், ஏராவூரின் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்களும், ஏராவூர் மற்றும் கல்குடா பிரதேச முஸ்லிம் காங்கிரசின் போராலிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வாறாதொரு அமளிதுமையான சம்பவம் இன்று காலை 18.07.2015 கல்குடா மீராவோடை ஜும்மா பள்ளிவாயலுக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தந்திருந்த வேலையில் அவரின் வருகைக்கு எதிராகவும் கல்குடாவின் பிரதிநித்தித்துவம் பாதுகாக்கப்படுகின்ற விடயத்தினை மையப்படுத்தி இடம்பெற்றுதுள்ளதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

jeudi 16 juillet 2015

நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!

ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் இன்று பிரதானமாக தமிழ் அரசியலை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிடங்கு நாய்கள் என்றார். இந்த நாய்களைப் பற்றி அறிந்திருக்கின்றேன் ஏன் நானும் எனது உறவினர்களின் வீட்டுக்குப் போகும் போது இந்த வகை நாய் இருப்பதால் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முயற்சிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் அந்த நாயை பாதுகாப்பாக கட்டிவிட்டார்களா என்று பார்த்தபின்னரே உள்ளே செல்வேன்.


சரி இந்த கிடக்கு நாய் என்ற சொல்லாடலை நேற்றுத் தான் உரையாடலின் மூலம் அறிந்தேன். அந்த நாய்  உரியவை விட மற்றவர்கள் யாரை என்றாலும் கடிக்கும். அதற்கு தன்வீட்டில் உறவில் உள்ள உறுப்பினர்கள் யார் என்று தெரியாது. அது வீட்டுச் சொந்தக் காரனின் சொந்தப் பிள்ளையைக் கூட கடித்துக் குதறும்.

அது சரி கிடக்கு நாய்க்கும் தமிழ் அரசியலிங்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே.


உளவாளிகள்- ஏவலாளிகள் 
ஆம் அதுதான் அன்னிய சக்திகளின் உளவுப்பிரிவிற்காக வேலை செய்பவர்கள்.
அன்னிய மூலதனத்திற்காய் சேவகம் செய்பவர்கள்
அன்னிய நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு செயற்படுபவர்கள்.
தமிழ் தேசியத்தின் உரிமையை மீட்டெடுக்க வாக்குக் கேட்பவர்கள்
இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மீட்டெடுப்பதற்காய் வாக்குக் கேட்பவர்களை வழிநடத்துவது அன்னிய சக்திகளே. சீன, இந்திய, மேற்கு ஏகாதிபத்தியங்களின், பௌத்த – சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கின்றார்கள்.


மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கு மக்களை விட பதவி. புகழ். அந்தஸ்து, பணம், சுயநலம், சுகபோகம், சலுகைகள் என்பவே முக்கியம்.
போலி முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு அங்கமான தேர்தல் ஊடாக மக்களை ஏமாற்றுகின்றார்கள். ஜனநாயகம் இருப்பதான மக்களை ஏமாற்றுகின்ற அரசியலமைப்பும் அதன் தேர்தலும் இருக்கின்றது.
இதனைப் பயன்படுத்தி தன்கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல தேர்தல் ஊடாக மக்கள் தமது கண்ணைக் குத்திக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஏற்கனவே திட்டமிட்ட அரசியல் பொருளாதார நகர்வுகளை செயற்படுத்துவதற்கும் அதிகார வர்க்கம் இருக்கின்றது.  நாடாளுமன்றத்தில் தான் அனைத்து சட்டதிட்டங்களும் தீர்மானிக்கப்படுவதாக பாசாங்கு காட்டப்படுகின்றதேயன்றி அனைத்து தீர்மானங்களை தீர்மானிப்பதாக அன்னிய சக்திகளும், அவர்களின் நிதிநிறுவனங்கள் இருக்கின்றன.  சிங்கள- பௌத்த பெருந்தேசியவாதம் தனது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ள அனைத்து யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்கின்றது.



தொடரும் அடக்குமுறைகள்------

தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை இராணுவமும் அதுசார்ந்த உற்பத்திமுறையின் ஊடாக தமிழ் தேசத்தின் உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றது. இங்கு பெரும் மூலதனச் செறிவைக்  கொண்டிருக்காத பெரும்பான்மை மக்களை பாதிக்கின்ற செயற்பாடாகும்.  இவை பற்றிய புரிதல் என்பது தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிக்கு இல்லை. இவர்கள் பசிக்கின்றது பாண் கேட்ட மக்களிடம் கேக் சாப்பிடுங்கள் என்று கூறிய அரசவம்சத்தின் சிந்தனையே இருக்கின்றது.


உளவுப்படைகளின் கண்கள் என்பது அதிகம் பேசப்படாத விடயமாகவும், மறக்கப்பட்ட விடயமாகவும் உள்ளது. இந்த கபட அரசியலை மேற்கொள்பவர்கள் இன- மத- வர்க்க பேதமற்று அரசியல் அமைப்புக்கள் இருக்கின்றார்கள்..  உரிமைகள் பற்றிப் பேசுகின்ற போது (Selective) தெரிவிற்குட்பட்டவையே அரசியல் கோரிக்கையாக முன்னிறுத்துகின்ற போது அவை  வரம்பிற்குட்பட்டவையாக இருக்கின்றது.
காணாமல் போனவர்கள், கட்டுப்பாட்டிற்குள், புனர்வாழ்விற்கு அனுப்பப்படுபட்டுக் கொண்டு இருக்கும் மக்களை இட்டு மேட்டுக்குடி அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வார்கள் இல்லை. 

சம்பூரில் அனல்மின்நிலையத்தின் காணியைப் பற்றி எந்த அரசியல்வாதியும் மூச்சுவிடுவதாக இல்லை. சம்பூர் காணியைக் பற்றிக் கதைக்கின்ற போது கிடங்கு நாய்கள் இன்னொரு பாக்கிஸ்தான் நாய்கள் உள்ளதாக கட்டுக்கதை கட்டி விடுகின்றது.


ஆக மொத்தத்தில் தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறை பல்திசைகளிலும் தொடர்கின்ற போது மேட்டுக்குடி கிடங்கு நாய்கள் தமிழ் மக்களின் உரிமையை சிதைப்பதற்கு துணைபோவர்களாகவே இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்கு காரணமான கிடக்கு நாய்களின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தேர்தலுக்காக ஆண்டபரப்பரைக் கதைகளை வெவ்வேறு வடிவத்தில் கதைவிடுகின்ற கிடங்கு நாய் தமிழ் மக்களின் சாபமாக இருக்கின்றது.
கிடங்கு நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!

 ஆக்கம் வேலன்

தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 17ந் தேதி நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக செயல்பட ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், இதற்காக தங்கள் அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கையில் ஆகஸ்டு 7–ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பார்வையாளர்களை அனுப்புமாறு அந்த நாடு விடுத்த அழைப்பின் பேரில், ஐரோப்பிய ஒன்றியம் தனது தேர்தல் பார்வையாளர் குழுவை இலங்கைக்கு அனுப்ப தொடங்கி உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.ஐரோப்பிய ஒன்றியக்குழுவின் திட்டப்படி இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 18 நீண்ட கால பார்வையாளர்கள் நிறுத்தப்படுவர். மேலும் 28 குறுகிய கால மேற்பார்வையாளர்களும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து பணியை தொடங்குவர்.இந்த தேர்தல் மேற்பார்வைக்குழுவினர் இலங்கை மற்றும் பிராந்திய, சர்வதேச சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.அதன்படி தேர்தலுக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பு, தேர்தல் ஆணைய செயல்பாடுகள், அரசியல் கட்சியினரின் பிரசார நடவடிக்கைகள், மக்களின் அடிப்படை சுதந்திரத்தை மதிக்கும் பாங்கு, ஊடகங்களின் தலையீடு, வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் அறிவித்தல் போன்றவற்றை இந்த குழு கண்காணிக்கும். தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்கள் மற்றும் முறையீடுகளையும் இந்த குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.