lundi 11 novembre 2013

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் பிறந்த தினத்தை இலங்கையில் கொண்டாட ஏற்பாடு

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் தமது துணைவியார் கெமிலா சீமாட்டி யுடன் பொதுநல வாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார். அன்றைய தினம் இளவரசர் சாள்ஸின் 65ஆவது பிறந்த தினமாகும். தனது 65ஆவது பிறந்த தினத்தை இளவரசர் சாள்ஸ் தனது பாரியாருடன் இலங்கையிலுள்ள தனது நண்பர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.இவ்வுச்சிமாநாட்டின் போது இளவரசர் சாள்ஸ் பல அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். 87 வயதான பிரிட்டிஷ் எலிசபத் மகாராணியார் 22 ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருந்த போதிலும் அவரது உடல் நிலை காரணமாக இம்முறை கலந்து கொள்ளாமல் தனது மகன் இளவரசர் சாள்ஸை அனுப்பி வைத்துள்ளார்.
எலிசபத் மகாராணியார் 1971ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 1973 முதல் 2011 வரையிலான சகல உச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.

பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் இலங்கையில் தடம் பதிக்கும் ;எச்சரிக்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் இலங்கையில் தடம் பதிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தியாவில் அடுத்த வருடம் தேர்தல் முடிந்தவுடன் இலங்கை தமிழர்கள் மீதான தமிழக அரசியல்வாதிகளின் பாசம் காற்றில் பறந்து போய் விடுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் இலங்கை தமிழர்கள் மீது தமிழ் நாட்டு தமிழ் மக்கள் வைத்துள்ள உணர்வு பூர்வமான ஆதரவை தமது பக்கம் திருப்பிக் கொண்டு அம் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தமிழக அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை தமிழ் மக்கள் மீது பாச மழையை பொழிகின்றனர்.
இதற்காகவே பொது நலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக் கூடாதென்றும் போராட்டங்களை நடத்துகின்றனர்.
இதன் மூலம் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டை தவிர ஏனைய மாநிலங்கள் பாரதீய ஜனதா கட்சி உட்பட அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பிரதமர் சிங் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் ராஜதந்திர உறவுகளை பேண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் இலங்கைக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. நஷ்டத்தை எதிர் நோக்கப் போவது இந்தியாவே ஆகும்.
இந்த பிரச்சினையை மாநாட்டில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இலங்கையில் பாகிஸ்தான் தடம் பதிக்கும் நிலைமை உருவாகும்.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அதனை பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் சாட்சியங்களுடன் அதற்கான பொறுப்புக் கூறும் தகவல்களுடன் வெளியிட வேண்டும்.
அதன் போது அது தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும். பொது நலவாய நாடுகள் அமைப்பிலுள்ள அங்கத்துவ நாடுகள் தத்தமது நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை மாநாட்டில் முன் வைக்க முடியாது. இது தான் அமைப்பின் சட்டமாகும்.
இம் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள் சமாதான முன் நகர்வுகள் பொருளாதார நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுக்க முடியுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை திருமலையில்! இரவில் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர்கள்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே நேற்றிரவு இந்த அதிசய மலர்கள் பூத்து காட்சி தந்தன. இதற்குமுன்னர் இப்பிரதேசத்தில் இந்த பூக்கள் பூக்க வில்லை என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல்;வெளியுறவு அமைச்சர் ஜவாட் ஸாரிப்

ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல் போக்கு உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'எல்லாத் தரப்பினரும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து மதக்குழு வாதத்துக்கு எதிரான சிரியாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்'என்றும் வெளியுறவு அமைச்சர் இரான்    மொஹமட் ஜவாட் ஸாரிப் கூறினார்.
சில சுன்னி முஸ்லிம் நாடுகள் 'அச்சுறுத்தலை உருவாக்கும்' நாடுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் கிளர்ச்சி வெடித்தபோது, அதற்கு மதக்குழு வாதம் காரணமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது முஸ்லிம் மதக்குழுக்களிடையிலான மோதலாக சிரியா விவகாரம் உருவெடுத்துள்ளது.
ஷியா முஸ்லிம் நாடான இரான், சிரியாவின் அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவளிக்கிறது.
சிரியாவின் சுன்னி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சுன்னி ஆதிக்க நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பை பெற்றுவருகின்றனர்.

வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் குற்றம் சுமத்துகின்றவர்கள் தமது சாட்சியங்களை ஜெனீவாவில் அல்லது ஹேக்கில் சமர்ப்பிக்க வேண்டும். – கோத்தபாய

News Service
இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை பிரித்தானியாவில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு பெரும் செலவில் முன்னெடுத்து வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இந்த முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை என்பன இலங்கை மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமரை செல்லவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன. இதேவேளை சனல்4 மூலம் இலங்கையில் போர்குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு குற்றம் சுமத்துகின்றவர்கள் தமது சாட்சியங்களை ஜெனீவாவில் அல்லது ஹேக்கில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கு கடிதம் எழுதிய அதே தினம் தம்பி பிரபாகரனுக்கும் “மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு” என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ; வீ. ஆனந்தசங்கரி

a.sangary7
மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்இ 
ஜனாதிபதி மாளிகைஇ 
கொழும்பு – 3.

அன்புடையீர்!

காமன்வெல்த் மாநாடு – ஓர் மறைமுக வரப்பிரசாதம்!
 - வீ. ஆனந்தசங்கரி
கடந்த 57 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் யுத்தத்தாலும்இ அதேயளவு காலம் - அதற்கு முன்பும் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து நலிவுற்ற எமக்கு பூரணமான மனக்கலக்கமற்ற வாழ்க்கையையும் அமைதியையும் திரும்பப் பெறக்கூடியயதாக மீண்டும்; ஒரு பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது என்பதை உரிமையோடு தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். சுருங்கச் சொன்னால் 1948ல் நாடு சுதந்திரமடைந்து 7 ஆண்டுகளின் பின் இன்றுவரை இனஇமத வேறுபாடற்று வாழும் மக்கள்இ பல்வேறு காரணங்களுக்காக பயத்துடனும்இ பீதியுடனும் வாழ்ந்திருக்கிறார்கள். நான் கூறப்போகும் விடயங்கள் உங்களுக்கு விருப்பமற்றதாக இருக்கலாம். ஆனால் அவை உண்மை மட்டுமல்ல எவர் மறுத்துக் கூறினாலும் அந்த நிலைமையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.

நான் உங்களுக்கு அனுப்பிய 26.07.2008 திகதியிட்ட கடிதம்இ “கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை இந்த நாடு இழந்துவிடக் கூடாது”  என்ற தலையங்கத்தைக் கொண்டிருந்தது. அக்கடிதத்தில் “இன்னும் சில நாட்களுக்குள் உங்களை அலங்கரிக்கக் கூடிய மேலும் ஒரு பதவி வர இருக்கின்றது” என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். “1.7 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 7 நாடுகளின் அமைப்பாகிய சார்க் ஸ்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறீர்கள்!  மேலும் எதுவித குற்றமும் செய்யாமல் பயப்பீதியுடன் வாழுகின்ற மக்களுக்கு சார்க் நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாக அமைகிறது.  பஸ்இ புகையிரத பிரயாணங்களை விட சாதாரணமாக வீதியில்கூட நடந்துசெல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. சார்க் அமைப்பின் முக்கிய பணிகள் - அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதே! துரதிர்ஷ்டவசமாக அந்த நாட்களில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபடியால் விடுதலைப் புலிகளுடன் ஒரு தீர்வுக்கு வரக்கூடிய நேரமும் கனிந்திருக்கவில்லை. சூழ்நிலையும் சாதகமாயிருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாகஇ அதேபோன்றதொரு நிலையில் நடக்க இருக்கும் காமன்வெல்த மாநாடும் ஆண்டவனால் தரப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகவே எண்ணுகிறேன். 

ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கு கடிதம் எழுதிய அதே தினம் தம்பி பிரபாகரனுக்கும் “மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு” என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் “எனது கடிதங்கள் எதையும் நீர் பொருட்படுத்தவில்லை. நீர் உட்பட மக்களுக்குத் தேவையான அமைதியைக் கொடுக்கக்கூடிய இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தரமான தீர்வை எட்டக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்பதை உமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஜனாதிபதி அவர்களே மற்றவர்கள் சிலரைப் போல திரு வேலுபிள்ளை பிரபாகரன் இன்னும் வாழ்ந்து வருகிறார என நான் சொல்லமாட்டேன். அவர் இல்லை என்று நான் நம்புகிறேன். 2008ல் சார்க் மாநாட்டின் போது நிலவிய அந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு ஒரு பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. 54 நாடுகளில் 53 நாட்டுத் தலைவர்கள் பெரிய அல்லது சிறிய என்ற பேதமின்றி சமபலத்துடன் உலகின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய காமன்வெல்த் அமைப்பின் மாநாட்டை நீங்கள்  தலைமை தாங்க இருப்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் அனேகமாக அனைத்துத் தலைவர்களும் கலந்து கொள்வர். கனடிய பிரதம மந்திரியையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வைக்கவேண்டும். ஏனெனில் கனடா எமது நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதாக உதவியுள்ள ஒரு நட்பு நாடாகும். கட்டுநாயக்க விமான நிலையம் கனடிய அரசால் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோடு – கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப் பாதையை உருவாக்குவதில் முதற்கட்டமாக வனவாசலஇ கண்டி வீதி - களனிப்பாலச் சந்தி ஆகிய இரு இடங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலங்கள் உருவாக்கப்பட்டு காரணம் தெரியாமல் கைவிடப்பட்டதொன்றாகும். அத்தோடு கனடாவின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் அம்மாகாணங்களின் பெயரிடப்பட்ட 9 டீசல் ரயில் எஞ்சின்களையும் வழங்கியிருந்தது என்பதை ஞாபகமூட்டுவதோடு அந்த எஞ்சின்கள் இன்றும் சேவையில் இருக்குமென நான் நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக கனடாவில் இன்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிலையில்தான் இந்தியாவிலும். இந்தியா பிரதிநிதித்துவப் படுத்தாத மாநாடு சேக்ஷ்பியரின் நாடகங்களில் ஒன்றான  டென்மார்க்கின் இளவரசன் ஹம்லெற் என்ற நாடகத்தின் ஹம்லெற் என்ற கதாபாத்திரம் இல்லாதிருப்பதை ஒத்ததாகும். இந்த நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடு பதவியிலுள்ள பலர் தாம் சம்பந்தப்படாத விடயங்களில் கருத்துக் கூறுவதாகும். நான் அடிக்கடி கூறுவதுபோல மகிந்த சிந்தனை வேறு சிலரின் சிந்தனையோடு கலக்கப்பட்டு மாசுபட்டும் பலவீனமடைந்துமுள்ளது. 

இந்தச் சந்தரப்பத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமாக ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். மற்றும் 51 தலைவர்கள் மத்தியில் அவர்களுக்கு இவரின் பிரசன்னம் பெரியதோர் தாக்கத்தை கொடுக்கக்கூடியதாகும். இம்மாநாட்டில் இனப்பிரச்சனை சம்பந்தமாக எடுக்கப்படும் முயற்சி விரைவில் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கக்கூடும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 52 தலைவர்கள் எடுக்கும் ஒரு பொது நிலைப்பாடு சில சமயம் உள்ளுர் தலைவர்களின் சிந்தனையை மாற்றி ஏற்புடையதான ஒரு தீர்வை எட்டக்கூடும். அத்தகையதொரு நிலைப்பாடு எடுக்கப்படுமாயின் அது உங்களுக்கு ஒரு பெரும் உதவியாக அமையும். 

எனது பங்காக நீண்டகாலமாக தடுப்புக்காவலில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்இ பெண்இ அவர்களின் அப்பாவிக் குழந்தைகள் அனைவரையும் இத் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் நிபந்தனை எதுவுமின்றி விடுவித்து அனைவரின் பாராட்டையும் பெற வேண்டுமெனக்  கேட்டுக்கொள்கின்றேன். இத்தலைவர்கள் உலகின் மூன்றிலொரு பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க! காந்திஜி அவர்கள் முதன்முதல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கையும் இந்தியாவும் எக்காரணம் கொண்டும் முரண்படக் கூடாது எனக் கூறிச்சென்றதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 

காமன்வெல்த் மாநாட்டுடன் இலங்கை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமான மனித உரிமை மீறல்இ காணிகள் அபகரிப்புஇ அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் வீடுகளை இடித்தழித்தல் இதேபோன்ற சிறுபான்மை இனத்தவர்களுடைய உள்ளத்தையும்இ உணர்வுகளையும் புண்படுத்தும் எச் செயலிலும் ஈடுபடாமல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

 

வீ. ஆனந்தசங்கரிஇ
செயலாளர் நாயகம் 
தமிழர் விடுதலைக் கூட்டணி

dimanche 10 novembre 2013

முதற் தடவையாக உலகத்தை ஒன்றிணைக்கும் தேசம் என்ற மகுடத்தில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம் பித்து வைக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இன்று இரண்டு மாநாடுகள் ஆரம்பமாகின்றன.
உலகத்தை ஒன்றிணைக் கும் தேசம் என்ற மகுடத்தில் இலங்கையில் முதற் தடவையாக நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டின் தொடக்கமாக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டையிலும்- பொதுநலவாய மக்கள் மன்றம் ஹிக்கடுவையிலும் இன்று ஆரம்பமாகின்றன.
இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடை யவுள்ளன. பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம் பித்து வைக்கிறார்.
இன்று மாலை காலியில் நடைபெறும் பொது நலவாய மக்கள் மன்றத் திலும் ஜனாதிபதி பங்கேற்கிறார். இவற்றையொட்டி காலி- ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந் தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண் டுள்ளதோடு விசேட போக் குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச மாநாட்டு மண்டபத் திலும் காலி கோட்டை நீதி மன்ற சதுக்கம் மற்றும் ஹிக்க டுவ சாயா டிரான்ஸ் ஹோட் டல் களிலும் நடை பெற வுள்ள இளைஞர் மற்றும் மக்கள் மாநா டுகளில் பொதுநலவாய தலைமை பதவியை ஏற்கவுள்ள ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர்கள்- உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப் பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து காலை 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தலைவர்களும்- வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புக்களும் என்ற தலைப்பில் ஆராயவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய இளைஞர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விசேட பகல் போசன விருந்துபசாரம் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 14 ஆம் திகதி பல்வேறு மட்ட சந்திப்புக்களும் கூட்டங்களும் நடைபெறவுள்ளன. இதேவேளை பொதுநலவாய மக்கள் மன்றத்தின் மாநாடு இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு காலி கோட்டையிலுள்ள நீதிமன்ற சதுக்கத்தில் ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் வெளிநாடுகளின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளில் வாழும் சிவில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின் போது ஆராயவுள்ளனர்.
இதேவேளை பொதுநலவாய இளைஞர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ருகுனுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணிக் குழு உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.எட்டு முக்கிய தலைப்புகளில் இங்கு விடயங்கள் ஆராயப்பவுள்ளதோடு இலங்கை அரச தலைவர்களுக்கும் இளைஞர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பும் நடைபெறவுள்ளன.
பொதுநலவாய வர்த்தக மாநாடு 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1300 முக்கிய வர்த்தகர்கள்- முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று சனிக்கிழமை முதல் அரச தலைவர்களின் வருகை ஆரம்பமானது.
பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடக்கம் அரச தலைவர்கள் கொழும்பில் தங்கியிருக்கவுள்ள ஹோட்டல்கள் வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விசேட பாதுகாப்பு கடமைகளில் மாத்திரம் சுமார் 20,000 பொலிஸார் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் இலங்கை வரும் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தங்கு தடையின்றிய பயணத்தை கவனத்திற் கொண்டு மாத்திரம் 5000 போக்குவரத்து பிரிவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
உள்நாட்டிலிருந்து 535 ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். ஊடகவியலாளர்களுக்குத் தேவையான வசதிகளை வெளிவிவகார அமைச்சும் தகவல் ஊடகத்துறை அமைச்சும் ஏற்படுத்தியுள்ளன.
ஊடகவியலாளர்கள் தங்கும் ஹோட்டல்களிலிருந்து ஊடக மத்திய நிலையத்திற்குச் செல்வதற்கான விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலி- ஒளிபரப்புச் செய்யவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

த.தே.கூ சம்பந்தனும், அவரது சகாக்களும் மக்கள் முன்பாக மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை -சங்கரி

நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் தமிழரசுக்கட்சித் தலை வர்கள்!

சம்பந்தனும், அவரது சகாக்களும தமிழ் மக்களால் குட்டுப் படத் தொடங்கி விட்டார்கள் எனவும், அவ்வாறு அவர்கள் குட்டுப்படத் தொடங்கியமை மூடி மறைக்கப்பட்டு வருவதா கவும், எனினும் த.தே.கூ சம்பந்தனும், அவரது சகாக்களும் தமது தவறுகளை உணர்ந்து மக்கள் முன்பாக மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மேலும் ஒருசில தமிழ் ஊடகங்கள் என்று இவர்களுக்குத் தாளம் போடுகின்றன் என வும், எவ்வாறாயினும் இவர்களது சகலவிதமான பொட்டுக்கட்டுக்களும் வெளியே வந்து சாயம் வெளுக்கும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி சகல விடயங்களிலுமே இரட்டை வேடம் கொண்டுள்ளதாகவும், நம்பவைத்துக் கழுத்தறுக்கும் பணியில் இதன் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த ஆனந்த சங்கரி, பொதுநலவாய மாநாடு தொடர்பாகவும் தமிழ்க் கூட்டமைப்பு இருமுகங்களைக் கொண்டுள்ளதாகவும், கட்சிக்கு நேற்று வந்த அரசியல் பால்குடிகளை வைத்துக் கொண்டு அவர்களது கைப்பொம்மையாக மாறியுள்ள சம்பந்தன் பழையவர்களை ஒதுக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

samedi 9 novembre 2013

பிள்ளையார், லகஷ்மி உருவங்கள் அச்சடிப்பு பியர் போத்தல் மீது


அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 இத்தகைய உருவங்களை மது போத்தல்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது.
ஏனெனில், இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவிதமான நம்பிக்கைக் குறியீடுகளும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தெய்வங்களை கோவில் சந்நிதிகளிலோ அல்லது வீட்டிலுள்ள இறைகூடங்களிலோ வைத்து வழிபட வேண்டுமே தவிர வணிகப் பேராசைக்காக பியர் போத்தல் விற்பனைகளில் பயன்படுத்தக்கூடாது என்று ராஜன் கூறினார். தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பியர் போத்தல்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர்   வலியுறுத்தினார்.     அவுஸ்திரேலியா இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் அவர்கள் தனிநபர் கடைகளைப்போன்று கோவில்களிள்    கடவுளின் பேராள் மது மாதுபோன்ற ஈனச்செயலில் இடுபடுபவர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் எனபது......?   
                                          இலங்கையில் கல்வியங்காடு பகுதியில் சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் பெறுமதியான விக்கிரகங்கள் மற்றும் வெண்கல உபகரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன பிள்ளையார் விக்கிரகம்  உட்பட சுமார் 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இவ் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று காலை சனிக்கிழமை பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தபோது மூலஸ்தான வாசல்
கதவுபூட்டு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை மற்றும் வெண்கல உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இத் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் மோப்பநாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடம் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.  

பிலிப்பன்ஸை தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்

லெய்தே என்னும் தீவின் தக்லோபான் என்னும் நகர் இந்த சூறாவளியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு மாத்திரம் நூறுபேர் வரை இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இதில் இறந்திருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
சமர் மாகாணத்திலும் 200 பேர் வரை இறந்ததாகக் கூறப்படுகிண்றது.
இதற்கிடையே அரசாங்க அமைச்சர் ஒருவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தின் மூலம் சென்று பார்த்திருக்கிறார்.
இராணுவமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வீதிகள் உடைந்தும் நீரில் மூழ்கியும் இருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

mercredi 6 novembre 2013

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக விசாரணைகளை நடத்துவதைத் தட்டிக்கழித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சம்பந்தன் எச்சரிக்கை

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக விசாரணைகளை நடத்துவதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை சிறிலங்கா அரசு சந்திக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“இசைப்பிரியா படுகொலை தொடர்பாக சனல்-4 வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுகின்றனர். 

இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இந்த கொடூரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன. 

எனவே, சனல் -4 வெளியிட்ட காணொலியை போலி எனக் கூறி சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க முடியாது. 

இது சனல்- 4 விவகாரமல்ல, இசைப்பிரியா படுகொலை விவகாரம் என்பதை சிறிலங்கா அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும். 

இதுதொடர்பாக, நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.  இது சிறிலங்கா அரசின் கடமை. 

இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை சிறிலங்கா அரசு சந்தித்தே தீரும். 

நாட்டில் மனித உரிமைகள், சட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. 

இது உண்மையானால் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பாக, விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். 

சிறிலங்கா அரசு இதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறது? 

இந்தப் படுகொலை தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் பார்வை சிறிலங்காவின் பக்கம் திரும்பியுள்ளது. 

எனவே, இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். 

இதிலிருந்து அரசு தப்பவே முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)



இக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால்  பதிவிடப்படுகிறது.

இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இலங்கை தமிழ் ஊடகங்களும் , இணையத் தளங்களும் தூக்கிப் பிடித்து நிற்கின்ற விடயம் இசைப்பிரியா கொல்லப்பட்ட கணொளியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விவகாரம். யார் இந்த இசைப்பிரியா ? பாசிஷ புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், புலிகளின் புகழ் பாடும் பாடல்கள் , நாடகங்கள் பலவற்றிலும் நடித்தவர். என்பதால் இவர் புலிகளின் ஆதரவாளர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை அதனால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

இது இவ்வாறு இருக்க புலிகளுடைய அல்லது புலிகள் கொல்லப்படுகின்றதைப் போன்ற விடயங்களை , வீடியோக்களை காட்சிப்படுத்தத் தெரிந்த சனல் 4 தொலைக்காட்சிக்கு இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீதான பாசிஷ புலிகளின் இனச்சுத்திகரிப்பினை காட்சிப்படுத்த தவறுவது ஏன் ? முஸ்லிம்கள் என்பதனாலா ? 

புலிப்பாசிஷத்தின் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பின் வடுக்கள் சில

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

இதே போன்று 2006 இல் திருமலை மாவட்டத்தின் மூதூரில் பல அப்பாவி முஸ்லிம்களை கோரமாக கொலை செய்து சொந்த மண்ணை விட்டும் பாசிஷ புலிகள் விரட்டியடித்தனர். இப்படியான பல இனச்சுத்திகரிப்பினை பாசிஷ புலிகள் செய்தது மட்டுமல்லாது. அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும் தனது இரத்தவெறியினை புலிகள் அமைப்பு செய்ததனை தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளும், இலங்கை அரசியல் தலைமைகளும் சர்வதேசமும் ஏன் கண்டு கொள்ளவில்லை ?

அதே போல சனல் 4 தொலைக்காட்சிக்கும் புலிகளின் அட்டூழியங்களை காட்சிப்படுத்த முடியாமல் போனதேன் ?

சனல் 4 தொலைக்காட்சியே ! இவ்வகையான படங்களும், காணொளிகளும் அதிகம் இருக்கிறது இதனையும் உங்கள் தொலைக்காட்சியில் காண்பித்து சா்வதேசத்துக்கு தெரியப்படுத்தலாமே !

காத்தான்குடி பள்ளிவாசலில் புலிப்பாசிஷத்தின் படுகொலைகள்




புலிகளின் அடுத்த அட்டூழியம்




மூதூர் மீதான புலிப்பாசிஷத்தின் இனச் சுத்திகரிப்பு   


samedi 2 novembre 2013

குமரன் நினைவுகள் - நினைவுப் பேருரை- உரையாடல் - போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்


போராட்டத்தினுள் வாழும் மனிதர்கள் முதன்மையாக இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் . உச்சபட்சமாக உயிரை இழக்க நேரும். நிலவிய சமூகம் ஏற்படுத்தி வைத்த அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள், பொறுப்புக்கள் போன்றவற்றை இவர்கள் மீற நேரிடும். தவிர்க்கவியலாமல் வன்முறையை எதிர்கொள்ளவும், செலுத்தவும் நேரிடும். அனைத்துக்கும் மேலாக இலக்கை எய்தும் நோக்கில் தோல்வியை எதிர்கொள்ளவும் நேரிடும் .அப்போது தாம் இழந்தவையும் மீறியவையும் அர்த்தமுள்ளவைதானா என்கிற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். .அவ்வேளை உளச்சிதைவுக்கும் நம்பிக்கையின்மைக்கும் அவர்கள் உள்ளாகவும் நேரிடும். இதனையும் மீறித்தான் மனிதர்கள் தம் இருப்புக்கும் விடுதலைக்கும் போரிட்டபடியே இருக்கிறார்கள். இதுவே மனிதகுலத்தின் வரலாறு. ஈழப் போராட்டத்தினையிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் வாழ்வும் இவ்வாறானதே . எனினும், இவர்களில் ஒரு சிலரே வரலாற்றில் வாழ்கிறார்கள். ஏன் அவ்வாறு நேர்கிறது என்பது குறித்து பார்வையாளர்கள் பங்குபெறும் உரையாடல் பிரதான உரையை அடுத்து இடம்பெறும். தோழர். குமரனுடன் வாழ்ந்த தோழர்களும் நண்பர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
 அனவரையும் அழைக்கும்
தோழர்களும் நண்பர்களும்
SALLE  SAINT  BRUNO
 9, RUE  SAINT  BRUNO
75018    PARIS
SAINT  BERNARD
தேவாலயம் அருகில்
Métro:  LA  CHAPELLE
தொடர்புகளுக்கு
06 19 45 02 76   
 06 23 60 72 65  
06 13 98 82 71 

jeudi 31 octobre 2013

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.
அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
- தந்தை பெரியார்

புத்தூரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்டக்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

kinaruயாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போய் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த மைதிலி அமிர்தலிங்கம் (வயது-26) என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேளை திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி சிவசொரூபனால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னரே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
மேற்படி சம்பவம் யாழ் மக்களிடையே ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன்: வாசு­தேவ நாண­யக்­கார

அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ் மக்­க­ளா­கட்டும் அனை­வரும் சுய­வி­ருப்­ப­தோடு எங்கும் வாழலாம். அதனை தடை­செய்ய முடி­யாது என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். வடக்கில் மக்கள் வாழும் இடங்­களில் இரா­ணுவ நடமாட் டத்தைத் தடை­செய்ய வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,
சிங்­கள மக்கள் தமது வர்த்­தகம் மற்றும் தொழில்கள் நிமித்­தமும், சுய­வி­ருப்­பத்­து­டனும் வடக்கில் குடி­யே­று­வதை தடுப்­பதும் எதிர்ப்புத் தெரி­விப்­பதும் ஏற்­றுக்­கொள்ள முடி யாதது.
முத­ல­மைச்­சரின் அந்த நிலைப்­பாட்டை எதிர்க்­கின்றேன். வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக அவ்­வா­றான ஒரு நிலை உரு­வானால் தெற்­கிலும் தமிழ் மக்கள் வந்து குடி­யேற முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும். இன­வா­தத்­திற்கு சாத­க­மாக அமைந்­து­விடும்.
எனவே, சிங்­கள மக்கள் தமது சுய­வி­ருப்பின் பேரில் வடக்கில் மட்­டு­மல்ல எங்கும் வாழ­மு­டியும். அதே­போன்று தமிழ் மக்­களும் தமது சுய­வி­ருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடை­போட எவ­ருக்கும் அதி­காரம் இல்லை.

அர­சாங்கம்

ஆனால், அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வடக்கில் தொகை தொகை­யாக சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க்கின் றேன்.
அதே­போன்று, தமிழ் மக்­களை சிங்­களப் பிர­தே­சங்­களில் குடி­யேற்­று­வ­தையும் எதிர்க்­கின்றேன். வடக்கில் மக்கள் குடி­யி­ருக்கும் பிர­தே­சங்­களில் இரா­ணு­வம நட­மா­டு­வதை தடை­செய்ய வேண்டும்.
இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளுக்­கு­ரிய இடங்­களில் இருக்க வேண்டும். அத்­தோடு, சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தினரின் தலை­யீட்டை இல்­லாது செய்ய வேண்டும். தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரி­வினர் நட­மா­டலாம். ஆனால், இரா­ணுவச் சீரு­டை­யுடன் மக்கள் மத்­தியில் நட­மா­டு­வ­தென்­பது, மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும், தாம் இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் சிக்­கி­யி­ருக்­கின்றோம் என்ற உணர்வை ஏற்­ப­டுத்தும்.
வடக்­கிற்கு இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை வழங்­கி­யுள்­ளது. அதனை சுவா­சிக்க மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

பொலிஸ் அதி­காரம்

எந்­த­வொரு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே, வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும் அதே நிலைதான்.
பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வதா? இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்.

ஆளுநர்

இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

பிரேரணை அதிக வாக்குகளால் வெற்றி ;அனைத்து இறைச்சிக் கடைகளும் இழுத்து மூடப்பட வேண்டும்...!

தொம்பே தேர்தல் பிரிவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்ற பிரேரணை, பிரதேச சபையின் இம்மாதத்திற்கான கூட்டத்தில் மேலதிக 4 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

வாக்கின் போது, அதனை ஆதரித்து ஒன்பது வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் கிடைத்துள்ளன. உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்க மறுத்துள்ளனர்.

தலைவர் மிலான் ஜயதிலக்க (ஐ.ம.சு.மு) யினால் தொம்பே தேர்தல் பிரிவில் இறைச்சிக் கடைகளுக்காக ஏலவிற்பனை நடைபெறக்கூடாது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே, எந்தவொரு இறைச்சிக்கடையும் டென்ர்ருக்கு விடப்படக்கூடாது என்று இடையில் பிரதேச சபை உறுப்பினர் அமின்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு இதுபற்றி ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை சபைக்கு முன்வைக்கப்பட்டதன் பின்னர், இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமா? என்ற தேர்தல் இடம்பெற்று, அதில் மூடப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வெற்றிபெற்றுள்ளன.

படைகளை விலக்க முடியாது தமிழ்ச் சமூகத்தினரை படையில் இணையவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர். – மகிந்த ராஜபக்ச

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரோ அவர்களின் முகாம்களோ விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், 

“ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. 

வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை வெளியேற்ற முன்வைக்கப்படும் யோசனை நடைமுறைச்சாத்தியமற்றது. 

இந்த யோசனைகள் எங்கிருந்து வருகின்றன என்று நாம் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். 

வடக்கு, கிழக்கிலும், வெளிநாடுகளிலும் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையாகவே, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரும் யோசனைகள் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், இராணுவ முகாம்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன. அம்பாந்தோட்டையில் உள்ளன. மொனராகலயிலும் இருக்கின்றன. 

வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்காப் படையினரின் பிரசன்னத்தை அகற்றுவதன் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்? 

நாட்டைப் பிரிக்க முப்பது ஆண்டுகளாக முயற்சித்த தீவிரவாத தலைவர்கள், இப்போது அதற்கு ஜனநாயக வழிமுறைகளை கையில் எடுத்துள்ளனர். 

தமிழ்மக்கள் இந்தச் சூழ்நிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

முப்பது ஆண்டுகளாக எல்லா சமூகங்களினதும் சுதந்திரத்தை பறித்த கொடூரமான தீவிரவாதி மரணமான, முள்ளிவாய்க்காலை நினைவுச் சின்னமாக்க சில சக்திகள் கடும் முயற்சி எடுக்கின்றன. 
இத்தகைய சக்திகளின் முயற்சிகள், அமைதியை விரும்பும் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. 

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற, ஜெயசிறி மகாபோதி, தலதா மாளிகை, ஏனைய பல வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்களை நடத்திய தீவிரவாதி மரணமான இடம்தான் வெள்ளமுள்ளிவாய்க்கால். 

தமிழ்த் தலைவர்களின் பிரிவினைவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் பாடங்களை எல்லா சமூகங்களும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிரிவினைவாதத்தை தோற்கடிக்க புதிய அணுகுமுறையை சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்தோம். 

தீவிரவாதத்தின் வேர்களை அழிக்க, வடக்கு,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம். 

நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாக உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த செயல்முறையில் பங்கேற்பதற்கு உரிமை உள்ளது. 

வடக்கு,கிழக்கிலும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும், அங்குள்ள மக்களின் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசாங்கம் சிறியளவிலேயே பணிகளை மேற்கொண்டுள்ளதாக சில சக்திகள் குற்றம்சுமத்துகின்றன. 

சிறிலங்கா படையினரை சிங்கள் இராணுவம் என்று கூறி, தமிழ்ச் சமூகத்தினரை அதில் இணையவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர். 

இன்று பாதுகாப்புப் படைகளில், சிவில் பாதுகாப்பு படையில், காவல்துறையில் அதிகளவான வடக்கு கிழக்கு மக்கள் எந்த சிக்கலுமின்றி, இணைந்து கொண்டுள்ளனர். 

போர் நடந்த காலங்களில் வடக்கில் பணியாற்றிய, ஐ.நா முகவர் அமைப்புகளும், அரச்சார்பற்ற நிறுவனங்களுமே அங்கிருந்த நிலைமைக்கு சாட்சியாக உள்ளன. 

முகமாலையில் இருந்து வடக்கு,கிழக்கின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் தமது ஆட்சியில் வைத்திருந்தனர். 

இப்போது வடக்கு கிழக்கில் அமைதிய நிலவுகிறது, தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன. 

வடக்கில் நடந்த தேர்தலைக் கண்காணிக்க வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பாதுகாப்புப் படையினர் ஒழுக்கத்துடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.